ஆர். கே. செல்வமணி செங்குந்தர்
0
திரு. ஆர்.கே. செல்வமணி செங்குந்தர், அவர்கள் செங்கல்பட்டு அருகே
உள்ள கருமுக்கல் கிராமத்தில் திரு. கல்யாணசுந்தரம் செங்குந்தர் மற்றும்
செண்பகம் தம்பதியருக்கு மகனாக நெசவு குடும்பத்தில் 21-10-1965-இல் பிறந்தார்.
இளம் வயதிலேயே சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம்
மிகுதியாகி திரு. மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து பல
வெற்றிப் படங்களுக்கு வேலை செய்தார் அதன்பிறகு தானே டைரக்டராகி பல
வெற்றிப் படங்களை கொடுத்தார். பல விருதுகளை பெற்றுள்ளார். நடிகர் விஜயகாந்த்
நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கியதின் மூலமாக விஜயகாந்திற்கு ஒரு திறப்பு முனையாக
அமைந்தது நடிகை ரோஜா அவர்களை வைத்து மூன்று படங்களை டைரக்ட் செய்தவர் ஆர். கே.
செல்வமணியின் குணம் கவர்ந்து அவரை 10-08-2002 திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரண்டு
குழந்தைகள் உள்ளனர். அதன் பின் திருமதி. ரோஜா செல்வமணி அவர்கள் ஆந்திர அரசியலில் நுழைந்து
இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி சமீபத்தில் ஆந்திர அரசாங்கத்தின் மிக முக்கிய பொறுப்பை
ஏற்றார். திரு. ஆர்.கே. செல்வமணி அவர்கள் 17-02-2019-இல் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமாகிய
பெப்சியின் தலைவராக தேர்வானார். 2019 ஜூலை மாதம் நடந்த டைரக்டர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி
பெற்று தலைவரானார். செங்குந்த சமுதாயத்தின் மேல் பற்றுடன் இருக்கும் ஆர்.கே. செல்வமணி தான்
பிறந்த செங்குந்த சமுதாயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என தனது பதவியை செய்துள்ளார்.
Tags