1904ஆம் ஆண்டு தாரமங்கலம் வீரபாகு செங்குந்தர் வழிபாடு

0

 #1904_சேலம்_தாரமங்கலத்தில்_நடந்த_அதிசயம்..

#சூரசம்ஹாரம்_வீரபாகுதேவரின்_வீரம்

#செங்குந்த_கைகோள_முதலியார்_வீரபாகு_வழிபாடு...

#நாட்டுகிட்டான்_ஜயஸ்தம்பவழிபாடு..


#1904 ஆம் ஆண்டு..


சோப கிருது வருடம் வைகாசி மாதம் 3 ஆம் தேதி வெள்ளி கிழமை..


  தாரமங்கலம் அச்சிறிய ஊர், தாங்க முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளத்தால் தவித்துக் கொண்டிருந்தது.  ஏறக்குறைய சேலம் மாவட்டத்தின் அனைத்து ஊர்கள் மற்றும்  சிறு சிறு கிராமத்தில் இருந்தும் மக்கள் கூடியிருந்தனர்..







 காரணம்  அங்கு நடக்க போகும் ஒரு  அதிசய நிகழ்வு..அதைக்  காண இரண்டு நாட்களுக்கு முன்பே குழந்தை குட்டிகளுடன் வந்து கிடைத்த இடங்களில்  வயல் வெளிகளில் எல்லாம் கூடாரம் அமைத்து தங்கி காத்திருந்தனர்.


 பல வருடங்களுக்குப் பிறகு நடக்கும் அந்த அதிசயத்தை காணவே அத்தனை மக்களும் காத்திருந்தனர்.. அதுவும் எங்கும் இல்லாமல் இங்கு நடக்கப் போகும்  ஆட்டத்தில்  நடத்தப்பட இருக்கும் ஒரு மிக மிக ஆபத்தான வித்தையை காணவே இவ்வளவு கூட்டம்..


அப்போதைய சேலம் சேலம் ஜில்லா கலெக்டரின் அனுமதியுடன் சேலம் முழுக்க நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டு நடத்தப்படும் நிகழ்வு.


  அது நட்டு கட்டி ஆடும் ஆட்டம் அதை நட்டுக்கிட்டான் ஆட்டம்  என்றும் சொல்வார்கள்...

    

நட்டு கட்டி ஆடுவதற்கு முன் அதன் வரலாற்றையும் கொஞ்சம் பார்த்து விடுவோம்..


  சூரபத்மனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே தேவர்களும் ரிஷிகளும் மக்களும் சிவனிடம் முறையிட சூரபத்மனை அழிக்க ஆறுமுக கடவுளை படைத்தார் அவருக்கு உறுதுணையாக நவ வீரர்களையும் படைத்தார் .. நவ வீரர்களில் தலைமையாக வீரபாகுதேவர் இருந்தார் முருகப்பெருமானின் முதன்மை தளபதியாகவும் வீரபாகு தேவரே இருந்தார்...


 சூர பத்மனுடன் போர் புரியும் முன்பு அவனிடம் இறுதியாக ஒருமுறை சமாதான   தூது செல்ல வீரபாகு தேவரை அனுப்பினார் முருக கடவுள்..

 தூதாக வந்த வீரபாகு  தேவரை ஏளனம் செய்து அவமானப்படுத்தியதுடன் அவரை சிறை பிடிக்க தனது ராட்சச படை வீரர்களுக்கு உத்தரவிட்டான் சூர பத்மன்..

  சிறை பிடிக்க வந்த ராட்சச வீரர்கள் அனைவரையும் கொன்று குவித்தார் வீரபாகு.. கோபம் கொண்ட சூர பத்மன் இறுதியாக  தனது மகன் வஜ்ரபாகுவை அனுப்பினார்..

