செந்தமிழ் கல்வெட்டும் செங்குந்தர் சிறப்பும்

0
1976ஆம் ஆண்டில் புலவர் செ. இராசு கவுண்டர் எழுதிய செந்தமிழ் கல்வெட்டும் செங்குந்தர் சிறப்பும் என்ற கட்டுரையில் கொங்குமண்டல செங்குந்தர் கைக்கோள முதலியார் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் நிறைய உள்ளது.









“செந்தமிழ்க் கல்வெட்டும் செங்குந்தர் சிறப்பும்" கல்வெட்டறிஞர். புலவர். செ. இராசு, பி. லிட்., ஈரோடு . செங்குந்தர் வரலாறு மீட்பு குழு C78269809031 தமிழகத்தின் கலை, இலக்கியம், சமய வளர்ச்சியிலும், பண்பாட்டைக் காத்துவரும் அருஞ்செயலிலும், அருள் - அறம் - பெருவீரமாகிய மறம் இவற்றை நிலை நிறுத்திய பெருமையிலும் செங்குந்த குலச் செம்மல்களுக்குப் பெரும் பங்குண்டு என்பதை வரலாற்றாசிரியர்கள் நன்கு அறிவர். தமிழகத்தின் ஒரு பகுதியாகிய குன்றாப் பெருமைகொண்டு விளங்கும் நம் கொங்கு நாட்டின் சிறப்புக்கு அவர்களே இன்றியமையாத காரணகர்த்தாக்கள்! அவர்கள் நுழையாத துறையில்லை. நுழைந்ததில் நுண்மான் நுழை புலத்தோடு உழைத்து வெற்றி கொள்ளாத் துறையுமில்லை ! பண்டைப் பெருமையைத் தொட்ட இடமெல்லாம் செங்குந்தர் பெருமையே துலங்குகிறது என்பதில் ஐயமில்லை. இலக்கியம் வளர்த்த ஏந்தல்கள்: சென்ற நூற்றாண்டில் கொங்கு நாட்டில் பெரும் புலவராகச் செங்குந்தர் சிலர் விளங்கிப் பெருமை பெற்றிருக்கின்றனனர் கோவை கந்தசாமி முதலியார் (1838-1890) பேரூர், மருதமலைக்கு 8 பிரபந்தங்கள் பாடியுள்ளார். வடவழி அருணாசலக் கவிராயர் யவன காவியம், பேரூர் உலா, மருதமலைப் பிள்ளைத் தமிழ் பாடினார். ஓராட்டுக் குப்பை செட்டிபாளையம் பல செங்குந்த குலப் புலவர்களை ஈன்றெடுத்துள்ளது. அவர்களுள் குட்டியானை முதலியார், முத்து நைநாத்தை முதலியார், வாசுதேவ முதலியார் ஆகியோர் மிகச் சிறந்தவர்கள். தனிப்பாடல்கள் பல பாடிய முரட்டுப்பாளையம் குப்பானந்த சுவாமியார் செங்குந்த குலத்தினரே! கந்த புராணச் சுருக்கம் பாடிய குமாரசாமி முதலியார், கலம்பக இலக்கியத்தில் புகழ் கொண்ட சுந்தர முதலியார் ஆகியோரின் பெருமைகனை அறியாதவர் அறியாதாரே! ஆலயம் காத்த அடியார்கள் : திருக்கோயில் வழிபாட்டிலும், ஆலய பராமரிப்பிலும், இறைத்தொண்டு பணுவதிலும் என்றும் செங்குந்தர்குலப் பெருமக்கள் பிறருக்கு முன்னோடியாக இருந் திருக்கின்றனர். “இக்கோயில் கைக்கோளரீல் அமரகோனார் கொளந்தை யாண்டார்க்கு திருமுக்காணி குடுத்தபடி இவன் தமக்கை அறம் வளர்த்த நாச்சியார் மிஸ்த கண்ட மாணிக்கம் புடவைக் கடைகள் தனி வீதிகளில் வைத்து விற்கப்பட்டன. வேறெங்கும் இப்படி நடைபெறவில்லையாம். அதற்காக வரி விதிக்கப்பட்டது. இதனை, வடபரிசார நாடு, குறுப்பு நாடு, நாலூர்ப் பற்று நாடு, பேரூர் நாடு, வீர சோழ வள நாடு, ஒடுவங்க நாடு இந்நாட்டிலுள்ள கைக்கோளருக்கு நிருபம் குடுத்த