முத்து சுந்தர முதலியார்

0

முத்து சுந்தர முதலியார்

ஊர்: தொண்டைநாட்டிலுள்ள காமகூர், 

தந்தை: முத்துச்சாமி முதலியார். வாழ்ந்த காலம். 1873-1941. தாய்-இரத்தினாம்பாள், 

இவர் ஆரணி சந்தசாமியுடையார், செல்லக்குட்டி ஆச்சாரியார், சிவசண்முகமெய்ஞ்ஞான சிவாச்சாரியார், காமக்கூர்வட்டக் கோட்டாட்சித் தலைவர் சுந்தரராமையர் ஆகியோரிடம் தமிழ் கற்றுப் புலமை பெற்றார். இவரது புலமை நலத்தைப் பாராட்டித் திரு. வி. கலியாணசுந்தா முதலியார் தலைமையில் 'மாப்பேராசிரியர்' என்னும் பட்டமும், பணமுடிப்பும் வழங்கப் பெற்றது. இவர் ஆரணி தேசியப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். பொதுவாகத் தமிழ் கற்க விரும்புவோர்கள் அனைவருக்கும் தமிழ்க் கல்வியை அளித்தார். கம்ப ராமாயணத்தில் உள்ள நீதிச் செய்யுட்களைத் திரட்டிக் கம்ப இராமாயண நீதிக்கவித்திரட்டு என்னும் பெயரில் ஒரு தனி நூலாக வெளியிட்டுள்ளார். இவர் இறுதிக் காலத்தில் வேனிற் கட்டி நோயால் பாதிக்கப் பெற்று 6-6-1941ஆம் ஆண்டில் காலமானார். 

எழுதிய நூல்கள்: லக்கணக்கோவை, மகாத்மா காந்தி சதகம். இலக்கணக்கோவை யென்னும் நூல் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களில் சொல்லப் பெருத இலக்கணங்களையெல்லாம் தொகுத்துச் செய்யப் பெற்றது. 



Post a Comment

0Comments
Post a Comment (0)