16 ஆம் நூற்றாண்டு திருக்காளத்தியில்( ஆந்திரா காளஹஸ்தி) ஊரில் வாழ்ந்தவரும், செங்குந்த கைக்கோளர் மரபினரும், சிவ பக்திச்செல்வம் வாய்ந்தவருமாகிய வேங்கடராச முதலியார் .
திருக்காளத்தி நாதர் உலா, திருவண்ணாமலையார் வண்ணம், சேயூர் முருகன் உலா, திருவாட்போக்கி நாதர் உலா, திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை, போன்ற பல அரிய நூல்களை எழுதிய சேறை கவிராசப் பிள்ளை இன்றைய தமிழ் புலவரை ஆதரித்த வள்ளல் இவர். அவரால் அன்புடன் ஆதரிக்கப் பெற்று, அந்தத் தலத்தில் பெரும்பாலும் தங்கிக் காலங்கழித்தவர். அவர்பால் மிக்க நன்றியறிவுடையவர். 'தக்கிணகைலையில் வாழ் செங்குந்தக்குல வேங்கடராயன் திருவாசற்புலவன்' எனத் தம்மை இவர் புலப்படுத்தியிருத்தலால்.