செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம் பற்றிய மெய்கீர்த்திகள்

0

மெய்க்கீர்த்தி என்றால் மன்னர்/விஐபி/ புகழ் மிக்க சமுதாயம்(ஜாதி) பற்றிய உண்மையான (மெய்) செய்திகளை, குறிப்பாக அவர்கள் புகழைப் புகழ்ந்து கூறுவதால் அதை மெய்க்கீர்த்தி என அழைத்தனர்.

இதுவரை தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட  மன்னர்கள் காலத்து ஓலை பட்டயம் மற்றும் செப்பேடுகளில் செங்குந்த கைக்கோளர் சமுதாயம் பற்றி கூறப்படும் மெய்க்கீர்த்திகள் கீழே உள்ளன.


சுப்பிரமணிய மூாத்திக்குத் துணைவராகிய வீரவாகு, வீரகேசரி, வீரமயேந்திரன், வீரமாயேஸ்வரர், வீரபுரந்தரர், வீரராக்கதர், வீரமார்த்தாண்டர், வீரராந்தகர்,வீரதீரர் நவவீரராகிய சிவன்மைந்தர், 

திருமேனி காவலர் 

என்ன விலங்கிலும் நா விலங்காதவர், 

பட்டமானம் பழுதறக் காத்தவர், 

இட்ட பரணேரி யிறங்காதவர், 

வல்லானை வென்ற வாசி வேளைக்காரர், 

பொய்த்தலைக்கு மெய்த்தலை கொடுத்தவர், 

கந்தனனுசரர், 

காமாட்சி வரபுத்திரர், 

பஞ்சாட்சரம் பஞ்சவர்ன விருது மஞ்சள் பாவாடையுடையவர், 

ருத்திராட்ச மாலிகாபரணர், 

அரிபூசை குருபூசை மயேஷ்வர பூசையுள்ளவர், 

லவண்டை மல்லாரி முதல் 32 வாத்தியம் பெற்றவர், 

இரத்தப் பாவாடை சந்திராகாந்திப் பாவாடையும் பஞ்சவர்ணக்குடை பகல்வத்தியுடையவர். 

அர்த்தனாரிக் குஞ்சமும் ஆயுதம் பெற்றவர், 

ஆவடி சேவடி திருவடிபெற்றவர், 

காஞ்சிபுரத்தில் கருமாரி நிலை கொண்டவர், 

சற்சன சுத்த சிவாச்சாரியார் 

அசுரர்குல காலர் 

செருமுனை கண்டு பின்னடையாதவர், 

சென்றதிசை முழுதும் வென்ற தீரர், 

செங்கை வடிவேலினர், 

சீர்பாதசேகரர், 

என்றும் மனுநீதி கெடாதவர், 

செம்பியன் மனமெச்சும் செங்குந்த வீரர், 

தம்பியை மனமொத்த சாதியையொழிப்பர், 

ஈரேழுலகத்திலும் வீராதிவீரர், துஷ்ட நிக்கிரகர் சிஷ்ட பரிபாலனர்

பல்லோர் புகழ்ந்திடப் பட்டணங் காத்தவர், 

சோணாடு கார்த்த சுகுண தீரர், 

வீணாள் கெடாத மேன்மீசை யுள்ளவர், 

சேவல்கொடியுஞ் சிகண்டியுடையவர்,

 வரம்பிலாவமரர் சிறைமீட்டவர், 

கடம்பமாலை கமழுமார்பினர், 

மந்தாரமாலை வாகுடன் பூண்டவர், 

நமச்சிவாயன் தேவியராகிய நவமாதர் ஈன்ற 100009 பதின்மரின்றுணைவர், கைலை காவலர், 

கைலாயத்தில் பார்வதி பரமேஸ்வரர் ஆடையா பரணமும் கைலாயங்கிரி மகமேரு மலையையும் பார்வதி தேவியார் தனது மகனாகிய

வீரவாகு முதல் 100009 வீரரிடத்தில் ஒப்புவித்து இதுகளையெல்லாம் கைக்கொள்ளுங்களென்று திருவாக்கருளித் தமது திருக்கரத்தால் திருநீறிடப்பெற்றது முதல் கைக்கோள முதலிமாரென்று திருநாமம் பெற்றவர், 

இரவி பரவிட இல்லசையாதவர், 

புரவலர் புகழும் போர்முகவீரர். 

பஞ்சாட்சரப் பரிபூரணர், வீ

ரசிங்காசன மேவி வீற்றிருப்பவர்,

ஒட்டக்கூத்தரின் ஒப்பிலாத் தமிழுக்குச் சிரசிங்காசன மீந்தவர், 

வணங்கா முடியினர், 

சித்திரப் புலிக்கொடி சீராய்ப் பெற்றவர்,

 வாசியும் விருதும் வன்மையுமுடியத் தேச மதிக்கச் செத்துப் பிறந்தவர், வாஞ்சையுடனே மகாதேவரைக் கண்டு காஞ்சிபுரத்திற் கருமாரி பாய்ந்தவர், சென்ற நான்முகனைச் சிகையைப் பிடித்தவர், 

கண்டுவருங்காளிதன் கைத்தாளம் பிடுங்கினோர்,

 இறப்பதற்கென்றும் ஏங்காத தீரர், 

நாரணன்றனது நந்மருகர் என சீரனி தாரனி செப்பிடப் பெற்றவர், மன்மதனிருந்த மந்திரபுரியை வினயமுடன் புகுந்து வெட்டியழித்தவர், 

வானி குருமொழியை மறவாத செங்குந்தர் கோத்திரம் நீடூழி காலம் வாழி, 

கருமாரி கண்ட கைக்கோள முதலிமாராகிய கந்தனருள் பெற்றவர்,


நாலு வர்ணாசிரமங்களும் வழுவாமல் நடத்தப்பட்ட


சோழசக்ரவர்த்திப் பெருமான் வல்லானைக் கொன்று படை வீடு கொண்டு


தருபவருண்டோ வென்று கேட்டளவில் வல்லான் மாளிகையிலே சென்று


புகுந்து வகைதோறும் பத்துப் பேரைப் பலியிட்டுப் பிறஷ்தாபத்தொடுந்


தூங்கும் வல்லானைக் கொல்லாது விட்ட சிவன்மைந்தர். 

