*💥 இன்று 23.01.2022, ஞாயிற்றுக்கிழமை 80-ஆம் ஆண்டு குருபூஜை விழா காணும் மகான் ஸ்ரீமத் சரவணானந்த சுவாமிகள்💥*
🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹
*காஞ்சிபுரத்தில் செங்குந்த முதலியார் வகுப்பில் பிறந்த ஸ்ரீமத் சரவணானந்த சுவாமிகள் காசியில் இருந்த ஸ்ரீலஸ்ரீ குமரகுருபர சுவாமிகளைக் குருவாகக் கொண்டு அவரிடம் கல்வி - கேள்விகளையும், இலக்கண - இலக்கியங்களையும், பல்வேறு சித்தாடல்களையும் கற்றுத் தெளிந்தும், சித்த மருத்துவ முறைகளையும் அறிந்து கொண்ட சுவாமிகள் இளம் வயதிலேயே துறவறம் ஏற்றுக் கொண்டு தமிழகம் வந்து சேர்ந்தார்கள்.*
*சுவாமிகள் தென்னாடுடைய சிவனைப் போற்றும் தஞ்சைத் தரணியில் பாபநாசம் வட்டத்தில் உள்ள 108 சிவாலயத்தில் வந்து சில காலம் அங்கு தங்கியிருந்தார்கள். பின்னர் அங்கிருந்து திருவாரூரில் உள்ள வலங்கைமான் என்னும் ஊரில் சின்னகரம் என்னும் சிற்றூரை வந்தடைந்தார்கள். ஸ்ரீமத் சரவணானந்த சுவாமிகள் அவ்வூரில் இருந்த மக்களுக்குத் தான் கற்றறிந்து வந்த சித்த வைத்திய முறைகள் மூலம் வைத்தியங்கள் செய்து அவ்வூர் மக்களின் பிணிகளைப் போக்கி வந்தார்கள்.அத்துடன் பல கோவில்களுக்கு கும்பாபிஷேகங்களையும் நடத்தி வந்தார்கள்.*
*பைரவ பூஜை:-*
🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️
*ஸ்ரீமத் சரவணானந்தா சுவாமிகளின் சீடரான பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் 'பைரவ பூஜை' முறைகளையும் கற்றுத் தந்தார்கள். அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் பைரவ அம்சமான நூற்றுக்கும் அதிகமான நாய்கள் ஒரே சமயத்தில் பூஜையில் வந்து கலந்து கொண்டு அன்னதானம் சாப்பிட்டு விட்டு சென்றுவிடும்.இதுவே பைரவர் பூஜையாகும். இம்முறையை அறிந்துகொண்ட பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் தொடர்ந்து பைரவரின் வாகனமான நாய்களுக்குத் தொடர்ந்து பூஜை செய்து வந்தார்கள். இன்றளவும் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் சமாதிக் கோவிலில் தினமும் இரவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையின் போது பைரவ அம்சமான நாய்கள் கலந்து கொள்ளும் பூஜை நிகழ்வும் நடந்து வருகிறது.*
*ஸ்ரீமத் சரவனானந்த சுவாமிகள் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ள சமாதி கோவில் சதுரவடிவ ஆவுடை மீது சிவலிங்கம் வைத்து வழிபடுகின்றனர்.சிவலிங்கத்தின் எதிரில் நந்தியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. சமாதி கோவிலில் சுவற்றில் ஸ்ரீமத் சரவணானந்த சுவாமிகளின் ஓவியம் உயிரோட்டத்துடன் வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தை நாம் நேராகவும், இடப்புறமாகவோ அல்லது வலப்புறமாகவோ நின்று பார்த்தால் நம்மையே சுவாமிகள் உற்று நோக்குவது போல இருக்கும். இதுவே அவ்வோவியத்தின் சிறப்பாகும்.*
*ஜீவ முக்தி:-*
🍁🍃🍁🍃🍁
*ஸ்ரீமத் சரவணானந்த சுவாமிகள் 1942-ம் ஆண்டு தை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் ஜீவ முக்தி அடைந்தார்கள். ஆண்டுதோறும் தை மாதம் அஸ்தம் நட்சத்திர நாளில் மகாகுரு பூஜையும், அன்னதானமும் சிறப்புற நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஹஸ்தம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.*
*குருபூஜை:-*
☘️🍁☘️🍁☘️
*இந்த ஆண்டு ஸ்ரீமத் சரவணானந்த சுவாமிகளின் 80வது குருபூஜை விழா 23.01.2022 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.* *அமைவிடம்:-*
🌺🍃🌺🍃🌺🍃
*ஸ்ரீமத் சரவணானந்த சுவாமிகள் ஜீவசமாதி, சின்னகரம், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்*
*வழி:- கும்பகோணம் - மன்னார்குடி வழித்தடத்தில் தொழுவூர் எனும் ஊரிலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் சின்னகரம் அமைந்துள்ளது.*
*கட்டுரை புனைவு:-*
*ஈரோடு அகிலா குமார்*
*கட்டுரை கருத்தாக்கம்:-*