வி.வி.சி.ஆர். எம். கந்தசாமி முதலியார்

0

 

திரு. வி.வி.சி.ஆர். எம். கந்தசாமி முதலியார் அவர்கள், முருகேச முதலியாரின் மகனாக 1940 -இல் பிறந்தார். அந்த காலத்தில் ஆங்கிலேயருடன் இணைந்து. மதுரா மில்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர். சிறந்த வியாபார திறமையால் உச்சத்தைத் தொட்டார். மத்திய அரசு தொழில் முனைவோருக்கான உயரிய விருதான பஜாஜ் விருதை வழங்கி கவுரவித்தது. 1962 -இல் ஸ்ரீமதி சுந்தரி அம்மாளைத் திருமணம் புரிந்தார் பழநி தண்டாயுதபாணிக்கு தங்கத்தேர் செய்து கொடுத்த வள்ளல், இன்றளவும் அது சிறப்பாக மலையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பழநி செங்குந்தர் பரிபாலன சபையின் 20 வருடகாலம் சிறப்பாக பணியாற்றி உள்ளார். அதோடு இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மனுக்கு இராக்கால பல்லக்கு வெள்ளியால் செய்து கொடுத்துள்ளார்கள். சமுதாயத்தின் மேல்பற்று வைத்து கோவை மாவட்டச் செங்குந்த மகா ஜன சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். 2005 நவம்பர் மாதம் 15-ஆம் தேதி இறைவன் பாதத்தில் தஞ்சமடைந்தார்

Post a Comment

0Comments
Post a Comment (0)