சேலம் ஏ. மாரியப்பன் முதலியார். exMLA

0

செங்குந்தர் கைக்கோள முதலியார் 

     ⚜️குலத்தோன்றல்⚜️
நெசவாளர்களின் காவலன்மக்கள்சேவகர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் காமராஜரின் நெருங்கிய நண்பர் 
ஏ. மாரியப்பன் முதலியார். exMLA

(02.08.1920 - 18.07.1976)

சேலம் தொகுதியின் வளர்ச்சிக்கு முழு காரண்மானவர்.

பிறப்பு

திரு A. மாரியப்பன் முதலியார் அவர்கள் 1920 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2ந் தேதி ஆடி 18ஆம் நாள் சேலம் அம்மாப் பேட்டை திரு. வே. மு. ஆறுமுக முதலியார் ரத்தினம்மாள் இவர்களுக்கு தலைமகனாய் பிறந்தார். இவருடன் பிறந்த சகோதரர்கள் இருவர், சகோதரிகள் ஐவர் ஆவர். இவர் செங்குந்த கைக்கோளர் சமூகப் பற்றும், பாசமும் நிறைந்த, கைத்தறி ஜவுளி வியாபார குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி பருவத்திலிருந்து தேசத்தையும், தேச மக்களையும் காப்பாற்ற சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


சுதந்திர போராட்டம்
அடிமைப்பட்டுக் கிடந்த நமது பாரதம் விடுதலைப் பெற தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்திஜி அவர்கள் சுதந்திர போராட்டக் குரல் எழுப்பிய போது, தனது படிப்பை பொருட்டாக நினைக்காமல் பள்ளி இறுதி ஆண்டு படிப்பைக் கூட முடிக்காமல் தன்னை தேசவிடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டார். 

திரு. N. மாணிக்க முதலியார், திரு P. மாரியப்ப முதலியார், திரு. தியாகி K. அருணாசல முதலியார். திரு S. பழனியாண்டி முதலியார், திரு P. S. சண்முக முதலியார், திரு M. பெருமாள் முதலியார் போன்ற சமூகப் பெரியோர்களான தியாகச் செம்மல் களின் ஆசியோடும், ஆதரவோடும் சேலம் அம்மாப் பேட்டையில் செங்குந்தர் மேட்டுத் தெருவில் மகாத்மா காந்திஜி தேசிய வாலிபர் சங்கத்தை அமைத்தார்.

தேச விடுதலைக்கோரி 1941-ஆம் ஆண்டு மகாத்மா காந்திஜி அவர்கள் தனி நபர் சத்யாக்கிரகத்தை ஆரம்பித்தபோது, காந்திஜி அவர்களால் அங்கீகரிப்பவர் கள் தான் சத்யாக்கிரகத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற திட்டத்தையும் வெளியிட்டார்கள். அதன்படி காந்திஜி அவர்களுக்கு எழுதி அனுமதி பெற்று சத்தியாக்கிரகம் செய்து பதினைந்து நாள் சிறை தண்டனை பெற்றார், 1942-ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு, இந்தியனே அஞ்சாதே என்ற போராட்டத்தில் கைது செய்யபட்டார்கள். அந்த நேரத்தில் திரு A மாரியப்பன் முதலியார் அவர்கள் ஆவேசத்தோட செயல்பட்டு மற்றத் தலைவர்களுடன் கைப்பிரதியாகவும், தனது தேச விடுதலைக்காக குடிமகன் என்ற அடிப்படையில் செய் அல்லது செத்து மடி என்ற இறுதிக் கட்டப் போராட்டத் திட்டத்தை அறிவித்தபோது காந்திஜி உள்பட நமது தேசத்தலைவர்கள் தொடர்பு கொண்டு போராட்டத்திற்கு வாசகங்களை நெருங்கிய நண்பர் திரு N. ராமசாமி 1947-ஆம் ஆண்டு எதையும் செய் அல்லது செத்து மடி என்ற பல வாசகங்களை உடையார் அவர்கள் தோட்டத்தில் ரகசியமாக சிறிய கை அச்சு எந்திரத்தைக் கொண்டே அச்சடித்து வெளியிட்டார்கள். அவரின் வீரமிக்க செயலை சமூகப் பெரியோர்களும், தாய்மார்களும் பாராட்டிப் பெருமைப் படுத்தினார்கள், திரு N.ராமசாமி உடையார் அவர்கள் அந்த அச்சு எந்திரத்தை இன்றும் ஞாபகார்த்த சின்னமாக வைத்திருக்கிறார்.




