மக்கள் மருத்துவர் ஈரோடு ஜீவானந்தம் செங்குந்தர்

0

ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர்

"மருத்துவம் மக்களுக்கானது... அது வியாபாரமல்ல!"- `மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் நினைவலைகள்!

`மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம்  `மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் முதலியார்  வாழ்நாள் முழுவதும் ஒரு போராளியாக, செயல்வீரராக களத்தில் நின்று தன்னைக் சமுதாயத்தில் கரைத்துக்கொண்ட மருத்துவர் ஜீவா, மார்ச் 3 2021 இயற்கையில் கலந்துவிட்டார். 

அவரின் நினைவலைகள் இதோ... ஈரோடு சுதந்திர போராட்ட வீரர் செங்குந்தர் கைக்கோளர் மரபு வடுவன் கூட்டம் பங்காளிகள் வெங்கடாசலம் முதலியாருக்கு 1940 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். காற்றைச் சிதைக்காத மெல்லிய குரல். அந்தக் குரலில் கனிவும் கருணையும் மிகுந்திருக்கும். அக்கறையும், பொறுப்புணர்வும் நிறைந்திருக்கும். எவராக இருந்தாலும் தோளில் கைபோட்டு நிறைந்த நட்போடு பேசுகிற எளிமை... 'மருத்துவம் என்பது மக்களுக்கானது. அதை வியாபாரமாக்குவதை அனுமதிக்கக்கூடாது' என்று காலம் முழுவதும் போராடியவர். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடுகளையும் அரசியலையும் அம்பலப்படுத்தியவர். 

எவ்வித வரம்புமில்லாமல் கட்டணக்கொள்ளை அடிக்கிற தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றாக மக்களையே பங்குதாரர்களாக்கி அறக்கட்டளை மருத்துவமனைகளைத் தொடங்கியவர்.

ஈரோட்டைச் சேர்ந்த 'மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் இப்போது இல்லை. ஜீவா ஈரோட்டைச் சேர்ந்தவர். அப்பா வெங்கடாசலம் முதலியார் சுதந்திரப் போராட்ட வீரர். காங்கிரஸ்காரராக சிறைக்குச் சென்று கம்யூனிஸ்டாக வெளியே வந்தவர். வீடே அரசியல்மயமாக இருந்ததால் ஜீவாவுக்கு இயல்பிலேயே அரசியல் புரிதல் இருந்தது. வீட்டுக்கு வரும் ஜனசக்தியும் விடுதலையும் அவரது அரசியல் அறிவை செறிவாக்கியது. சிறு வயதிலேயே மருத்துவராகும் கனவோடு வளர்ந்த ஜீவா, கடும் உழைப்பால் அந்த இலக்கைத் தொட்டார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் மருத்துவம் படித்தார். 'மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் 'மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் படிப்பை முடித்துவிட்டு மக்களிடம் வந்த ஜீவாவுக்குத் தமிழக மருத்துவசூழலே விசித்திரமாக இருந்தது. தமிழகத்தில் கார்பரேட் மருத்துவமனைகள் கால்பதித்த நேரம் அது. ஒரு பக்கம் அரசு மருத்துவமனைகள் மக்களின் நம்பிக்கையை இழக்க, இன்னொரு பக்கம் தனியார் மருத்துவமனைகள் வளர்ந்துகொண்டே போனதைக் கண்டார். நோயாளிகளை விட மருத்துவத்துறைக்குத்தான் சிகிச்சை தேவை என்று உணர்ந்தார். கல்வி படிப்படியாக வணிகமாகிவிட்டது. 

கல்வி வணிகமானால் எல்லாமே வணிகமாகிப்போகும். பல லட்சங்களைச் செலவு செய்து படித்துவிட்டு வரும் ஒரு மருத்துவர் இலவச சேவை செய்ய முடியாது. இந்தச் சூழலை மாற்ற வேண்டுமென்றால் வெறும் எழுத்தும் பேச்சும் மட்டும் போதாது. செயல் வேண்டும். அரசியல் தன்மைமிக்க குடும்பத்தில் பிறந்த ஜீவா, களப்போராளியாக மாறியது அந்தத் தருணத்தில்தான். முதலில் அடிப்படைக் கல்வியில் இருந்து மாற்றத்தைத் தொடங்க விரும்பினார் ஜீவா. 