திருமேனி


காவலர், 

காமாட்சி வரபுத்திரர். 

கந்தன் சகோதரர். 

வீரநாராயணர்.


வீரவல்லானை வென்ற பஞ்சவர்ண தீட்சிதராகிய அபிமான பூஷணர்கள்.


சாகச் சோம்பாதார்.

 தன்பல மீட்டவர்

. நின்றவற்கு வாணாழ் கொடுத்தார். மோவாய் எழுந்தார். 

ஆணாய்ப் பிறந்தார். கேளாய்ப் பிறந்தார். 

சோழன் அங்கம் காக்க நில்லாஉயிர் கொடுத்து நிற்கும் புகழ் கொண்டோர். 

செம்பியன் மனமொத்த கைக்கோளர். 

நம்பெருமாள் திருமக்கள். 

நானென்று மீண்ட பெருமாள் சோழனுக்கு வச்சிரமழித்தோர் 

சொன்னநாயம் தப்பாதோர்.

 துஷ்டகண்டர், துஷ்டராதித்த

வல்லான் தேவிக்கு மங்கிலியங்கொடுத்தோர் 


துஷ்டபயங்கரர்,துஷ்ட நிட்டூரர், 

கொடுமையிலங்கேசர், 

மீசை பரித்து விடுமயிர் கட்டினோர், 

அம்மயிர் செங்குந்தர்க் கடையாளம்

கொடுமையிலங்கேசந் மேன்மீசையுடையோர் 


புனைந்தோர்கள், 

கொளைச்சதையில்லாதோர், 

தண்டுவார்மிண்டர்,


அகளங்க வல்லோன்,

 சாகச்சறுக்காதார்,

 சாகச்சோம்பாதார்,

 சாகைக்காய் மதன் தம்பலந்தின்னத் தலையரிந்தோர் .

அறநடந்தோர். 

தாய்ப் பசுவை வாலுருவி விட்டோர். 

பலவாயுதத்தில் வல்லோர். 

போரில்வீரர். போர்கொண்டோர்.

 போர்க்களத்தானைகள்.


பொன்னாபரணம் பூணாமல் புகழாபரணம் பூண்டோர்கள்.

 பூதலங்கள் ஏழும் புகழ் படைத்து வாழ்வோர்கள். 

மனமொத்த கைக்கோளர்.

 மலைகலங்கிலும் மனங்கலங்காதோர்.

 மணவாள மானதீர வீரர். 

அனகன் அங்காரக போர்வல்லான். 

அபயகரத்தோர்.

 வாசியும் மானமும் வண்மையும் வழுவாதோர்.

வீரவேளைக்காரர். 

வாடாத மாலையுடையோர். 

வாழ்வு கண்டு தாழ்வு செய்யாதார். 

வல்லான் தேவிக்கு மாங்கலியம் கொடுத்தோர். 

முனையில் சறுக்காதார். 

முன்னே செங்குந்தம் உடையோர்.

 வல்லாரில் வல்லோர்.

 மதியாதார் மணவாளன். 

யிரட்டைச் சங்கும் நாதமுடையோர். 

பூதலம் புகழும் கொம்பும் காலமும் கொடிமுரசுடையோர். 

கண்படையும் தலைப்பிறையுமுடையோர்.

 பூதலம் புகழும் புலிக்கொடியுமுடையோர். 

காளியைக் கைப்பிடித்துக் காலனுக்கு ஓலைவிட்டோர்.


கொடுக்க முசியாதோர். 

கொடுத்து வழிகாட்டினோர்.

 கொல்லுங்கையும் வெல்லுந்தோளும் உடையவர்.

 கங்கைமண்டலம் குறும்புஅறுத்து கலிங்க மண்டலம் கட்டு அறுத்தோர். 

கடகமும் கலியாணமும் கொண்டோர்.

 விருதுவிளக்காவோர். 

வென்றன்றி மீளாதோர்.சென்றதிசை வென்றோர். 

சிவனடியை மறவாதோர். 

ஸ்ரீ பாதசேகரர் 

செந்தமிழோர்க் குயிரளித்தோர்.

சேரலரை வென்றவர்கள் 

 சிலம்புடைய திறல்வீரர். 

திக்கெட்டும் புகழுடைய கைக்கோள்காரர்,

 னானமுகமுடையோர்,

 கற்பகத்தின் அருளாமும் கைலாசா அருளாலும் ஓரடியால மணணளந்த உலகர் அருளாலும் 

இருநாளி நெற்கொண்டு ஏழுலகும் இனிதளிக்கும் பரமேஸ்வரி தன்னுடைய பாத பங்கய அருளாலும் எத்திசையும் வெல்ல வல்லோர். 

இடங்கைக்குத் தலையானோர்.

 அமனகண்ட தெரிந்த

கைக்கோளரும் அமரசேனாபதிகளும்.




****மெய்க்கீர்த்தி பட்டியல் முற்றும்****

Post a Comment

0Comments
Post a Comment (0)