டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன் exMLA

0

 



செங்குந்தர் கைக்கோள முதலியார் இன செம்மல்
மருத்துவரும், நேர்மையான அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
இ. எஸ். எஸ். இராமன்
(ஏகிரி சஞ்சீவி சுப்பிரமணிய இராமன், செப்டம்பர் 16, 1954) , 


குடும்பம்
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நிழக்கிலார் ஏகிரி. சஞ்சீவி சுப்பிரமணிய முதலியார், சாரதா அம்மாள் தம்பதிக்கு 1954ஆம் சூலை 01 நாள் ஓர் செங்குந்தர் கைக்கோள முதலியார்(எச்சான் கோத்திரம்) குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு உமா என்கிற மனைவியும் மற்றும் ஷோபா என்ற மகளும், பாலசுப்பிரமணியம், செந்தில் சுப்பிரமணியம், அருண் சுப்பிரமணியம் என்ற மகன்களும் உள்ளனர். இவர் தாதா ஏகிரி. சஞ்சீவி முதலியார் பெரும் செல்வந்தர் ஆவர். அவர் சித்தூர் ஜில்லா தலைவராகவும், பொதட்டூர்பேட்டையின் முதல் தலைவராகவும் இருந்தார். ஆந்திர பகுதியில் இருந்த பள்ளிப்பட்டு, மற்றும் திருத்தணி தாலுக்காக்களை வடக்கு எல்லை போராட்டம் மூலம் தமிழகத்துடன் இணைத்த சாதனை இவர்கள் குடும்பத்தை சேரும். திருத்தணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எகிரி. எஸ். தியாகராஜ முதலியாரின் சித்தப்பா ஆவர்.

வரலாறு மற்றும் கல்வி
இ. எஸ். எஸ். இராமனின் தாத்தா சஞ்சீவி முதலியார் 1937ஆம் ஆண்டு சித்தூர் ஜில்லாவின் போர்ட் உறுப்பினராகவும், பொதட்டூர்ப்பேட்டை பஞ்சாயத்து தலைவராகவும் பதவி வகித்தவர். அவருடைய தந்தை சுப்பிரமணியம், திராவிட இயக்கத்தின் தலைவர்கள் ஈ.வெ.ராமசாமி மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர்  C.N. அண்ணாதுரை ஆகியோரின் நெருங்கிய நண்பர். அவர் 1952ல் நடைபெற்ற தேர்தலில் தமிழக மக்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதன் பிறகு 1972ல் அவருடைய தம்பி தியாகராஜன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இ. எஸ். எஸ். இராமனுடைய குடும்பம் 1952ஆம் ஆண்டு முதல் நெசவு, விவசாயம் மற்றும் கல்வித்துறையில் ஈடுபட்டு வந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 1978ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு அவருடைய சொந்த ஊரான பொதட்டூர்ப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய போது தமிழக அரசின் எந்த உதவியும் பெறாமல் அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் 500 கழிவறைகளைக் கட்டி, அதற்காக தமிழக அரசால் உலக பிரசத்திப்பெற்ற உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பட்டத்திற்காக (WHO Award) பரிந்துரைக்கப்பட்டார்.

அரசியல்
இ. எஸ். எஸ். இராமன், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான ஜி.கே.மூப்பனாரின் தீவிர விசுவாசியாக இருந்தவர். 1989ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மருத்துவப் பிரிவின் மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். 1996ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பள்ளிப்பட்டு தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அத்தேர்தலில் டாக்டர் இராமன் 58492 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளரர்களும் வைப்புத்தொகை இழந்தனர்.

பின்னர் 1998 ஆண்டு முதல் - 2001 ஆண்டு வரை ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். மூப்பனாரின் மறைவிற்கு பின்னர் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி. கே. வாசன், 2002ஆம் ஆண்டு சோனியா காந்தியின் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தாய் கட்சியான இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்தார். பின்னர் வாசனின் ஆதரவாளரான டாக்டர் இராமன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில அமைப்பாளராக 2002ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு இன்று வரை செயல்படுகிறார். இவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையினால் தஞ்சாவூர் மாவட்டத்தின் பார்வையாளாராக நியமிக்கப்பட்டார்.

2006 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பள்ளிப்பட்டு தொகுதியின், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2009ஆம் ஆண்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் ஆந்திர பிரதேசத்தில் நந்தியா, அனந்தபூர், கர்னூல் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளாராக நியமிக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 'மினி பஸ் திட்டம்' அமைய பெரும் பங்காற்றினார்.

எழுத்தாளர்
இவர் பல மருத்துவ அறிவியல் நூல்களை எழுதியுள்ளார், அவற்றுள் நீரிழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள் என்ற நூலுக்கு தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு 1979 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இப்பரிசினை அன்றைய முதல்வர் எம். ஜி. ராமசந்திரனிடம் இருந்து பெற்றார். இதுமட்டுமின்றி, இசைப்பட வாழ்வோம், பால்வினை நோய்கள், நால்வர் சுற்றிய நான்கு நாடுகள், மருத்துவத்தின் மறுப்பக்கம், பதிவுகள் ஆகிய தமிழ் நூல்களை எழுதியுள்ளார்.

நீரிழிவு நோயைப் பற்றி முதல் முதலில் விரிவான நூலை தமிழில் எழுதியவர் இவரே ஆவார்

இவர் தினமணி, தினந்தந்தி, மாணவன், கல்கி, தேசிய முரசு போன்ற செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி வானொலியுலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். முன்னணி பத்திரிக்கைகளான ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போட்டர் ஆகியவையில் 2006 முதல் 2009 வரை சட்டமன்ற நிகழ்வுகளை பற்றி எழுதியுள்ளார்.

பயணம்
இவர் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இப்பயணத்தைப் பற்றி நூல் ஒன்றை எழுதியுள்ளார். 2011ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது இலினியாஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜோஸ்லின் நீரிழிவு மைய தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

கல்வியாளர்
இவருடைய முன்னோர்களின் பாதையில் , இவருடைய தந்தையின் நினைவாக தன் சொந்த ஊரில்  கலை மற்றும் அறிவியல் கல்வியியல் கல்லூரிகளை நடத்தி வருகிறார்.







..











இவரின் 
கோத்திரம் பெயர்: எச்சான் கூட்டம் 

குலதெய்வம்: தொண்டைமாநாடு எல்லை அம்மன் மற்றும் திருத்தணி முருகன் 

குலகுரு: கட்சி ஆளவந்த வள்ளலார் ஆதீனம் காஞ்சிபுரம்
.


Post a Comment

0Comments
Post a Comment (0)