தா.மோ.அன்பரசன் - வாழ்க்கை குறிப்பு
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் வட்டம், தெய்வப் புலவர் சேக்கிழார் அவதரித்த குன்றத்தூரில் தா.மோ.அன்பரசன் அவர்கள் 1960-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் நாள் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் செங்குந்த கைக்கோளர் குலம் திரு.தா.மோகலிங்கம் முதலியார் - திருமதி.ராஜாமணி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
இவர் பிறந்த கிராமம் மிகவும் பின் தங்கிய கிராமமாக இருந்தாலும் வளம் மிக்க விவசாயம் மற்றும் நெசவு தொழிலில் இக்கிராம மக்கள் அனைவரும் ஈடுபட்டு வந்தனர். தா.மோ.அன்பரசன் அவர்களும் நெசவாளர் குடும்பத்தை சார்ந்தவரே. இவர் பாபு என்று குடும்பத்தினரால் செல்லமாக அழைக்கப்படுவார்.
தா.மோ.அன்பரசன் அவர்கள் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப கலப்புப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை கல்வி பயின்றார். பின்னர் குன்றத்தூர் சேக்கிழார் உயர்நிலைபள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் S.S.L.C வகுப்பு வரை கல்வி பயின்றார். அதன் பிறகு மீனம்பாக்கத்தில் உள்ள A.M.ஜெயின் கல்லூரியில் புதுமுக வகுப்பு PUC பயின்றார்.
கல்லூரி படிப்பிற்கு பின்னர் நெசவுத் தொழிலிலும், நெசவாளர்களின் வளர்ச்சியின்பாலும் இவருடைய நாட்டம் சென்றது. வேட்டி - லுங்கி நெசவு தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு குடும்பத் தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்தி குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தினார்.
இவரது தந்தையார் தா.மோகலிங்கம் அவர்கள் அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் அவர்களின் கொள்கை கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இளமை பருவம் முதல் தி.மு.கழகத்தில் இணைந்து பணியாற்றி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக குன்றத்தூர் பேரூர் தி.மு.க செயலாளராக கழகத்தினர் அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பான முறையில் பணியாற்றி குன்றத்தூர் சுற்றுவட்டாரத்தில் தி.மு.கழகத்தை வளர்த்த பெருமை இவரையே சாரும்.
மேலும் இவருடைய தந்தையார் தா.மோகலிங்கம் அவர்கள் 1986-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட குன்றத்தூர் ஒன்றிய பெருந்தலைவராக சிறப்பாக பணியாற்றினார்.
தி.மு.க.வில் படிப்படியாக உயர்ந்த அன்பரசன்
தா.மோ.அன்பரசன் அவர்கள் தனது தந்தையாருடன் இணைந்து இளமை பருவம் முதல் தி.மு.கழக வளர்ச்சிக்காக தீவிரமாக பணியாற்றி வந்தார். இவருடைய தந்தையை போல இவரும் அயராத உழைப்பால் தி.மு.க.வில் படிப்படியாக உயர்ந்தார்.
முதலில் இவர் 1985-ஆம் ஆண்டு முதல் 1988-ஆம் ஆண்டு வரை குன்றத்தூர் பேரூர் தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளராகவும், பின்னர் 1988-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளராகவும் பணியாற்றினார்.
அதன் பின்னர் 1991-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு ஆண்டு வரை 10 ஆண்டுகள் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராகவும் இருந்து அனைவரும் போற்றி பாராட்டும் வகையில் மிகச் சிறப்பாக பணியாற்றினார்.
இளைஞர் அணி அமைப்பாளராக பணியாற்றிய போது 1993-ஆம் ஆண்டு கழகத்திற்கு சோதனை ஏற்பட்ட நேரத்தில், இவர் அச்சிறுப்பாக்கம் முதல் ஆலந்தூர் வரை ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலை வழிநெடுகிலும் அப்போது இளைஞர் அணி செயலாளராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை வைத்து கொடியேற்று விழா நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் இவரது கடும் உழைப்பை கழகத்தினர் அனைவரும் அறிய முடிந்தது,
காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளராக 10 ஆண்டு காலம் இவர் ஆற்றிய அயராத உழைப்பாலும், அரும்பெரும் பணியாலும் உயர்ந்து, இவர் 2000-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று வரை கடந்த 16 ஆண்டுகளாக சிறப்பாக பணி ஆற்றி வருகிறார்.
மக்கள் சேவையில் அன்பரசன்
தா.மோ.அன்பரசன் தாம் பிறந்த குன்றத்தூர் பேரூராட்சித் தலைவராக 1996-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை (10 ஆண்டுகள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றினார் தம்முடைய ஊர் மக்களின் அன்பை பெற்றார்.
