குன்றத்தூர் குமாரசாமி முதலியார்

0

குமாரசாமி முதலியார்-3 (19- நூ) 

ஊர்: சேலம் 

தந்தை: அருணாசல முதலியார், தாய்: மீனாட்சியம்மாள்.

இவருடைய தந்தையார் சென்னையை அடுத்த குன்றத்தூரில் பிறந்தவராய் இருப்பினும் சேலத்திலேயே தங்கினார்.  கி. பி. 1803 ஆம் ஆண்டில் பிறந்தார். 

இவர் இளமையில் அத்தப்ப உபாத்தியரிடம் கல்விகற்றார். சுந்தரமய்யர், இராம கிருட்டிணய்யர் ஆகியோர் இவருக்கு இசை கற்பித்த ஆசிரியர்கள். இவர் அரசாங்கத்தில் எழுத்தராகப் பணியாற்றினார் பின்னர் சவுக்கைத்தாரராகவும் பணிபுரிந்துள்ளார். 

அரசாங்க அலுவலர் ஆகையால் பல ஊர்களுக்கு மாற்றப்பட்டார். ஆங்காங்குள்ள கடவுளர் மீது இவர் பல இசைப்பாடல்கள் பாடியுள்ளார் 


இவர் எழுதிய நூல்கள்: கந்தபுராண கீர்த்தனை, சுவாமிமலை, சுவாமி நாதப் பதிகம், சுப்பிரமண்யர் லாலி சுப்பிரமண்யர் பதிகம், தர்ம சம்வர்த்தனி கீர்த்தனை, அறம் வளர்த்த நாயகி கீர்த்தனம், தண்டாயுதக் கடவுள் பஞ்சரத்ன மாலை, பழனிமும்மணிமாலை, இரட்டை விநாயகர் கீர்த்தனை, மூல விநாயகர் கீர்த்தனை, சோமசுந்தரக் கடவுள் பதிகம், தாருப்பரங்குன்றம் முருகர் பதிகம், தண்டாயுத பாணி கலித்துறைப் பதிகம், தண்டாயுதபாணி ஒருபா ஒரு பஃது. பெரிய நாயகி அம்மன் கும்மி, பழனியாண்டவர் சதகம், பழனியாண்டவர் வண்ணம்,

Post a Comment

0Comments
Post a Comment (0)