புலவர் சரவண சதாசிவம்., எம்.ஏ.,எம்‌.எட்

1

செங்குந்தர் பிரபந்த திரட்டு நூலின் உரை ஆசிரியர் செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்த சைவநன்மணி, கேதாரசெல்வர் புலவர் சரவண சதாசிவம்.எம்.ஏ.,எம்.எட்

பெற்றோர் திரு. சரவண முதலியார்-திருமதி. முத்தம்மாள் 

ஆண்டு: 1936, 

பிறந்த ஊர் - காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள சிற்றூர் ஐயங்கார்குளம். 

கல்வி தமிழ்வித்துவான், முதுகலை (தமிழ்), முதுகலை (கல்வியியல்) காஞ்சிபுரம் நகராட்சியில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 38 ஆண்டுகாலம் பலநிலைகளில் ஆசிரியப்பணி.

சிவ.சதாசிவம் அவர்களிடம் 2002இல் சமயதீர்க்கை பெறுதல். 

சமயப்பணிகள்:

 1)காஞ்சிபுரம் குமரகோட்ட ஆஸ்தானப் புலவராக 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருதல். 

2) காஞ்சி சிவடினயார் திருக்கூட்டம், திருமுறை அருட்ணி அறக்கட்டளை போன்ற ஆன்மீக அமைப்புகளில் உறுப்பினர், ஆலோசகர், பேச்சாளர் நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், கவிஞர் என்று பன்முக திறமை பெற்றவர். 

குமரகோட்டம், கச்சபேசம், பிறசமய மேடைகளில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். கருத்தரங்கம், தனிச்சொற்பொழிவு, தொடர் சொற்பொழிவுகளில் பங்கேற்பதுடன் தலைவர். நடுவர் எனப் பலவகையிலும் பங்கு பெறுபவர். 

காஞ்சியிலும், பிற வெளி ஊர்களிலும் சைவசமய வகுப்புக்களில் சித்தாந்தப்பாடம் நடத்துபவர். திருக்கோயில் மாத இதழ் கும்பாபிஷேக மலர்கள், தினமணி, சமய வெளியீடுகளில் கட்டுரை முதலியன எழுதி வருபவர், 

இயற்றிய நூல்கள் : 

1. குமரகோட்டத்தலவரலாறு (1976),

2. குமரகோட்டப் பெருமான் நெஞ்சப்பதிகம் (1982),

3. கயிலாய நாதர் பதிகம் (1998)

4, சைவத்திருமுறைகள் அறிமுகமும் விளக்கமும் (2003) 

உரை எழுதிய நூல்கள் :

1. செங்குந்தர் பிரபந்தத்திரட்டு (1993),

2. சோணசைல மாலை (1994)

3.சிவஞானமுனிவரின் மாணவர் முத்துக்குமாரசாமி தேசிகரின் அ/மி கச்சபேஸ்வரர் மாலை (2005)    

4. கச்சியப்பமுனிவர் அருளிய ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூது (2007),

5. சிவஞானமுனிவர் அருளிய கலசைச்செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், (2008),

 6. திருவருட்பயன் (சாத்திரநூல்) 2003.

 7. கச்சியப்ப முனிவர் இயற்றிய காஞ்சிப்புராணம் || காண்டம் (2012) இவற்றில் விநாயகர் பிள்ளைத்தமிழும், காஞ்சிப் புராணமும் திருவாவடுதுறை ஆதீன வெளியீடுகளாகும். 

பதிப்பித்தவை : காஞ்சி ஓட்டக்கூத்தர் மன்றம் வெளியிட்ட தக்கயாகப்பரணி முதலியன. 

பெற்ற விருதுகள் :

பல அமைப்புகள் சார்பில் 12 படங்களுக்கு மேலாகும். குறிப்பாக சைவநன்மணி, காஞ்சி ஸ்ரீ சங்கரமடம் (1973), சைவத்தமிழ்ச்செம்மல் திருவாவடுதுறை ஆதீனம் 23 ஆம் பட்டத்திடமிருந்து விருதும், பொற்கிழியும் பெறுதல் (03-05-2006)




தகவல் மற்றும் ஆவணங்கள் அனுப்பியவர் 

திரு.துரை.சௌந்தரராசன்,காஞ்சிபுரம்.

Post a Comment

1Comments
  1. காஞ்சிபுரம் - சைவநன்மணி , கேயார் செல்வர்.புலவர்.சரவண.சதாசிவம் அவர்களை அறிமுகப் படுத்தி அவரைச் சிறப்பித்தமைக்கு - நன்றி- துரை.சௌந்தரராசன்.!

    ReplyDelete
Post a Comment