இடங்கைச்‌ செங்குந்தர்‌ செப்பேடு

0

 செங்குந்த முதலியார்‌, ஆசாரிகள்‌ ஆன அஞ்சுசாதி பஞ்சகம்மாளத்தார்‌, ஆயிரவைசியர்‌, வன்னியர்‌, தேவேந்திரப்‌ பள்ளர்‌ ஆகியவர்கள்‌ இடங்கைப்‌ பாணத்தார்‌ என்று இச்செப்பேட்டில்‌ குறிக்கப்பட்டுள்ளனர்‌.


இவர்கள்‌ அனைவரும்‌ சேர்ந்து காஞ்சிபுரத்தில்‌ காமாட்சியம்மனுக்குத்‌ தேரோட்டம்‌ நடத்த ஏற்பாடு செய்தனர்‌. வலங்கையைச்‌ சேர்ந்த சேனியன்‌ சிம்மப்புலி என்பான்‌ இடங்கையார்‌ தேரைத்‌ தன்‌ மந்திர வலிமையால்‌ நிறுத்திவிட்டான்‌.

கொச்சி, மலையாளம்‌ பகுதியில்‌ உள்ள இடங்கைப்‌ பிரிவினர்‌ சிம்ம ஒண்டிப்புலி அனுமந்தன்‌ என்பானைத்‌ தேர்ந்து அனுப்பினர்‌. அவன்‌ தன்‌ மகனைத்‌ தலைவெட்டித்‌ தேரில்‌ கட்டிப்‌ பன்னீராயிரம்பேர்‌ இழுக்கும்‌ தேரைத்‌ தான்‌ ஒருவனாக இரும்புச்‌ சங்கிலியை மூக்கில்‌ கட்டி இழுத்துவந்து நிலை நிறுத்தினான்‌. செங்குந்த முதலியார்‌ உட்பட்ட இடங்கையார்‌ அவனுக்கு கொடுத்த காணிக்கை விபரம்‌ இச்செப்பேட்டில்‌ கூறப்படுகிறது. 

செங்குந்த முதலியார்கள்‌, பலவாறு புகழப்படுகின்றனர்‌. அவை செங்குந்தர்களின்‌ மெய்க்கீர்த்திப்‌ பகுதி ஆகும்‌. அருணாசலமுதலியார்‌, சின்னப்பமுதலியார்‌, மல்லப்பமுதலியார்‌, கிருஷ்ணப்பமுதலியார்‌, மழவராய முதலியார்‌ ஆகியோர்‌ இச்செப்பேட்டில்‌ குறிப்பிடப்‌ பெறுகின்றனர்‌. 