இவர் 2004-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் சென்னை துறைமுக பொறுப்புக் குழு உறுப்பினராகவும் சீரிய முறையில் பணியாற்றினார்.
இவர் 2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க அமைச்சர் திருமதி.வளர்மதியை 17,910 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அத்துடன் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்து சாதனை படைத்தார்.
2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பொற்கால ஆட்சியை தந்த தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக திறம்பட செயல்பட்டார்.
அமைச்சராக இவரது கடுமையான உழைப்பு - திறமையான நிர்வாகம் காரணமாக தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 5 ஆண்டுகளும் நிரந்தர வேலை நிறுத்தம் ஏதும் ஏற்படாமல் தடுத்து தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில், தொழில் அமைதி நிலவ செய்து தொழிலாளர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்தது இவரது சாதனையாகும்.
இவர் குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளையில் தலைவராக தற்போது செயல்பட்டு வருகிறார். தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் சேக்கிழார் விழா நடத்தி குன்றத்தூரில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட ஏழை - எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெரும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவது போன்ற பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகிறார்.
சட்டமன்ற உறுப்பினராக ஆற்றிய அரும்பணிகள்
தலைவர் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தா.மோ.அன்பரசன் அவர்கள் பணியாற்றி தமிழக அரசின் முழு ஒத்துழைப்போடு நிறைவேற்றிய அரும்பணிகள்:-
கட்டப்பட்ட பாலங்கள்
ரூ.260 கோடி செலவில் கத்திப்பாரா மேம்பாலம்
ரூ.22 கோடி செலவில் ஆலந்தூர் MKN சாலை மேம்பாலம்.
ரூ.11 கோடி செலவில் நங்கநல்லூர் BV நகர் சுரங்கப்பாதை.
ரூ.128 கோடி செலவில் ஆலந்தூர் - வேளச்சேரி இடையே தெற்கு உள்வட்ட சாலை - ஆதம்பாக்கம் ஏரி மேம்பாலம்.
ஆலந்தூரில் உள்ள எம்.கே.என் ரோடுக்கும் தில்லை கங்கா நகர் ரயில்வே சுரங்கபாதைக்கும் இடையே இணைப்பு சாலை அமைக்காமல் அ.தி.மு.க ஆட்சியில் விட்டுவிட்டனர். ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீதிமன்ற பிரச்சனைகளை தீர்த்து வைத்து ரோட்டின் குறுக்கே இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி எம்.கே.என் ரோடுக்கும் தில்லை கங்கா நகர் சுரங்கபாதைக்கும் இடையே அழகான இணைப்பு சாலையை அமைத்து தந்தார்.
ரூ.72 கோடி செலவில் குரோம்பேட்டை MIT மேம்பாலம்.
ரூ.65 கோடி செலவில் பல்லாவரம் - துரைபாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம் (பாண்ட்ஸ் கம்பெனி மேம்பாலம்).
ரூ.98 கோடி செலவில் மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரில் மேம்பாலம்.
ரூ.18 கோடி செலவில் பல்லாவரம் தர்கா ரோடு சுரங்க பாதை.
மீனம்பாக்கம் விமான நிலையத்தையும், திரிசூலம் ரயில் நிலையத்தையும் இணைக்க சுரங்க நடைப்பாதை.
ரூ.14 கோடியில் பல்லாவரம் ஈஸ்வரி நகரில் ரயில்வே மேம்பாலம்.
ரூ.22 கோடி செலவில் ஆலந்தூர் MKN சாலை மேம்பாலம்.
ரூ.11 கோடி செலவில் நங்கநல்லூர் BV நகர் சுரங்கப்பாதை.
ரூ.128 கோடி செலவில் ஆலந்தூர் - வேளச்சேரி இடையே தெற்கு உள்வட்ட சாலை - ஆதம்பாக்கம் ஏரி மேம்பாலம்.
பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்க நடைபாதை.
குடிநீர் திட்டப் பணிகள்
ஆலந்தூர் தொகுதியில் அடங்கிய ஆலந்தூர் நகராட்சிக்கு தினசரி 15 லட்சம் லிட்டர் கூடுதல் குடிநீர் சென்னை மாநகர குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
நந்தம்பாக்கம் பேரூராட்சிக்கு பாலாற்று குடிநீர் தினசரி கிடைத்திட வழிவகை செய்துள்ளார்.
ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கட்டி முடிக்கப்பட்டு செயல்படாமல் கிடந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் செப்பனிட்டு செயல்பட வைத்து மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுடைய திருக்கரங்களால் திறந்து வைத்திட பெரிதும் உதவியாக இருந்தார்.
பல்லாவரம் நகரில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கூடுதலாக 20 லட்சம் லிட்டர் மெட்ரோ குடிநீரும், 20 லட்சம் லிட்டர் பாலாற்று குடிநீரும் ஆக மொத்தத்தில் தினசரி 85 லட்சம் குடிநீர் வழங்கியது.
கீழ்கட்டளை பகுதியில் பெரியார் நகர், சஞ்சய் காந்தி நகர், கங்கையம்மன் நகர், மகேஸ்வரி நகர் யூனியன் கார்பேட் காலனி பகுதிகளுக்கு பாலாற்று குடிநீர் வழங்கியது.
இதர பணிகள்
ரூ.109 கோடி செலவில் பல்லாவரம் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம்.
பல்லாவரம் நகராட்சியில் சேரும் குப்பைகளை கொட்ட வேங்கடமங்கலத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு.
பல்லாவரம் பேருந்து நிலையம் முற்றிலும் சீரமைப்பு.
கீழ்கட்டளையில் புதிதாக பேருந்து நிலையம் அமைப்பு.
2006 - 2011 அ.தி.மு.க ஆட்சியில் ஆலந்தூர், பல்லாவரம் பகுதிகளில் நிறுத்தப்பட்ட மாநகர பேருந்துகளை மீண்டும் இயக்கி வைத்த பெருமை இவரையே சாரும்.
ஆலந்தூர் ரயிலடி - பாரிமுனை 18 D என்ற வழித்தடத்தில் பேரூந்து மீண்டும் இயக்கப்பட்டது.
நங்கநல்லூர் - கோயம்பேடு M 70 கீழ்க்கட்டளை - கோயம்பேடு என்ற புதிய வழித்தடங்களில் மாநகர பேரூந்தும் இயக்கினார்.
கீழ்கட்டளை முதல் பிராட்வே வரை - கீழ்கட்டளை முதல் திருப்போரூர் வரை - திருவான்மியூர் முதல் கூடுவாஞ்சேரி வரை உட்பட 36 புதிய வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கம்.
பல்லவபுரம் - கண்டோன்மெண்ட் மக்கள் பயன்பாட்டிற்காக பல்லவபுரம் பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்ட சுரங்கபாதை கடந்த 2006 - 2011 அ.தி.மு.க ஆட்சியில் வேண்டும் என்றே கட்ட விடாமல் முட்டுக்கட்டை போட்டனர். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிப்படி மின்னல் வேகத்தில் செயல்பட்டு இச்சுரங்க நடைபாதை இரண்டே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. இச்சுரங்க நடைபாதையை அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மழை வெள்ள காலங்களில் ஆலந்தூர், மதனந்தபுரம் பகுதியில் உள்ள மக்களின் வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் பரிதாப நிலை 40 ஆண்டுகளாக இருந்து வந்தது. இப்பகுதி மக்களின் பரிதாப நிலையை போக்க ஆலந்தூர் கத்திபாரா அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலாஜி மருத்துவமனை பாராத ஸ்டேட் வங்கி, சீனிவாசா ஓட்டல் அருகில் மூன்று இடங்களில் சிறு பாலங்கள் அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களிடம் கோரிக்கை வைத்த மறு நிமிடமே மூன்று சிறுபாலங்கள் அமைக்க ஏற்பாடு செய்தார்.
இதேபோல சென்னை விமான நிலையம் மற்றும் ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையிலிருந்து வரும் மழை வெள்ள நீர் கண்ணன் காலனி, தில்லை கங்கா நகர் ரயில்வே சுரங்க பாதையில் சென்று தேங்கி நின்று பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக கால்வாய்கள் அமைத்து வெள்ள நீர் தேங்கவிடாமல் செய்தார்.
பழவந்தாங்கல் பின்னி கேட் அருகே சுரங்க நடைபாதை அமைக்கும் பணி தடைப்பட்டு போயிருந்தது. கிடப்பில் இருந்த இப்பணி மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
கீழ்கட்டளை முதல் பிராட்வே வரை - கீழ்கட்டளை முதல் திருப்போரூர் வரை - திருவான்மியூர் முதல் கூடுவாஞ்சேரி வரை உட்பட 36 புதிய வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கம்.
குரோம்பேட்டை சி.எல்.சி ஒர்க்ஸ் சாலை சிமென்ட் சாலையாக மாற்றம்.
