தி. சம்பூரையா முதலியார் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரப்பெருமாள் கோவில் கிராமத்தில் செங்குந்த கைக்கோளர் சமூக பெரியதனக்காரர் குடும்பமான தலையாட்டி வகையறா என்று அழைக்கப்படும் அப்பாதுரை முதலியார் குடும்பத்தில் தில்லைவனம் முதலியார் - மங்கலத் அம்மாளுக்கு மகனாக பிறந்தார்.
கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் தொடக்கக் கல்வியை தனது கிராமத்தில் இருக்கும் சுகாதார மேனேஜ்மென்ட் பள்ளியில் படித்தார் பிறகு உயர்நிலைக் கல்வியை தஞ்சை பாபநாசம் ஊரில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
சுந்தரப்பெருமாள் கோவில் ஊரை அக்கால நாட்களில் திருவலஞ்சுழி கிராமத்து உடன் இணைக்கப்பட்டு திருவலஞ்சுழி பஞ்சாயத்து உருவாக்கப்பட்டு இருந்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் ஊராட்சி தேர்தலில் இந்த ஊராட்சியின் பெரும்பான்மை சமுதாயமாக இருக்கின்ற பள்ளி வன்னியர் தேர்ந்தெடுக்கப்பட்டன இரண்டாவதாக நடைபெற்ற தேர்தலில் அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்து ஒரு ஒருமனதாக (போட்டியின்றி) அன்னபோஸ்டாக தி.சம்பூரையா முதலியார் அவர்களை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுத்தனர் .
மொத்தம் மூன்று முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார் மூன்று முறை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் கும்பகோணம் யூனியன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட செங்குந்தர் சமூக மாநாட்டில் தனது சொந்த செலவில் சுந்தரப் பெருமாள் கோவிலில் நடத்தினார் சிறப்பு அழைப்பாளராக அப்போதைய அமைச்சர் எஸ். எஸ். ராமசாமி படையாச்சி அவர்களை கலந்துகொள்ள வைத்தார். பெரும் செல்வந்தருக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் தன்னிடமிருந்த செல்வங்கள் மூலம் அவர்களின் பொருளாதார் நெருக்கடியை சரி செய்தவர்.
அரசு பணிகள் பலவற்றை பலருக்கு எந்தவித கைமாறும் இல்லாமல் பெற்றுக்கொடுத்தார். கும்பகோணம் யூனியன் சேர்மனாக இருந்தபோது இவரை சட்டமன்ற உறுப்பினராக பரிந்துரை ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியால் செய்யப்பட்டது கும்பகோணம் பாபநாசம் தொகுதியில்.
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே 10.11.1971 ஆம் ஆண்டு மர்மமான சூழ்நிலையில் இறந்து போனார்.ஐயாவின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட கலெக்டர் டி ஐயா அந்தோணி மற்றும் ஜி. கருப்பையா மூப்பனார் வழித்தடம் பாதை இல்லாத போதும் மயானம் வரை நடந்து வந்தனர்.
ஐயாவின் நினைவு போற்றும் வகையில் சுந்தரப்பெருமாள் கோவில் ஊரில் டிசம்பர் மாதம் ஐயா பெயரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இவர் தானமாக கொடுத்த நிலம் தான் இன்று ஆதிதிராவிடர் குடியிருக்கும் இருக்கும் மலைப்பகுதி ஆகும். பொது பாதையாகவும் ஆதிதிராவிடர் தெரு, குடியான தெரு இணையும் வகையில் உள்ளது அந்த நிலங்கள் யாவும் இன்று அய்யாவின் பெயரிலேயே உள்ளது.
[12/11, 10:46 pm] Mano History: முற்றிலும் உண்மை. அப்போது நான் சிறுவன்.
TSM அவர்களின் இறுதி ஊர்வலத்தில், சாரலாக பெய்த மழையில், பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில், மயானம் வரை நடந்து சென்றேன்.
தற்போதைய பைபாஸ் ரோடு அப்போது கிடையாது. ரயில்வே தண்டவாளங்களை கடக்க வெள்ளாளர் தெரு ஆளில்லா லெவல் கிராசிங் மூலம் தோளில் சுமந்துதான் செல்ல வேண்டும். வாணம் அழுததோடு வையமும் அழுதது. ஆம், சாதி, மத,இன பேதமின்றி "நமது சேர்மன் (Chairman)" என்ற உணர்வோடு எண்ணற்ற மக்கள் இறுதிச் சடங்கில் சன்னமாக பெய்த மழையில் குடை பிடித்தபடி கணத்த இதயத்துடன் கலந்துகொண்ட காட்சி என் கண் முன்னே நிழலாடுகிறது.
