கொங்கு நாட்டு பொது மக்களுக்கும்/ பட்டகாரர்களுக்கும்/ சிற்றரசர்களுகும் கல்வி அறிவு கொடுத்த கொங்கு நாட்டு செங்குந்தர் புலவர்கள்.
அக்காலத்தில் கல்வி என்பது அனைவருக்கும் கிடைத்திடவில்லை. விஜயநகர சாம்ராஜ்யம் முதல் பிராமணர் அல்லாதவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது அந்தக் காலத்தில் புலவர்களுக்கு மட்டுமே கல்வி அறவு தமிழகத்தில் அதிக அளவு இருந்தது. புலவர்கள் என்றால் வெறும் தமிழ் புலமை மற்றும் கொண்டவர்கள் இல்லை, கோவில் சார்ந்த ஆகமங்கள் நூல்கள் வரலாறு காப்பியங்கள் மருத்துவம் ஜோதிடம் வானவியல் சாஸ்திரம் ஓலைச்சுவடி எழுதுவதற்கு கோவில் நிர்வாகம் ஊர் நிர்வாகம் செப்பேடு எழுதுவதற்கு தமிழ் மற்றும் வடமொழி எழுத படிக்க தெரிந்தவர்களே புலவர்கள்.
இந்த வரிசையில் கொங்கு மண்டலம் அதாவது தமிழகத்தின் மேற்குப் பகுதியில் 90 சதவீதத்துக்கு மேல் புலவர்கள் ஆக இருந்தது செங்குந்த கைக்கோளர் சமூகத்தினர் மட்டுமே.
விஜயநகர் சாம்ராஜ்ய காலத்தில் கொங்குநாடு 24 நாடுகள் அதாவது மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது அப்போது தெலுங்கருக்கு ஆதரவாக இருந்த வேளாளர்கள் கொங்கு மண்டல பகுதியில் பல நாடுகளுக்கு பட்டக்காரர்களாக பெற்ற அரசர் பதவி பெற்றனர்.
இவர்கள் பட்டக்காரர் பதவி ஏற்ற பின்பு வடுக மன்னர் விஜயநகர் அரசருக்கு முறையிட்டு தங்களுக்கு செங்குந்தர் குல புலவர்கள் வேண்டுமென்று சோழமண்டலம் மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்த பல கூட்டத்தை சேர்ந்த செங்குந்த முதலியார்களை புலவர்கள் நியமிக்க அனுமதி பெற்றுக்கொண்டு செங்குந்த குலத்தை சேர்ந்த பல புலவர்களை தங்கள் தங்களது குறுநில ஆட்சிப் பகுதியில் அவை புலவராக பெற்றுக்கொண்டனர்.
இந்த புலவர் நியமிக்கும் காலத்தில் பட்டக்காரர்கள் சண்டையே ஏற்பட்டது அதாவது எங்களுக்கு இந்த குறிப்பிட்ட புலவர் சிறந்த புலவர் எங்களுக்கு வேண்டும் என்று சண்டையிட்டு செங்குந்த குல புலவர்களை பெற்றுக் கொண்டனர்.
அதிலும் ஒரு சில பட்டக்காரர்கள் அதிக சம்பளம் மானியம் கொடுத்து தங்களுக்கு என தனிப்பட்ட செங்குந்தர் குல புலவர்கள் வேண்டும் என்றும் நியமித்துக் கொண்டனர்.
இதற்கு ஆதாரங்களாக தற்போதைய காலத்தில்வேளாளர் சமூகத்தை சேர்ந்த தமிழக தொல்லியல் துறையை சேர்ந்த சே ராசு என்பவர் கண்டுபிடித்து வெளியிட்ட கொங்குநாடு சமுதாய ஆவணங்கள் என்ற செப்பேடு பட்டயம் தொகுப்பு நூலில் உள்ள பட்டயங்களை சாட்சி:
கொங்குப் புலவர் பட்டயம்
கொங்கு நாட்டு முதுபெரும் புலவர் அமரர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் தொகுப்பிலும், தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச் சுவடித் துறையிலும், ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்திலும், ஈரோடு கொங்கு ஆய்வு மையத்திலும் இச் சுவடிகள் உள்ளன.
