பழனி செங்குந்தர் தர்ம பரிபாலன சபை

0

 


செங்குந்தர் தர்ம பரிபாலன சபை பதிவு எண் S.No. 32 OF 1956 அடிவாரம், பழனி. 

ஆறுபடை வீடுகளில் சிறந்து அற்புத மகிமைகள் பல வாய்ந்து விளங்கும் மூன்றாவது படைவீட்டுத் தலமான திரு ஆவினன்குடித் தலமெனும் அருள்மிகு பழனியம்பதி உத்தம தலமாகும். அருள் மிகு தெண்டாயுதபாணி சுவாமிக்கு நம் முன்னோர்கள் தொன்றுதொட்டுச் செய்து வரும் தருமங்கள் பலவாகும். அருள் மிகு தெண்டாயுதபாணி மலைக்கோயில் உட்பிரகாரத்தில் நவவீரவாகு தேவர் கோயிலும், சுவாமிகளும், மலையின் மத்தியில் அருள் மிகு இடும்பன் கோயில் மண்டபமும், அடிவாரம் சன்னதி வீதியில் தண்ணீர்ப் பந்தல் மடமும் அருள்மிகு முத்துக்குமரசாமி கோயிலும் திருமண மண்டபமும் திரு ஆவினன்குடி கோயில் கொடிகட்டு மண்டபமும், கொடி மரமும், பழனி டவுன் மேலரத வீதியில் காமாட்சி அம்மன் கோயில் மடமும், பழனி பெரியநாயகி அம்மன் கோயில் கொடிகட்டு மண்டபமும் கொடிமரமும், நடேசர் சுவாமியும் கோயிலும், செங்குந்தர்கட்குப் பாத்தியப்பட்டவைகளாகும். இவைகள் அனைத்தையும் செவ்வனே பராமரித்தும் பாதுகாத்தும் காலாகாலத்தில் ஆண்டவனுக்குச் செய்யவேண்டிய சூரசம்ஹார மண்டகபடி, தைப்பூச கொடியேற்று விழா மண்டகபடி, பங்குனி சித்திரை மாதங்களில் தண்ணீர்ப்பந்தல் தருமம் மற்றும் தரும காரியங்கள் செங்குந்தர் தர்ம பரிபாலனசபையினரால் சிறப்பாக நடத்தப்பட்டு வரு கின்றன. 4 ஆந்திரம் கர்நாடகம் கேரளம் தமிழ்நாடு மற்றும் அகில பாரதநாட்டிலிருந்தும் பழனிக்கு அருள்மிகு தென்டாயுதபாணியைத் தரிசிக்க வரும் செங்குந்தர்குல ஆஸ்தீக பெருமக்கள் நமது மடங்களில் தங்கியிருந்து பழனி ஆண்டவனைத் தரிசித்து அவனருள் நம் கட்டிட நன்கொடை வழங்குகிறார்கள். வசூலிக்கப்படுகிறது. நம்குல பெருமக்கள் தங்கி செல்வதற்கு வசதியாக சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீமுத்துக் குமரசாமி மடத்தைச் சுமார் இருபது லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளோடு திருமண மண்டபமும், விருந்து மண்டபமும், தங்கும் மண்டபமுமாக மூன்றடுக்கு மாளிகையாகக் கட்டி முடிக்கப் பெற்றுள்ளது. அதே போல், தண்ணீர்ப்பந்தல் மடத்தையும் அபிவிருத்தி செய்யவும் மேலரத வீதியில் உள்ள பூர்வீகமான மண்டபத்தைக் காமாட்சி அம்மன் கோயிலும், காமாட்சி அம்மன் திருமண மண்டபமுமாகக் கட்டத் திட்டமிடப் பட்டுள்ளது. இந்த தர்ம செயல்பாடுகள் செங்குந்தர் தர்ம பரிபாலன சபையினரால் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

நிறுவனர்: வி வி.சி.ஆர். முருகேச முதலியார் 





செங்குந்தர் வரலாறு மீட்பு குழு 78269 80901




Post a Comment

0Comments
Post a Comment (0)