ரூ.41 கோடி செலவில் பல்லாவரம் - குரோம்பேட்டை ராதா நகரில் 2 துணை மின் நிலையங்கள்.
குறைந்த மின் அழுத்தத்தை போக்க ரூ.1 கோடி செலவில் 20 இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் அமைப்பு.
அஸ்தினாபுரத்தில் ரூ.10 லட்சம் செலவில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைப்பு.
பல்லாவரம் நகராட்சியில் ரூ.70 லட்சம் செலவில் கீழ்கட்டளை நகராட்சி நடுநிலை பள்ளி, இசா பல்லாவரம் நகராட்சி ஆரம்ப பள்ளி மற்றும் ஜமீன் பல்லாவரம் மேல்நிலை பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டது.
பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கண்ணபிரான் கோவில் தெருவில் ரூ.22 லட்சம் செலவில் நவீன ஆட்டிறைச்சிக் கூடம் கட்டப்பட்டது.
பல்லாவரம் நகராட்சி மூலம் 5 ஆண்டுகளில் ரூ.35 கோடி செலவில் 1220 திட்டப்பணிகள் நிறைவேற்றம்.
பல்லாவரம் நகராட்சியில் 6 இடங்களில் ரூ.1.5 கோடி செலவில் அழகிய பூங்காக்கள் அமைப்பு.
குரோம்பேட்டை ராதாநகரில் உள்ள மக்கள் சுற்றி செல்வதை தவிர்த்து ராதாநகர் - ஸ்டேட் பேங்க் காலனி இணைப்பு சாலை அமைப்பதற்க்கான வழியை மாநகர போக்குவரத்து கழக டிப்போவிற்கு சொந்தமான இடத்தை பெற்று தந்து ரூ.10.75 லட்சம் செலவில் அமைப்பு.
அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்
பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் ரூ.52 கோடி செலவில் பல்லாவரம் - குன்றத்தூர் சாலை சந்திப்பில் உயர்மட்டப் பாலம் அமைக்க தி.மு.க ஆட்சியில் தாம் கொண்டு வந்த திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது.
குரோம்பேட்டை ராதா நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.9.62 கோடி செலவில் ரயில்வே கீழ்பாலம் அமைக்க தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது.
பல்லாவரம் நகரத்திற்கு ரூ.75 கோடி செலவிலும், பம்மல் நகரத்திற்கு ரூ.49 கோடி செலவிலும் சென்னை மெட்ரோ குடிநீர் வழங்க தி.மு.க ஆட்சியில் தாம் கொண்டு வந்த திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது.
ராதா நகரில் சாலை அகலப்படுத்தும் பணிகள் ரூ.14.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
அமைச்சராக
2006 முதல் 2011 வரை தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக தா.மோ.அன்பரசன் அவர்கள் 5 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி நிறைவேற்றிய மக்கள் நலப் பணிகள்:-
இந்தியாவிலேயே முதல் முதலாக அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் 50 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்ப்பு.
அமைப்புசாரா நலவாரியங்களை கணினிமயமாக்கி பணிகள் எளிமையாக்கப்பட்டது.
வாரிய பணிகளை விரைவுப்படுத்த மாவட்டங்கள் தோறும் நல வாரிய அலுவலகங்கள் அமைப்பு.
இந்தியாவிலேயே முதல் முதலாக வேலைவாய்ப்பு அலுவலகங்களை கணினிமயமாக்கி ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை அறிமுகபடுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் துயரினைத் துடைக்கும் வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கலைஞர் அவர்களால் 11.11.2006 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில், தா.மோ.அன்பரசன் அவர்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு நலத்துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் ரூ.46,091 கோடி முதலீட்டில் 37 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு, 4 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.
பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டல் நிகழ்ச்சி ஆன்லைன் மூலமாகவும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் சிறந்த வல்லுநர்கள் துணை கொண்டு தொழில்நெறி குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
வெளிநாடு செல்வோருக்கான புத்தாக்க பயிற்சித் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 2007-2008 ஆம் நிதி ஆண்டில் ரூ.1.33 கோடி செலவில் 8459 நபர்கள் பயிற்சியளிக்கப்பட்டனர். 2008-2009 ஆம் நிதி ஆண்டில் ரூ.1.00 கோடி செலவில் 7110 நபர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் ஆட்சி மூலம் 62,000 குடும்பத்தினருக்கு ரூ.2,250 கோடி மதிப்பில் வீட்டு மனைப் பட்டா.
ரூ.300 கோடி செலவில் வண்டலூர் - வாலாஜாபாத் 4 வழிச் சாலை மற்றும் சிங்கபெருமாள் கோயில் - திருப்பெரும்புதூர் 6 வழிச் சாலை அமைப்பு.
