நடராஜ முதலியார்
செங்குந்தர் கைக்கோளர் மரபில் பிறந்து மன்னார்குடி நகர் மன்ற தலைவராக பணியாற்றியவர்.
இவர் மன்னார்குடி நகரில் வளர்ச்சிக்கும் அப்பகுதி செங்குந்தர் நெசவாளர்களின் வளர்ச்சிக்கும் உழைத்தவர் தஞ்சை ஜில்லா செங்குந்தர் கல்வி சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றி செங்குந்த கைக்கோளர் மாணவர்களை உயர்கல்வி படிக்க வைத்தவர்.
தியாகச் செம்மல் மன்னைப் பெருமகனார் R. விசுவநாதன், தினமலர் நிருபர் - மன்னார்குடி, அஞ்சாமை, அறிவு நுட்பம், பிறர்க்குதவும் பெருந்தன்மை, தம்மின் வலியாருடன் மோதி வெற்றி பெறுதல், தம்மின் எளியாரை இகழாதிருத்தல், சான்றாண்மை, சமயோசிதம் வீரம் ஆகிய உயர் தனிப்பண்புகளின் மொத்த உருவமாகத் திகழ்ந்தவர் தான் மன்னைப் பெரியவர் அமரர் பெரி. ராம, நடராஜ செங்குந்தர் ஆவார். அமரர் நடராஜ செங்குந்தர் அவர்கள் 28-12-1887-இல் மன்னார்குடியில் இராமலிங்க செங்குந்தர் -வினாயகத்தம்மாள் தம்பதியரின் மூன்றாவது மகனாய்ப் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தம் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் மனைவியை இழந்தார். எனினும் மறுமணம் செய்து கொள்வதில் நாட்டம் கொள்ளாமல் நாட்டு மருந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு நாட்டு வைத்தியராகவே ஆகிவிட்டார். பின்னர் இவரது தமையனார் திரு. பழநியாண்டி செங்குந்தர் அவர்களின் வற்புறுத்தல் காரணமாக இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தார். அக்காலத்தில் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் இயக்கத்தில் முக்கிய புள்ளியாக விளங்கிய, காலஞ்சென்ற குன்னியூர் கே. எஸ். சாம்பசிவ அய்யரின் தந்தையாருடன் நட்புக்கொண்ட நடராஜ செங்குந்தர், பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் முனைப்புடன் ஈடுபட்டு உழைத்தார். மன்னை நகர்மன்ற உறுப்பினராக 30 ஆண்டுக்காலமும், நகர் மன்றத் தலைவராக 7 ஆண்டுக்காலமும் பொறுப்பு வகித்து பல அரும்பணிகள் ஆற்றியுள்ளார்.
திருவாரூர் வள்ளல் தி. நா. சபாபதி செங்குந்தர் அவர்களுடன் தொடர்புகொண்டு அவரது அறிவுரைப்படி தஞ்சை ஜில்லா செங்குந்த மகாஜன கல்விச் சங்கம் 5-6-1944 இல் கூறைநாட்டில் தோற்றுவித்து இச் சங்கத்தின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்திவந்தார் நமது நடராஜ செங்குந்தர். “செய்வன திருந்தச் செய்" என்ற சொற்றொடருக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். தொண்டு என்பது வீட்டுத் தொண்டிலிருந்து துவங்க வேண்டும் என்பார் தமிழ்த் தென்றல் திரு. வி. க. அதுபோல தான் சார்ந்த செங்குந்தர் சமூகம் கல்வி மற்றும் உத்தியோக வாய்ப்பு போன்ற துறைகளில் நல்வாய்ப்பு பெறவேண்டும் என்ற பெருவிழைவோடு உழைத்த நமது மன்னைப் பெரியவர், உள்ளூரில் இருக்கும் செங்குந்த பெருமக்களின் நாட்டாண்மைக் குழுத் தலைவராக இருந்து சீரிய பணிகள் ஆற்றியுள்ளார். தம்முடைய ஊரில் நம்மவருக்குச் சொந்தமான, குளம், தோட்டம் முதலானவை சிலர் உரிமை பாராட்டினார்கள். வேறு ஒரு கோயிலுக்குச் சொந்தமானது என்று அப்போது நம் குலப் பெரியவரான நடராஜ செங்குந்தர் அவர்கள் தம் சொந்த பொருட் செலவில் பெருமுயற்சி மேற்கொண்டு சென்னை உயர் நீதி மன்றம் வரை சென்று வழக்காடி உரிமையை நிலை நாட்டி நம்மவர்க்காக உழைத்திருக்கிறார். 