 

  தன்னை எதிர்க்க வந்த வஜ்ரபாகுவை வாட்டி வதைத்து கொன்று அவனது முதுகெலும்பை எடுத்து  சூரபத்மனின் வீரமகேந்திர புரி கோட்டையின் வடக்கு கோபுரத்தின் உச்சியில்  கம்பமாக நட்டு வஜ்ரவாகுவின் சதையையும் நரம்புகளையும்  அக்கம்பத்தின் நான்கு புறமும் கயிறாகக் கட்டி அவனது தலையை வீரகண்டா மணியாக கம்பத்தில் மாட்டி அக்கம்பத்தின் உச்சியில் நின்று வெற்றி நடனம் புரிந்தார்....


பின்பு முருகப்பெருமானிடம் திரும்பி வந்து அங்கு நடந்ததை சொன்னார். போர் ஒன்றே தீர்வு என்பதையும் வலியுறுத்தினார்..


  போரில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான் நவ வீரர்களுடன் மேலோகம் சென்றார்..


காலங்கள் பல சென்றபின் பூலோகத்தில் சோழ மன்னன் முசுகுந்தனின்  கடும் தவத்தின் பலனாக அவரின்  வேண்டுகோளுக்கு இணங்க  நவ வீரர்களை முசுகுந்த சக்கரவர்த்திக்கு தளபதியாக அனுப்பினார் முருகப்பெருமான்...

  

நவ வீரர்களின் துணையுடன் மிகப்பெரும் ராஜ்யத்தை நிறுவினார்  முசுகுந்த சக்கரவர்த்தி...

வீரபாகு தேவரின் மகளான சித்திரவள்ளியை  முசுகுந்தனுக்கு மணமுடித்தனர்..


தாங்கள் பூலோகம் வந்த நோக்கம் முடிவடைந்து   மேலோகத்தில் கந்தவேல் வீற்றிருக்கும் கந்த மாதன பர்வதம செல்லும் காலம் வந்து விட்டதை அறிந்த நவ வீரர்கள்..


முசுகுந்த சக்கரவர்த்தியின் மகனான அங்கிவன்மனை கரூவூர்ன் நாட்டிற்கு அரசனாகவும் வீரபாகு தேவரின் மகனான அனகனை காஞ்சி நாட்டிற்கு அரசனாகவும் முடி சூட்டினார்...


மேலும் ராஜ்யத்தை நான்கு எல்லை நாடுகளாக பிரித்து ஒவ்வொரு எல்லை நாட்டின் கீழ்  17  கிளை நாடுகளையும் அடக்கி 72நாடுகளாக பிரித்து.. நவ வீரர்களின் வாரிசுகளான  ஆயிரத்து தொள்ளாயிரம் பேரையும் அதை நிர்வகிக்க நியமித்தனர்... அந்த 72 நாடுகளுக்கும் தலைமை நாடாக காஞ்சி நாட்டை அமைத்தனர்...


நவ வீரர்களின் வழி  வாரிசுகளான வீரபாகு தேவரின் வம்சமான  இவர்களே செங்குந்த கைக்கோளர் என அழைக்கப்படுகின்றனர்...


பிறகு வாரிசுகள் அனைவரையும் அழைத்து  தாங்கள் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என சொல்ல வாடிய வாரிசுகளை பார்த்து வீரபாகு தேவர் ..


என்  செங்குந்த மக்களே கேளுங்கள் சூரசம்ஹார உற்சவம் என்னும் மகோச்சுவத்தை சிவாலயங்கள் தோறும் ஸ்ரீ கந்தனாருடன் நமது குல பிள்ளைகளில் 9 பேரை  நவ வீரராக நியமித்து அவர்களை சஷ்டி சஷ்டி விரதம் இருக்கச் செய்து வணங்கினால் நாம் அவர்கள் முகத்திலிருந்து உங்களுக்கு காட்சி தருவோம்..


