கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பரம்பரை செல்வந்தர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர்கள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் செய்யும் மக்களின் முன்னேற்றத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மிகவும் நேர்மையான அரசியல்வாதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர். அறிஞர் அண்ணா அவர்களின் நெருங்கிய நண்பர்
எஸ்.கே.எஸ் என்று குறிஞ்சிப்பாடி மக்களால் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.கே. சம்பந்தன் முதலியார் exMP, MLC
இன்றைய தென்னாற்காடு மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில் ச. குப்ப முதலியார் என்ற செல்வந்தருக்கு மகனாக 21 ஏப்ரல் 1921 ஆம் ஆண்டில் பிறந்தார்.
தனது பள்ளிப்படிப்பை கடலூரில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
ஆகஸ்ட் 3 1945 ஆண்டில் ருக்மணி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் பிறந்தது.
1950 வரை சுதந்திரப் போராட்ட வீரராகவும், இந்திய தேசிய காங்கிரசில் தீவிர அரசியல்வாதியாக ஈடுபட்ட இவர் பிறகு பேரறிஞர் அண்ணாதுரை முதலியார் அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
மெட்ராஸ் மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக (MLC) நான்கு முறை வெற்றி பெற்றவர்.
1967ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் திருத்தணி தொகுதியில் போட்டியிட்டு மத்திய அமைச்சர் ஓ.வி. அழகேசன் என்பவரை தோற்கடித்து எம்.பி யாக வெற்றி பெற்றவர்.
குறிஞ்சிப்பாடி கூட்டுறவு விவசாயி வங்கியின் தலைவராக பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார்.
குறிஞ்சிப்பாடி நகரமன்றத் தலைவராக பல முறை வெற்றி பெற்றார்.
மெட்ராஸ் மாநில கைத்தறி தொழில் மற்றும் வர்த்தக சங்க தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
மெட்ராஸ் மாநில கைத்தறி நிதிக் கழகத்தின் இயக்குனராக பல ஆண்டுகள் பதவி வகித்தார்
கோ-ஆப்டெக்ஸ் என்றழைக்கப்படும் தமிழ்நாடு மாநில கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் லிமிடெட் தலைவராகவும் இயக்குனராகவும் பதவி வகித்து அந்த சங்கத்தை மிகப்பெரிய அளவிற்கு வளர்ச்சி அடைய செய்து அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றினான்.
கோ-ஆப்டெக்ஸ் என்றழைக்கப்படும் தமிழ்நாடு மாநில கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் லிமிடெட் தலைவராகவும் இயக்குனராகவும் பதவி வகித்து அந்த சங்கத்தை மிகப்பெரிய அளவிற்கு வளர்ச்சி அடைய செய்து அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றினான்.
காஞ்சீபுரம் காமக்ஷியம்மா கூட்டுறவு நூற்பு ஆலைகள் தலைவராகப் பணியாற்றி அந்நிறுவனத்தை அதிக லாபத்தில் இயங்க வைத்தவர்
இந்திய கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் நிர்வாக கவுன்சில் உறுப்பினராக இருந்து நெசவாளர்களின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டவர்.
இவரின் அரசியல் தலைவர் அண்ணாதுரை முதலியார் அவர்களின் மறைவிற்கு பின் மு கருணாநிதி திமுக தலைவர் ஆனார்.
மு கருணாநிதி திமுக தலைவர் ஆனதை விரும்பாத இவர் அக்கட்சியை விட்டு வெளியேறி முயற்சி அரசியல்வாதியாக சில ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.
பிறகு எம்ஜிஆர் அதிமுக கட்சி ஆரம்பிக்கும் போது இவரை அணுகி இவரை அதிமுக கட்சியில் இணையுமாறு வற்புறுத்தி பிறகு வெற்றிபெற்றால் அமைச்சர் பதவி தருகிறேன் என்று எம்ஜிஆர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு எஸ். கே. சம்பந்தன் அவர்கள் என் தலைவன் அண்ணாதுரை முதலியார் உருவாக்கிய திமுக கட்சிக்கு எதிராக நான் என்றும் அரசியலில் ஈடுபட மாட்டேன் அதனால் நான் அதிமுகவில் இணைய மாட்டேன் என்று கூறி நேர்மையாக மறுத்துவிட்டார்.
இவரின் உடன் பிறந்த சகோதரர் எஸ் கே வேலாயுத முதலியார் அவர்களின் நினைவாக குறிஞ்சிப்பாடி என்னும் ஊரில் எஸ் கே வேலாயுதம் பெண்கள் கலைக் கல்லூரி மற்றும் எஸ்.கே.வேலயுதம் உயர்நிலைப் பள்ளியை நிறுவினார். இன்று குறிஞ்சிப்பாடி ஊர் மக்கள் கல்வியறிவு பெறுகிறார்கள் என்றால் அதற்கு இவர் மற்றும் இவரது சகோதரர் முக்கிய காரணமாகும்.
1947ஆம் ஆண்டில் குறிஞ்சிப்பாடி நடைபெற்ற 10ஆவது செங்குந்தர் மாநாட்டில் தொண்டர் படை தலைவராக பணியாற்றினார்.
இவரின் அண்ணன் வேலாயுதம் முதலியார் மேற்கூறிய மாநாட்டில் சமூக மாநாட்டு வரவேற்பு தலைவராக பணியாற்றினார்.
தமிழ் பிரிவு Y.M.C.A பட்டிமன்றம் மெட்ராஸ் நிருபர் தலைவர்.
எஸ் கே சம்பந்தன் கோ-ஆப்டெக்ஸ் தலைவராக இருக்கும்பது காஞ்சி புத்தகத்தின் வெளியீட்டு விளம்பரம் |
இவர் குடும்ப நிறுவனத்தின் டிரேட்மார்க் |
இவரின் சகோதரர் எஸ் கே வேலாயுதம் |
தனது வாழ்நாள் முழுதும் நேர்மையான அரசியல்வாதியாக இருந்து மக்களுக்கு சேவையாற்றிய எஸ் கே சம்பந்தன் அவர்களின் மகன் பாலு என்பவர் இன்று சென்னை ஆதம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி தெருவில் உறங்கிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி வெளிவந்த செய்தி👇👇
லோக்சபா சட்டமன்றத்தில் எஸ் கே சம்பந்தம் முதலியார் எழுப்பிய கேள்விகள் நடத்திய விவாதங்களில் சில👇
ஐயாவின் சகோதரர் வேலாயுதம் முதலியார் |
அய்யா பற்றிய மேலும் தகவல் மற்றும் விபரங்கள்,வகித்த பதவிகள்,அய்யாவின் புகைப்படம், குலதெய்வம் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்சப் எண் 7826980901 அனுப்புங்கள்