செங்குந்த கைக்கோளர் விருத்தங்கள்

0
செங்குந்தர் பெருமை பெற்ற விருத்தம்

நந்தி மகன் அசுமுகா சூரனை ஒருயுகத்திலே

சமர்புரிந்து சங்கரித்தோன்

சரவீரபத்திரனும் ஒருயுகத்திலே

தட்சனை தலையரிந்து தீயிலிட்டோன் கந்தனும் வீரபாகு தேவரும், ஒருயுகத்திலே சூரனை கருவே ரருத் தெறிந்தோன் கரியமால் தூதுவனாம் அனுமானும் ஒருயுகத்திலே இலங்கையை தணல் காட்டி மீண்டுவந்தோன். இந்திரன் வழிவந்த செங்குந்தன் - ஒரு யுகத்திலே வல்லானை எதிரிட்டு வென்றுவந்தோன் ஈசனுட விந்துவகை யாகையால் இவர்களுக்கு எதிரில்லை என்று மறைநூல். செந்தமிழ் கூத்தனும், செங்குந்தரைப் பாடவே, தேவி சரஸ்வதி கண்பார்க்கவும்

தீரக்கமுள்ள மார்க்கண்ட காமாட்சியைப் போலே

கலியுகத்திலும் செழித்து வளர் செங்குந்தமே!


செங்குந்தர் தன்னை எதிர்த்து கம்பம் நட யாரையும் அனுமதியார் என்பதை விளக்கும் விருத்தம்

காரணமதாகவே வீராணக்குளத்திலே - வல்லான்

கம்பமது கொண்டு நெட்டி

கண்களுக் கெத்தாத உயரத்திலே கோட்டையும் கட்டி அதன் மேலிருக்க அப்போ... சேரன், சோழன், பாண்டியன் மூவராஜாக்களும் அவனை ஜெயிக்க வழியறியா மலேயிருக்க காஞ்சி மாநகர்தனில் வீரசெங்குந்த முதலிமகன், நான் வெல்கிறேன் என்று சொல்லி... எதிர்கம்பம் நட்டலானான். அங்கே... ஏரிக்கரை தன்னிலே இருவப் பற்றியே ஏறிநில்லும் தெப்பம் கட்டி அரை நொடியில் கம்பத்தடியில் வந்தான்! அங்கே மூவரைப்பற்றியே முகவரி தெரியலானான் அங்கே! மூயுகம் கண்டதொரு காளியங்கிருக்க அவளை மூவது வரம் கேட்கவே... அப்போ புகழ் பத்ரகாளியை கையினால் பிடித்துமே செந்தமிழ்க்கருள்மாரி செய்யலானான் அப்போ ... வல்லானை பிடித்துமே அவனுடன், வாள்போர், மல்போர்! வில்போர் முதலான போர்களிலும் வென்று .. அவன் கழுத்திலே வாள்வைத்து அறுத்தபோது வல்லாளன் தேவியாம் அல்லாகுழலி அதுகண்டு நடுங்கியே... அண்ணா மாங்கல்யப் பிச்சையாய் மடிப்பிச்சை தாருமென்று கெஞ்சியழுகவே மனமிறங்கி... கொண்டாட அவனுறவு கொல்லாமல் அவன் உயிரை கொற்றமும் குலையாமலே - சுற்றமும் கலையாமலே சோழர் முடிகொண்ட அரசன்முன்னே நின்ற செங்குந்தருக்கு நிகரில்லையே 

செங்குந்தர் குலோத்துங்க மாமன்னரிடம்

விருது பெற்ற விருத்தம்

குற்றமில்லாமலே குலோத்துங்க சோழனின்

கொடிவிருது பெற்ற பெரியோர்!

கோபாவேசத்துடன் குமரதுணையாய் வந்து தேவர்களை மீட்ட பெரியோர்! விரைய மில்லாமலே வீரபாண்டியனுக்கு முன்னாளிலே! வியாக்யானம் தந்த பெரியோர்! விருது புடைசூழவே சங்கநாதத்துடன், வீதிவலம் வந்த பெரியோர்! தேவியின் கையிலே குந்தாயுதம் பெற்று செங்குந்தரான பெரியோர்! முப்பெரும் படையிலும் முதலனியில் சென்று முதலியாரான பெரியோர்!

