பத்மஸ்ரீ. எம்.பி. நாச்சிமுத்து முதலியார்

0

செங்குந்தர் கைக்கோள முதலியார்             

    ⚜️குலத் தோன்றல்⚜️
20ஆம் நூற்றாண்டில் நெசவாளர்களின் காவலராக திகழ்ந்த 
பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து முதலியார்

                      (28.04.1913) - (27.06.1987)
பிறப்பு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், 1913, ஏப்ரல் 28-ல், 
மு.பழனியப்ப முதலியார் - சடையம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார் நாச்சிமுத்து முதலியார். தொடக்க கல்வியை சென்னிமலையிலும், உயர்நிலைக் கல்வியை திருப்பூரிலும், பட்டப்படிப்பைத் திருச்சியிலும், சட்டப்படிப்பை சென்னையிலும் பயின்றார்.


வாழ்க்கை:
ஈரோட்டில் நான்கு ஆண்டுகள் வக்கீலாக பணிபுரிந்தார்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் அல்லலுற்று, தனியாரிடம் தறித்தொழிலில் சிக்கிக்கிடந்த நெசவாளர்களை, கூட்டுறவு அமைப்பின் கீழே கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை        உயர்த்துவதில் தான் நாச்சிமுத்து                அய்யாவிற்கு நாட்டம் மிகுந்திருந்தது.

கிராமியப் பொருளாதார நிர்மாணத் திட்டங்களுக்கு வலுவூட்ட, அண்ணல் காந்தியடிகள் விடுத்த அழைப்பால் ஈர்க்கப்பட்டார் எம்.பி.என். அவரது சிந்தனையின் விளைவுதான், 1941ல் உருவான, "சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கம்' எனப்படும் சென்டெக்ஸ். இதன் தலைவராக, 46 ஆண்டுகள் இருந்து நெசவாளர்களுக்கும், கூட்டுறவுத்துறைக்கும், இவர் ஆற்றிய பணிகள் அளவிலடங்கா.

நாடா ஓசையே நமச்சிவாய மந்திரங்களாகவும்; நெசவாளர் குடியிருப்புகளே அவர் தரிசிக்கும் புண்ணியத் தலமாகவும் மாறின. 

தறிக் குழிக்குள் வீழ்ந்த தறியாளர் வாழ்வை நெறிப்படுத்த, அல்லும் பகலும் அவராற்றிய பணிகளுக்காக,1983ல் அவருக்கு, பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது.
1982-ல்,"தமிழகத்தின் தலைசிறந்த கூட்டுறவுத் தலைவர்' விருது மற்றும் வைர பதக்கம் வழங்கியும்,1981-ல் தங்கப்பதக்கம் வழங்கியும் தமிழக அரசு வழங்கி கவுரவப்படுத்தியது.

கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத் தலைவராக, 17 ஆண்டுகள், அகில இந்திய கைத்தறி வாரிய உறுப்பினராக, 32 ஆண்டுகள் இருந்தார்.
திருநெல்வேலியில் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலையை உருவாக்கி, அதன் தலைவராகவும், 17 ஆண்டுகள் பணியாற்றினார்.

ரிசர்வ் வங்கி ஆலோசனைக்குழு உறுப்பினர், இந்தியன் வங்கி இயக்குனர், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் என பல்வேறு பதவிகளை வகித்தார்.
சென்னிமலை கொமராப்பா செங்குந்தர் பள்ளித் தாளாளராகவும், ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் பொருளாளராகவும் இருந்தார். சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ., இன்ஜினியரிங் கல்லூரியும் இவரது முயற்சியால் துவக்கப்பட்டது.

தம் வாழ்நாளின் பெரும் பகுதியை கைத்தறிதுறையின் வளர்ச்சிக்காவே செலவிட்ட, எம்.பி., நாச்சிமுத்து முதலியார், 1987, ஜூலை 27-ல் காலமானார்.
இன்றும் சென்னிமலையில் ஓடும் ஒவ்வொரு தறியும், அவர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றன.

1976 முதல் 1987 வரை தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.



பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜகோபாலச்சாரி உடன் நமது ஐயா

தமிழக முதல்வர் காமராஜருடன் ஐயா


ஈரோடு நகர தந்தை மீனாட்சிசுந்தர முதலியார் அவர்களுடன் நமது ஐயா

நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு தந்த நமது ஐயா





நினைவுகள்:
சென்னிமலை என்றால் கொடிகாத்த குமரன் பெயர் நினைவுக்கு வரும். கூடவே நினைக்கப்படுவது கைத்தறியும், எம்.பி.என். என்ற பெயரும்தான்.




கைத்தறி உலகில் தனக்கென்றொரு தனியிடத்தை சென்னிமலை பெற, முழு முதல் காரணமானவர் "எம்.பி.என்.' என, அனைவராலும் அழைக்கப்படும் எம்.பி.நாச்சிமுத்து முதலியார்.
இவர் நினைவாக சென்னிமலையில்
எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் கல்லூரி உள்ளது.
எம்.பி.நாச்சிமுத்து நகர் என்று சென்னிமலையில் ஓர் குடியிருப்பு உள்ளது.




..................................................


இவரின்
கோத்திரம் பெயர்: எருமைகாரர் கூட்டம்
குலதெய்வம்: சென்னிமலை முருகன், கரூர் மாவட்டம் புன்னம் அங்காளம்மன்







Post a Comment

0Comments
Post a Comment (0)