முலம்‌

  1. ஸ்வஸ்திஸ்ரீ விசைய சாலிவாகன சகாப்தம்‌ 1243 கலியப்தம்‌ 4422  
  2. யிதன்மேல்ச்‌ செல்லாநின்ற சருவதாரி சம்வச்சரம்‌ வைய்யாசி மாதம்‌ 11 தேதி யிந்த சுக்குரவாரம்‌
  3. அஸ்த்த நஷ்ஷெத்திரம்‌ சுபனாமயோகம்‌ யிந்த சுபதினத்தில்‌ சாதனம்‌ பத்திரம்‌
  4. எழிதிக்‌ குடுத்த விபரம்‌, கயிலாய பிரதினாமமான காஞ்சி ஸ்தளம்‌ 72 நாடு 63 
  5.  கோஷ்ட்டம்‌ மாதஷ்சி படவேடு தேசத்தில்‌ யிடங்கை பாணத்தார்‌ எழிதிக்குடுத்த சாதனம்‌ 
  6. பராபரவஸ்துவான ஸ்ரீமது சகலகுண சம்பன்னரான பதவாக்கிய பிறமானிக்கரான 
  7. சத்தியாபாஷை அரிச்சந்திரரான அன்னதான ' சொற்ன்னதான வஸ்த்திரதான 
  8.  அரிபூசை சிவபூசை குருபூசை யார்வலரான அனேக சாம்பிறாஷ்சிய 
  9.  லஷ்சுமிகரான அக்கினியில்‌ செம்மாவுதாரரான ஆன்புலிக்கொடிக்‌ குடையவரான  
  10. சம்புமாரிஷ்சி வேழ்வியி லுதித்தவரான பஞ்சவர்ண்ணம்‌ விருது படைத்தவரான
  11. காங்கு கச்சை உடையவரான வேதமுப்பிரினூல்‌ தரித்தவரான வாதாவியை வெண்ணவரான 
  12. யிடங்கை சிம்மாசனத்துக்குக்‌ கற்த்தவியரான ரிணவேர பாலிகரான ரணகளத்தில்‌ 
  13. பிறமுதுவு காட்டாதவரான வன்னிய புசங்கரான வாடாமாலை செங்க 
  14. முநீர்மாலை வெத்திமாலை தரித்தவரான வீரமுரசு வெத்திமுரசு கலியாண முரசு 
  15. படைத்தவரான வீரவெண்டயம்‌ வீரகண்டாமனி தரித்தவரான சிலையெழுபது 
  16. படைத்தவரான சிம்மக்கொடி யுடையவரான திடதிடயெனவே பேரிகை டமாரம்‌ 
  17. சத்தம்‌ செய்யாத தேசத்தில்‌ வனசபங்கம்‌ பண்ணினவரான கும்கும்‌ எனவே 
  18. வெடிபடை கொக்கரிக்க சம்மாத்தியமுடையு மத்திவரான கூட்டமுரும்‌ வீரபந்தன பால்‌ 
  19. அளித்தவரான வீரசூர விக்கிரமார்க்கம்‌ பெருமைபேர்‌ பெத்தவரான ஆடாத 
  20. புரவியை தட்டி வையாளி விட்டவரான அஞ்சாதே சிங்க மதவானைக்‌ குட்டியைப்போல்‌ 
  21. பிறாக்கிறமம்‌ முடைத்தவரான வந்தவரை ஆதரிக்கவல்லவரான பாலோடு பழம்‌ உண்ட 
  22. பன்னாடுமுடையவரான கரிமுரசும்‌ கெங்கா நதியும்‌ மகமேரு ... முடையவரான 
  23. பந்துசென போஷகரான காளிகாதேவி அம்மனிடம்‌ அருளும்‌ பிரசாதமும்‌
  24. பெத்தவரான அஞ்சுசாதி பஞ்சாளத்தார்‌ அலுமக்கொடி விருது படைத்தவரான அனந்த 
  25. வேத சிப்பிய சாஸ்த்திர வேதபாராயண தனம்‌ பிரம்மாண்டவரான 
  26. சிவபூசை துரந்திரிகரான ருத்திராஷ்ச மாலிகபரணரான மகாமேரு சமான 
  27. தீரரான அஞ்சுசாதி பஞ்சாளத்தார்‌ சாஸ்திரரிசி கோத்திர புத்திரரான 
  28. விசயநகரத்தார்‌ ஆயிரம்‌ கோத்திரத்தாரும்‌ உபநகர பிரம்மநகர காஞ்சிநகர காசிநகர 
  29. அயோத்திநகர பிறவென்றான்‌ மாணிக்க சிம்மாசனம்‌ படைத்தவரான ஆயிரங்‌ 
  30. கோத்திரத்தாருகளும்‌ தர்ம்மசிவாச்சாரியார்‌ முன்பாக குடுத்த கெருடக்கொடி 
  31. விருது சூடுமிவர்கள்‌ ஸ்ரீமது சகலகுணசம்பன்னரான சகலதர்மம்‌ பரிபாலகரான 
  32. அகண்டித லஷ்மி பிரசன்னரான அன்னதான வினோதகரான அவியாச 
  33. பரோபகாரரான சங்கீத கோலாகலரான பிரியரான கண்டநாடு கொண்டு கொண்டனாடு கொடாதாரான 
  34. யிருதலை பச்சிக்கொடி கோழிக்கொடி பெத்தவரான வல்லானுட தேவிக்கி 
  35. பொயித்தலைக்கு மெய்த்தலை குடுத்தவரான காளியைக்‌ கய்யால்‌ பிடித்தவரான 
  36. காமாஷ்சியம்மன்‌ துணையுண்டானவரான பச்சைடால்‌ வெள்ளைடால்‌ பகல்தீவுட்டி 
  37. மகரதோரணம்‌ படைத்தவரான குதிரை குஞ்சரம்‌ காளாஞ்சி கனகதப்பட்டை 
  38. புல்லாங்குழல்‌ அலகுமாலை மஞ்சபாவாடை படைத்தவரான அருணாசல முதலியாரும்‌ 
  39. சின்னப்பமுதலியாரும்‌ மல்லப்பமுதலியாரும்‌ கிருஷ்ணப்ப முதலியாரும்‌ வன்னியர்‌ பஞ்சா   
  40. ளத்தாரும்‌ ஆயிரங்கோத்திரம்‌ வசியகுல நகரத்தார்‌ செட்டியள்‌ எழுதிக்‌ குடுத்த சாசனபத்திரம்‌
  41. யிந்த காஞ்சி நகரத்திலே யிடங்கையார்‌ காமாஷ்சிதேவிக்கு ரதம்‌ நடப்பிச்சார்கள்‌
  42. பன்னீராயிரம்பேர்‌ யிழுக்குர ரதம்‌ பண்ணி ஓட்டிவைக்கிற வேளையிலே
  43. வலங்கைக்குள்ளே யிருக்குற சேனியன்‌ சிம்மப்புலி அவனுடைய வித்தையாகிய 
  44. கிருபத்தினாலே தடைக்கட்டி ரதம்‌ ஓடாமல்படி நிரித்திப்போட்டான்‌. அப்போ தம்முட 
  45. யிடங்கைப்‌ பாணத்தாருக்கு மனஸ்த்தாபம்‌ பட்டு யிதுக்கு யிந்த ரதம்‌ நடப்பிக்கப்பட்டவன்‌ 
  46. நம்முட பாணத்திலே எங்கேயிருக்கிறதோ என்று தேசா தேசங்களுக்கு பத்திரம்‌ 
  47. எழுதி அனுப்பிச்சார்கள்‌. அப்போ கொச்சி மலையாளம்‌ யிடங்கையார்‌ பாத்து அப்பால்‌ 
  48. கொச்சி மலையாளத்திலே யிருக்குற சிம்ம ஒண்டிப்பிலி அனுமந்தனை அழச்சு
  49. அப்போ வந்து யிடங்கையாருக்கு சருணாறத்திரை பண்ணிக்கொண்டான்‌. தேர்‌ நிண்ணு போயிருக்குது அத்தைப்‌  போயி

Post a Comment

0Comments
Post a Comment (0)