திருவாரூர் நாகப்ப சபாபதி முதலியார் சித்திரைத் திங்கள் 28-04-1886 தோன்றினார். தம் இளம்பருவம் தொட்டே, கொழும்பு நகரோடு கைத்தறித் துணி வாணிபம் பல ஆண்டுகளாகத் திறமையுடன் நடத்தி வந்த தம் தந்தையாருக்குப் பெருந்துணையிருந்தது வாணிப நுணுக்கங்களையெல்லாம் நன்கு அறிந்து கொண்டார்.
மஞ்சக் கொல்லை, திருமலை
ராயன் பட்டினம், காரைக்கால் ஆகிய
ஊர்களைச் சேர்ந்த நம் சமூக வியாபாரி
கள் கொழும்பில் கைத்தறித்துணி
வாணிபம் நடத்தி வந்தார்கள். நம்மவர்
களுக்கிடையே நிலவிய போட்டி
யையும் அதனால் விளைந்த மனக்
கசப்பையும் பொருளின் விரையத்தை
யும் கண்ட இளைஞர் சபாபதியார்,
தம்மையும் தம் சமூகத்தவரையும்
எதிர்நோக்கி நின்ற பிரச்சனையைச்
சந்தித்த முறையே தனிச்சிறப்பு
வாய்ந்தது.
1945-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம்
நாளன்று கூறை நாட்டிலே தஞ்சை
மாவட்ட செங்குந்தர்களின் முதல்
மாநாடு சீறும் சிறப்புமாக நடை
பெற்றது. "செங்குந்தர்களுக்குள்
டுறவு வேண்டுமானால், ஒரு
கிராமத்தார்களோ, ஒன்று கூடி,
கூட்டாகப் பெரும்பொருள் போட்டு
வியாபாரத்தைத் துவங்க வேண்டும்.
அவ்வியாபாரத்தை எத்துறையிலா
யினும் பயன்படுத்திக் கொண்டு,
எனக்கென்ன உனக்கென்ன என்ற
எண்ணத்தை அறவே ஒழித்து,
அவரவர்களும் தங்கள் தங்களதாக
கருதி உழைத்துப் பெறும்
பொருளைத்தேட வேண்டும். இதற்கு
எத்தனையோ முட்டுக் கட்டைகள்
ஏற்பட்டு மனச்சோர்வு அடையும்படி
நேரிடும் அக்காலத்தில் தளராத
ஊக்கத்துடன் கருமமே கண்ணாக
உழைக்க வேண்டும். அவ்வாறு
நடந்து கொள்வீர்களானால் பெரும்
பொருள் திரட்டலாம்" என
அம்மாநாட்டில் வள்ளல் சபாபதியார்
பேசினார்.
இந்த இனிய பேச்சுக்கு ஏற்ப 1926-
ஆறுகடைகளை ஒன்றாக
இணைத்து மதராஸ் பளய காட்
கம்பெனி என்ற வாணிப நிலையத்தை
உருவாக்கினார். பின்னர் 1930-ல்
பதினாறு கூட்டாளிகளுடன் சேர்ந்து
மதராஸ் பளகாட் கம்பெனியைப்
பெரிய அளவில் உருவாக்கினார்.
இத்துடன் கொழும்பு நகரில்
கொட்டைப் பாக்கு வாணிபம் செய்து
வந்த மூன்று கம்பெனிகள் இணைந்து
'கொழும்பு நகரில் கொட்டைப் பாக்கு
கம்பெனி' என்ற பெரிய தொரு
கம்பெனி உருவாக்குவதற்கு
மூலகாரணமாயிருந்தார்.
வட ஆற்காடு மாவட்டத்தில்
திருவத்திபுரத்தில் நடை பெற்ற
தென்னிந்திய செங்குந்த மகாஜன
சங்கத்தின் ஐந்தாவது மாநில
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
முடிவுக்கிணங்க, பல ஊர்களிலும்
உள்ள செங்குந்தர்களின் பொருளா
தார நிலையை உயர்த்த வேண்டும்
என்ற நல்லெண்ணத்தால்
பெரும்பாலும் செங்குந்தர்களையே
பங்குதாரர்களாகச் சேர்த்து,
குடியேற்றத்தில் 'திருமகள் நூல்
ஆலையைத் துவங்குவதற்கு
ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்
வள்ளல் சபாபதியார்.