அரசியல் 
1957 ஆம் ஆண்டில்  சேலம் - I தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழக சட்டமன்றத்தில் (MLA) வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(சேலம் - I தொகுதி தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டு சேலம் தெற்கு, சேலம் வடக்கு என்று அழைக்கப்படுகிறது)

சேலம் அம்மாப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி இவரால் நிறுவப்பட்டது.

சேலம் கூட்டுறவு நூற்பாலையை நிறுவியவரும் இவரே.

காந்தியடிகள் மற்றும் காமராஜருடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்.

1952 முதல் 1971 வரை சேலம் அம்மாப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த கூட்டுறவு சங்கம் தமிழ்நாட்டில் மிகப் பழமையானது மற்றும் மிகப்பெரியது. இவர் இந்த சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில்  ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தினார்.

மக்கள் பணி
கூட்டுறவு சங்கம் அமைத்த பிறகு, கைத்தறி நெசவாளர்கள் நிறைந்த இப்பகுதியில் கல்வி கற்காதவர்கள் ஏராளமானவர் இருப்பதை அறிந்து இரவுப் பள்ளியை துவக்கினார். அவரது நண்பர்களும், கற்றறிந்த சமூகப் பெரியோர்களும் ஆசிரியராகப் பணியாற்றினார்கள். 

சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் இரவுப் பள்ளியில் கல்விப் பயின்றார்கள். 1936-ஆம் ஆண்டு திரு. ராஜாஜி அவர்கள் தலைமையில் அமைந்த காங்கிரஸ் மந்திரிசபையில் மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வந்தபோது, அந்தச் சிறுவயதிலேயே தெருத்தெருவாக மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தார். 

1938-ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு சோதனைக் காலம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் குடியாத்தம் திரு. K. அருணாசல முதலியார்.exMLA அவர்களுடன் சேர்ந்து அம்மாப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஒன்று அமைத்து நெசவாளர்களுக்குப் பெரிதும் உதவி செய்தார். 

 1946 - ஆ ம் ஆண்டு தமிழ்நாட்டிலே பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பெயரால் அணி ஒன்று உருவானபோது, சேலம் மாவட்டத்தில் முதல் குரல் கொடுத்தவர் திரு A.மாரியப்பன் முதலியார் அவர்கள் தான், அந்த ஆண்டில் காங்கிரஸ் மகாசபையின் தேர்தல் வந்தபோது சேலத்தில் காமராஜ் அணியில் நின்று வெற்றி பெற்றார். 

சேலம் மாவட்டத்தில் சிறந்த உயர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்தார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு சுதந்திரம் அடைந்தது. சுதந்திரதிற்குப் பிறகு நெசவாளர்களுக்காகப் பல போராட்டங்களை நடத்தி தனது கட்சி அரசுக்கு நெசவாளர்களின் கஷ்டங்களை எடுத்துக் கூறி பல சலுகைகள் கிடைக்கச் செய்தார். 1951ம் ஆண்டு அம்மாப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி & விற்பனைச் சங்கத்திற்கு தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் பொறுப்பு ஏற்றபோது மேற்படி சங்கத்தில் 350 உறுப்பினர்கள் இருந்தார்கள். நெசவாளர்கள் கூட்டுறவு அமைப்பிற்குள் கொண்டு வந்து நிரந்தர வேலை வாய்ப்புக் கிடைக்க பெருமுயற்சி எடுத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான நெசவாளர்களை உறுப்பினராக்கி வேலை கொடுத்தார். இவர் மேற்படி சங்கத்தின் பொறுப்பேற்ற பிறகு, சங்கத்திற்கு சொந்தமாக ஒரு கட்டிடம் கட்டினார். 