அப்போது மெட்ரிக் பள்ளிகளில் விருப்பத்துக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. மிகக்குறைந்த கட்டணத்தில் ஒரு தனியார் பள்ளியை நடத்திக்காட்ட நினைத்தார். நமக்கு அந்நியமான வரலாற்றுப் பதிவுகளையும் ஏட்டுச் சுரக்காய்களையும் கொண்ட கல்வித் திட்டத்திலிருந்து வேறுபட்டு ஒரு மாற்றுக் கல்வித்திட்டத்தை உருவாக்கினார். சொந்த செலவில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்குமளவுக்கு ஜீவாவுக்கு வசதியில்லை. நண்பர்களிடம் பேசினார். 20 பேர் ஆளுக்கு 5000 ரூபாய் தர ஒப்புக்கொண்டார்கள். 'சித்தார்த்தா' என்ற பெயரில் ஒரு பள்ளி உருவானது. உளவியலும் வாழ்வியலும் சூழலியலும் கலந்த ஒரு மாறுபட்ட கல்வித்திட்டத்தைக் கொண்ட பள்ளியாக அது வளர்ந்தது. 'மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் 'மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் பத்து பேர் சேர்ந்து நாம் நினைத்த மாதிரி ஒரு பள்ளியைத் தொடங்க முடியுமென்றால் அதே பத்துப்பேர் சேர்ந்து ஏன் தரமான ஒரு மருத்துவமனையைத் தொடங்கமுடியாது என்று சிந்தித்தார் ஜீவா. 50 நண்பர்கள் கைகோத்தார்கள். எல்லோருமே நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் பங்களிப்பு செய்ததில் ஒன்றரை கோடி ரூபாய் சேர்ந்தது. தெளிவான திட்டமிடலும் செயல்திட்டமும் இருந்ததால் வங்கி இரண்டரைக் கோடி கடன் தந்தது. 60 படுக்கைகளோடு ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை உருவானது. நம் வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. உரிய விழிப்புணர்வும் சிகிச்சையும் கிடைக்காமல் மக்கள் தவித்து நிற்கிறார்கள். சிகிச்சைக்கான செலவு கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத் இருக்கிறது. 

கொங்குப்பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னைக்கோ புதுச்சேரிக்கோ திருவனந்தபுரத்துக்கோ தான் சிகிச்சைக்காக செல்ல வேண்டும். எனவே, ஈரோட்டிலேயே சகல வசதிகளும் கொண்ட ஒரு மருத்துவமனைத் தொடங்க விரும்பினார் ஜீவா. 80 பேரைச் சேர்த்து திண்டலில் ஒரு கேன்சர் சென்டரைத் தொடங்கினார். மேலும் 40 பேரைச் சேர்த்து கேன்சர் நோயாளிகளுக்கான பாலியேட்டிவ் மெடிக்கல் கேர் சென்டர் (Palliative medical care) ஒன்றையும் தொடங்கினார். இது கைவிடப்பட்ட கேன்சர் நோயாளிகளைப் பராமரிக்கும் மையம். இங்கே சிகிச்சை, பராமரிப்பு எதற்கும் கட்டணமில்லை. மருத்துவத் துறையில் சிகிச்சைக்கு இணையாக பரிசோதனைகளுக்கும் பெருஞ்செலவு பிடிக்கிறது. வெளிப்படைத்தன்மை இல்லாததால் பரிசோதனைகளுக்கு பலமடங்கு கட்டணம் வசூலிக்கின்றன தனியார் மருத்துவமனைகள். ஜீவா 50 பேரைச் சேர்த்து ஒரு ஸ்கேன் சென்டரைத் தொடங்கினார். சந்தையில் எவ்வளவு கட்டணமோ அதில் பாதிதான் இங்கே. 100 பேரைச் சேர்த்து டயாலிசிஸ் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். 120 பேரைச் சேர்த்து தஞ்சாவூர் வல்லத்தில் புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்தார். குடிநோயாளிகளுக்கான மருத்துவமனை ஒன்றையும் ஆரம்பித்தார். 

ஊத்துக்குளி, பெங்களூரு, திருப்பூர், அவினாசி, பாண்டிச்சேரி என இந்தக் கூட்டுறவு மருத்துவமனை பெருங்கனவாக விரிந்தது. 'மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் 'மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் ஜீவா தொடங்கியிருக்கும் இந்த மருத்துவமனைகளில் எல்லோருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படுவதில்லை. 

