பாண்டிச்சேரி ஆ.வே. முத்தைய முதலியார்

0




 பிறப்பு மற்றும் கல்வி

புதுச்சேரி மாநிலம் லப்பாக்கத்தில் செங்குந்த குலம் வேலாயுத முதலியார் மகனாக, 7-10-1879ல் பிறந்தார்.


இவர் சட்டக் கல்வி பயின்றார். பிரெஞ்ச், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சிறந்த புலமை பெற்று விளங்கினார். அன்னிபெசண்ட் அம்மையாரின் தியோசாபிகல் சொஸைட்டியின் தென்னகப் பிரிவின் செயலாளர்; அரவிந்தரின் நெருங்கியத் தொண்டர். ரமண மகரிஷியுடனும், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தாம் எடுத்துச் சொல்லும் கருத்துக்களை தம் வாழ்க்கை நெறியாக செயல்படுத்திக் காட்டினார். உயிர்க் கொலையை விரும்பாதவர். தம் காலணிகளாக தோல் செருப்புக்களை அணியாமல் மரத்தால் ஆன மதியடிகளையே பயன்படுத்தினார்.



==வாழ்க்கை மற்றும் அரசியல்==

தமிழ்ப்பற்று மிக்கவர். பாவேந்தர் பாரதிதாசனுடன் மிகவும் நெருங்கிப் பழகினார். பாவேந்தரின் சமுதாயத் தொண்டிற்கு உறுதுணையாய் விளங்கினார். பாரதிதாசன் இவரைத் தமது அரசியல் ஆசானாகவே கருதினார். இவர் பிரெஞ்ச் அரசின் தலைமைச் செயலாளராக இருந்து பிரெஞ்ச் அரசு அவருக்கு Chevalier De Lalegion DP Honour என்ற மிக உயர்ந்த விருதினை ('சர்' பட்டம் போன்ற விருது) வழங்கிற்று. இவர் தலைவர் பதவியேற்ற போது தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு 19, 20-01-1929ல் ஈரோட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


சமூக மாநாடு, வர்த்தகர் மாநாடு, வாலிபர் மாநாடு முதலிய மூன்று மாநாடுகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. சமூக மாநாட்டுத் தலைவர் திரு.ஆ.வே.முத்தைய அரசு நிர்வாகத் திறனையும், சமுதாயத் முதலியார், வாலிப மாநாட்டுத் தலைவர் மிகச்சிறப்பாகப் பணியாற்றி வந்தார். திரு.ஆ.வே.முத்தைய முதலியார் அவர்களின் தொண்டினையும் பாராட்டும் முறையில், குடியேற்றம் முனிசிபல் சேர்மன் திரு.மா.ரெ. பீமராஜ் முதலியார், வர்த்தக மாநாட்டுத் தலைவர் தென்காசி திரு.T.P.K.ஆறுமுக முதலியார். முன்னாள் தலைவர் திரு.ஜெ.எஸ். அவர்களின் பாட்டனார் திரு.மொட்டையப்ப முதலியார் அவர்கள், மாநாடு வெற்றி பெற மிகச் சிறப்பாகத் தொண்டாற்றினார். இம்மாநாட்டுக்கென்றே, சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு "செங்குந்தர் ஸ்பெஷல்" என்று ஒரு தனி ரெயிலே விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


புதுவை ஆ.வே.முத்தைய முதலியார், பி.ஏ., பி.எல்., அவர்கள் சங்க தலைமைப் பொறுப்பிலிருந்த காலத்தில் 16,17-5-1931- ல் காஞ்சிபுரத்தில் இரண்டாவது மாநாடும் 26-12-1931ல் மயிலாப்பூரில் மூன்றாவது மாநாடும், 12, 13-03-1933ல் திருவாரூரில் நான்காவது மாநாடும் 2, 3-2-1935ல் திருவத்திபுரத்தில் ஐந்தாவது மாநாடும் சிறப்பாக நடைபெற்றது.


அவர் 1935ல் தாமே விரும்பி, அரசின் தலைமை செயலாளர் பதவியிலிருந்து விலகி, அரவிந்த் ஆசிரமவாசியாக மாறினார். 23-05-1936ல் தலைமை சங்கத் தலைவர் பதவியை துறந்தார். முத்தைய முதலியாரின் ஒரு புதல்வர் டாக்டர். இளைய புதல்வர் பிரெஞ்ச் பேராசிரியர். ஒரு மகள் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்.


பிரெஞ்ச் ஆட்சியினின்று புதுமை மாநிலம் விடுபட்டு இந்தியத் தாயகத்துடன் இணைந்தபின், நடக்க இருந்த பொதுத் தேர்தலில் மக்கள் முன்னணி வேட்பாளராக முத்தைய முதலியார் வேட்பு மனு கொடுத்தார். ஆனால் இடையில் 23-06-55ல் இயற்கை எய்தினார், அவருக்குப் பதிலாக அவருடைய சீடர் பாரதிதாசன் போட்டியிட்டு வெற்றிப்பெற்று, புதுவைச் சட்டப்பேரவை உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)