சடையம்மா அல்லது துறவி சடையம்மா (Sadayamma, 19 ஆகஸ்ட், 1865 - 05 ஆகஸ்ட், 1936) என்பவர் இலங்கையை சேர்ந்த பெண்பாற் சைவ சமயத் துறவி ஆவார். இவர் பல மடங்களை ஏற்படுத்தி மக்கள் பணியும், ஆன்மீக பணியும் செய்தவர்.
இலங்கை வடக்கு மாகாணம், நல்லூர் கல்வியங்காடு, திருநெல்வேலி கிழக்கு என்ற பகுதியில் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில் 1865ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் முத்துப்பிள்ளை ஆகும். 11வயதில் கதிரேசு என்பவரை இவருக்கு இவர் பெற்றோர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்தனர்.
இவர் கணவனுக்குப் பைத்தியம் பிடிக்க, இவரது கனவில் நல்லூர் முருகன் கோயிலுள்ள வைரவர் தோன்றி, திருக்கோயிலுக்கு வருமாறு கட்டளையிட்டார். கோயிலில் இருந்து சரியைத் தொண்டிலும், வழிபாட்டிலும் ஈடுபட்டு கணவன் பைத்தியம் நீங்கள் பெற்றார்.
அதன்பின் நான்கு ஆண்டுகள் களித்து இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஈராண்டுகள் கழித்து இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் ஆறு மாதம் கழித்து, சடையம்மா கனவில் இறைவன் தோன்றி "மாங்கல்யத்தை கணவனிடம் களற்றிக் கொடு என்று பணித்து, கணவன் கனவில் இறைவன் தோன்றி "மாங்கல்யத்தைப் பெற்றுக் கொண்டு மனைவியை கதிரமலைக்கு அனுப்பு" என்று பணித்தான்.
கதிரமலை என்ற பகுதிக்கு சென்று, பின் நல்லூர் வந்து, ஆண்டு தோறும் இராமேஸ்வரம் யாத்திரையின் மேற்கொண்டார்.
அம்மையார் தனது இரு குழந்தைகளின் மறைவின் பின் கதிரேசுவுடன் சேர்ந்து சிவத்தொண்டு புரிந்தார். நல்லூர் சட்டநாதர் கோயிலின் நந்தவனத்தைப் பாதுகாக்க மதில் எடுப்பித்தார்.
அதன்பின் நல்லூர் முருகன் கோவிலில் ஓர் அன்னதான மடம் அமைத்து சமையத் தொண்டாற்றினார், பின்னர் கதிர்காமத்திலும் ஒரு மடம் அமைத்தார். அதன்பின் கீரிமலை, திருச்செந்தூர் தலங்களிலும் மடங்கள் அமைத்து சமய தொண்டில் ஈடுபட்டார். இன்று நல்லூர் சடையம்மா மடம், 63 நாயன்மார் குருபூசை மடம் எனப் பெயர் மாற்றமடைந்துள்ளது.
கீரிமலை காங்கேசன் துறை வீதியில் கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் அமைந்த சடையம்மா மடம், வேலர்காடு என்னும் காணி, வடக்கு கடல், கிழக்கும் தெற்கும்கனகசபை முதலியாரின் நிலம்.
கதிர்காமம் கோவில் அருகே இரண்டு ஏக்கர் நிலத்தில் அமைந்த சடையம்மா மடம். கிழக்கு எல்லை வீதியும்,தெற்கு பகீர் மடமும்,வடக்கு வலிகஸ்வத்தை பாபர் மடமும்.
திருச்செந்தூர் கீழ் ரதவீதியில் திருநெல்வேலி ஜில்லா ஶ்ரீவைகுண்டம் தாலுகா சிவசுப்பிரமணிய மடமும் இவர் உருவாக்கிய தெய்வீகச் சொத்துக்கள். இவற்றில் சில தர்மசாதனங்கள் செயலற்றுப் போய்விட்டது.
கீரிமலை என்ற பகுதியில் இவர் இறுதிக்காலத்தைக் கழித்து 1936 ஆம் ஆண்டில் சடையம்மா அம்மையார் தனது 71வது வயதில் சமாதியடைந்தார். இவரது சமாதி ஆலயமும் அங்கு உள்ளது.
இவர் பெயரில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கு வெள்ளப்பிள்ளையார் ஆலயத்திலும் மடம் உள்ளது சடையம்மா குருபூஜை மடம் என்ற பெயரில்..