மேலும் நான் சூர பத்மனிடத்தில் தூது போன காலத்தில் சூரன் மகன் வஜ்ஜிரவாகுவை கொன்று அவன் முதுகு தண்டு எலும்பை வீர மகேந்திரபுரி கோட்டை கோபுரத்தில் நாட்டி விளையாடினேன் அவ்வண்ணமே நம் மகா ஸ்தலங்கள் உள்ள கோபுரத்தின் மீது நமது 72 நாடு எனும் கணக்குப்படி 72 அடி உள்ள ஒரு மூங்கில் கம்பம் கொண்டு நாட்டி நமது குல பிள்ளைகளை ஒருவனை கொண்டு வந்து சோடச உபசாரப்படி அவனை பூஜை செய்து நானாகவே பாவித்து கம்பத்தில் ஏற்றி விளையாடக் கண்டு வணங்கி நம் குல பெருமையையும் நமது வீரத்தையும் நமது அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேருங்கள் என கட்டளையிட்டார்....


 அதன் அதன்படியே செங்குந்தர்களின் தலைநாடான காஞ்சிபுரத்தில்  செங்குந்த கைகோளர் வம்சத்தின்  சில குடும்பத்தினர் கோபுரத்தின் மீது நட்டு கட்டி ஆடும் கலையை நன்கு கற்று கோவில் கோபுரம் தோறும் அக்கலையை பய பக்தியுடன் செய்து வந்தனர்..வழிபாட்டில் முதன்மையானவர்களாக இருந்ததால் அவர்களை நாயனார் என்றும் பட்டப்பெயரிட்டு அழைத்தனர்....


இனி... 1904 ஆம் ஆண்டுக்கு திரும்ப வந்து தாரமங்கலத்தில் நடக்கும் நட்டுக்கிட்டான் நிகழ்வை பார்ப்போம்...


வெளிக்கிழமை அதிகாலையிலேயே கைலாச நாதர் கோவிலை சுற்றி மக்கள் கூட தொடங்கினர் மக்கள் வெள்ளம் மெல்ல மெல்ல அதிகரித்து கடலலை போல் திரண்டு இருந்தனர்..


90 அடி உயரமுள்ள தாரமங்கல கோவிலின் கோபுரத்தின் உச்சியில் 72 அடி உயர கம்பம் நட்டு இருந்தது..அதற்கு ஆதார கயிறாக நான்கு திசையிலும் அரைக்கிலோ மீட்டர் தொலைவுக்கு சார கயிறு கட்டப்பட்டிருந்தது..


மதியம் மூன்று அல்லது நான்கு மணி அளவில் வாலிபர் ஒருவர் 72 அடி உயர கம்பத்தின் மேல் சரசரவென ஏறி கம்பத்தின் உச்சியை அடைந்து ஒற்றை காலில் நின்று முதலில் முருகப் பெருமானை வணங்கி வீரபாகு தேவரை துதித்து தனது வித்தையை காட்ட ஆரம்பித்தார்..


மேலும் கீழும் சுழன்று சுழன்று தலைகீழாக தொங்கி மேலிருந்து கீழாக இறங்கி மறுபடியும்  கீழே இருந்து மேலாகச் சென்று தான் கற்றுக்கொண்ட அனைத்து வகையான வித்தையையும் திறம்பட செய்தார்..

   

பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிசயத்து பக்தி வையப்பட்டு அரகரா கோஷத்துடன் ஆர்ப்பரித்து ரசித்துக் கொண்டிருந்தனர்..


நட்டுக்கிட்டான் ஆட்டத்தின் இறுதி நிகழ்வாக பொதுமக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து இருந்த நட்டுக்கிட்டான் கலையின் கலையின் உச்சமான மிக மிக ஆபத்தான பகுதி அரங்கேற துவங்கியது..


 சரசரவென கம்பத்திலிருந்து இறங்கி வந்த இளைஞர்  கை குழந்தையை தூக்கிக்கொண்டு  அதே வேகத்தில் கம்பத்தின் மேல் ஏறினார்.

கீழிருந்த கூட்டத்தினர் மூச்சு விட மறந்து ஆச்சரியத்தில் உறைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்...


கோபுர கம்பத்தின் உச்சியில் சென்று அக்குழந்தையை தூக்கிப்போட்டு பிடிப்பதே அந்நிகழ்வில் இறுதி கட்டம்..

