கோபிச்செட்டிப்பாளையம்(திருப்பூர்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,
செங்குந்தர் குல வெள்ளாங்கோயில் பூர்வமாக கொண்ட திரு.பொன்னப்பன் முதலியார்- திருமதி.குட்டியம்மாள் மகனுமான திரு.சண்முக சுந்தரம்.,B.A.,B.L.,exMP
ஈரோடு வடக்கு மாவட்டத்தில் திரு.வி.பி.சண்முகசுந்தரம் அவர்கள் திமுக கழகத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தற்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 80 ஆகிறது. இவரது சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோவில் ஆகும். இவருடைய அப்பா திரு.பொன்னப்பா மற்றும் அம்மா திருமதி.குட்டியம்மாள் ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் 1.கனிமொழி, 2.மதுமதி உள்ளனர். இவருடைய மருமகன்கள் ஒருவர் திரு.அன்பழகன் அவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் மற்றொருவர் திரு.நரேந்திரன் அவர்கள் சாப்ட்வேர் இன்ஜினியராகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர் 1991, 2001-ம் ஆண்டுகளில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.கழக வேட்பாளராக போட்டியிட்டார். இவர் 1996-ல் கோபிசெட்டிபாளையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு,வெற்றி பெற்றார். இவருக்கு மிசா காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 1976-ல் இவரது சொந்த ஊர் வெள்ளாங்கோவிலில் திருமணம் நடந்தது. இவர் கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். தற்போது இன்று 20.07.2024 சனிக்கிழமை அதிகாலை உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவரின் மருமகன் மகாராஷ்டிரா மாநில மின்வாரிய துறை கலெக்டர்.
பவானி அருள்மிகு செங்குந்தர் அங்காள பரமேஸ்வரி அம்மன் குலதெய்வம்