அவரது பெருமைக்கு எடுத்துக்காட்டாக சேலம் திரு.வி.க. பாதையில் இன்றும் தலை நிமிர்ந்து நிற்பதை அனைவரும் அறிவோம். மேலும் சங்கத்திற்கு சாயச்சாலை அமைத்து அதற்கு ஒரு கட்டிடமும் வாங்கினார். அந்தக் கட்டிடம் இன்று மாரியப்பன் நிலையம் என்ற பெயரைத் தாங்கி உறுப்பினர்கள் வரவு, செலவு (நூல், கூலி, பெறுதல், துணி ஒப்படைத்தல்) செய்யும் இடமாக தங்க செங்கோட முதலித் தெருவில் உள்ளது. 

1956ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் நெசவாளர் காலனிக்கு அடிக்கல் நாட்டப் பெற்று 200 வீடுகளைக் கட்டிமுடித்து அதற்கு சேலம் அம்மாபேட்டை காமராஜ் நகர் நெசவாளர் காலனி என்று பெயர் சூட்டி பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் தலைமையில் பாரத வர்த்தகத் தொழில் அமைச்சராக இருந்த திரு. லால்பகதூர் சாஸ்திரி ex PM அவர்களைக் கொண்டு திறப்பு விழாவும் செய்தார். 

1963ல் சங்கத்தின் சாதாரண சாயச்சாலையை நவீன சாயச் சாலையாக்கி காலனியில் பெரிய கட்டிடம் கட்டி அதற்கு மாற்றினார், 1957-ஆம் ஆண்டு சேலம் நகரத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார். நெசவாளர் பிரதிநிதியாக பணியாற்றிய இவர் அகில இந்திய கைத்தறி வாரியத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெசவாளர்களுக்குத் தேவையான அச்சு, பன்னை, தறி மிஷின், பேட்டுப் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக 1961ல் சேலம் அம்மாப்பேட்டை யில் 25000 கதிர்கள் கொண்ட கூட்டுறவு நூற்பு ஆலை ஒன்றை நிறுவி நெசவாளர் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளித்து ஊருக்குப் பெருமை தேடித் தந்தார். மேலும் சேலம் ஆத்தூர் ரோட்டில் 25000, கதிர்கள் கொண்ட சேலம் டெக்ஸ்டைல்ஸ் என்ற நூற்பாலையையும் நிறுவினார். 

வேட்டி முதலியவைகளை முக்கால் பங்கு சர்க்கார் மான்யத்துடன் பெற்றுக் கொடுத்தார். கூட்டுறவு சங்கத்தில் பங்கு செலுத்தி உறுப்பினராகச் சேர முடியாத ஏழை நெசவாளர்களை நான்கு அணா மட்டும் செலுத்தினால் உறுப்பினராக சேர்த்து தறி கொடுத்து உதவினார். 

