ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் மல்லனூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு காணி ஆட்சி செப்பேடு தொல்லியல் துறையால் பதிப்பிக்கப்பட்டாலும் அது சரியாக வாசிக்கப்படவில்லை.
இந்த செப்பேட்டின் வருடம் 1714 ஆம் ஆண்டு முத்து விஜய் ரகுநாத சேதுபதி அவர்கள் ஆண்டு கொண்டு இருந்த காலம் இவர்தான் இரண்டாம் சேதுபதியாக இருந்தவர் என்று தெரிகிறது.
இந்த செப்டேட்டில் உள்ள தகவல்களை பார்ப்போம்
முத்து விஜய ரகுநாத சேதுபதி பட்டுக்கோட்டை சுபாriக்கி எழுந்தவருளி உள்ள மல்லநூறுக்கு வந்தார்.
அங்கு செங்குந்த முதலியில் உடையார் என்ற பெயருடைய ஒருவர் சேதுபதியை கண்டு நலம் விசாரித்து விருந்து கட்டளை பண்ணி தங்கத்தால் ஆன இலையில் உணவளித்து சேதுபதி அவர்களை சகல விதமான உபச்சாரம் செய்து அவர் மனம் குளிரும் அளவுக்கு ஒரு விருந்தோம்பல் கைகொண்டார்
இதனால் மணமகிழ்ந்த சேதுபதி அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார்
அதற்கு அந்த செங்குந்தர் அவருக்கு ஏதும் குறை இல்லை என்றும் இந்த கிராமம் மல்லனூர் அதன் நிலைமை தலைமை அம்பலம் கொத்து கணக்கு பனைப்பந்தடை மல்லனூர்க்கு உட்பட்ட நான்கு எல்லைக்கும் உட்பட்ட ஊரை திரவியம் கொண்டு
காடுவெட்டி கானியாக்கி அவருடைய முன்னோர் காலத்தில் இருந்தே பூர்வீக கானியாச்சியாக அவர் ஆண்டு வருவதாக சொன்னார்
மேலும் அதனை சுற்றியுள்ள பிரிவடை ஏந்தல் பச்சேரி ஏந்தல் கிளிப்பிலே ஏந்தல் முதலிய ஊர்களுக்கு சொந்தமான வயல்களும் அவர் காணியாக கொண்டு 60 குடும்பங்களை ஊழியக்காரர்களாக கொண்டும் ஊருக்கு அருகில் உள்ள உப்பளம் முதற்கொண்டு சொந்தமாக இருந்து சுப முகத்துடன் நலமாய் உள்ளதாகவும் அவருக்கு ஏதும் வேண்டாம் என்றும் சேதுபதி அவர்களிடம் சொல்கிறார்
ஆனால் சேதுபதி மனம் குளிர்ந்து அப்பொழுது செங்குந்தர் தனக்கு ஒரு பட்டப்பெயர் வைக்குமாறு சேதுபதி இடத்தில் விண்ணப்பம் செய்கிறார் சேதுபதி மனம் குளிர்ந்து அன்னக்குடை விளங்கி உடையார் என்ற திருநாமத்தை அவருக்கு ஒரு பட்டப் பெயராக அருள்கிறார் மேலும் இந்த செங்குந்தரின் காணி ஆட்சியான ஊர் நலம் வயல்கள் மற்றும் சகல உரிமைகளையும் குறித்து அவருக்கு காணி ஆட்சி பட்டயமாக உருவாக்கி மேலும் இவருடைய கானியா ஆட்சியை சுற்றி கல்லாலான எல்லை அமைத்து அதனை காத்து வருவதாக உத்தரவாதம் அளித்து இந்த செப்பேடு முடிவடைகிறது
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 5 கோட்டை என்ற ஊரும் திருவாடானை என்ற ஊரும்இந்த மல்லனூர் மிக அருகில் வருகிறது அஞ்சு கோட்டை நாடாளுவான் என்று சொல்லப்பட்ட திருவாடானை பாண்டியர்கள் 15 16 ஆம் நூற்றாண்டில் ஆண்டனர். பாண்டியர்களின் கட்டளைக்கு இணங்க அவர்களுடைய சேவகர்களாய் செங்குந்தர்கள் உடன் வந்து காடுவெட்டி நாடு உருவாக்கி இருக்க வேண்டும் .
கிபி 1714 ஆம் ஆண்டில் மறவர் நாட்டின் மன்னர் முத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்கள் செங்குந்த கைக்கோள முதலியார் மக்கள் வசிக்கும் புதுக்கோட்டை பட்டுக்கோட்டை மல்லனூர் பகுதிக்கு வந்தபோது செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தைச் சேர்ந்த அன்னகுடை உடையார் என்பவர் முத்து விஜய இரகுநாத சேதுபதி மன்னரை வரவேற்று தங்கத்திலான இலையில் பிரம்மாண்ட விருந்து அளித்தார்.
பட்டுக்கோட்டை மல்லனூர் பகுதி செங்குந்த முதலியார் களின் இந்த உணவு விருந்தோம்பலை கண்டு சந்தோசமடைந்த மன்னர் சேதுபதி மல்லனூரில் உள்ள செங்குந்த முதலியார் அன்னதான சத்திரத்திற்கு சேனை வயல், சோமண வயல், செங்காலன் வயல் ஆகிய மூன்று கிராமங்களை தானமாக அளித்தார்.
இந்த செப்பேட்டின் மூலம் சோழ மண்டலம் மற்றும் பாண்டிய மண்டலத்தில் உள்ள செங்குந்த கைக்கோள முதலியார் களின் விருந்தோம்பல் தன்மை மற்றும் செல்வாக்கை பற்றி அறிய முடிகிறது.
இச்செப்பேடு 2013 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு தமிழக தொல்லியல் துறையால் நகல் எடுக்கப்பட்டது.
இக்காலத்தில் முக்கிய தகவல்களை காகிதத்தாலான பத்திரத்தில் எழுவதுபோல் மன்னர் காலங்களில் முக்கிய தகவல்களை செப்புத் தகடுகளில் எழுதுவார்கள் அதை செப்பேடு அல்லது செப்புபட்டயம் என்று அழைப்பார்கள்.