டி.எஸ்.சாமிநாத முதலியார் ex Chairman

0

 டி.எஸ்.சாமிநாத முதலியார்

திருவண்ணாமலை  முன்னாள் நகர்மன்ற தலைவர் 

இவர் காட்சிக்கு எளியவர்

1920களில் நூறு. வருடங்களுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்


காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் பல பதவிகளில் இருந்தவர்


"சினிமா " மீது "காதல்" கொண்டவர்

சினிமா பற்றிய செய்திகள் கேமரா ... என்று ஆர்வம் மிக்கவர்


இவர் அந்தக் காலத்தில் கேமராவில் எடுத்த படங்கள் இன்றைக்கும் பாலசுப்ரமணியர் திரை அரங்க உரிமையாளர் அமரேசன் வீட்டில் மாட்டி வைத்து இருப்பதாகச் சொல்வார்கள்


திருவண்ணாமலையில் 1958 - 59 - 60-65 ஆண்டுகளில் ஒரு மாறுதலாக திருவண்ணாமலை சினிமா தியேட்டர்களில் தமிழ்ப்படங்கள் காட்டப்படுவதை மாற்றி


காலைக்காட்சிகளில் ஆங்கிலப் படங்களை அறிமுகப்படுத்தியவர்


ஆங்கிலப் படங்களுக்கு அதன் அசல் பெயரை மாற்றி வினோதமாகவும்

கவர்ச்சிகரமாகவும் தமிழில் பெயர் வைத்தவர்


இவரை இப்போதைய தலைமுறை சுலபமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்


பாலசுப்ரமணியர் தியேட்டர்

வி.பி.சி தியேட்டர் போன்ற திரையரங்கங்களில் மேலாளராக பணியாற்றிய " ஜெயா "அவர்களுடைய தந்தைதான் சாமிநாத முதலியார்


மதிமுக பிரமுகரும் இன்று சென்னையில் திரைப்பட துறையில் நடிகர் இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களில் நடை போடும்

ஜெ.செந்தில்குமாரின் தாத்தா தான் சாமிநாத முதலியார்


செங்குந்தர் வகுப்பில் ஒரு பெண்மணி திருவண்ணாமலை கோயிலுக்கு தவறாமல் காலையும் மாலையும் வந்து கோயில் சேவையை உயிர் மூச்சாய் கொண்டு வாழ்ந்தவர் பகிரதி அம்மாள்


பகிரதி அம்மாள் தொண்ணூறு வயது வரை வாழ்ந்தார் வாழ்ந்த நாள் எல்லாம் அண்ணாமலையார் ஆலயத்தை தன்

உயிராக நேசித்தார்


கோயில் திருவிழாக்களில் ஆண்களுக்கு ஈடாக உற்சவ மூர்த்திகளுக்கு முன்பாக நடை போட்டு வருவார்


நான் சிறிய வயதில் திருவிழாக்காலங்களில் அவர் நடந்து வருவதை பார்த்து இருக்கிறேன்


இவருடைய மகன் டாக்டர் கணேசன்

திருவண்ணாமலை திருவூடல் தெருவில் கடலை கடை மூலையில் அந்தக் காலத்தில் "அருணா டைப் இன்ஸ்ட்யூட் " என்ற "டைப் ரைட்டிங் பயிற்சி பள்ளி"வைத்து நடத்தினார்


அதல்லாமல் அருணா" " நர்சரி ஸ்கூல் என்ற கான்வெண்ட்டும் நடத்தினார்


"அருணா டைப் இன்ஸ்ட்யூட்டில் 1967

1968 களில் நான் "டைப் " கற்று கொண்ட கதையும் சுவையானது

அதை வேறொரு பதிவில் பார்ப்போம்


பகீரதி அம்மாளின் பேரன்

அருணா "டைப் இன்ஸ்ட்யூட் "டாக்டர் கணேசன் அவர்களின் மகன் தான்

பிரபல இதய நோய் மருத்துவர்

ஜி.ஞானவேல் அவர்கள்


திருவண்ணாமலையில் பிரபலமாக அரிசி நெல் என்றுமண்டி வைத்து வியாபாரம் செய்தவர் ஏ.ஏ.அண்ணாமலை


மண்டித் தெருவில் கடலைக் கடைக்கு தெற்கில் போத்த ராஜா கோயிலுக்கு எதிப்புரம் இருந்த இவரின் நெல் அரிசி மண்டி அந்தக் காலத்தில் பார்க்க ஒரு  தனியார் அலுவலகம் போல் ஒரு 

ஒழுங்குடன் இருக்கும்


1960 களில் உணவுப் பொருள்கள் கட்டுப்பாடு குறிப்பாக நெல் அரிசி கட்டுப்பாடு நிறைந்த காலத்தில் அதிகாரிகளை பக்குவமாக கையாண்டு தென் தமிழ்நாடு முழுவதும் நெல் அரிசி வியாபாரத்தில்