படியாவது கொங்கு மண்டலத்து மத்து மொரு நாட்டிலுமில்லாத கட்டளையிந்த நாட்டிலே இரண்டு வருஷம் சூலை திறை என்று நடந்த அளவுக்கு இவ்வருஷம் முதலா என்றென்றைக்கும் நாம் இந்த நாடுகளுக்குச் சூலை திறையிட்டோம்'' (7) என்று கல்வெட்டு கூறுகிறது. படை நடத்திய பண்பாளர்கள் : பழந்தமிழ் அரசர்கள் வீரமிக்க பரம்பரையாகிய கைக்கோளர் குலத்தினரைக் கொண்ட பெரும் வலிமை கொண்ட படையைத் தம் அருகிலேயே வைத்திருந்தனர். வெள்ளலூர் ஆன அன்னதான சிவபுரி, அன்னூர் கல்வெட்டுக்களிலிருந்து கொங்கு நாட்டிலும் அப்படை இருந்ததென அறிகிறோம். ''ஆமட்டம் தெருஞ்ச கைக்கோளர்'' "கைக்கோள சேனாதிபதிகள்'' (8) என்பது அக்கல்வெட்டுத் தொடர்களாகும். கைக்கோளப் படையிலிருந்து தேர்ந்தெடுத்த வீரர்களைக் கொண்ட சிறப்புப் படையே "தெரிஞ்ச கைக்கோளப்படை'' ஆகும். தாய்ந்த தறுகணாளர்: " சோழன் பூர்வ பட்டயம் '' என்பது கொங்கு நாட்டு வரலாறு கூறும் அருமையான ஒரு நூல் ''சில நூற்றாண்டுகளின் முன் கைக்கோளர்களுக்கு மிகுந்த செல்வாக்கு நாட்டில் இருந்தது என்று சொல்ல இந்நூல் இடந்தருகிறது. கோயில் அமைப்பு, அதிகாரம் இவைகளிலும் வகுப்புப் பிரிவினை, அவர்களின் உரிமை கடமைகளை விசாரித்து வழக்குகளைத் தீர்த்தல் முதலிய செயல்களிலே கைக்கோளத் தலைவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் இவர்கள் பேச்சைக் கேட்டு அதற்கு மதிப்புத் தந்திருக்கிறார்கள் என்று வரலாற்றுப் பேரறிஞர் கோவை சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார் சோழன் பூர்வ பட்டய மதிப்பீட்டில் கூறுகின்றார். (9) அப்பட்டயத்தில் செங்குந்த குலத்தினர்கள் தங்களையே பலியிட்டுக் கொண்ட சிறப்புக் கூறப்படுகிறது. செங்குந்தர் மெய்க்கீர்த்தியில் 'சாவாரப் பலி' பற்றிய செய்தி கூறப்படுகிறது. மாமல்லபுரம், புள்ளமங்கை, திருச்சி போன்ற இடங்களில் தலைப்பலிச் சிற்பங்களைக் காணுகின்றோம். அறகண்ட நல்லூர்க் கல்வெட்டில் திரிபுவனச் சக்ரவர்த்தி என்பவன் சுந்தரபாண்டியன் காலத்தில் பொன்னாண்டி மகன் இளவெண்மதிசூடி அக்கோயில் மண்டபம் இடையூறின்றிக் கட்டி முடிக்கப்படுவதற்காகத் தன் தலையை அரிந்து கொடுத்தான் என்ற செய்தியைக் காணுகின்றோம், (10) (7) தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் | எண் 219. (8) AR No. 590 of 1922; A R No. 625 of 1922 (9) சோழன் பூர்வ பட்டயம். பக்கம் 6. (10) AR. No. 197 of 1935. தேவராய மகாராயரைக் கண்டு இக்கோயிலுக்குச் சர்வமானியம் பண்ணிச் செப்பேடு வாங்கி வருகையில்" (1) என்ற பகுதியால் இக்குல ஆடவர் மட்டுமல்ல பெண்டிரும் திருப்பணியில் முன்னின்றமை தெளிவாகும். திருக்காவனத்து ஸ்ரீ மகேஸ்வரரும் ஸ்தானத்தாரும் நாட்டாரும் வீரசோழ அணுக்களும் கைக்கோளரும் இருந்து (2) எனவரும் தொடரால் இக்குலப் பெருமக்கள் ஆலய