வள்ளல் அமரர் திரு.P.K. சுவாமிநாதன்.B.Com., SES trust தொண்டு மன்ற நிறுவனத் செயலாளர்.*
செங்குந்தர் குலச் செம்மல், வள்ளல் திரு.P.K.சுவாமிநாதன் அவர்கள் - தொண்டு வரலாற்றில் நிலையான பதிவு கொண்டது.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில்- தமிழக முதல்வர்கள் - மூவருக்கு தொடர்ந்து - தனிச் செயலாளராக பணியாற்றிய பெருமை இவரை மட்டுமே சேரும்.
தமிழக முதல்வராக திகழ்ந்த - கர்மவீரர் காமராஜ்- அடுத்து முதல்வர் பொறுப்புக்கு வந்த - திரு.பக்தவச்சலனார் - அடுத்து , தமிழக முதல்வராகிய - அறிஞர் அண்ணாதுரை - ஆகியவர்களுக்கு
திரு.D.A.S.பிரகாசம் அவர்களுடன் ஒன்றி இணைந்து , நீதியரசர் திரு.S.ஜெகதீசன் அவர்களின் நல் வழிகாட்டுதல் வழி -சமுதாய பொருளாதார தொண்டு மன்றம் தொடங்கி, அரசின் சலுகைகள் பெற்றும் , நமது சமுதாய மக்கள் ஆதரவாலும் சிறப்பாக நடத்தி நிலைக்க வைத்தார்.பல ஆண்டுகள் நிறுவனத் செயலாளராகத் திகழ்ந்தார்.நமது சமுதாய மாணவர்களுக்கு உதவும் கரங்களாக திகழ்கிறது !
சென்னை பெருநகர் செங்குந்த மகாஜன சங்கம் தொடங்கி , நிறுவன தலைவராக பல ஆண்டுகளாக இருந்து , சங்கத்தை தலைமைச் சங்கத்துடன் இணைய வைத்தார்.வெள்ளி விழா - கால விழா நடத்தி , மலர் வெளியிட்டார். பல செங்குந்த சான்றோர்கள் அறிமுகப் படுத்தினார்.தலைமைச் சங்க 15 /வது மாநில மாநாட்டை , சென்னையில் மிகச் சிறப்பாக நடத்தினார்.
தனிச் செயலாளராகவும், தக்க ஆலோசகராகவும் திகழ்ந்தார்.அவர்களுடன் பணிபுரிந்து, பழகிய காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை" மூன்று முதல்வர்களுடன் !"- என்ற நூல் வழி வெளியிட்டார்.தமிழக அரசின் பாராட்டும், பரிசும் அந்நூலுக்கு கிடைத்தது !நமது செங்குந்தர் தலைவர் திரு.M.P.நாச்சிமுத்து முதலியார் அவர்கட்கு, சங்க நலம் கருதி, அரசு தரப்பில் உதவிகள் பெற்றுத் தந்தார்.
தன்னை நாடி வந்தவர்களுக்கு , தக்க உதவிகள் மற்றும் பொருளாதார உதவிகள் புரிந்தார்.தான் சார்ந்த சங்கம் , மன்றம் வழி பல ஆயிரங்கள் ரூபாய்கள் நன்கொடையாக தந்து, வள்ளல் என்ற சிறப்பு பெற்றார். நமது தலைமைச் சங்க தலைவர் பொறுப்பு வரை உச்சம் காண வேண்டியவர் - சென்னை பெருநகர் தலைவர் - அளவில் தன்னை நிலைக்க வைத்துக் கொண்டார். நமது செங்குந்த சமுதாயத்திற்கு , தன் வாழ்நாள் வரை தொண்டு புரிந்து இறைவன் திருவடியை அடைந்தார்! மாமனிதருக்கு நினைவு அஞ்சலி செலுத்துவோம் !
- காஞ்சி.துரை.சௌந்தரராசன்.