இலங்கை செங்குந்தர்கைக்கோள முதலியார் பரம்பரையும் கொடிச்சீலை விழாவும்

0
இலங்கை செங்குந்தர்கைக்கோள முதலியார் பரம்பரையும்  கொடிச்சீலை விழாவும் 
இலங்கை - நல்லூர் கந்தசாமி கோவில்


⚜️ இலங்கை, யாழ்ப்பாணம்- நல்லூர்க் கந்தசுவாமி ஆலயக்  கொடியேற்றத்தின் போது கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலை வழங்கும் நடைமுறையில் இன்றளவும் மரபு வழியான முறையில் பின்பற்றப்பட்டு வருகின்றது . 

⚜️ முருகனைக் பொது குலதெய்வமாகக் கொண்ட செங்குந்தர்கைக்கோள முதலியார் மரபினைச் சேர்ந்தவர்களே கொடிக்கயிறையும் , கொடிச்சீலையையும் பரம்பரை பரம்பரையாக வழங்கி வருகின்றனர் . 


⚜️ ஏன் இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது என ஆராய்ந்தால் சந்தான பாக்கியம் வேண்டி முருகனிடம் நேர்த்தி வைக்கப்பட்டதாகவும் , நேர்த்திக் கடனைத் தீர்க்கும் பொருட்டு கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலையை வழங்கும் மரபு உருவானதாகவும் குறிப்பிடப்படுகின்றது .

⚜️ தற்போது நல்லூர்க் கந்தனுக்கு கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிறு வழங்கும் செங்குந்தர் சந்ததியினர் , அம்மரபு தொடர்பில் சில விடயங்களைக் குறிப்பிட்டனர் . ஒவ்வொரு வருடமும் 24 முழம் நீளம் கொண்ட புதுக் கொடிச்சீலையில் வேலும் , மயிலும் வரையப்பட்டு தயார் செய்யப்படுகின்றது.அதேபோன்று கொடிக்கயிறும் 24 முழம் நீளத்தில் தயார் செய்யப்படுகின்றது . 

⚜️ செங்குந்தர்கைக்கோள முதலியார்  பரம்பரையினரின் முக்கிய தொழிலாக நெசவுத் தொழில் காணப்படுவதால் , அவர்களே கொடிச்சீலையை நெய்து நல்லூர்க் கந்தனுக்கு வழங்கி வருகின்றனர் . எனினும் தற்போது நெசவுத் தொழில் கைவிடப்பட்ட நிலையில் , புத்தம் புதிய துணியில் வேலும் , மயிலும் வரையப்பட்டு வழங்கப்படும் வழக்கம் நிலவுகின்றது. 

⚜️ செங்குந்தர்கைக்கோள முதலியார்  பரம்பரையினர் கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிறு வழங்குவது குறித்து ஓர் ஐதீகக் கதையும் உண்டு . தில்லையில் நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யும் பேறு பெற்றவர் உமாபதி சிவாச்சாரியார் . உச்சிக்காலப் பூசையின் பின்னர் அவர் நண்பகல் 12 மணிக்கே வீடு திரும்புவார் . வெயிலில் அவர் செல்வதை அவதானித்த மன்னர் , அவருக்கு சிவிகையை வழங்கினார். 


⚜️ சிவிகையில் சென்று வந்த உமாபதி சிவாச்சாரியாரை அவதானித்த பெண்ணாடகம் மறைஞான சம்பந்தர் , பட்டகட்டையில் பகல் குருடன் போகின்றான் என அவரது சீடர்களிடம் விளித்துள்ளார். அதனைக் கேட்ட உமாபதி சிவாச்சாரியார் அவரே தமது குருநாதர் என்பதனை உணர்ந்து அவரை வணங்க விரும்பி , சிவிகையில் இருந்து இறங்கினார் . சிவாச்சாரியார் தமக்கு ஊறு விளைவிக்கப் போகின்றார் என தவறாக நினைத்த மறைஞான சம்பந்தர் அங்கிருந்து ஓடினார் . 

⚜️ அவரைத் தொடர்ந்து சிவாச்சாரியாரும் ஓட ஆரம்பித்தார் . இருவரும் ஓடிக் களைப்படைந்ததால் செங்குந்தர் தெருவில் இளைப்பாறியதுடன் , குடிப்பதற்கு ஏதாவது தருமாறு மறைஞான சம்பந்தர் கேட்டுள்ளார்.செங்குந்தர்களிடமோ பாவு தோய்க்கும் கூழ் அந்த நேரத்தில் இருந்ததால் அதனை வழங்க  அதனை மறைஞான சம்பந்தர் வாங்கி அருந்தினார் . அதன் போது அவரது வாயிலிருந்து வழிந்த கூழை உமாபதி சிவாச்சாரியார் ஏந்தி அருந்தினார் . 

⚜️ இதனை அறிந்த தில்லை வாழ் அந்தணர்கள் மன்னனிடம் முறையிட உமாபதியார் தில்லையில் பூசை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது . தில்லையில் கொடியேற்ற தினத்தன்று தில்லை வாழ் அந்தணர்கள் கொடியேற்றிய போது அது அரைக்கம்பத்தில் அறுந்து வீழ்ந்தது . தொடர்ந்து செங்குந்தர் நெய்த சீலையை உமாபதி ஏற்றுவதே எனக்கு விருப்பம் என அசரீரி ஒலித்தது . இறைவனின் விருப்பத்திற்கு இணங்க செங்குந்தர் நெய்த சீலையை உமாபதி ஏற்ற , அது வழுவாமல் ஏறியது . அன்றிலிருந்து கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிற்றை செங்குந்தர் பரம்பரையினர் வழங்கி வருவதாக ஒரு ஐதீகக் கதையும் உண்டு.

⚜️ நல்லூர்க் கந்தனுக்கு கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலை வழங்கும் பேறு பெற்ற செங்குந்தர்கைக்கோள முதலியார்கள் யாரென்று ஆராய்ந்தால் , சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழும் மிகப்பெரிய சமூகம் ஆகும்.






ஆதாரம்:
https://www.tamilwin.com/community/01/222438

https://www.bakthi.net/2019/07/blog-post_27.html?m=1

http://www.nazhikai.com/?p=3099

http://sankathi24.com/news/nalalaura-mauraukanaitama-vanatatau-kaotaicacaiilaai

Post a Comment

0Comments
Post a Comment (0)