செந்தலை வேளாளர்கள் அனைவரும் மன்னர் தேவப்பராயரிடம் தங்களுக்குப் புலமை நிலைநாட்டுச் செய்ய வேண்டும் என்று முறையிட்டனர்.
தேவப்பராயர் பழைய ஆவணங்களைப் பார்த்து குலோத்துங்க சோழன் காலத்திலேயே வேளாளர்கட்குக் கம்பர் வாழிப் புலவர் நியமனம் செய்யப்பட்டனர் என்று கூறிக் கொங்கு 24 நாட்டுக்கும் புலவர்களை நியமனம் செய்தார்.
செங்குந்தர்கள், கம்பரின் கையேட்டுக்காரர், உவச்சன், பாவிடையன், தொழுவன், வேதியன், சேரகுல வேளாளர், மங்கலன், வணிகன், சோழியன், திருவம்படிக்காரன், பச்சைமலையாளன் ஆகியோர் புலவர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் பால் குடிக்கும் படிப் புலவர் என்று அழைக்கப்பட்டனர். பட்டன், புலவன், கூத்தாடி, பண்பாடி, தக்கைகொட்டி ஆகிய ஐவரும் ஐந்து படிக்காரர் எனப்பட்டனர். புலவர்கட்கு வர்த்தனைப் பணமும் பல சிறப்புக்களும் அளிக்கப்பட்டன.
அ) பூந்துறை நாடு, காங்கய நாடு, குறுப்பு நாடு இந்த மூன்று நாட்டுக்குச் செங்குந்த கோத்திரம் போக்கங்கூட்டம் நஞ்சராயப் புலவர்.
ஆ) தென்கரைநாடு, அண்ட நாடு, தென் பொங்கலூர் நாடு இந்த மூன்று நாட்டுக்கும் வணிகன் கொத்துக்கு வதள்க்கொத்து செங்குந்த கோத்திரம் ராசி கூட்டம் திருக்கை வேல்ப் புலவர், திருவாவினன்குடிப் புலவர், செல்லக்குமாரப் புலவர், மங்கலநாதப் பட்டன்.
இ) பொங்கலூர் நாடு, வாரக்க நாடு, ஆனைமலை நாடு இந்த மூன்று நாட்டுக்கும், செங்குந்த குலத்தில் செஞ்சி கூட்டத்தில் பிரமபட்டன், பூங்கோதிப்பட்டன்.
ஈ) ஆறு நாடு, நல்லுருக்கா நாடு இந்த இரண்டு நாட்டுக்கும் சவளன் கொத்துக்கு வதள்க்கொத்து செங்குந்தகோத்திரம் ஆறாங்கூட்டத்தில் செவளநாதபட்டன், ராசி கூட்டத்தில் ஆண்டிப் புலவர்.
௨) அரையநாடு, காஞ்சிக்கோயில் நாடு ஒடுவங்க நாடு, இந்த மூன்று நாட்டுக்கும் வேதியன் கொத்துக்கும், பச்சைமலையாளன் கொத்துக்கும் வதள்க் கொத்து செங்குந்த கோத்திரம் பூந்துறையான் கூட்டத்தில் கொள்ளலிங்கப் பட்டன், தீத்தாப் புலவர், சேஷப் பட்டன.
ஊ) கிழங்கு நாடு, அரையநாடு, நரைய நாடு, எழுகரை நாடு இந்த நாலு நாட்டுக்கும் செங்குந்த கோத்திரம் சூரிய கூட்டத்தில் சாமிநாத பட்டன்.
