தமிழறிஞர் ச.செல்வராஜ் முதலியார்

0


#நம்_இன_செம்மல் @Canada Tamil Sangam

2020ம் ஆண்டிற்கான "தமிழ் மரபு காவலர் விருது" திரு.ச.செல்வராஜ் முதலியார் அவர்களுக்கு "தமிழ் தொல்லியல் ஆராய்ச்சிக்காக" டொரண்டோ, கனடாவில் பிப்ரவரி 1, 2020ம் தேதி 2வது தமிழர் மரபு மாநாட்டில் வழங்கப்பட்டது.


🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅


திரு.ச.செல்வராஜ் முதலியார்  பற்றிய சிறு குறிப்பு: 


சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.தோப்பூர் என்ற அழகிய சிறியகிராமத்தைப் பூர்வீகமாககொண்ட இவர்; 15-04-1953 ஆம் ஆண்டு கே.எம்.சபாபதிமுதலியார் அவர்களுக்கும், திருமதிபாப்பாத்திஅம்மாள் அவர்களுக்கும் மகனாகப் செங்குந்த கைக்கோளர் மரபில் பிறந்தார். 1971-1974 ஆம் ஆண்டு இளங்கலை பட்டத்தை கிருஷ்ணகிரி கலைக்கல்லாரியிலும், 1974-1976 ஆம்ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பண்டையவரலாறும் தொல்லியலும் என்ற பாடப்பிரிவில் முதுகலைப்பட்டத்தையும் தமிழ்நாடுஅரசு தொல்பொருள் பெற்றார். ஆய்வுத்துறையில் இவர் 1979 முதல் மாவட்டத்தொல்லியல் அலுவலராக தென்னாற்காடுமாவட்டத்தில், சிதம்பரம் தலைமையிடத்தில் பணியில் சேர்ந்தார். 


2011ஆம் ஆண்டுவயது முதிர்வு காரணமாக தொல்லியல் தறையின் உதவி இயக்குநராகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 32 ஆண்டுகள் தொல்லியல், கல்வெட்டு, அகழாய்வு, கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றில் திறம்பட பணியாற்றினார். இவரது குறிப்பிடத்தக்க சிறப்புபணிஅகழாய்வு. இவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட காஞ்சீபுரம், கரூர், கங்கைகொண்டசோழபுரம், பூம்புகார், படைவீடு, கண்ணனூர்(சமயபுரம்), அழகன்குளம், செம்பியன்கண்டியூர், தலைச்செங்காடு, மாங்குளம், மாங்குடி, பரிக்குளம், மோதூர், போன்ற பல நிலஅகழாய்வுகளில் பணியாற்றியுள்ளார். ஆழ்கடல் அகழாய்வில் அகழாய்வாளராகவும், முழு நேர இயக்குநராகவும் பணிபுரிந்து பலஅரிய சங்ககால வாழ்விடப் பகுதிகளை வெளிக்கொணர்ந்துள்ளார். 


வானகிரிப் பகுதியில் மூழ்கியகப்பல் ஒன்றை மூழ்கிகண்டுபிடித்து அவற்றிலிருந்த தொல்பொருட்களையெல்லாம் சேகரித்துள்ளார். தமிழிலும், ஆங்கிலத்திலும் 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்ட அகழாய்வுஅறிக்கைகள் நூல்வடிவில் வெளிவந்த திருக்கோயிலூர், படைவீடு, அழகன்குளம், மாங்குளம், செம்பியன்கண்டியூர், கங்கைகொண்டசோழபுரம், பரிக்குளம், மேதூர், போன்றவற்றில் இணையாசிரியராக எழுதியுள்ளார், தருமபுரி அகழ்வைப்பகம், தருமபுரிமாவட்டதொல்லியல் மராட்டியர்அகழ்வைப்பகம், கோயில்களைப்பற்றிய போன்ற நூலாகவும் மாவட்டவரலாற்று தனித்து பல கையேடு, நூல்களும், ஆய்வு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளார். அவையாவன தகடூர் நாட்டுக் கோயில்கள் தொகுதி-1, தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும் மனோரா கையேடு தொல்லியல் ஓர் அறிமுகம், புதையுண்டதமிழகம், செம்பியன்மாதேவி, குந்தவைப்பிராட்டியர், தொல்லியல்நோக்கில் சிதம்பர ரகசியம் தமிழர்பண்பாட்டின் வெளிச்சம் மட்கலன்கள், தகடூர்நாட்டுகோயில்கள், தாய்தெய்வங்கள். அஜந்தா எல்லோரா கலைச்செல்வங்கள், கடல்கொண்டபுகார் நகரமும்,ஆழ்கடல் அகழாய்வும், காந்தளுர்ச்சாலை கலமறுத்தருளிய ஸ்ரீராஜராஜன், போன்ற நூல்கள் நாம்தமிழர் பதிப்பகம் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. வரலாறு, தொல்லியல் இவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பணியாற்றிவருகின்றார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)