சேலம் சரஸ்வதி பாண்டுரங்கன்

0

இந்திய விடுதலைப் போரின் போது காந்தியடிகள் நடத்திய அறப்போரில் கலந்து கொண்டு சென்னை மாநகரில் சிறை சென்ற முதல் பெண்மணி இவரே ஆவார்.

சுதந்திர போராட்ட நண்பர்களுடன் சரஸ்வதி

              (14-01-1913 - 13-08- 1991)


சேலம் மாவட்டம் ஆத்தூரில் வரதராஜ முதலியார் தேவகி அம்மையாருக்கு மகளாகப் செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்தவர்.இவர் பிறந்த நாள் 14-01-1913. பாண்டுரங்கம் என்ற பண்பாளரை  இவர் மணந்த ஆண்டு 1926.


டாக்டர் அன்சாரி தலைமையில் அமைந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சென்னை பிரிவு தொண்டர் படையில் கணவனும் மனைவியும் மனமுவந்து சேர்ந்தார்கள், 1930 ல் காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகம் தொடங்கிய போது இவர்கள் வீட்டிலிருந்தே ஒரு குழு சரஸ்வதியம்மாள் பாண்டரங்கம் குடும்பம் புறப்பட்டது,காவலர்களின் கடுமையான தாக்குதலுக்கு இருவரும் ஆளாயினர்.


பின்னர் மயிலை கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதால் இவ்வம்மையார் 6 மாத சிறை தண்டனைக்கு ஆளானார்.


1931இல் சட்டமறுப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போது பிறந்த 22 நாட்களே ஆன இவரது  குழந்தையையும் வீதியில் கிடத்தி விட்டு இவர் வீட்டை காலி செய்தனர்.

எதற்குமே அஞ்சாத சரஸ்வதி, காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று சமைப்பதற்கு அடுப்பை மூட்டினார், அங்கிருந்தும் விரட்டி அடிக்கப்பட்ட இவர் தங்கசாலை அனுமார் கோயில் மண்டபத்தில் போய்த் தங்கினார், கைக்குழந்தையோடு அங்கிருந்து சில நாள் மிகவும் அவதிப்பட நேர்ந்தது,காரணம் கடுமையாக விடுத்த அறிவிப்பு ஆகும்.


இவ்வளவுக்குப் பிறகும் 1931ல் மீண்டும் சட்டமறுப்பு இயக்கத்தில் சரஸ்வதி பங்கேற்றதால் கைதாகி கேரளத்தில் உள்ள கண்ணனூர் சிறையில் கொண்டுபோய் அடைக்கப்பட்டார். இவ்வகை இன்னல்களால் அந்தக் கைக்குழந்தையே  மாண்டு போனது.


*சாக்கில் உடை*


சிறைவாசம் அனுபவித்த பிறகும்கூட இவர் உள்ள உறுதி குறைந்துவிடவில்லை, காந்தியடிகள் அறிவித்த அயல்நாட்டு துணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் அஞ்சாமல் பெண் தொண்டர்களோடு ஈடுபட்டு கைதாகி மீண்டும் சிறை புகுந்தார்.

அங்கு புடவை கந்தலாகி விட்டதன் காரணமாக ஒரு சாக்கை உடம்பில் சுற்றிக் கொண்டிருந்தார்,இதைக் கண்டு மனம் இரங்கிய சிறை அலுவலர் ஒருவர், இவருக்கு ஒரு புடவை அளிக்குமாறு கட்டளையிட்டு உதவினார்.


1941 இல் மகாத்மா காந்தியார் தொடங்கிய தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கைதான நேரத்தில் இவ்வம்மையாருக்கு இரண்டாவதாக பிறந்த குழந்தைக்கு 40 நாட்களே ஆனது. குழந்தையை மட்டும் குப்புசாமி முதலியார் என்பவரிடம் வளர்ப்புக் குழந்தையாக விட்டுவிட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் இவர்.


இவ்வாறெல்லாம் சிறைக்கு அஞ்சாத பெண் சிங்கமாக வாழ்ந்த சரஸ்வதி சென்னை முத்தியால்பேட்டை தொகுதி மாதராட்சி உறுப்பினராக பிற்காலத்தில் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்து மத அறநிலையத்துறை உறுப்பினராகவும் இருந்ததோடு, நாகர்கோவிலில் நடந்த தமிழக எல்லைப் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.


*தேர்தலில் ஆதிதிராவிடர்*


ஆந்திரா நாடு எது என்ற அரிய நூலையும் வெளியிட்டார், ஸ்டான்லி மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.


பெண்களுக்கும் ஆதிதிராவிடருக்கும் தேர்தலில் போட்டியிட அனுமதி வேண்டி காங்கிரசாரிடம் வாதிட்டு வெற்றி கண்ட பெருமை உடையவர் இவர்.

சாத்தங்காட்டில் கன்னியா குருகுலம், பெரம்பூரில் மகளிர் காங்கிரஸ் போன்ற சில அமைப்புகளையும் உருவாக்கி செம்மையுற நடத்தினார்.

இத்துணைப் தேசப்பற்றுடைய சரஸ்வதி அம்மாள் 13-08- 1991 பெரம்பூரில் இயற்கை எய்தினார்.


இப்பச் சொல்லுங்கள் யார் யார்  தியாகிகள்? நாட்டுக்காக பாடுபட்ட குடும்பங்கள் எல்லாம் முகவரி தெரியாமல் நடுத்தெருவில் நிற்கின்றனர்.


ஆனால் அடிப்படை ஆதாரம் இல்லாத அரிதாரம் பூசிகள் எல்லாம் நாட்டை ஆள வேண்டும் என்று, எண்ணி செயல்படுகிறார்கள்.

தேசத்திற்கு சுதந்திரம் வாங்கித் தந்த தேசப்பிதா காந்தியடிகள் கூட தேர்தல் வந்தால் மூடி மறைக்கப் படுகிறார்.




இவரின் போட்டோ கிடைத்தால்+91 78269 80901 என்ற எண்ணுக்கு அனுப்பி வையுங்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)