எ) வடகரை நாட்டுக்கு செங்குந்த கோத்திரம் சூரிய கூட்டத்தில் சம்பைச் சாமிநாதன். தம் ப்ரபு
ஏ) ராசிபுர நாட்டுக்கு செங்குந்த கோத்திரத்தில் ராசி கூட்டம் அமரிபட்டன், கெங்குப் புலவர், ஆகியோர் புலவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அவரவர்க்குள்ள கொத்து முறைமைப்படி வாழிச் சீருடனே
படிபால் \ வருத்தனைப் பணம் வாங்கிக் கொண்டு நடந்துவந்தனர். இக்கொங்குக் இவர்கள்
"கொங்குக் கைக்கோளர்" எனப்பட்டனர். படிபாலுக்குள்ள இக்கொங்கு
கைக்கோளப் புலவர்களும், கொங்குச் செட்டிகளும், கொங்கு
வேளாளரைப் போலவே கலியாணம் பண்ணுமிடத்தில் நாட்டார்
கல்லுக்குக் கங்கணம் கட்டிக் குப்பாரி கொட்டும் சீரும்,
பெண்ணெடுக்கும் சீரும், வாழிச் சீரும், மங்கல வாழ்த்துடனே இப்படிச்
சீரு முதலானது செய்துவர வேண்டுமென்று ஆவணத்தில்
எழுதப்பட்டுள்ளது. கொங்கு 24 நாட்டாரும் கூடி இப்படி எழுதித் தந்தனர்.
குறுப்பு நாட்டுப் பட்டயம்
இப்பட்டயம் ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் ஓலைப்பட்டயமாகவும், செப்பேடாகவும் உள்ளது. குறுப்பு நாட்டுக்குரிய புலவராக செங்குந்த கோத்திரம் போக்கங் கூட்டம் நஞ்சராயப் புலவரை நியமித்த விபரம் இப்பட்டயத்தில் கூறப்படுகிறது.
"இந்த முப்பத்திரண்டு கிராமத்தாரும் கூடி செங்குந்த கோத்திரம் போக்கங் கூட்டம் நஞ்சராயப் புலவனுக்கு எழுதிக் குடுத்த எல்லைச் சதுர்மத்தியத்துக்குச் சாசனப் பட்டயம்"
பலர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர். 24 நாட்டுப் பட்டயத்திலும்
இம்மரபினர் குறிக்கப்பட்டுள்ளனர். கம்பர் கையேட்டுக்காரர் செங்குந்த
கோத்திரம் போக்கங் கூட்டம் நஞ்சராயப் புலவர், ராசி கூட்டத்தில்
திருக்கைவேல்ப் புலவர், செல்லக் கொமாரப் புலவர் ஆகியோர்
குறிக்கப்பட்டுள் ளனர்.
காங்கய நாட்டுப் பட்டயம்
ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் இப்பட்டயம் உள்ளது. காங்கய நாட்டுக் கீரனூர்க் காணியாளர்கள் தங்களுக்கென்று பலவர்களை நியமித்துக் கொண்டதை இப்பட்டயம் கூறுகிறது.
"குருப்பை நாட்டில் பால் சாப்பிடும் செங்குந்தர்குலப் புலவரில் பழனிமலைப்புலவன் மகன் சென்னிமலைப் புலவனை நாங்களனைவரும் சேர்ந்து காங்கயநாடு கீரனூரு"
கிராமத்துக்கு ஆதிகனாகவும், ராசபடி பால் வருத்தினையும் வாங்கும்படி புலமை நிலைநாட்டுச் செய்து இருக்கிறோம்."
பொன்னிணடிப் பட்டயம் .
தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் இப்பட்டயம் உள்ளது. தாராபுரம் கோட்டையில் செந்தலை வேளாளரில் செகங் கூட்டத்தார் கூடித் தங்களுக்கு செங்குந்த கோத்திரம் ராசி கூட்டம் திருக்கைவேல்ப் புலவரைக் காணி உரிமை உடைய புலவராக நியமனம் செய்து அவருக்குப் பட்டயம் எழுதிக் கொடுத்துக் கொடுக்கவேண்டிய வரியையும் நிர்ணயம் செய்ததை இப்பட்டயம் கூறுகிறது.
