காஞ்சி.முத்து கணேசன் செங்குந்தர்

0


'கலை நன்மணி'              காஞ்சி. முத்து கணேசன்      இசைச் சொற்பொழிவாளர்.              ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ கந்த புராணச் சிறப்பும் , வரலாற்றுச் சிறப்பும் பெற்றது -செங்குந்தர் குலம்!.திருமுருகன் இளவல்கள் நவவீரர்கள்  தோன்றிய குலம்! நவவீரர்கள் வழி வந்தவர்களே- செங்குந்தர்கள்!                                         .சீர்மிகு செங்குந்தர் குலத்தின் தலைநாடு - காஞ்சிபுரம்.காஞ்சிபுரம் , பிள்ளையார் பாளையம் , திருவேகம்பன் தெருவில்,பூர்வீக குடி , திரு.வே.சுந்தரமூர்த்தி முதலியார் அவர்கள் நெசவுத் தொழில் செய்த வண்ணம் , மகாபாரதம் , ராமாயணம் சொற்பொழிவுகள் நடத்தி,புகழுடன் வாழ்ந்தார்.

திரு.வே.சுந்தரமூர்த்தி முதலியார் , திருமதி உண்ணாமுலை அம்மையார் தம்பதியர்க்கு ,20-9-1949  -அன்று திரு.முத்துகணேசன் அவர்கள் பிறந்தார்.பத்தாம் வகுப்பு வரை படித்தார்.தமது 13- வயதிலிருந்தே தமது தந்தையிடம் கற்று, அவருடன் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்.                    காஞ்சிபுரம் மெய்கண்டார் கழகம் திரு.திருஞானசம்பந்த முதலியார் அவர்களிடம் தமிழ்ப் பாடங்கள் சிறப்புற கற்றார்.மெய்கண்டார் கழகம் நடத்தும், திருத்தல யாத்திரைகளில் கலந்து, சொற்பொழிகள் ஆற்றி பயிற்சி பெற்றார்.

திருமால் வழிபட்டு, சிறப்பு பெற்ற - ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர்-ஆலய திருச்சன்னதியில் - "விநாயகர் பெருமை " தலைப்பில் முதல் சொற்பொழிவைத் தொடங்கினார்.பிள்ளையார் பாளையம் , திருவேகம்பன் தெரு , ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய திருச்சன்னதியில் முதல் இசைச் சொற்பொழிவை ( காலட்ஷேபம்) ஆற்றினார்.                            30-6-1971 -அன்று திருமதி.சரோஜா அம்மையார் அவர்களை திருமணம் செய்து மூன்று பெண்களும் , ஒரு ஆண் மகனும் பெற்று ,வளர்த்து , மணவாழ்வு காண வைத்தது சிறப்புடன் வாழத் செய்துள்ளார்.

தமிழகமெங்கும்- பல ஊர்களில் , பல கோயில் திரு விழாக்களில் - தரும் தலைப்பிற்கு ஏற்றவகையில் சொற்பொழிவுகள் நடத்தியும்,.திருக்கோயில் திருப்பணி வளர்ச்சி நிமித்தம் , பல ஊர்களில் - இராமாயணம் , மகாபாரதம் போன்ற நீண்ட , தொடர் சொற்பொழிவுகள் செய்து வருகிறார்.தொழில் சன்மானம் , கடமைக்கும் அப்பாற்பட்டு , திருப்பணி வளர்ச்சிக்கு நிதி வசூலும் செய்து தருவார்.

இளவயது முதல்  ஈடுபாடு கொண்டமையால் நாளொரு வண்ணம் இவரது சொற்பொழிவு மெருகு கூடி வருகிறது. இவரது சொற்பொழிவு , நகைச்சுவை ,இலக்கியச்சுவை, வாழ்வியல் நெறி , அனுபவச்சுவை , கிளைக் கதைகளை உள்ளிட்டது.கணீரென்ற இவரது குரல் வளம் , ஏற்ற இறக்க தொனியில் , நவரச உணர்வுகளை வெளிப்படுத்தும் ! சொற்பொழிவில் ஈர்க்கப்பட்டவர் தங்கள் ஊர் நிகழ்வுக்கு அழைத்து கௌரவப் படுத்துவார்கள் !.சங்கிலித் தொடராக வாய்ப்புகள் அமைந்து வளர்ந்தவர் !