நிருவாகத்தில் பெற்றிருந்த முதன்மை நமக்குப் புலப்படுகிறது. அன்னூர் போன்ற மிகப்பழைய ஊர்க் கல்வெட்டுக்களை நோக்குமிடத்து கொங்குச் சோழர், பாண்டியர் காலத்தே அவ்வாலயத்தில் செங்குந்தர் குலப்பெருமக்கள் விளங்கிய சிறப்புப் புலனாகும். “கைக்கோளர் கேசியகங்கள்" "கைக்கோளர் தன பாலராயன்” “கைக்கோளரில் அவனாசி' கோளர்" அவனிராயன்” “சேவூர்க் கைக்கோளர் கரிகாலன் (3) என்ற பெயர்களை ஆண்டுக் காணுகின்றோம். இப்பெயர்கள் அவர்களுடைய சமய, அரசுப் பற்றினை நமக்குக் காட்டுகின்றன. பொங்கலூர்க் கல்வெட்டில் “பொங்கலூர்க்கா நாட்டில் அழகுமலைக் கொமாரர் திருவுளத்தினாலே சுவாமிக்கு ஸ்ரீ பாதந் தாங்கி சமய முதலிகள்” (4) என்ற சிறப்புக் கூறப்படுகிறது. வணிகம் போற்றிய வள்ளல்கள்: கல்வெட்டுக்களில் தறியிறை, தறியூட்டுப் பாட்டம், நூலாலயம் (5) என்ற பல வரிகளைக் காணுகின்றோம். சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீவேசுரர் கோயிலில் உள்ள சுந்தர பாண்டியனின் சந்தை பற்றிய கல்வெட்டில் “பரும்புடவை" “மென்புடவை” இவைகள் தலைச்சுமை, பாக்கம், வண்டி ஆகியவைகளில் சந்தைக்குக் கொண்டுவந்த செய்தி கூறப்படுகிறது. கொங்கு நாட்டுக் கைக்கோளர் குலப் பெருமக்கள் கிராமப் புறங்களிலிருந்து புடவைகளைச் சந்தைக்குக் கொண்டு சென்றும், அங்கிருந்து பல்வேறு பண்டங்களை மக்களுக்குக் கொண்டுவந்து கொடுத்தும் அளப்பரிய பணி புரிந்தனர். இதனைக் கல்வெட்டு “இவ்வூர்க் கைக்கோளர் பட்டணத்துக்குக் போகும் புடவைக்கும் இவர்கள் பட்டணத்திலிருந்து கொண்டு வரும் பலசரக்குக்கும் (6) என்று கூறுகிறது. (I) தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் 1 எண் 128. (2) மேலது - எண் 525 (3) AR. No 615, 614, 634, 607, 603 of 1922 (4) தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் | எண் 33/ (5) AR 225, 254 of 1920 (6) தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் 1 எண் 465. கம்பவர்மன் காலத்து நடுகல் ஒன்று இதனை நன்கு விளக்குகிறது. " ஸ்ரீ கம்ப பருமயற்கியாண்டு இருபதாவது பட்டை போத்தனுக்கு ஒக்கொண்ட நாதன் ஓக்க திந்தன் பட்டை பொத்தன் மேதவம் புரிந்ததென்று படாரிக்கு என இக்கல்வெட்டுக் நவகண்டங் குடுத்த குன்றகத் தலை அறுத்துப் பிடலிகை மேல் வைத்தானுக்கு " தலை அரிந்து கொடுப்பதை நவகண்டம் கொடுத்தல் '' கூறுகிறது. (11) இதனையே இலக்கியங்களும் பலப்படப் பாராட்டுகின்றன. '' அடல்வலி எயினர் நின் அடிதொடு கடன் இது மிடறுஉகு குருதிகொள் விறல் தரு விலையே" என்று சிலப்பதிகாரமூம், (வேட்டுவவரி) அடிக் கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ அரிந்த சிரம் அணங்கின்கைக் கொடுப்பராலோ " என்று கலிங்கத்துப் பரணியும், (கோயில் 15) '' தலையரிந்து விடுவார்; உயிர் விடார்” என்று