குடிசையில் இருந்த வடபழனி முருகன் கோவிலை பிரம்மாண்டமாக கட்டியவர் செங்குந்தர் குல பாக்கியலிங்கத் தம்பிரான்.
சிறு வயதில் ரத்தினசாமி செட்டியாருடன் இணைந்து பல திருப்பணிகளை நடத்தினார் பாக்கியலிங்கம் தம்பிரான் அவர்கள்.
சைதாப்பேட்டையில் செங்குந்தர் மரபில் பிறந்தவர் ஆவார். ரத்தினசாமி, பாக்கியலிங்க தம்பிரான் வடபழனி ஆண்டவருக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்த பிறகு, தினமும் முருகனைத் தரிசிக்க வந்தார் பாக்கியலிங்கம். பொறுப்பான சீடரிடம் பொறுப்புகள் அனைத்தும் வந்து விட்டதே... தான் சார்ந்திருக்கும் குரு பரம்பரையின் விதிப்படி, திருத்தணி சென்று நாவைக் காணிக்கை செலுத்தி, பணிகளைத் தொடர்ந்தார் பாக்கியலிங்கத் தம்பிரான். தன் காலத்தில்தான் இந்தக் கோயிலை உலகறியச் செய்தார் இவர். வடபழனியில் இப்போதுள்ள மூலவர் கருவறையும் முதல் உட்பிரகாரத் திருச்சுற்றம் கருங்கல் திருப்பணியாகச் செய்தவர் இவர்தான். சுமார் ஐம்பது ஆண்டுகள் இவரது அயராத பணியால், வடபழனி ஆண்டவர் கோயில் தனிப் புகழை அடைந்தது என்றால் அது மிகையல்ல.