தருமபுரம்‌ திரு.ப. சுவாமிநாதன்‌ முதலியார்

0


தருமபுரம்‌ திரு.ப. சுவாமிநாதன்‌ அவர்கள்‌ செங்குந்த முதலியார்‌ குலத்தில்‌ 29.5.1924 அன்று பிறந்தவர்‌ ஆவார்‌. திரு. பஞ்சநத முதலியார்‌ மற்றும்‌ பார்வதி அம்மையார்‌

இவருடைய தாயும்‌ தந்தையுமாவர்‌. தஞ்சை மாவட்டம்‌ நன்னிலம்‌ இவர்‌ பிறந்த ஊராகும்‌.*2

தேவாரப்‌ பயிற்சி

தருமபுரம்‌ குருமகா சந்நிதானத்தில்‌ இவர்‌ பயின்றவர்‌ ஆவார்‌. தம்முடைய 19வது

வயதில்‌ திருப்பனந்தான்‌ மடத்துத்‌ தம்பிரான்‌ ஒருவரிடம்‌ இவர்‌ ஆரம்பப்‌ பயிற்சி

பெற்றார்‌. அங்குள்ள தேவாரப்‌ பாடசாலையில்‌ சேர்ந்து 1942 ஆம்‌ ஆண்டு முதல்‌ 1947

முடி ய திருமுறைக்‌ கலாநிதி திரு வேலாயுத ஒதுவாரிடம்‌ தேவாரம்‌ பயின்றார்‌. பிறகு 1947

முதல்‌ 1957 ஆம்‌ ஆண்டு முடிய அண்ணாமலைப்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌ சேர்ந்து

பேராசிரியர்‌ சித்தார்‌ சுப்பிரமணிய பிள்ளை, மதுரை சுப்பிரமணிய முதலியார்‌,

மன்னார்குடி ராஜகோபாலப்‌ பிள்ளை, மன்னார்குடி வைத்தியலிங்கம்‌ போன்ற

இசையாசிரியர்களிடம்‌ கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுக்‌ கொண்டார்‌.

பணி:

தருமபுரம்‌ ஆதீனத்தில்‌ தேவார ஆசிரியராக 16 ஆண்டுகள்‌ பணியாற்றினார்‌.

1968 ஆம்‌ ஆண்டில்‌ தம்‌ பணியிலிருந்து விலகி சென்னை வந்து அருள்மிகு அகத்திய

ஆலயப்‌ பக்தர்களுக்காக “திருமுறை வழிபாட்டுத்‌ திருக்கூட்டம்‌” தொடங்கினார்‌.

இன்றுவரை 208 வழிபாட்டுத்‌ திருக்கூட்டங்களை நிகழ்த்தியுள்ளார்‌. ஆலயங்களில்‌

முக்கியத்‌ திருவிழாக்களில்‌ இவருடைய திருமுறை இசை நிகழ்ச்சிகள்‌ நடைபெற்று

வருகின்றன.

சிறப்புகள்‌

௮. தமிழ்நாடு அரசு 1975 இல்‌ “கலைமாமணி” பட்டம்‌ வழங்கிச்‌ சிறப்‌ பித்துள்ளது.

ஆ. தமிழ்‌ இசைச்சங்கம்‌ 1986இல்‌ “இசைப்‌ பேரறிஞர்‌” பட்டம்‌ வழங்கியுள்ளது.

இ. குன்றக்குடி அடிகளார்‌ “பண்ணிசைமணி” பட்டம்‌ வழங்கியுள்ளார்‌.

௪. மதுரை ஆதீனத்தின்‌ “திருமுறை திலகம்‌” பட்டம்‌.

௨. சண்முகன்‌ அடியார்‌ சங்கம்‌ “திருமுறை இசைக்கடல்‌”. திருக்கழுக்குன்றத்தில்‌

நடைபெறும்‌ திருஞானசம்பந்தர்‌ இசைவிழா வழங்கியுள்ள தேவார. “தமிழ்‌

இசைத்தென்றல்‌” பட்டம்‌.

ஊ. .7.1942 முதல்‌ 2.7.1947 முடிய இசைப்பயிற்சி பயின்றமைக்காக தருமபுரம்‌

ஆதினம்‌ வழங்கியுள்ள “தேவார இசை மணி” பட்டம்‌.

எ. குன்றத்தூர்‌ தமிழகத்‌ தெய்வப்‌ பேரவையின்‌ “திருத்தொண்டர்‌ மாமணி” பட்டம்‌.

*1. எஸ்‌.கே. சிவபாலன்‌, “பண்ணிசை தத்துவம்‌”, பக்கம்‌-90.

*2. தருமபுரம்‌ திரு. ப. சுவாமிநாதருடன்‌ நேர்காணல்‌, 27.10.1995, சென்னை.

இவையன்றி தருமபுரம்‌ சுவாமி நாதன்‌ அவர்கள்‌ பல பதக்கங்கள்‌, சான்றிதழ்கள்‌,

பொற்கிழிகளைப்‌ பெற்றுள்ளார்கள்‌.

மாணவர்களுக்குத்‌ தேவாரத்‌ திருமுறைகளைப்‌ பயிற்றுவிக்க ஒரு அறக்கட்டளை

அமைத்து நடத்தி வருகிறார்‌. தமிழிசைச்‌ சங்கம்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ டிசம்பர்‌ மாதம்‌

நிகழ்த்திவரும்‌ பண்‌ ஆராய்ச்சி மாநாடுகளில்‌ பங்கேற்று வருகிறார்‌. சென்னை

வானொலி நிலையம்‌ இவரை முதல்‌ தர.இசைக்‌ கலைஞராக அங்கீகரித்துள்ளது.

சென்னைத்‌ தொலைக்‌ காட்சியில்‌ பல திருமுறை இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்‌.

Post a Comment

0Comments
Post a Comment (0)