திரு. M.V.சாமிநாத முதலியார் குடியாத்தம் நகர மன்ற முன்னாள் தலைவர் (1959 - 1964) குடியாத்தம் நகர மன்ற தலைவராக இருந்து அருந்தொண்டாற்றியவர் பாலாற்று குடிநீரை பள்ளி கொண்டாவிலிருந்து குடியாத்தம் நகருக்கு கொண்டுவரும் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி குடியாத்தம் மாநகருக்கு குடிநீர் வழங்கியவர். குடியாத்தம் நகருக்கு முதன் முதலாக தொலைபேசி வசதியை ஏற்படுத்தி தந்தவர். இவருடைய காலத்தில் குடியாத்தம் தொகுதிக்கு திரு. காமராஜர் அவர்களை வேட்பாளராக நிறுத்தி அவருடைய வெற்றிக்கு அரும்பணி ஆற்றினார். இதனால் காமராசர் தமிழக முதல்வரானார். அவர் காலத்திலே தான் குடியாத்தம் நகரை இரண்டாக பிரிக்கும் கௌண்டன்ய மகாந்தியின் குறுக்கே சிறப்பான இன்றளவும் வலிமையுடனும் பொலிவுடனும் திகழும் காமராசர் பெயரால் பாலம் கட்டப்பட்டது.