தக்கயாகப் பரணியும், (61) '' அச்சமது அறத்தமது உயிர்க்கொடை அளித்தவர் அறுத்ததலை என்று அரிச்சந்திர புராணமும் பாராட்டுகிறது அச்செயலை ! இலக்கியச் சிறப்புமிக்க செயலைக் கொங்கு நாட்டில் பல தெய்வீகத் திருத் தலங்களில் செங்குந்தர் குல அடியவர் மட்டும் செய்திருக்கின்றனர். சமய முதலி துணையுடன் கரிகால் சோழன் சென்னியங்கிரி வனம் (சென்னிமலை) வருகின்றான். சென்னி மாகாளிக்குரிய வனத்தை வெட்டி அழிக்கும்போது அக்காளி நரபலி கேட்டது. சென்னிமலை செங்குந்தர் சார்பாக சமய முதலியார் நரபலிக்கு ஒப்புக் கொண்டான். அச்செயல் எவ்வாறு நடந்தது என்று செப்பேட்டு வாசகத் தலேயே காண்போம். “ சென்னியங்கிரி ஆலயத்திற்கு விட்ட மானியம் ஐந்நூறு பொன் கிராமமும், ஐம்பது பொன் சுங்கத் தீர்வையும், ஜம்பது மிடா விரைப்பு நஞ்செய்யும் ஐம்பது விரைப்பு புஞ்செய்யும் விடுவித்துவிட்ட மானியத்திற்கு நாலு சூலக்கல் போடுவித்து அந்த ஆலயத்திற்கு விட்ட மான்யத்தில் சமய முதலிக்குப் பத்தில் ஒன்று என்றுசென்னியங்கிரி ஆலயத்தில் கல்ச் சாகரம் போடுவித்தார். அந்த ஆலய ஊழியத்திற்கு நம்பி முதல் திருவலகு கடைவரைக்கும் ஆள் போடு கரிகாலச் சோழன் கல்ச்சாகரம் போடுவித்து நிகுதிசெய்தபின்பு சமய முதலி லித்து திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்கு கைக்கோள்வரில் ஐம்பது குடியையழைத்துச் சென்னியங்கிரி நகரத்தில் குடிவைத்து அதன் பின்பு சமய முதலி அந்த ஐம்பது குடியும் வரவழைத்துத் தன்னெதிர் நிறுத்திக்கொண்டு அந்த வர்க்கு... முதன்மை நாட்டாண்மை தருகிறோமென்று சமயமுதலி சொல்ல... ஒரு நற்பலி நான் கேட்டவிடத்தில் தருகிறோம் என்று நானென்று துணிந்த கருப்பண்ண முதலியார் நானே ஒரு நற்பலிக்கு நிகுதிசெய்து.... கருப்பண முதலியார் தன் மகன் பாலகுமாரனை அழைத்து திருமஞ்சனமாடுவித்துத் திரு நீற்றுக் காப்புமிட்டு ஆடையுடுத்தி ஆபரணங்கள் பூட்டி அலங்கரித்துப் பாலசன மிடுவித்துப் பரிமள களப் கஸ்தூரிகள் பூசி வீரசந்தனமிடுவித்து பாக்கு வெற்றிலை கையில் கொடுத்து வீர கொம்பு, வீரகாளம், வீரமல்லாரி, வீரசிகண்டி, வலம்புரிச் சங்குடனே வீரமேள வாத்தியம் முழங்க பஞ்ச வன்னக் குடை பஞ்சமுகத் திவட்டிகை விருதுரண வீரரணப் புலிக் கொடியுடனே நடபாவா டையுடனே நட பாவாடை மேல் நடன சங்கீதராக மேழ வாக்கியம் சூழ்ந்து வர சென்னிமாநகரில் நாலு வீதி ம ற வ னையும் வரவித்துச் சென்னிமாகாளிக்கு எதிர் நிறுத்தி அந்தப் பாலகுமாரனைச் சமய முதலியாகிறவர் நாம் முன் சொன்ன நற்பலியும் உனக்கு வந்ததென்று அந்தப் பாலகுமரனை வெட்டிப் பலியூட்டி வைத்து... பலிக்கு நின்ற பாலகுமரனையும் சாவார்க்கோல முகத்தேதியாய் ஒரு கல் சிலை விக்கிரகமும் அவனைப் போல பார்க்கிற முகமாக அடிப்பித்து அந்தச் சிலையைச் சென்னியங்கிரி ஆலயத்தில் நிறுத்தி வைத்து !..