300 ஆண்டுகளுக்கு முன் சித்தி அடைந்த மகான் சூட்டுக்கோல் இராமலிங்கரின் சமாதியைப் புதுப்பித்து அக்கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தினார். அங்குள்ள குளம் மற்றும் மலர்த் தோட்டத்தைச் சீர்திருத்தியும் சிறப்புச் செய்தார். செங்குந்தர் குலத்துக்குச் சொந்தமான குளத்தை ஆழப்படுத்தி 40 அடி அகலப்படுத்தி படித்துறைகள் கட்டி, கரைகளில் தென்னை பயிரிட்டு மிக்க பொலிவுறச் செய்தார். நகர மக்களுக்குப் பெரிதும் பயன் தரும் குளமாக இது விளங்குகிறது. தெருவில் தம் சொந்தச் செலவில் பிள்ளையார் கோயில் கட்டி நித்யபூஜையும் நடத்திவரச் செய்துள்ளார். "அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே" என்றார் தாயுமானவர். நகரில் உள்ள சாதாரண ஏழையிலிருந்து பெரும் செல்வந்தர் மற்றும் பெருமக்கள் பலருக்கும் நம் நடராஜ செங்குந்தர் பண உதவி செய்துள்ளார். மிகக் குறைந்த வட்டி மட்டுமே வாங்கியிருக்கிறார். கதவின் வழியாக அநியாயமாக வரும் செல்வம், ஜன்னல்களின் வழியாக வெளியே செல்கிறது என்பது பழைய எகிப்திய பழமொழி. இதை நம் பெரியவர் உணர்ந்ததாலோ என்னவோ லட்சுமி தேவி மூலம் அதிகம் பொருள் ஈட்டுவதில் அவர் நாட்டம் கொள்ள வே இல்லை. மகாத்மா காந்தி அடிகளின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு 50 ஆண்டுகளுக்கு முன்னரே தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்டார் நம் பெரியவர். அரிசனங்கள் வாழும் சேரிப் பகுதியில் தம் சொந்த மனைகளை எல்லாம் விட்டுக் கொடுத்துள்ளார். அங்குப் பல புதிய தெருக்களை அமைத்துக் கொடுத்துள்ளார். பெரும் சண்டை சச்சரவுகள் வழக்கு வியாச்சியங்கள் இவற்றை எல்லாம் அவர் மிக எளிதில் தீர்த்து வைத்து விடுவார். ஒரு பெரிய தீர்க்கதரிசிக்கு உள்ள முன்யோசனை சமயோசித அறிவு எல்லாம் இவரிடம் உண்டு. இன்று அவர் அமரர் ஆகிவிட்டாலும் சிறந்த பண்பும் "செல்வர்க்கு அழகு செழுங் கிளைத் தாங்குதல்" என்ற நெறிக்கு இணங்கத் திரு. ஆர்.என். சந்தானராஜகோபாலன் என்ற அருமையான புதல்வரைத் தமது வாரிசாக விட்டுச் சென்றுள்ளார். “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல்" 115 என்ற குறட்பாவின் பொருளுக்கு இலக்கியமாகத் திகழ்ந்து, இன்று தஞ்சை ஜில்லா செங்குந்த மகாஜன கல்விச் சங்கத்தின் மூன்றாவது தலைவராக இருந்து தந்தை வழியில் அரும்பணி ஆற்றி வருகிறார். திரு. ஆர். என், சந்தானராஜகோபாலன் அவர்கள், ஒட்டக்கூத்தர் பரம்பரையில் வந்த செங்குந்தர் குலத்தின் வீரம்மிக்க பெருமகனார் வரிசையில் அமரர் பி. ஆர்.ஆர்.எம். நடராஜ செங்குந்தர் அவர்களுக்கு என்றும் அழியாத இடம் உண்டு, *************
அருள்திரு. பெரி. ராம. நடராஜ முதலியார் (1887-1974) மன்னார் குடியில் 28-12-1887 -இல் பிறந்தார் மன்னார்குடி நகர சபையில் உறுப்பினராகவும் 7 ஆண்டு காலம் நகர மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். வள்ளல் சபாபதி செங்குந்தருடன் இணைந்து 05-06-1944 தஞ்சை ஜில்லா செங்குந்தர் மகாஜன கல்வி சங்கத்தை நிறுவியவர். திரு. செல்ல குட்டி செங்குந்தர் அரியலூர் மாவட்டம் இலையூர் கிராமத்தில் வாழ்ந்த செங்குந்த மகா பிரபு திரு. செல்லக்குட்டி செங்குந்தர் தனது செங்குந்தம் ஈர்ப்பால் ஜெயங்கொண்டம் மற்றும் இலையூர் இடையில் தனக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை 40 x 60 வீதம் பிளாட்டுகளாக பிரித்து நேர்த்தியான ஒரே நேர்கோட்டில் தெருக்களை அமைத்து அந்த இடத்திற்கு செங்குந்தபுரம் என்கிற பெயரை அமைத்து வேறு ஜாதியினருக்கு தராமல் செங்குந்தருக்கு மட்டும் விற்பனை செய்து அங்கே ஒரு அழகிய நகரத்தை உருவாக்கியவர் என்கிற தகவல் வரலாற்றில் உள்ளது.இவரின் பிறந்த தேதி மறைந்து தேதி முழு வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்ஸ்அப் எண்ணுக்கு +91 85239 45181 தகவலை அனுப்பவும்