


"கல்வெட்டில் நெசவியல்"
அ. அப்துல் மஜீத், எம்.ஏ.,
பதிவு அலுவலர், தொல்பொருள் துறை, திருச்சி,
கல்வெட்டின் துணை கொண்டு பல்லவர். சோழர், சம்புவராயர்,
பாண்டியர் , விஜயநகரப் பேரரசர்களின் காலங்களில் நெசவுத் தொழிலைச்
செய்தவர் எவ்வாறு இருந்தனா
என்றும்,
அவர்களுடைய தொழிலின்
சமூகத்தில் அவர்களுக்கிருந்த செல்வாக்கையும்,
உரிமைகளையும் பற்றிச் சிறிது நோக்குவோம்.
முக்கியத்துவத்தையும்,
உ
வருவது போனை சோரங்கள் போற்ண்ணி போறனாக at agains போன போனை
சோழர் காலம் :
பராந்தகச் சோழனின் (கி பி 907-955) இரண்டாம் ஆட்சி
ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு, கடிகாவன் களத்தன் என்னும் கைக் கோளப்
படையைச் சேர்ந்தவன் 90 ஆடுகளை திருகுடமூக்கில் எழுந்தருளியுள்ள திருக்
கீழ் கோட்டாறு பரமசுவாமிக்கு நெந்தா விளக்கெரிப்பதற்காகக் கொடையாக
அளித்தான் என்ற செய்தியைக் குறிப்பிடுகிறது.
இம்மன்னனின் இரண்டாம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்த உடையார்குடி
கல்வெட்டொன்று கூததப்பெருமாளுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு சோடி ஆடை
கொடுக்க வேண்டும் என்பதற்காக
கைக்கோளப் படையைச் சேர்ந்த
அரையன் ஜெயவிடங்கன் என்பவன் பத்துக் காசு கொடையை அளித்
துள்ளான் என்பதையும், இக்கொடையை அளித்தவர் கூத்தபிரானுக்கும்.
கணபதிக்கும், பிச்சதேவருக்கும் கோயில்கள் எடுப்பித்துள்ள தாகவும் குறிப்
பிடுகிறது
உத்தமச் சோழன் (கி.பி. 970-985) :
இவருடைய காலத்தில் நெசவுத் தொழில் மிகவும் முக்கியத்துவம்
வாய்த்திருந்தது குறிப்பாக காஞ்சிபுரத்தில் வாழ்ந்த நெசவுத் தொழில்
பட்டனர்
புரியும் மக்கள் ஆலயங்களிலும் அரசியலிலும் மிகவும் ஈடுபாடுடையவர்களாக
இருந்தனர் காஞ்சிபுரத்தில் இந்நெசவாளர்கள் வாழந்த பகுதிகள் நான்கு
குறிக்கிறது இங்கு வசித்தவர்கள் பட்டசாலியன்கள்' என்று அழைக்கப்
இருந்தன அவைகளைப் 'பாடிகள்' என்று உத்தமச் சோழனின் செப்பேடு
இவர்கள் பட்டாடை நெய்பவர்கள். இவர்கள் அரசர்களுக்கும்
அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு மட்டுமே ஆடை நெய்பவர்கள்
நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனிக்கும்படி நியமித்தான். மேலும்
உத்தமச் சோழன் இவர்களைக் காஞ்சிபுரத்திலுள்ள ஊரகம் என்ற கோயிலின்
சோழ நியமம என்ற இடத்தில் வசித்தவர்களின் மீது விதித்திருந்த வரியை
நீக்கி ஆலய சம்மந்தப்பட்ட கணக்குகளை மாதம் ஒருமுறை பரிசோதிக்கும்படி
நொவாளாகளுக்குப் பொறுப்பை அளித்தான்,
முதலாம் இராசராசன் (கி.பி. 985-1016)
இவ்வரசனுடையக் கைக்கோளப் படையினர்
வருவாய்த் துறை
அதிகாரிகளுடைய ஒத்துழைப்புடன் சோமூரில் உள்ள இறைவியைச் சூரிய
கிரகணத்தின் போது ஊர்வலமாகக் கொண்டு வரும் நாளை விழாவாகக்
கொண்டாடவில்லை என்பதற்காக அக்கோயிலைச் சார்ந்த பொறுப்புடையவர்
களின் மீது தண்டம் விதித்தனர்.
முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி. 1012-44.)
இம்மன்னனது இரண்டாம் ஆட்சி ஆண்டில் கைக்கோளப் பெரும்
படையைச் சேர்ந்தவர்கள் திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்க சுவாமி
கோயிலில் ஒரு சன்னலும், ஒரு கதவும், ஒரு நிலைப்படியும், அங்குள்ள மண்
டபத்தில் முன்னே படிகளும் கட்டுவித்தனர் என்று அங்குள்ள கல்வெட்
டொன்று குறிப்பிடுகிறது
முதலாம் இராசாதி ராசன் (கி. பி. 1018-54).
