திருச்செங்கோடு நாமக்கல் சாலையில் உள்ள உலகப்பம்பாளையம் செல்வம் செழித்த செங்குந்த கைக்கோளர் குலம், மாயன் கோத்திரம் பங்காளிகளை சேர்ந்த குடும்பத்தில் 08.05.1885 ஆம் ஆண்டில் பிறந்தார்.
அக்காலத்தில் உலகப்பம்பாளையம் என்பது சுமார் 500க்கும் மேற்பட்ட செங்குந்தர் குடும்பங்கள் பாவடி சாவடிகளுடன் நீதி நிர்வாகம் செய்த பழமையான ஊர்.
இந்த ஊரில் பரம்பரை காரியக்காரர் குடுப்பத்தை சேர்ந்த மாரிமுத்து முதலியார் மிகச் சிறந்த முறையில் செங்குந்தர் பாவடி நிர்வாகம் செய்தவர்.
சுமார் 7 ஏக்கர் மெயின் ரோட்டில் உள்ள தனது குடும்பத்துக்கு சொந்தமான இடத்தை தானியக்கிடங்கு மற்றும் மக்களின் காய்கறி/கால்நடை சந்தைக்காக/ தானமாக வழங்கிய வள்ளல். இதன் மூலம் பயன்பெறுவது, சுற்றுவட்டாரத்தில் விவசாயம் செய்யும் வேளாள கவுண்டர்/நாடார் சமூகம்
உலகப்பம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி கட்ட இடமும் கட்டிடமும் கட்டி கொடுத்தவர்.
கூட்டுறவு சொசைட்டிக்கு 1 ஏக்கர் நிலம் தனமாக வழங்கினார் .
உலகப்பம்பாளையம் முத்துக்குமாரசுவாமி கோவிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்து வைத்தவர். கோவிலை விரிவுபடுத்த இடம் தானமாக வழங்கியவர்.
செங்குந்தர் மற்றும் பிற சமூக ஏழைகள் வீடுகட்ட நிலம் தானமாக வழங்கியவர்.
ஊரில் ஏற்படும் சகலவிதமான பிரச்சனைகளுக்கும் செங்குந்தர் சபை அறவழியில் நியாயம் பேசி பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர்.
செங்குந்தர் பாவடி அமைக்க இடம் தனமாக வழங்கியவர்.
ஐயா அவர்களின் மறைவுக்குப் பிறகு ஊருக்கு மத்தியில் அவரது திருஉடலை அடக்கம் செய்து சமாதி கோயில் அமைத்து ஊர் மக்கள் வழிபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

