உத்திரமேரூர் துரைசாமி முதலியார்

0

 


தொண்டை நாட்டுக் காஞ்சி வட்டத்திலுள்ளது உத்தர மேரூ ரென்பது. அது சரித்திர சம்பந்தமானதொரு புராதன நகரம். சர்வலோக சரண்யரான ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமானார் அங்கே திருக்கோயில் கொண்டு விளங்குகிறார். அப்பெருமானா ரின் திருவடிப் பத்தியில் அவ்வூரா மனைவருக் கிளைத் திருப்பார். அவர்களுள் ஒருவராய் விளங்கியவர் திருவாளர் வ. மு. துரைசாமி முதவி யாரவர்கள். அவ்வூர்ச் செங்குந்தப் பிள்ளையார் கோவில் தெருவில் சென்ற 42 ஆண்டுகளாகத் தேவார பக்தஜன சபையொன்று நடைபெற்று வருகிறது, செங்குந்த குல திலகராகிய அம்முதலி யாரவர்கள் தம்மினத்துப் பல நண்பர்களைத் துணைக்கொண்டு அதனை நிறுவினார்கள். அச்சபையின் உட்பகுதியாகச் சைவசித் தாந்த சபையொன்றும் அவர்கள் முயற்சியால் தோன்றி ஏறக் குறைய 15-ஆண்டுகள் சிவபணி செய்துவந்தது. ஆண்டுவிழாக் களிலும், பிற காலங்களிலும் தமிழ் நாட்டுச் சைவப் பெரியார் அங்குச் சென்று செய்த சைவப்பிரசாரங்கள் பல. அம்முதலியா ரவர்கள் அவ்வளவில் நிற்கவில்லை. செங்கற்பட்டு ஜில்லா போர் டிலும், வேறு பிற பொது நிலயங்களிலும் அவர்கள் அங்கத்தின ராயிருந்து மக்களுக்குப் பலபடியாலும் பணி செய்துள்ளார்கள். கல்வி. செல்வம், நன்மக்கள் முதலிய சிறப்புக்களெல்லாம் நிரம் பப் பெற்ற அவர்களுக்கு ஜவுளி வியாபாரம், பலசரக்கு வியா பாரம் என்னுமிவைகள் பொருளீட்டுந் துறைகளாகும். அவர் கள் தம் 62-ஆம் வயதிற் சிவபத மெய்தினார்கள்.


அவர்களின் நன்மக்கள் இப்போது வாழ்ந்து வருகின்றார் கள். அவர்களுள் திருவாளர் இராஜரத்தின முதலியா ரென்பவர் ஒருவர். 'மகனறிவு தந்தை யறிவு' என்னும் உண் மையை இவர்களிடங் காணலாம். தந்தையார் செய்துபோந்த ஜவுளி வர்த்தகம் இவர்களால் நடந்து வருகிறது தேவார பக்த ஜன சபை தொடர்ந்து சிறந்து நடந்து வருவதற்கு இவர்களின் ஆர்வமே மூலமாகும், தேவாராதி திருமுறைகளை உள்ளங் கனிய இனிய குரலில் இசை ஞானத்தோடு பண்ணடைவு சிதையாமற் பொருள் விளங்கப் பாடித் தாம் இன்புறுவதோடு கேட்போரை யும் இன்புறுத்துவதில் இவர்கள் மிக வல்லவர். 'தேவார திருப் அநேகர். புகழ் இசைமணி'யென இவர்களைச் சிறப்பிப்பார்

ஸ்ரீ முருகப்பெருமானாரிடம் பக்தி மிக்க இவர்கள் அப்பெருமா னார்க்கு அவ்வப்போது செய்துவருங் கைங்கரியம் அளவிடற் கரியது. வைதிக சைவ வளர்ச்சியில் இவர்களுக்குள்ள ஆர்வமும் அப்படிப்பட்டதே


இத்தகைய இவர்கள் எனக்குச் சிறந்த நண்பராகக் கிடைத்தார்கள். என்னிட மிருந்த இந்நூற் கையெழுத்துப் பிர தியை இவர்கள் காண நேர்ந்தது. அதனை முற்றிலும் படித்துப் பார்த்துத்தாமே பொருட்செலவுசெய்து அச்சிடப்போவதாகக்கூறி இவர்கள் என்னிடமிருந்து வாங்கிச்சென்று அச்சிட்டு உபகரித் தார்கள். சிவபணியில் இவர்களுக்குள்ள பேரார்வத்துக்கும் பேரூக்கத்துக்கும் இஃதொரு சான்றாதல் காண்க.


தனம் படைத்த புண்ணியவான்கள் பலரைக் கொண்டது இச் சைவ வுலகம் அவர்கள் தம் பணத்தால் இன்னின்ன பணி களை இன்னின்ன முறையிற் செய்ய வேண்டுமென்பதை யறியற் பாலார். அவர்க்கு முன்மா திரியா யிருந்து அவற்றைச் செய்து காட்டிவருகிற சீலர் இம்முதலியாரவர்களென்று கூறுவது மிகை யாகாது. இவர்களுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி உரிய தாகுக. ஸ்ரீ கஜவல்லி சமேத ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமானார் இவர்களுக்கும் இவர்கள் குடும்பத்தார்க்கும் எல்லா நலன்களை யுந் தந்தருளும்வண்ணம் அவர் திருவடித் தாமரைகளை நான் மன மொழி மெய்களால் இறைஞ்சி வேண்டிக்கொள்கிறேன்.


இந்நூலின் பதிப்பு எனக்கே யுரியது.





Post a Comment

0Comments
Post a Comment (0)