சபாபதியாரின் அறச் செயல்கள்
பலப்பல, பேரரசரும் செங்குந்த
சமூகத்தவருக்குமுள்ள தொடர்பை
நன்கு அறிந்திருந்த இவர் திருவாரூர்ப்
பங்குனி உத்திர பெரு விழாவின்
போதும் பக்த காட்சித் திருவிழாவின்
போதும் நடைபெறும் முசுகுந்தர்
ஆயிரம் போற்றி வழிபாடும், புரட்டாசி
பௌர்ணமியில் நடைபெறும் ஆயிரம்
போற்றி வழிபாடும் என்றென்றும்
ஒழுங்காக நடை பெறுவதற்கு
ஏதுவாக நான்கு ஏக்கர் நஞ்சை நிலத்
தையும், இரண்டு வீடுகளையும் முதற்
பொருளாக எழுதி வைத்திருக்கிறார்.
சபாபதியார் தம் தொழிலின்
காரணமாகப்
பல ஊர்களுக்கும்
சென்றபோதெல்லாம், தம் சமூக ஏழை
நெசவாளர்களையும் அவர்களின்
வறிய வாழ்க்கையும், பலப்பல
கிராமங்களில் கட்சிப் பூசல்களின்
ஏற்பட்டிருந்த பிளவு
காரணமாக
படையார்
வள்ளல்
களையும் கண்டு மனம் நொந்தார்.
சோழர்களின் ஆட்சியில் இரும்
சிறப்புடனும் விளங்கி கைக்கோளக்
சோழர்களின் வீழ்ச்சிக்கு தமிழக
மெங்கும் பகுதி பகுதியாகப் பிரிந்து
சென்று குடியேறி நெசவுத் தொழிலை
களெல்லாம் நனவாக நாளெல்லாம்
செங்குந்தர்கள் பெரும்
மேற்கொண்டு வாழ்ந்தனர்.
இந்த அவல நிலையை மாற்றிச்
செங்குந்த சமூகத்தவரிடையே
மறுமலர்ச்சியும் புத்துணர்ச்சியும்
ஏற்படச் செய்தவர்
சபாபதியார். 1927-ம் ஆண்டு ஏப்ரல்
மாதம் 29ம் நாள் 'தென்னிந்திய
செங்குந்த மகாஜன சங்கம்' என்ற
மாபெரும் ஸ்தாபனம் ஒன்றை நிறுவி,
தம் உடல் பொருள் ஆவி அனைத்
தையும்
அதன்
வளர்ச்சிக்கு
பயன்படுத்தி நாடெங்கும் சிதறுண்டு
கிடந்த 72 கிளை நாட்டுச்
செங்குந்தர்களையும் தாங்கள் பழம்
பெருமை வாய்ந்த ஒரு பாரம்பரியத்
தின் வாரிசுகள் என்பதை உணரச்
செய்தவர் வள்ளல் சபாபதியார்.
தேனை மறந்துவிட்ட வண்டும்
வானை மறந்து விட்ட பயிறும் ஒளிச்
சிறப்பை மறந்து விட்ட பூவும் இந்த
தகவல் வையகம்
முழுவதும்
இல்லாததைப்போல
வள்ளல்
சபாபதியாரின் அரும் பெரும்
தொண்டுகளை நன்றி மறவாத
செங்குந்த சமுதாயம் என்றென்றும்
எண்ணி
எண்ணி இறும்பூது
எய்துவதுடன் அவர் காட்டிய
நன்னெறியில் இனிதே நடந்து நலம்
பல காணும் என்பது உறுதி.
வள்ளல் சபாபதியாரின் கனவு
உழைப்போமாக.
திருவாரூர் நகர் கல்வி வளர்ச்சிக்காக இவர் கட்டிக்கொடுத்த பள்ளி |
இவரின் நெருங்கிய உறவினர் கல்யாணசுந்தர முதலியார் கட்டிக்கொடுத்த வாசகசலை |
மெட்ராஸ் பாளையகாட், சங்குமார்க் போன்ற நிறுவனங்களின் நிறுவனர் இவரே
தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க நிறுவனர் வள்ளல் சபாபதி முதலியார் வாழ்க்கை வரலாறு நூல்
Pdf download link: CLICk