இறுதிச் சடங்குகள் முடிந்த இரண்டு மூன்று நாட்களில் கழித்து "இன்று மாலை வானொலியில் யூனியன் சேர்மன் சம்பூரையா பேசுகிறார்" என்ற செய்தி ஊரில் காட்டுத் தீயாய் பரவ நமது அன்புக்குரியவரின் குரலை ஒருமுறை கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் வானொலி பெட்டி அருகில் (அப்போது டிவி கிடையாது) காது கொடுத்து காத்திருந்த மக்கள் ஏராளம். சென்னை வானொலி நிலையம் ஒலி பரப்பிய ஒரே ஒரு நிமிட அவர் உரையை கேட்டு கண்ணீர் துளிர்க்க அவர்கள் கலைந்து சென்றது தனிக்கதை.
[12/11, 10:46 pm] Mano History: இன்றைய அரசியலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அன்றைய #அரசியல்.
அன்றோ #யூனியன் #சேர்மன் ஆக இருந்தவர் தனது சொந்த நிதியில் மக்களுக்கு நல்லதை செய்தார், தன்னிடம் பணம் இல்லாத போதும் கடன் வாங்கி நல்லது செய்தார். அவர் இறந்தபின் அவரின் பரம்பரை சொத்துகளை வித்து அந்தக் கடனை அந்தக் குடும்பமே அடைத்தது.
ஊரில் #வெள்ளம் வந்த போது தன் வீட்டில் இருந்த #அரிசி மூட்டைகளை ஊர் மக்களுக்கு #கஞ்சியாக வைத்து கொடுத்தவர்தான் இவர்.
அவர் காலத்தில் கட்டிய #அரசு #ஆரம்ப #சுகாதார_நிலையம் இன்றைய வரையில் அதே கட்டிடத்தில் சிறப்பாக இயங்குகிறது.
#ஆசியஜோதி இந்தியாவின் முதல் #பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் சுந்தரப்பெருமாள் கோயில் வந்தபோது #ஐயா.GKM அவர்கள் தங்கத்தால் ஆன நெல் மணி மாலையை அணிவித்தார் , ஐயா.TSM அவர்கள் நெல் மாலையை அணிவித்தார்.
அன்றும் #சாதி அரசியல் இருந்தது, வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்று இவரை எதிர்த்து போட்டியிட்டவரை கொம்பு சீவி விட்டனர், ஆனால் மக்களோ அன்று ஐயா.TSM அவர்களையே வெற்றிபெறச் செய்தனர்.
அறச் செயல்களால் #அடையாளம் பெற்ற இவரிடம், #பெருந்தலைவர் என்ற பட்டத்திற்கு உண்மையில் சொந்தக்காரர், #கல்விக்_கடவுள். ஐயா.கு.காமராசர், #மக்கள்_தலைவர் ஐயா.ஜி.கருப்பையா மூப்பனார், #கல்வி_வள்ளல். ஐயா.கி.துளசி அய்யா வாண்டையார் மூவரும் மிகுந்த அளவில் நட்பு பாராட்டி வந்தனர்.
#தஞ்சையின் #ஐம்பெரும் பணக்காரர்களான
#உக்கடை.தேவர்,
#பூண்டி.வாண்டையார்,
#கபிஸ்தலம்.மூப்பனார்,
#திருவாரூர்.தியாகராஜ முதலியார்,
#குன்னியூர்.சாம்பசிவ அய்யர்,
இந்த ஐவருமே இவரிடம் நல்ல நட்பு பாராட்டி வந்தனர், இவர்களின் நட்பை காரணம் காட்டி அவர்களிடமோ, அரசிடமோ இவர் (TSM) தனக்கென்று எதுவும் சாதித்துக் கொள்ளவில்லை.
தான் பதவியில் இருந்தபோது, #ஐயா.TSM அவர்கள் திணை அளவில் கூட அதிகார துஷ்பரியோகம் செய்யாமல் அரசியல் வாழ்வில் #தூய்மை யின் இலக்கணமாய் வாழ்ந்தவர்.
#TSM மேல் கொண்ட நட்பின் காரணமாய் இவரின் திருமணத்திற்கு பெண் அழைப்பு என் வீட்டில்தான் என்று அன்புக் கட்டளை இட்டார் ஐயா.GKM அவர்கள், ஐயாவின் விருப்பப்படி அரியலூரில் இருந்து வந்த பெண்ணிற்கு (ரோஸ்அம்மாள்) சுந்தரப்பெருமாள் கோயில் மூப்பனார் பங்களாவில் தான் பெண் அழைப்பு நடந்தது.
ஐயா.கு.காமராசர் அவர்கள் #TSM வீட்டிற்கு விஜயம் செய்தார்கள்.
ஐயா.T.சம்பூரையா முதலியார் அவர்கள் டிரஸ்டி யாக இருந்த போதுதான் சுந்தரப்பெருமாள் கோயில் சௌந்தரராஜப் பெருமாள் கோவிலின் #ஸ்தல #வரலாறு எழுதப்பட்டது.
ஐயா.T.சம்பூரையா முதலியார் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஐயா.G.கருப்பையா மூப்பனார் அவர்களும் , அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர். T.V.அந்தோணி IAS அவர்களும் மிகுந்த மன வேதனையுடன் கலந்து கொண்டனர்.
இறுதி ஊர்வலம் முழுமையும் இவர்களும் ஊர் மக்களுடன் இணைந்து நடந்தே சென்றனர்.