கொள்கை பலமாகவே குமரேசப் பெருமானின்

கொடிவிருது பெற்ற பெரியோர்!

கூத்த ரசனானவன் கொற்றவை பீடத்தில்

குடிகொண்ட செங்குந்தமே!


பண்டை காலத்தில் செங்குந்தர் புகழ் சேர்த்த விருத்தம்
பூலோக கைலாச மைசூர் தானாவதி
புனித சீரங்க பட்டணம்
புகழிலா ரிதிசாலி தலையாய் மதிக்கின்ற
புகழும் அப்பாச்சிராயர்
நன்று நன்றே புகழ!
மேலான வெங்கிட்ட ராயருட காரணிக்கு மெதுவாய் புகழ் சோழனும் மெய்ஞான தேரின் மேலேறியே விதியில் பவனி வந்து நாலா புரத்திலும் நம்ம செங்குந்தமென்று நல்ல பரனேறிய வீரசெங்குந்தமாய் நாகலோகத்திலேறி..... குலவையிட்டுக் கொண்டு புறங்கையினால் ஆயுதமெடுத்து கல்லினால் அணியிட்ட தேரின்மேலேறியே இடசாரி வலசாரி வந்து அம்மன், சத்தமிடும் சேகண்டி வீரப்புலிக்கொடி அரசிலைப்பாவாடையும்
நீர்பெற்ற காலத்தில் எங்களுக்கோர் சோதனை வருவதுண்டோ
லட்சிய அண்ணாமலை முத்துகுமாரனே
கனக லட்சுமி மார்பனே!


வீரமகன் அலகு குத்தி வருவதை அம்மன் மக்களோடு
வீதியில் வந்து காணும் ஸ்ரீக விருத்தம்
வீரசூரமாரி பரமேஸ்வரி
மெஞ்ஞான கொண்டத்து அழகாபுரி
உமதுடைய திருநாளிலே எமையுமது கடலாடி
வருகிறோம் வருகிறோம் என்று சொல்லி
கூடிய ஜனத்துடன் கொண்டத்து மாகாளி
கொடுத்ததொரு மாலை வாங்கி
ஆரவாரத்துடன் கோர கம்பீரமாய்
ஆக்கிரமாய் தூக்கியுடலை
ஆதியின் முதுகிலே கொக்கிகளை ஏறிட்டு
அண்டஅதரத்திலே நின்று
வீரபாகு தேவரும் சுடலாடி வருகிறானென்று அம்மன்
வீதியிலே பவனிவந்து
மேதைப்பரமேஸ்வரி ஆலயம் பதிவளரும்
வீசிவரும் பஞ்சவர்ணம்
கோதையம்பதிவளரும் செங்குந்த முதலிமார்
கொண்டாடி வந்த விருது


ஒட்டக்கூதருக்கு  செங்குந்த கைக்கோளர்கள் சிரசாசனம் செய்து கொடுத்த விருத்தம்

குடிவரவு சீர் கொண்ட அண்ட பகிரண்டமும்
சொற்சிறை படைத்த பெரியோர்
சூரபத்மனையும் வல்லானையும் வென்று
பொற்குவை பெற்ற பெரியோர்
பழயகுலச் செயல் காமாட்சியம்மனின்
பாதத்தில் வந்த பெரியோர்
பாவலருக்கே சிரசு சிம்மாதனமாக
பண்போடு கொடுத்த பெரியோர்
பழதமிழ் புலவருக்கு கலிதீரவே செய்ணம்
மழைபோல் செரிந்த பெரியோர்
மாநிலம் தன்னிலே அபிமானங்களைக்காக்க
வெரு வலிமையது பெற்ற பெரியோர்
முடிபெற்ற தவரத்ன கிரீடம் பொருத்தவே
முருகதுணையான பெரியோர்
முத்தமிழ் துலங்கி வரும் மூவேந்தர் நாட்டிலே
முனைவீர செங்குத்தமே!


h
அருணகிரிநாத செங்குந்தர் விருத்தம் 
கார்முகில் வண்ணனுங் கமலமலர் வாசனுங்
காணவரி தாகிநின்று
கல்லால மர்ந்தவன் கருணைபெறு மாதர்பால் 
கந்தவேட் டுணைவராகச்
சூர்தனை யழிக்கவே தோன்றிமுசு மாமுகன் 
தூண்டாப் படைத்துணைவராய்ச்
சோணாடு மேவி தரு வானாமொண்டநவ 
சோர்விலாசெங் குந்தர் மரபில்
சீர்பரவு திலகமாய்த் திருவருணையம்பதியில் 
சிவனருளி னாலுதித்துத் 
தென்கடல் கடந்துமுரு கக்கடல் படிந்துலகு
செந்நெனற் பயிர் தழைக்க 
வார்குவடு தொறுநின்று வான்திருப்புகழ்மாரி 
வருடித்த அருணகிரிமா
வள்ளன் மேகத்தினது வண்டிருப்புகழ்பாடி 
வனசமா மலர்சூடுவாம்.