இவரின் திறமையும் , புகழும் அறிந்து , தமிழ்நாடு அரசு , இயல் , இசை , நாடகம் மன்றச் சார்பாக, 2005 - ம் ஆண்டு , " கலை நன்மணி "விருது தந்து கௌரவித்தது !காஞ்சிபுரம் தேன்கூடு இலக்கிய மன்றம் " மகாபாரதப் பேரொளி " விருதும் , ஸ்ரீ அங்காளம்மன்  கோயில் திருவிழாவில் , சொற்பொழிவில் , மேனாள் D.S.P. திரு.சுப்பிரமணியன்   அவர்களால் " மகாமாரத நவரச திலகம் " பட்டமும் அளிக்கப் பட்டு கௌரவிக்கப் பட்டார் !

வானொலி , தொலைக்காட்சி ஊடகங்களில் வில்லுப்பாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தி வருகிறார் !

தமிழ்நாடு அளவில் பல ஊர்களில் சொற்பொழிவு ஆற்றிய போதிலும் , வட ஆற்காடு ,தர்மபுரி ,வேலூர் மாவட்டங்களில் இவருக்கு வாய்ப்புகள் அதிகம்.மேலும் , கேரளா ,கர்நாடகா , ஆந்திரா மாநிலங்களிலிருந்து வரும் தமிழர்களின் அழைப்புகளை ஏற்று , நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.





கேரளா, பாலக்காடு , செங்குந்தர் வாழும் பகுதியில்- திருமுருகர் கோயிலில், கந்தபுராணம் சொற்பொழிவு ஆற்றிய விபரமும் ,சிங்கப்பூரில் தமிழர்கள் வாழும் பகுதியில் , திருமுருகன் ஆலயத்தில் -(மலைக் கோயில்) " திருமுருகர் பெருமை " சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமாக கருதுகிறார்.

பிள்ளையார் பாளையம் - ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்திற்கும் மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்திற்கும் திருப்பணிகள் புரிந்து " கும்பாபிஷேகம் "நடத்தி , பதினேழு ஆண்டுகளுக்கு மேலாக , பராமரித்து வருகிறார்.ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் , சுமார் ஜந்து இலட்ச ரூபாய் மதிப்பீடு செலவில் தேர் செய்து ,பிரதி மாதம் பௌர்ணமி நாளில்,ஸ்ரீஅங்காளம்மனை  அற்புத அலங்காரமுடன் தேரில் அமர்த்தி  கோயில் பிரகாரம் உலா உற்சவம் நடத்தி வருகிறார்.

நம்மவர்கள் வாழும் பகுதிகளில் , நம்மவர் பொறுப்பில் வளர்,கோயில் திருவிழாக்களில்- ஸ்ரீ விநாயகர் பெருமை , ஸ்ரீ அம்பாள் பெருமை போன்ற தனித் தலைப்புகளிலும்,கோயில் திருப்பணிகள் , கும்பாபிஷேகம் நிமித்தம் வளர்ச்சி கால  நிகழ்வுகளுக்கு , இராமாயணம் , மகாபாரதம் ,கந்தபுராணச்,பெரிய புராணம் , பாகவதம் போன்ற தொடர் சொற்பொழிகளும் நிகழ்த்த , அழைப்பின் பேரில் கலந்து , சிறப்பிக்க சித்தமாக உள்ளார் ! நல்வாய்ப்புகள் தந்து பலன் பெறுவோம் !

ஸ்ரீ அங்காளம்மன் , ஸ்ரீ கன்னியம்மன்- இருவரையும் இருகண்களாகப் போற்றி , வழிபட்டு வாழும் இவருக்கு ,அவர்களின் பேரருளால் எல்லா நலமும் , வளமும் பெற்று இனிது வாழ்க ! வளர்க !                                 ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ தொடர்புக்கு :                         "கலை நன்மணி"                  திரு.முத்துகணேசன் அவர்கள் ,                              செல் : 94435 97510             ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ தகவல் உதவி : காஞ்சி.துரை.சௌந்தரராசன்.


வெளியீடு: செங்குந்தர் வரலாறு மீட்பு குழு



Post a Comment

0Comments
Post a Comment (0)