இம்மன்னனது 35 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு திருவிடை மருதூர்
என்ற கிராமம் அங்கு உறையும் வராகப் பெருமாளுக்குக் கொடையாக
அளிக்கப்பெற்றது என்றும் அக்கிராமத்திலிருந்து வரும் தறியிறையிலிருந்து
வரும் வருவய் அரசன் பிறந்த நாளான பூர்வ பங்குனித் திருவிழாவிற்கும்
பயன்படுத்தப்பட்டதென்றும் குறிப்பிடுகிறது
வீரராஜேந்திரன் (கி. பி. 1063-69).
இம்மன்னனது இரண்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு திருவொற்றி
யூரிலுள்ள ஜெயசிங்க குலகால பெருந்தெருவில் வசிக்கும் நெசவுத் தொழில்
செய்பவர்களும் சாலிய வணிகர்களும் அரசன் பிறந்த நாளன்று நடக்கும்
விழாவிற்கு அவர் அவர்களுக்குரிய பங்கீட்டுப் பணத்தை அளிக்கவேண்டு
மெனக் குறிக்கிறது.
மூன்றாம் இராசராசன் (கி.பி. 1216-1279)
இம்மன்னனின் 21-ஆம் ஆண்டுப் பொய்கைக் கல்வெட்டு வரிகளைப்
பற்றிக் குறிப்பிடும் போது இரண்டு வகை வரிகளைக் குறிப்பிடுகிறது. அவை
நெல்லாயம் காசாயம் ஆகும். தறியிறை காசாயம் என்ற பிரிவின் கீழ்
வந்துள்ளது. ஆகவே இதிலிருந்து தறியின் மீது விதிக்கப்பட்டிருந்த வரி
கசாகவே வசூலிக்கப் பெற்றதென்பதை நன் த அறியலாம்
சீன வரலாற்றாசிரியர் சௌ ஜுகுவா (Chau-Ju-Kau) சோழ நாட்டில்
இருந்து சீனாவிற்கு இறக்குமதியாகும் பொருள்களின் பட்டியல்களைக் குறிப்
பிடும் பொழுது, பருத்தியாலான துணிகளும், பல நிறமுள்ள பட்டு நூலையும்
சோழ நாட்டிலிருந்து கி பி
பச்மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் சீனா
இறக்குமதி செய்தது என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து நம் பண்டைய
நெசவுத் தொழிலின் பெருமையையும், வெளிநாட்டு வணிகத்தையும், நன்கு
அறிய முடிகிறது.
சம்புவராயர் காலம்
இராசநாராயண சம்புவராயர் (கி.பி. 1337-60) :
இவரது ஏழாவது ஆட்சி ஆண்டு நெறும்பூர் கல்வெட்டு திருவாலீஸ்
வரமுடைய நாயனார் கோயிலைச் சுற்றி வசித்து வந்த கைக்கோளரின் மீது
கடமையும், வாசல் வரியும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும்
என்று நிர்ணயிக்கப் பெற்றதைக் குறிப்பிடுகிறது
இவரது மற்றொரு புலிப்பார கோயில் கல்வெட்டு திருப்புலிப்பாவை
நாயனார் கோயிலைச் சுற்றியுள்ள திருமாட விளாகம் என்னும் பகுதியில்
வசிக்கும் கைக் கோளர்களும், சாலியர்களும் தறிக்கடமையும் பேர் கடமையும்
கோயில் இறைவழிபாட்டிற்காக அளிக்க வேண்டும் என்ற செய்தியைக் குறிப்
பிடுகிறது
பாண்டியர் காலம் :
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1238-1253).
இம்மன்னனது பதினான்காம் ஆட்சி ஆண்டு களத்தூர் கல்வெட்டு
முன் குடுமீஸ்வரர் கோயிலுக்கு அக் கோயிலைச் சார்ந்த கைக்கோளர்களில் ஒரு
வரான கக்குநாயகன் என்பவர் இறைவழிபாட்டிற்காக நிலம் கொடையாக
அளித்தமையைக் குறிக்கிறது.
என்
இக்கோயிலிலேயே காணப்படும் மற்றொரு கல்வெட்டு மல்லந்தை
னும் கை கோளன் கோயில் வழிபாட்டிற்காக நிலத்தைக் கொடையாக
அளித தான் என்றும் முன்னர் குறிப்பிட்ட கக்கு நாயகன் ஆளுடைய நாயகன்
ஆகியோர் இவனுடைய சகோதரர்கள் என்றும் இக்கல்வெட்டு குறிப்பிடு
கிறது. இதிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒருவர் பின்
ஒருவராக கோயிலுக்கு நிலக்கொடை அளித்துள்ளனர் என்று அறியமுடிகிறது
கல்வெட்டு கைக்கோள வகுப்பைச் சார்ந்தவர்களும் அவர்களுடைய புதல்வி
இம்மன்னனின் பன்னிரண்டாம் ஆட்சி ஆண்டு புலிப்பாரகோயில்
ஆம் ஈடுபடவும், சுதந்திரமாக இருக்கவும், விழாக்காலங்களிலும், சிறப்பான
சுதந்திரமாக