"கொங்கு தாராபுரம் கெடியில் சேந்த தென்கரைநாடு
செங்குந்த கோத்திரம் ராசி கூட்டம் துர்க்கவியாழன்
திருக்கைவேல்ப்புலவனுக்கு மணக்கடவூர் செக குலன்
முப்பேரு பெற்ற கந்தன் தயிலி காட்டம்மை முன்பாகக்
கலியாணத்துக்கு படிபால் அவுசேக வர்த்தினை அரைக்கழஞ்சு
மாடைப் பணம் வெண்ணைநல்லூருச் சடையன் உண்டுபண்ணி
வச்சது. தென் பொங்கலூர் நாடு சித்தாறு மணக்கடவூருச்
செககுலன் தயிலியணன், கொங்கூரு வெண்டுவன் நல்லமோறு,
பொன்னிவாடிச் செவ்வாய்குலன் வீரணன், நல்லியணன்,
மாரணன், குள்ளராசன் இவர்களெல்லோரும் கூடிச் சம்மதித்து
செங்குந்தரில் திருக்கைவேல் புலவனுக்கு எழுதிக்குடுத்த சாதினப்
பட்டய விபரம்.
கலியாணப்படி அரைக்கழஞ்சு மாடைப் பணம் வர்த்தனையும்,
ஏரு வர்த்தனை கட்டின ஏருக்கு நாலு வள்ளத் தவசமும்
குடுத்துக் கொண்டு வரவும், சந்திராதித்தர் உள்ளவரை
சாலோக சாமீப சாரூப சாயுச்சிய பதம் உண்டாள்வீர்"
என அப்பட்டயத்தில் எழுதப்பட்டுள்ளது.
சென்னிமலைப் புலவர் பட்டயம்
இப்பட்டயம் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச் சுவடித் துறையில் உள்ளது. குறுப்பு நாடு தென்முகம் நல்லூர், திருப்பூர், அமுக்கயம், முதலிபாளையம், கங்கை நாய்க்கன்பாளையம் கிராமத்தார் அனைவரும் ஒன்றாகக்கூடிச் செங்குந்தரில் சென்னிமலைப் புலவர் என்பவரைப் பரம்பரைப் புலவராக நியமனம் செய்ததை இப்பட்டயம் கூறுகிறது.
"இந்தத் தாஸ்தாவதியில் எழுதியிருக்கிற பிரகாரம்
சென்னிமலைப் புலவனுக்கு படிபால் வருத்தனைப் பணமும்,
நாழிக்கம்பும் இதுவெல்லாம் நடப்பிவைத்துக் குடுக்க வேண்டியது.
இதுக்கு விகாதம் பண்ணிக் குடாத பேருகள் கங்கைக் கரையிலே
காராம்பசுவைக் கொண்ண தோஷத்திலே போவார்கள்"
இவர் வழியினர் செங்குந்த கோத்திரம் என்பது முன் பட்டயத்தால் பெறப்பட்டது.
கொடுமணல் பட்டயம்
இப்பட்டயம் தமிழ்ப் பல்களைக்கழக ஓலைச் க வட்த் துறையில் உள்ளது. குறுப்பு நாட்டில் செந்தலை வேளாளர்கட்கும், படைத்தலைக் கவுண்டர்களுக்கும் ஒரே புலவர் இருந்தார். செந்தலை வேளாளர்கள் இது கூடாது என்று கருதித் தங்களுக்குத் தனியாகப் புலவரை நியமித்துக் கொண்டதை இப்பட்டயம் கூறுகிறது. சென்னிமலைப் புலவர் அவ்வாறு நியமிக்கப்படுகிறார். இவர் செங்குந்த மரபினர்.
"சுள்ளிப்பாளையம் சேனாபதிப் புலவனை நீக்கல்
செய்து வைத்து குருப்பு நாடு தென்முகம் பாதிப் பங்குக்
குள்ள கொடுமணலிலிருக்கும் பழனிப் புலவன் மகன் சென்னிமலைப்
புலவனைத் தென்திசை வேளாளருக்கு மாமூலுக்குப் படிபால்
வருத்தனைக்குள்ள தெல்லாம் நம்ம சென்னிமலைப் புலவனென்று
இந்த குருப்பு நாடு நகர் முப்பத்திரண்டு கிராமத்துக்கும் தென்திசை
வேளாளரனைவருக்கும் இவனே புலவனென்று நேமித்திருக்கிறோம்."
என்று பட்டயத்தில் காணப்படுகிறது.
மெல்கூறிய புலவர் குடுமதை சேர்ந்தவர்கள் இந்த பதிவை படித்தல் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's app எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.