வழக்கறிஞர் சேலம் A. சங்கர முதலியார்

0

 


கந்தபுராணச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் பெற்ற தமிழ்க் கடவுள் திருமுருகன் இளவல்களாக வீரபாகு நவவீரர்கள் செங்குந்த கைக்கோளர்  குலத்தில் சேலம் மாநகரில், சீர்மிகு மரபு சார்ந்த - ஜவுளி வியாபாரம், திரு. ஆறுமுக முதலியார் அவர்கள் மகனாக 03-07-1911 அன்று ஆ. சங்கர முதலியார் அவர்கள் பிறந்தார். 

தனது பள்ளிப்படிப்பை முடித்து பின்பு கல்லூரி படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முடித்தார் பின்பு அங்கேயே இரண்டு வருடம் ஆசிரியராக பணிபுரிந்தார். 

பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் சிறப்பு சட்ட படிப்பை வெற்றிகரமாக படித்து படித்து முடித்து 1939ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணிபுரிய தொடங்கினார். சிவில் கிரிமினல் என இருவகையான வழக்குகளிலும் வல்லுனர் ஆனார்.

சங்கர முதலியார் - உண்ணாமலை அம்மாள் தம்பதியருக்கு, மூன்று ஆண் மூன்று பெண் மக்கள் பிறந்தனர்.

அவர்கள் முறையே - திருமதி திலகவதி, திருமதி லீலாவதி, நீதியரசர் ஜெகதீசன், யக்கியசாமி, பெருமாள், வசந்தா - ஆகியவர்கள்.

மேற்கண்ட அனைவரும் நன்முறையில் வளர்க்கப்பட்டு, நல்ல கல்வியைக் கொடுத்து  திருமணங்கள் நிறைவேறி , சந்ததிகள் சமேதரர்களாக நலமுடன் வாழ்கின்றனர்.     

இவர் காலத்தில் கல்லூரி படிப்பு முடித்து, ஆசிரியராக பணிபுரிந்து , சட்டக் கல்லூரியில் பயின்று 1939-ம் வருடம் வழக்கறிஞரானார். சிவில், கிரிமினல் - இரண்டிலும் தேர்ச்சி பெற்றார். பல ஜூனியர்கள் இவரிடம் பயிற்சி பெற்றனர். நிமித்தம் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகை புரியும் அளவில் வளர்ச்சி பெற்றார்.  

வழக்கறிஞர் தொழிலில், பல தகுதிகளில் முன்னேற்றம் அடைந்தார். பல பொதுநிறுவன தலைவர் பொறுப்புகள் தேடி வந்தன நல்ல முறையில் அவைகளை நடத்தினார். உயர்நீதி மன்ற நீதிபதிகள் பலர், இவரிடம் ஜூனியர்கள் பயிற்சி பெற்றவர்களே. பார் கவுன்சில் தலைவரானார். "சேலத்து செம்மல் விருது " பெற்றார்.

இவரின் திறமையும் , புகழும் உணர்ந்து திரு. காமராஜர் அவர்கள் அரசியலுக்கு அழைத்தார். செய்யும் தொழிலை தெய்வமெனப் போற்றியதால் , அரசியலை ஏற்கவில்லை. சாரணர் இயக்கம் சிறப்பாக நடத்தி, தொண்டுகள் புரிந்தார். இயக்கத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித் தந்தார். அவருக்கு வளாகத்தில் நினைவுச்சிலை நிறுவப் பட்டது தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க பொன் விழா மகாநாட்டினை சேலத்தில் மிகச் சிறப்பாக நடத்தினார். தலைவர் திரு.M.P. நாச்சிமுத்து முதலியார் அவர்களின் பேரன்பிற்கும், துணைத் தலைவர் திரு.J. சுத்தானத்தன் அவர்கள்  நட்புக்கும் பாத்திரமானார்.

நல்ல குடும்பத்தையும் குழந்தைகள் மக்களைப் பெற்ற மகராசனாகவும் , நிலையான புகழுடனும் வாழ்ந்து, 1986 -ஆண்டில் இறைவன் திருவடிகளை அடைந்தார்.அன்னாரின்புகழ் வாழ்க ! வளர்க !







Post a Comment

0Comments
Post a Comment (0)