சேவூர் சித்தர் முத்துக்குமரர் செங்குந்தர்‌ விருத்தம்‌ -

பூலோக தேவேந்திரன்‌ மைசூர்‌ குலாதிபதி புனித சீரங்கபட்டனம்‌ போரில்‌ விடாத சுவாமி தளவாய்‌ மதிக்கவரும்‌ புகழும்‌ அப்பாச்சி ராயரும்‌ மேலான வெங்கிட்டராயரும்‌ அவுதவுது எனப்புகழவே வட்டமிகு தேசிகர்‌ மாவுத்தரு கண்டு மகிழ

வாய்பாண தவளைமலை வேலனும்‌ வேலேந்தி மயிலேறி அருகில்‌ வந்து நிற்க வீர செங்குந்தரும்‌ நாலாவகைப்‌ பேரும்‌ நன்று நன்று எனப்புகழ சேவூரில்‌ நல்ல பரண்‌ ஏறியே குலவையிட்டுக்‌ கொண்டு நாகலோகத்தில்‌ ஏறியே சீரா குபேர அண்ணாமலைமைந்தன்‌ செல்வ முத்துக்குமரன்‌ செங்கீரையாடியருளே சித்திரமன்மதரூப முத்துக்குமார செங்கீரையாடியருளே!


சேவூர் சித்தர் முத்துக்குமரர்‌ செங்குந்தர் நவகண்டம்‌ தந்தகாலம்‌

நானிலம்‌ தன்னிலே கலியுக சகாப்தம்‌ நாலாயிரத்து எண்ணூற்று நாற்பத்திரண்டன்‌ மேல்‌ வந்த துந்துபி வருசம்‌ நல்ல மார்கழித்‌ திங்களில்‌ ஆன முன்றாம்‌ தேதி சுக்கிலபட்சமும்‌ , அதி கீர்த்தியுடன்‌ அன்பான புனர்பூச நட்சத்திரமும்‌ அழகு பெறும்‌ சுபதினத்தில்‌ வானவர்கள்‌ சிறை மீட்க கந்தர்‌ துணையாம்‌ வீரவாகு முதலான ஒன்பது பேரும்‌ வலியழியச்‌ சூரரை வென்று கச்சியில்‌ அன்னாமலை மைந்தன்‌ செல்வமுத்துக்‌ குமரன்‌ செய்ய பூம்பரணேறிற்‌ தீரமாய்க்‌ கழுத்தவருதான்‌ பாய்ச்சி சிவலோகம்‌ ஏகினாரே (காலம்கி. பி, 1141) 

பூமேவு செங்கடம்பு பெறுமணி மார்பணை புத்தேழ்‌ கணங்கள்‌ சூழ மயிலேறி உலகமே வலம்வந்த போதனை குருநாதனை, காமேவு சக்திமங்கையின்மேவு முரகளனை கந்தனை சம்பந்தனைக்‌ ககனமுகடனவு வனர்தவளமலை வேலனை காங்கேயனை யாம்‌ பணிவோம்‌

மதமேவு கச்சிவரும்‌ காமாட்சியம்மன்‌ முன்‌ செய்ய கருமாரி பாய்ந்த செங்குத்த குலதிலகனான அண்ணாமலை மைந்தன்‌ செல்வ முத்துக்குமரன்‌ மதினுலவு சோலை சேர்‌ சேவை நகர்நன்னில்‌ செய்ய பரணேறி தீரமாய்க ! கழுத்தலகு பாய்ச்சிச்‌ சிவலோகம்‌ ஏகினாரே











60 அடி செய்யுள் செங்குந்தர் விருத்தம் 



சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் விருத்தம் 



Post a Comment

0Comments
Post a Comment (0)