திருவண்ணாமலையின் எந்த மண்டி வியாபாரிகளைவிடவும்  துணிச்சலாக

நெளிவு சுளிவுகளோடு செயல்பட்டவர்


இவருடைய அந்த வியாபாரத்தால் பல வழக்குகளில் சிக்கி 

மனக்கவலைக்கு ஆளானார்


நான் சிறிய வயதில் இவரின் மண்டிக்கு அருகில் இருந்த பொறி கடலை கடையில் தினமும்" வறுகடலை வாங்கி பாக்கெட்டில் நிரப்பி ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிட்டுக் கொண்டே சாவல் பூண்டி வரை நடந்து சென்று விடுவேன்


அப்போதெல்லாம் ஏ.ஏ.அண்ணாமலை முதலியாரை பார்க்கிற வாய்ப்பு எனக்கு


அவருடைய இரண்டு மகன்கள் ஏ .ஏ.குப்புசாமி

ஏ. ஏ.சுந்தரமூர்த்தி அப்பாவின் மண்டியை தொடர்ந்து கவனித்து வருகின்றார்கள்


இவர்களுக்கு வேங்கிக் கால் கிராமத்தில்

இன்றைக்கும் "கோடி "க் கணக்கான மதிப்பு பெறும் நிலபுலன்கள் இருக்கிறது


செங்குந்தர் வகுப்பில் திருவண்ணாமலையில் அறியப்பட்டமற்றுமொருவர்

ஐ.மாணிக்க வேலு முதலியார்


திருவண்ணாமலை நகராட்சியில் நீண்ட காலமாக நகரமன்ற உறுப்பினராக இருந்தவர்

அரிசி ஆலை _ மணிலா ஆலை என வைத்து நடத்தியவர்

இன்றைக்கு காமராஜர் சிலை இருக்கும் இடத்தில் சிலை வைப்பதற்கு முன் 

"ஐ. மாணிக்கவேலு பூங்கா" என்று அவர் பெயரில் பூங்கா அமைக்கப்பட்டது


நான் ஆறாவது ஏழாவது படிக்கிற காலத்தில் 1962 - 63 களில் சொல்வார்கள்

ஐ.மாணிக்கவேல் முதலியார் தன்னுடைய மகளை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்கிறார் என வியந்து பேசுவார்கள்


செங்குந்தர் மரபில்இன்னொருவர் ஆனைக் கட்டித் தெரு நடராஜ முதலியார்

குழந்தைகள்டாக்டர் என்.கார்த்திகேயனின் தந்தை

இவர் லாரி தொழில் செய்தார்


நடராஜ முதலியாரின் சகோதரர்கள் அனைவரும் அவருடைய உறவினரான டி.வி.தேவராஜ முதலியாரின் "பாலசுப்ரமணியர் பஸ் கம்பெனியில் பணியாற்றியவர்கள்


நண்பர்களே


திருவண்ணாமலையில் மிக வசதி படைத்த செங்குந்த முதலியார்கள் என்று சிவன் படத்தெரு சாமி முதலியார்

வகையரா

 தென்மாத்தாதி தெரு அருணகிரி முதலியார் வகையரா

அடுத்த நிலையில் ஆனைக் கட்டித் தெரு டி.வி.தேவராஜ முதலியார் வகயரா

நடராஜ முதலியார் வகயராபோக

சேடத் தெரு

திருவூடல் தெரு

அவல்காரத்தெரு

கொசமடத்தெரு

சென்னப்ப நாய்க்கன் தெரு

கனகராய முதலித் தெரு என திருவண்ணாமலையில் செங்குந்தர் மரபினர் பரவி விரவி இருக்கின்றனர்


திருவண்ணாமலையை ஒட்டி இருக்கிற வேங்கிக்கால் கிராமத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி சில வசதி மிக்க செங்குந்த முதலியார்கள் குடும்பம் உள்ளது


குறிப்பாக என் நண்பர் வேங்கிக்காலின்

இளவரசரைப் போல் திகழ்ந்த ஊராட்சி தலைவர் செல்வராஜ் போன்றோர்


குறிப்பாக கொசமடத்தெருவில் ஒரு செங்குந்தர் குடும்பம்

அந்த வீட்டின் இரண்டு பிள்ளைகள்

நாராயணசாமி

ஜெயக்குமார்

என்று இரு சகோதரர்களும் வருவாய்த்துறையில் திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் 


துணைவட்டாட்சியர்வருவாய் ஆய்வாளர் எனபணிபுரிந்து திருவண்ணாமலையில் பிறந்து வருவாய்த்துறையில் பணி புரிந்த மற்ற எவரையும் விட 


திருவண்ணாமலை மக்களுக்கு மிகவும்  உதவிகரமாக இருந்தார்கள் இந்த இரு சகோதரர்களும் என்பது ஊரறிந்த உண்மை.


Post a Comment

0Comments
Post a Comment (0)