இப்படிச் சாதனைகள் பல பெருமகன் தான் பொறுப்பேற்ற சங்கத்தின் வளர்ச்சியிலே கொஞ்சமும் சலித்ததில்லை. நெசவாளர்களுக்கும் பிராவிடெண்ட் பண்டு திட்டத்தை ஒத்துழைப்போடு 1976ம் ஆண்டு முதன்முதலாக அம்மாப்பேட்டை சங்க உறுப்பினர் நிறுவியுள்ளார். ஐந்தாயிரத்திற்கும் மேல் கொடுக்க வேண்டும் என்று வாதாடி மேலும் சர்க்காரின் முழு உதவியோடு 49 விசைத்தறிகளை பெற்று மேற்பட்ட நெசவாளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து தறி கொடுத்து சங்கத்தை ஆலமரமாக வளர்த்தார். நெசவாளர்களின் வாழ்க்கைக்கு உதவினார். அப்போது அக்கூட்டத்தில் இருந்த சமூகப் பெரியோர்கள் சிலர் நன்கொடை வழங்க உறுதி சமூகப் பெரியோர்களின் பெரும் இந்தியாவிலேயேகளுக்குப் பெற்றுத்தந்தார். அவ்வப்போது ஏற்படும் செலவினங் களுக்கும், தொழில் முன்னேற்றத் திற்கும் உதவியாக இருக்கும் பொருட்டு அம்மாப்பேட்டை அர்பன் கூட்டுறவு வங்கி ஒன்றை நிறுவி தலைமை பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டார். தான் மறையும் போதும் தலைவராகவே மறைந்தார். அதுவும் ஆலமரமாக வளர்ந்து வருகிறது. 

1975 அக்டோபர் 2ம் தேதி பெருந் தலைவர் காமராஜர் இறந்த பிறகு சேலம் நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பேற்றார். நண்பர்கள் மூலமாக 7-6-1976ந் தேதி அம்மாப்பேட்டை அருள்மிகு செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன் மண்டபத் திறப்பு விழா நிகழ்சிக்கு தலைமையேற்று சொற்பொழிவாற்றும்போது நமது சமூகத்திற்காக பாலிடெக்னிக் ஒன்று ஏற்படுத்த வேண்டிய அவசர அவசியத்தைப்பற்றி தெளிவுபடுத்தி அளித்தார்கள்.

அவர் ஜூலை 15ம் தேதி பெருந்தலைவர் காமராஜ் களுக்கு பிறந்த நாள் விழா எடுத்தார். ஜூலை 18ஆம் தேதி 25000 ஏழைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்திருந்தார். அன்று பகல் 12 மணிக்கு உணவு படைத்துக்கொண்டி ருக்கும் போதே திடீரென சுகவீனம் அடைந்து, நம் செங்குந்த செம்மல் A. மாரியப்பன்  முதலியார் அவர்களை காலம் பிரித்துக் கொண்டு விட்டான். அதை தெரிந்த சேலம் மாநகரமே அதிர்ச்சிக்குள்ளானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரிசாரியாக வந்து கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தியதை இன்று நினைத்தாலும் உள்ளம் உருகும், அப்பெருந்தகையின் கனவை நனவாக்க சமூகப் பெரியோர்கள்,  பொன் விழாவும், மாநாடும் நடைபெறுகின்றபோதே செங்குந்தர் கல்வி நிறுவனமும் அமைத்து சேலத்தில் தொழில் கல்லூரி நிறுவியது பாராட்டுக்குரியது.

நினைவுகள்
சேலம் அம்மாபேட்டை பகுதியில் இவருக்கு சிலையும் மணி மண்டபம் உள்ளது சேலத்தில் பல அரசு கட்டிடங்களுக்கு மாரியப்பன் நிலையம் என்று பெயர் உள்ளது.
மக்களின் முன்னேற்றத்துக்காக வாழ்ந்து வந்த நேர்மையான அரசியல்வாதி மாரியப்பன் முதலியார் என்பதால் ஒரு எம்.எல்.ஏக்கு மணிமண்டபம் சிலை அமைத்த பெருமை இவருக்கு சேரும்.




மாரியப்பன் முதலியாரால் உருவான சேலம் நூற்பாலை திறப்பு விழாவில் பிரதமர் (Prime Minister) லால்பகதூர சாஸ்திரி.






மறைவு

மாரியப்ப முதலியாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் அப்போதய பிரதமர் (Prime Minister) சந்திர சேகர்.

ஐயாவின் திரு உருவ சிலை



 




ஐயா அவர்களின் நினைவு மண்டபம் 
















ஏ. மாரியப்பன் முதலியார் நினைவு இல்லம்






















மேலும் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் 7826980901 க்கு what's app செய்யவும்.





Post a Comment

0Comments
Post a Comment (0)