ரூ.28 கோடி செலவில் பள்ளிக்கரணை மேம்பாலம் அமைப்பு.
ரூ.12 கோடியில் நந்தம்பாக்கம் - மணப்பாக்கம் இணைப்பு மேம்பாலம் அமைப்பு.
ரூ.35 கோடியில் காஞ்சிபுரம் புறவழிச் சாலை அமைப்பு.
ரூ.10 கோடியில் பொன்னேரிக் கரை சாலை அமைப்பு.
ரூ. 16 கோடி செலவில் தாம்பரம் சானடோரியம் மேம்பாலம் அமைப்பு.
ரூ.79 கோடி செலவில் தாம்பரம் இரயில்வே மேம்பாலம் அமைப்பு.
ரூ. 24 கோடி செலவில் வண்டலூர் இரயில்வே மேம்பாலம் அமைப்பு.
ரூ. 21 கோடி செலவில் ஊரப்பாக்கம் - ஆதனூர் இரயில்வே மேம்பாலம் அமைப்பு.
ரூ.32 கோடி செலவில் செங்கல்பட்டில் ஜி.எஸ்.டி சாலை இரயில்வே மேம்பாலம் அமைப்பு.
ரூ. 27 கோடி செலவில் செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் இரயில்வே மேம்பாலம் அமைப்பு.
ரூ.23 கோடி செலவில் மதுராந்தகம் - சூனாம்பேடு சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பு.
இருங்காட்டுக்கோட்டை - அமரம்பேடு இடையே தரைப்பாலம் அமைப்பு.
இவரது சொந்த ஊரான குன்றத்தூரில் ஆற்றிய பணிகள்
குன்றத்தூரில் ரூ.2 கோடி செலவில் தெய்வ சேக்கிழாருக்கு அழகிய மணிமண்டபம், தியான மண்டபம், கலைஞர் நூலகம் மற்றும் பூங்கா அமைப்பு.
குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
குன்றத்தூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாழ்பட்டுப்போன கட்டிடங்களை இடித்துவிட்டு ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் SCOPE தொண்டு நிறுவனம் உதவியுடன் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
குன்றத்தூர் சேக்கிழார் நகரில் 1 ஏக்கர் பரப்பளவில் அறிஞர் அண்ணா பூங்கா.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் திருமண மண்டபம்.
குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்.
குன்றத்தூர் நத்தம் பகுதியில் பல்லவன் பேருந்து பணிமனை.
குன்றத்தூர் திருஊரக பெருமாள் திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் அமைத்து குடமுழுக்கு.
குன்றத்தூர் அருள்மிகு முருகன் கோவில், அருள்மிகு கந்தலீஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களுக்கு குடமுழுக்கு, அமரம்பேடு அருள்மிகு கன்னியம்மாள் திருக்கோவில், குன்றத்தூர் அருள்மிகு சந்துவெளியம்மன் திருக்கோவில்களை புதுப்பித்து குடமுழுக்கு விழாக்களை நடத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்
ரூ.74 கோடி செலவில் வண்டலூரில் சென்னை வெளிவட்ட சாலையை இணைக்கும் மேம்பாலப் பணிகள் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ரூ.35 கோடி செலவில் ஓட்டேரி - மண்ணிவாக்கம் இரயில்வே மேம்பாலப் பணிகள் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ரூ.29 கோடி செலவில் கூடுவாஞ்சேரி - மாடம்பாக்கம் இரயில்வே மேம்பாலப் பணிகள் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ரூ.53 கோடி செலவில் சிங்கபெருமாள் கோயில் இரயில்வே மேம்பாலம் மேம்பாலப் பணிகள் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ரூ.4.5 கோடி மதிப்பில் அனகாபுத்தூர் - குன்றத்தூர் தரப்பாக்கம் மேம்பாலப் பணிகள் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ரூ.4.5 கோடி மதிப்பில் திருப்போரூர் - நெமிலி பக்கிங்காம் கால்வாய் மேம்பாலப் பணிகள் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க கழக ஆட்சியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பீர்க்கன்கரணையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கழக ஆட்சியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
வண்டலூரில் கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் உயர்மட்டப் பாலம் அமைக்க கழக ஆட்சியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
கூடுவாஞ்சேரியில் நெல்லிக்குப்பம் சாலை சந்திப்பில் உயர்மட்டப் பாலம் அமைக்க கழக ஆட்சியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அன்பரசன் பிறகு தமிழக ஊரக தொழில்துறை அமைச்சராக பதவியேற்றார்