அந்தச் சாவாரப் பலிக்கல் சிலைக்குச் சென்னியங்கிரி வேலவர்க்கு முந்தின பூசை நைவேத்தியம் என்று அந்தச் சென்னியங்கிரி ஆலயத்துள்ப்பட்ட பேருக்குக் கட்டுச் செய்து அவரவர்க்கும் நிகுதி செய்து...'" (12) என்ற பகுதியால் சென்னிமலை சாவாரப் பலிக்கல்லின் பெருமையை அறிகின்றோம். மேற்கண்ட கல்வெட்டுச் செய்திகளால் இலக்கியம், சமயம், வாணிகம், வீரம் ஆகிய பண்புகளிற் சிறந்து விளங்கிய செங்குந்தர் சிறப்பை அறிகின்றோம். (12) சோழன் பூர்வ பட்டயம் பக்கம் 70, 73. U நமது முன்னோர் மருத்துவப் பணி! ஒட்டியம், சல்லியம் என்ற மருத்துவ நூலினை 1892 ஆம் ஆண்டு ஈரோடு சகல கலா நிலைய அச்சுக்கூடத்தில் அர்த்தனாரி , முதலியார் என்பவர் அதற்கும் பல ஆண்டுகட்கு முன்பே கோயமுத்தூர் கு. அண்ணாசாமி முதலியார் ''புலிப்பாணி வைத்தியம் 500' என்ற நூலை தகவல் புலவர் சண்முகானந்தம். அச்சிட்டார். வெளியிட்டார். செங்குந்தர் ஏற்றிய தீபம்! பேரூர்க் கல்வெட்டு தகவல் : கல்வெட்டறிஞர் செ. இராசு, ஈரோடு. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவணச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ விக்கிரம சொழதெவற்கு யாண்டு பதிநெழாவதின், எதிர் எதிர் ஆளுடையார் திருவாப்பட்டி உடையார் கொயி காணி உடைய. சிவப்பிரமானந் விக்கிரம சொழபட்டனும் இராசபட் டனும் சொமநாததெவனும் மருதவனப் பெருமாளும். இந்நால்வொம் பெருரி லிருக்கும் கைக்கொளரில் குலைய பொத்தியான, செல்வஞான சம்பந்தக் பக்கல் கொண்டற் அச்சு ஒந்றுக்கு நித்தம் அரை சந்தியாதீபம். கொயில் குடமுங் குச்சியுங் கெபண்டு கொயில் புகுவார் சந்திரா தித்தவற் செலுத்து வொமாக. கல்வெட்டி குடுத்தொம் இது மாகெசுரர் இரெட்சை. *** ஆலயங்களுக்குத் திருவிளக்கு ஏற்றுவது தெய்வத் திருத்தொண்டுகளில் தலையாயது. அவ்விளக்குகள் சந்தியா தீபம், நந்தா தீபம் என்று பெயர்பெறும் அத் தீபத்திற்கு வேண்டும் நெய்க்காகச் 'சாவா மூவாப் பசு' போன்றவைகளைக் கொடுப்பர். மூலப் பொருளாக அதாவது முதல் வாடாக் கடமையாகப் (Fixed Deposit) பொன்கொடுத்து அதிலிருந்து வரும் வட்டியைக்கொண்டு விளக்கெரிப்பதும் உண்டு. கி. பி. 11-ஆம் நூற்றாண்டில் பேரூர்ப்பட்டீச்சுரப் பெருமானுக்குச் சந்தியா தீபம் எரிக்க நினைக்கின்றார். அங்கிருந்த குலையன் பொத்தியான செல்வன் ஞான சம்பந்தன் என்ற செங்குந்தர் குலச் செம்மல் அதற்காக கோயிற் காணி யுடைய சிவபிராமணர் வசம் ' அச்சு' (பொற்காசு) ஒன்று கொடுத்தார். அவர்கொடுத்த பொற்காசினைப் பெற்றுச் சந்திர சூரியர் உள்ள வரை விளக்கெரிக்க ஒப்புக்கொண்டு நான்கு அந்தணர் எழுதிக்கொடுத்துள்ளனர். இதோ இச்செய்தி கூறும் பேரூர்க் கல்வெட்டினைக் காணுங்கள், தென்னிந் தியச் சாசனங்கள் தொகுதி-5 எண். 236 A R 560/1893)

Post a Comment

0Comments
Post a Comment (0)