இருப்பவர்களுக்குக் கட்டணம். இல்லாதவர்களுக்கு இலவசம். ஆனால் எல்லாருக்கும் ஒரே மாதிரி சிகிச்சை. ஸ்கேனுக்கு வெளியில் 500 ரூபாய் கட்டணம் என்றால் இங்கே 250 ரூபாய். எல்லா நடைமுறைகளும் வெளிப்படையாகவே நடக்கும். மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் விலை, சிகிச்சைகளுக்கான செலவு, ஆக்ஸிஜன் கட்டணம், ஸ்கேன், அறை வாடகை, மருத்துவர்களுக்கான கட்டணம்... அனைத்துமே அறிவிப்புப் பலகையில் இருக்கும். 

சிகிச்சை முடிந்து திரும்பச் செல்லும்போது மீதம் இருக்கும் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து பணம் வாங்கிக்கொள்ளலாம். மத்திய மாநில அரசுகள் நோயாளிகளுக்கு வழங்கும் எல்லா உதவிகளையும் பெற்றுத்தர இந்த மருத்துவமனைகளில் ஊழியர்கள் இருப்பார்கள். எந்த மருத்துவரையும் எப்போதும் சந்திக்கலாம். சந்தேகங்கள் கேட்கலாம். ஒரு பக்கம் மாபெரும் மருத்துவப் புரட்சியை நடத்திய ஜீவா, இன்னொரு பக்கம் சூழலியல் போராளியாகவும் தீவிரமாக இயங்கினார். 

தமிழக பசுமை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி தமிழகத்தைப் பாதிக்கும் சூழலியல் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்தார். பல வெளியீடுகளைக் கொண்டு வந்தார். கழிவுகளால் சாக்கடைக் கால்வாயாக மாறிக்கொண்டிருக்கும் பவானி ஆற்றை மீட்க மக்களைத் திரட்டிப் போராடினார். மெல்ல மெல்ல சிதைவுக்குள்ளாகி வரும் மேற்குத்தொடர்ச்சி மலையைக் காக்கவும் போராடினார். இயற்கையைச் சிதைக்காமல் அதோடு ஒன்றிவாழும் பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காகவும் ஜீவா களத்தில் நின்றார். கிராமியப் பொருளாதாரம், மருத்துவம், கல்வி தொடர்பான பல நூல்களைப் பதிப்பித்து குறைந்த விலையிலும் இலவசப் பிரதியாகவும் மக்களுக்கு விநியோகித்தார். 'மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் 'மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் குறிப்பாக மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையில் நிறைய எழுதினார். ஜூனியர் விகடன் இதழில் இவர் எழுதிய 'மருத்துவம் நலமா? நிழலும் நிஜமும்' என்ற தொடர், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புகழ்பெற்ற தத்துவ பிரதியான கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் பதிப்பித்தார். 

டாக்டர் பி.எம்.ஹெக்டேயின் கட்டுரைகளையும், உரைகளையும் தொகுத்து ‘மருத்துவத்திற்கு மருத்துவம்' எனும் நூலாக்கினார். சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்த ஜீவா, காந்தியத்தின் மீது தீவிர நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்.


 ‘‘ஒவ்வொரு சிகிச்சைக்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். வீதிக்கு வீதி டாஸ்மாக் தொடங்குவதைப் போல, 10 ஆயிரம் பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில் அரசு மருத்துவமனைகளைத் தொடங்க வேண்டும். அந்த மருத்துவமனைகள் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட வேண்டும்" 

என்பதே ஜீவாவின் கோரிக்கையாக இருந்தது. வாழ்நாள் முழுவதும் ஒரு போராளியாக, செயல்வீரராக களத்தில் நின்று தன்னைக் கரைத்துக்கொண்ட ஜீவா, இன்று இயற்கையில் கலந்துவிட்டார். அவரின் பெயர் என்றென்றும் காலத்தில் நிலைத்து நிற்கும்! 



இவரின்
கோத்திரம் பெயர்: வடுவன் கூட்டம் பங்காளிகள்
குலதெய்வம்: பழனி முருகன், திருச்செங்கோடு வட்டம் உலகப்பம்பாளையம் பெரியாண்டவர் - எல்லைம்மன்.



Post a Comment

0Comments
Post a Comment (0)