ஈரோடு V.R.A.மாணிக்க முதலியார் ex Chairman

0

 ஜூலை 5 ,2024  ஈரோடு தொழிலதிபர் V.R.A.மாணிக்க முதலியார் exChairman அவர்களின் 55 ஆவது நினைவு நாள். 



தொழிலதிபர் V.R.A.மாணிக்க முதலியார் அவர்கள் பல துறைகளில் சாதனை படைத்து வெற்றி கொடி நாட்டியவர் ஆவார்.

எந்த அடிப்படை டெக்னாலஜி வசதிகள் இல்லாத காலத்தில் பல ஊர்களில் பல வியாபாரங்களில் தன்னுடன் பிறந்த சகோதரர்களின் துணையுடன் சிறப்பாக செய்து வந்தார்.

ஈரோடு துடுப்பதில் சாயத்தொழில் அமைத்து ஜவுளிகளை நெசவு செய்து வியாபாரம் செய்தார்கள்.

ஈரோடு,கரூர்,சேலம்,கோவை மற்றும் மைசூர் பெங்களூர் மங்களூர் போன்ற ஊர்களில் கிளைகள் அமைத்துக் சகோதரர்களுடன் இணைந்து ஒரு பெரிய ஜவுளி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.

சரஸ்வதி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை பெங்களூர் சென்னிமலை திருப்பூர் போன்ற ஊர்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் தொழிலை செய்து வந்தார். அது மட்டும் இல்லாமல் அரசாங்கத்திற்கு இணையாக ஜி.டி.நாயுடுவிடம் பஸ்களை விலைக்கு வாங்கி ஈரோடு to கோயம்புத்தூர் போக்குவரத்து துறையை தன் சகோதரர்களுடன் இணைந்து ஈரோடு பஸ் சர்வீஸ் நடத்தினார். (இன்றும் TSR பஸ் சர்வீஸ். கோவை.ஸ்ரீ மாணிக்கம் பஸ் சர்வீஸ் .ஈரோடு) இயக்கப்படுகிறது.

தனது திறமையை தொழிலில் மட்டுமில்லாமல் அரசியலில் காங்கிரஸ் இயக்கத்துடன் இணைந்து 1957 பெருந்துறையில் MLA காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரது செயல்களை கவனித்து திரு. முன்னாள் முதலமைச்சர் காமராஜ் அவர்கள் V.R.A.மாணிக்க முதலியார் ஈரோடு நகர சபை தலைவராக போட்டியிட வைத்தார். வெற்றியைக் கண்ட V.R.A மாணிக்க முதலியார் இரண்டு முறை ஈரோடு சேர்மன் பதவியேற்று பல நல்ல காரியங்களை செய்துள்ளார்.

ஈரோடு மக்களுக்கு தொலைபேசி தொடர்பு கொண்டு வர வேண்டும் என்று யோசித்து டெலிபோன் வசதி கொண்டு வர முயற்சி எடுத்தார்.அக்காலத்தில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் 500 கனெக்சன் இருந்தால் மட்டும் தொடங்க முடியும் என்ற காரணத்திற்காக தனது நண்பர்களுடன் இணைந்து நூல் வியாபாரி சங்கத்தின் மூலமாக தொடங்குவதற்கு சங்கத்தின் உதவி தலைவராக பதவி ஏற்றுக்கொண்டு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கொண்டு வர காரணமாக இருந்தார். தனது வீட்டிற்கு நம்பர் 1 என்றும் அலுவலகத்திற்கு 494 என்ற எண்ணையும் பெற்றார்.

ஈரோடு சிக்கையா நாயக்கர் மகாஜன கல்லூரி நிறுவனத்தை தனது நெருங்கிய நண்பர் திரு.சிக்கைய நாயக்கரருடன் இணைந்து ஈரோடுக்கு முதல் கல்லூரியை கொண்டு வந்தார்கள். அவர் பொருளாளராகவும் பதவி ஏற்றார். 

நகர சபை தலைவராக இருந்த பொழுது கருங்கல்பாளையம் மேல்நிலைப் பள்ளி தொடங்கி வைத்தார். 

V.R.A மாணிக்க முதலியார் தனது தந்தை V.R.அங்கப்பன் முதலியார், தாய் சிகப்பாய் அம்மாள் பெயர்களில் பெருந்துறை சானிட்டோரியம் மருத்துவமனை சிகிச்சைக்கு வருவோர் தங்கும் வசதிக்காக இரண்டு அறைகளை கொண்ட கட்டிடத்தை தன் சகோதரர்களுடன் இணைந்து கட்டிக் கொடுத்தார்.

தனது பெயரில் ஈரோட்டில் V.R.A.மாணிக்கமுதலியார் திரையரங்கம் கட்டி முதன் முதலில் ஜெனரேட்டர் வசதியை கொண்டு வந்தார். ஏனென்றால் அக்காலத்தில் மின்தடைப்பட்டால் காத்திருந்து காட்சிகளை நடத்த வேண்டிய நிலைமையை மாற்றி ஜெனரேட்டர் வசதியை கொண்டு வந்து புரட்சி செய்தார்.

தனது சகோதரர்களுடன் இணைந்து பல கோயில் திருப்பணிகளை செய்துள்ளார்.

சென்னிமலை முருகன் கோவில் மலை அடிவாரம் தனது தாய் தந்தை நினைவாக கல் மடம் தனது சகோதரர் இணைந்து கட்டி கொடுத்து உள்ளார்.

குலதெய்வமான மட விளாகம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்றும் அவர்களுடைய பெயர் கொண்ட கல்வெட்டுகள் உள்ளது. 

ஒருவர் நூற்றாண்டு காலம் இருந்து செய்ய வேண்டிய சாதனைகளை தனது 58 வயதுக்குள் தொழிலதிபர் V.R.A.மாணிக்க முதலியார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .


தொழிலதிபர் V.R.A.மாணிக்க முதலியார்

ஈரோடு முனிசிபல் சேர்மன், நகர கூட்டுறவு வங்கி தலைவர்,ஈரோடு நூல் மற்றும் துணி வணிகர் சங்க துணைத்தலைவர், சிக்கையா நாயக்கர் மகாஜன கல்லூரி பொருளாளர் என பல்வேறு மக்கள் பணிகள் வகித்துள்ளார்.


சிக்கையே நாயக்கர் கல்லூரியில் 
V.R.A.மாணிக்க முதலியார் சென்னை கவர்னர் மகாராஜா
 ஸ்ரீ ஜெய சாம்ராஜ் பத்தூர்வுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.

V.R.A மாணிக்கம் முதலியார் அவர் பெயரில் ஆரம்பித்த மாணிக்கம் திரையரங்கம் .

         


தனதுசகோதரர்களுடன் இணைந்து தனது தாயார் தந்தை நினைவாக பெருந்துறை சானிட்டோரிய மருத்துவமனை வார்டு கட்டிக் கொடுக்க பூமி பூஜையுடன் தொடங்கப்பட்ட அன்று எடுத்த போட்டோ

Post a Comment

0Comments
Post a Comment (0)