சரசரவென கம்பத்தின் மேலே கைக்கு குழந்தையுடன் ஏறிய அவ்விளைஞர் மேலச்சென்று குழந்தையை தூக்கிப் பிடித்தபடி இறைவனை துதித்தார்..


 அடுத்த நொடியில் குழந்தையை தூக்கிக் கொண்டு கீழே இறங்கி விட்டார் குழந்தையை தூக்கி போட்டு பிடிக்கும் சாகசம் நடக்கவில்லை...


கூடியிருந்த மக்களுக்கு சிறிது ஏமாற்றம் தான் என்றாலும் இதுவரை நடந்த சாகசத்தின் ஆச்சரியத்தில் இருந்து அவர்கள் விடுபடவே இல்லை..


கீழ இறங்கி வந்த இளைஞரிடம் அதற்கான காரணத்தை கேட்ட போது நட்டு கிட்டான் நடப்பதற்கு முன்பு காலையில் நடந்த காமாட்சி பூஜையில் மனமுருகி பிரார்த்தனை செய்யும்போது குங்குமத்தில் காமாட்சி அம்மனின் பாதம் இரண்டும் தெரிய வேண்டும் ஆனால் இவருக்கு ஒரு பாதம் மட்டுமே காட்சி கொடுத்ததாம்.. இருந்தும் கோபுரத்தின் உச்சியில் கை குழந்தையுடன் மேலே சென்று பிரார்த்திக்கும் போதும் அதே போன்று ஒரு பாதம் மட்டுமே காட்சி கொடுத்ததால் அம்மனின் உத்தரவு வரவில்லை என குழந்தையுடன் கீழே இறங்கி விட்டதாக இளைஞர் சொன்னார்.. 


இனிதே நடந்து முடிந்த நட்டுக்கிட்டான் ஆட்டத்தின் பெருமைகளையும் சிறப்புகளையும் பேசியவாறு வந்து சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தத்தம் ஊருக்கு கலைந்து சென்றனர்..


காஞ்சியை சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் ஜம்புலிங்க நாயனார்..

நட்டுக்கிட்டான் நடப்பதற்கான 30 நாட்களுக்கான விரதம் தாரமங்கலத்தைச் சேர்ந்த மெத்தக்கடை திரு பெரியண்ண _வேலாயுத முதலியார் அவர்கள் இல்லத்தில் நடந்தது..


இவ் அதிசய நிகழ்வினை எனக்கு தெரியப்படுத்தியது தாரமங்கலம் பெ வேலு அவர்களின் தாரமங்கலம் 60 என்ற புத்தகமே. அதைக் கொண்டு மேற்கண்ட தேடலை தொடங்கிய போது அந்நிகழ்வின் பத்திரிகையை கொடுத்து உதவியவர் தாரை செந்தில் அவர்களுக்கும் மேலும் இதற்கான தகவல்களை  தந்த  செங்குந்த   கைக்கோளர் பெரியோர்களுக்கும் ,செங்குந்தர் சம்பந்தப்பட்ட நூல்களுக்கும் நன்றிகள் பல...


இவ்வளவு பெரிய கட்டுரையை மிகப் பொறுமையாக படித்த அனைவருக்கும் முருகனின் அருள் ஆசிகள் பரிபூரணமாக கிடைக்கட்டும்..


வெற்றிவேல் வீரவேல்...🙏🙏🙏🙏


🙏 நன்றி ஐயா   Siva Kg  salem  ,                           குறிப்பு:- தாரமங்கலம் 60  புத்தக ஆசிரியர், எங்கள் தமிழ் மற்றும்  தலைமையாசிரியர்  திருமிகு பெ. வேலு ஐயா அவர்களுக்கும், தமிழக பட்டிமன்ற பேச்சாளர்  எனதுநண்பர் மாமா தெய்வதிரு  தாரை வே. செந்தில்குமரன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்🙏













Post a Comment

0Comments
Post a Comment (0)