தஞ்சை ரெங்கையா முதலியார்

0

 


பிறப்பு கலை மணம் கமழும் தஞ்சைத் தரணியில், நெய்தல் வளமிக்க நாகை மாவட்டத்தில் செந்நெல் வயல்கள் சூழ்ந்த முட்டம் கிராமத்தில் 1922 ஆம் ஆண்டு ஜனவரி 30 நாளில் திரு.சட்டையப்ப முதலியாருக்கும் திருமதி. தெய்வானை அம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார். ஆயிரம் பிறை கண்ட பெரியவர் திரு. தரும முதலியார், திருமதி. பரிபூரணத்தம்மாளும் இவருடைய பாட்டன் பாட்டியார். விவசாயமும் நெசவும் குலத் தொழிலாக விளங்கின. நேரிய உழைப்பால் பெற்ற சீரிய பொருளைக் கொண்டு செம்மையாகக் குடும்பம் வளர்ந்து வந்தது. இளமைப்பருவம் எம்.எஸ்.ரெங்கையா அவர்கள் தனது ஒன்பதாம் வயதில் 1931 ஆம் ஆண்டு சென்னை நகருக்கு வந்து தன் சித்தப்பா.

அரவணைப்பில் தங்கினார். எம்.எஸ்.ஆர்
அவர்களைப் பெற்ற தந்தையினும் பேணி
வளர்த்து வாழ்வில் உயர்ந்திட உதவியவர்
அவரது சிறிய தந்தையார் திரு. அமிர்த
முதலியார். அவருடைய வாழ்க்கைத்
துணைவியார் திருமதி தமயந்தி அம்மாள்
ரெங்கையாவை பெற்ற பிள்ளையினும்
மேலாகப் பாசத்துடன் வளர்த்தார்.

கல்வி
பவளக்காரர் தெருவிலுள்ள
இராமனுஜம் பள்ளியில்
பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்து, முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும், பின்னர்
கிருத்துவக் கல்லூரிப் பள்ளியிலும் பயின்றார் சென்னை

ரெங்கையா அவர்கள் ஒரு சிறந்த கணிதப் பரிசோதகர், சிக்கலான வருமான வரிப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சிறந்த வழிகாட்டி. சங்கப் பணிகளில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்று தலைமைச் சங்கத்தின் வளர்ச்சிகளிலும் பணிகளிலும் ஊக்கமும் ஆக்கமும் காட்டினார், கைத்தறிக்காவலர் திரு. M.P.நாச்சிமுத்து செங்குந்தர், துணைத் தலைவர் திரு. C.நடராஜ முதலியார் மற்றும் செங்குந்த பெருமக்கள் பலருடைய அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராக விளங்கினார். 

அதற்குப் பிறகு வந்த அனைத்துத் தலைவர்களிடமும் மிகுந்த நன்மதிப்பை பெற்றார். ஈரோட்டில் நடைபெற்ற மாநில மாநாட்டில் வள்ளலார் இல்லக் கட்டடப் பொறுப்பைக் கவனிக்க இவர் தலைமையில் நவவீரர் குழு அமைக்கப்பட்டது. 
சென்னைவாழ் தஞ்சை செங்குந்தர் சங்கத்தின் துவக்ககாலத் தலைவராக பல்லாண்டுகாலம் பணிபுரிந்துள்ளார். நிறுவனங்கள் 1972ஆம் ஆண்டு புளூ மவுண்டன் சிட்ஸ் அண்டு பைனான்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுபேற்றுச் சிறப்புடன் பணிபுரிந்தார். 

அது சீட்டுக் கம்பெனியாக மட்டுமின்றி பொதுநல சேவைக்கும் ஒரு பாலமாக திகழ்ந்தது. 1981ஆம் ஆண்டு நிதித்துறையில் ஓர் புதிய உதயமாக ஸ்ரீ ராஜராஜ சோழன் சகாய நிதி என்ற திருமண விழா செங்குந்த சமுதாயத்தின் சிறப்பான நல்வாழ்வுக்காக கைம்மாறு கருதாமல் தொண்டாற்றியவரும், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தைத் தோற்றுவித்தவருமான திருவாரூர் வள்ளல் திரு. தி.நா.சபாபதி முதலியார் அவர்களின் பெயர்த்தி சீதாலட்சுமிக்கும் திரு.ரெங்கையா அவர்களுக்கும் திருமணப் பெருவிழா முட்டம் கிராமத்தில் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் நாளில் சிறப்புடன் நடைபெற்றது. அத்திருமண விழாவின் சிறப்புக் கருதி தஞ்சை மாவட்ட செங்குந்த மகாஜன கல்விச் சங்கத்திற்கும், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கும் பெரும் தொகையினை, வசதியற்ற மாணவர்களின் கல்வி நிதிக்காக மனமுவந்து வழங்கினார்கள். வாலாஜாபாத் இந்து மதப் பாடசாலையின் வளர்ச்சிக்கும் நன்கொடை அளிக்கப்பட்டது. குடும்பம் இனிய இல்லறத்தின் நற்சான்று இதழ்களே நன்மக்கள் பேறு. குடும்பத்தின் குலம் செழிக்கப் பிறந்த தலைமகள் சிவகாமி மனையியலில் B.Sc., சரவணன் கெமிக்கல் இன்ஜினியரிங்கில் B.Tech.,. வசந்தகுமாரி M.B.B.S., D.C.H., குழந்தைகள் நல மருத்துவர், சீனிவாசன் வணிகவியலில் B.Com., பயின்றுள்ளனர். உடன் நிற்பதில் இராமனுக்கு ஏற்ற இலக்குவனாய் விளங்கும் திரு.அமிக்க முதலியாரின் வாரிசு ஆடிட்டர் திரு. A பாலசுப்பிரமணியன் முன்னியதை முயன்று காட்டுவதில் திருமுருகனை போன்றவர். MI DUAL CAMERA

Post a Comment

0Comments
Post a Comment (0)