ஆந்திரா நெல்லந்தி ஏகாம்பர முதலியார்

0

 


1. 23.04.1935-ல் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபு கரிகாலன் கோத்திரம் பங்காளிகள் குடும்பத்தில் பிறந்தார். 

2. 1967ஆம் ஆண்டு தன்னுடைய 32ஆம் வயதில் 22 ஊருக்கும் எஜமான் பொறுப்பை ஏற்றார். ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வர ஆலயம் நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். 

3. 1980ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவரானார். இவர் தலைவராக இருந்தபொழுது வீடு இல்லா ஏழைகள் பலருக்கும் இலவச வீட்டு மனையை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தந்தார். இவர் தலைவராக இருந்தபோது வீதிகள் தோறும் குடிநீர் குழாய்கள் அமைத்துக் கொடுத்தார். 

4. 1983ஆம் ஆண்டு திரு. V.K.சீனிவாசன் அவர்களின் துணையுடன் அப்போதைய கல்வி அமைச்சர் திரு. காளிமுத்து கிருஷ்ணமநாயுடு அவர்களின் பெரு முயற்சியில் உயர்நிலைப்பள்ளியைக் கொண்டு வந்தார். 1983 ஆம் ஆண்டு சத்திரவாடா கிராமத்தின் தெலுங்குதேச கட்சித் தலைவரானார்.

 5. 1984ஆம் ஆண்டு ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி கட்டிட வளர்ச்சிக்குழு தலைவரானார். 

6. கோயில் திருப்பணிக்கும், மணி மண்டபம் அமைப்பதற்கும் திரு. காளி முத்து கிருஷ்ணம நாயுடு அவர்களின் பெரு முயற்சியில் சுமார் 26 லட்சம் பெற்று கோயில் மணிமண்டபம் கட்டி திருப்பணி செய்து முடித்தார். 

7. வயது முதிர்ந்தவர்களுக்கும், நெசவாளர்களுக்கும் மற்றும் கைம்பெண் களுக்கும் திரு. காளிமுத்து கிருஷ்ணம நாயுடு அவர்களின் உதவியுடன் ஓய்வூதியம் பெற்றுத் தந்தார். இதேபோல் இன்னும் பல உதவிகளை இந்த சத்திரவாடா கிராமத்திற்கு செய்து கொடுத்துள்ளார். 

8. மருத்துவ செலவுகளுக்கான தொகையினை திரு. காளிமுத்து கிருஷ்ணம நாயுடு அவர்களின் உதவியுடன் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பல பேர்களுக்கு வாங்கித் தந்துள்ளார்.


.
ஆந்திரா மாநிலம் நகரி நகராட்சி சத்திரவாடா கிராமத்தில் 28-04-2017 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி யளவில். 18 நாடுகளைக் கொண்ட செங்குந்தர்களின் நாட்டாண்மையா கவும், சத்திரவாடா ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்து பொது மக்களின் நன்மைக்காக சிறப்பான முறையில் சேவை செய்து, குறிப்பாக பள்ளிக்கூடம், குடிநீர், சாலை வசதி உள்பட பல நல்ல காரியங்களுக்கு தன்னுடைய சொந்த நிலங்களை வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தெய்வத்திரு. நெல்லந்தி மு.ஏகாம்பர செங்குந்தர் அவர்களின் வெண்கல திருவுருவச் சிலை திறப்பு விழா வெகு சிறப்புடன் நடைபெற்றது. தொழிலதிபர் பாகா ஆ.இராஜா அவர்கள் தலைமை வசித்தார். ஏகாம்பரகுப்பம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் S.S.பொன்னுசாமி அவர்கள் வரவேற்றார். T.சுப்பிரமணி யம், V.N இராமச்சந்திரன், J.G.நாக ரத்தினம், N.K.கங்காதரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நம்முடைய செங்குந்தர் குலத் தலைவர், கைத்தறிக் கதிரவன் திருமிகு. K.P.K.செல்வராஜ் அவர்கள் நம்முடைய குலக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் ஆந்திரா மாநில முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு காலி முத்துகிருஷ்ணம நாயுடு MLC திறந்து வைத்தார். முன்னால் அவர்கள் திருவுருவச்சிலையினடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ESS இராமன் M.D.Ex.MLA., ஆந்திரா மாநில செங்குந்தர் தலைவர் திரு.PO மூர்த்தி, மாநில துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர். VST பாது ஆ மத்தூர் M.A முருகன் வாழ்த்துரை வழங்கினர். திருவள்ளூர் மாவட்டத் தலைவர் PA.மாணிக்கம், A.V.சக்கரப்பன், உயர் பதி, K.C நீலமேகம், VCD.சிதம்பரம் நகரி நகராட்சி கவுன்சிலர்கள் A.தேசப் பன். V.K.S.வாசு, P.G.நீலமேகம், B...வெண்ணிலா, B.B.ஜோதி பாஸ்கர், K.S.D. செந்தாமரை, N.K.குப்புசாமி, R.S.ஜீவா, M.J.ராஜலிங்கம், M.R.பாலு, P.S அமுதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் தெய்வத்திரு. N.M.ஏகாம் பரசெங்குந்தர் அவர்களின் புதல்வர் கள் திரு.N.E.நாகலிங்கம், திரு N.E.தேவன் ஆகியோர் கௌரவிக்கப் பட்டனர். K.K.காளத்தி, J.காளத்தி, V.K.சந்திர சேகர், K.கார்த்திகேயன், N. T.சரவணன், N.T.முத்தையன், N.M. அருணாசலம், NA.சுந்தரமூர்த்தி ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந் தனர். விழா முடிவில் அனைவருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. A.K.நாகராஜன் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. முடிவில் இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா! போராட்டமா!! என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.





மேலும் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால்  7826980901 க்கு what's app செய்யவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)