சோழநாட்டில் கரிகால்சோழன் நீதியுடன் ஆட்சிபுரியும்போது ஒருநாள்
அவன் மகன் தெருவில் தேர் உருட்டிச் சென்றான். ஒரு பசுவின்
கன்றின்மேல் தேர்ச்சக்கரம் ஏறக் கன்று அங்கேயே இறந்தது. கரிகாலன்
அதற்குத் தண்டனையாகத் தன் மகன் மீது தேர்க்காலைச் செலுத்திக்
கொன்றான். இக்கொலையால் கரிகாலனுக்குப் “பித்தவெறி' பிடித்தது.
அதைப்போக்கத் குறத்தியைக் குறி கேட்கின்றனர். காஞ்சி காமாட்சி
குறத்தியாக வந்து குறி சொல்லுகிறாள். கொங்கு நாட்டில் மக்களைக்
குடியேற்றி ஊர் உண்டாக்கி, ஆலயங்களைக் கட்டித் திருப்பணி செய்து
கொடை அளித்தால் பித்தவெறி நீங்கும் என்று குறத்தி குறி கூறுகிறாள்.
அதன்படி சமயமுதலி, கஸ்தூரி ரங்கப்ப செட்டி, வேளாளரில்
சடையப்பன் ஆகியோர் அடங்கிய பரிவாரத்துடன் கரிகால் சோழன்
கொங்கு நாட்டில் 36 பெரிய ஆலயங்களையும், 360 சிறிய
ஆலயங்களையும், 32 அணைகளையும், கட்டித் திருப்பணி செய்தவுடன்
பித்தவெறி நீங்கி அரசன் செங்கோல் ஆட்சி புரிந்தான் என்ற வரலாற்றைக்
கூறுவதே "சோழன் பூர்வ பட்டயம்" என்னும் நூல்.
சென்னையில் உள்ள தமிழக அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் வெளியீடாக 1950 ஆம் ஆண்டு கோவைகிழார் சி.எம்.இராமச்சந்திரஞ்
செட்டியார் அவர்கள் அந்நூலை வெளியிட்டார்கள்.
அந்நூலில் உள்ள செங்குந்தர்களின் மிகப் பெரிய சிறப்புப் பங்கு இங்கு தொகுத்தளிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் சமய முதலியே கொங்குக் குடியேற்றத்தில் மிகவும் முக்கியம் பெறுகிறார்.
கைக்கோளரின் முன்னோர் கச்சிவீரன்
காஞ்சிபுரத்தின் பழம்பெருமையைக் கல்வெட்டு மூலம் மூவேந்தருக்கு அறிவித்தவன் கைக்கோளர் குலக் கச்சிவீரன். இதனைச் சோழன் பூர்வபட்டயம் பின்வருமாறு கூறுகிறது.
"காஞ்சித் தலம் முத்தலத்துக்கும் சமத்துவம். காஞ்சித்தலம் பூருலீகமும் இதில் உட்பட்ட அன்பத்தாறு தேச புவனத்தில் கரை பூரூவீகமும் யாதொரு பூருவீகமும் சுப்பிரமணிய தேவர் அருள்படியால் நந்தி கோத்திரம் வீரவாகு தேவ வங்கிசம் கைக்கோளரில் லட்சம்வலி வீரரில் முன்னோனாகிய கச்சிவீரன் என்றும், அந்தக் கச்சிவீர வங்கிசத்தாராகிய கைக்கோளரில் கச்சிவீர காமாட்சிராயன் தன்னால் தெரியவரும். இந்தத் தலம் பூருவீகம். இதில் உட்பட்ட அன்பத்தாறு புவனத்தின் பூருவீகமும் மற்றும் எந்தப் பூரூவீகமும் அவரால் தெரிய அறியலாம் என்று கச்சி
ஏகாம்பரர் மூணு ஆவுடையில் கல்ச் சாசனம் போட்டுப் பின்னும்
இந்தக் காஞ்சித் தலத்தைக் கண்ணில் கண்டால் வினை
. தீருமென்றும், கம்பா நதியில் தீர்த்தமாடி கச்சி ஏகாம்பரரையும்,
காமாட்சியம்மனையும் தரிசித்தால் பஞ்சமாபாதகமும், தீராத
வல்வினையும், நவதோஷமும் தீரும் என்றும் கல்ச் சாசனம் போட்டு
இருந்தது.
"கச்சிவீரன் மனையாள் பழமுதிர் சோலையங்கிரியம்மாள்
மகன் கச்சிமுத்து வீரப்பன்
கச்சிமுத்து வீரப்பன் மனையாள் வையாபுரியம்மாள்
கச்சிவீரன் மகன் இளையவன் கச்சிக் கச்சாலையப்பன்
கச்சிக் கச்சாலையப்பன் மனையாள் பழனாபுரியம்மாள்"
மேற்கண்டவர்கள் மூவேந்தருக்கும் பல வழிகளில் துணைபுரி
கின்றனர். பல தலைமுறை சென்றபின் கரிகால் சோழன் நாளில்
சமயமுதலி, கஸ்தூரிரங்கப்ப செட்டி, வேளாளரில் வெண்ணை நல்லூர்ச்
சடையன் மூவரும் சோழ அரசனுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
சமயமுதலி மேற்கண்ட கச்சி வீரன் வழியில் வந்தவர். அப்போது கொங்கு
தாராபுர நகரில் சங்கரநாத சேரன் மகன் சேரமான் பெருமாள் ஆட்சி
செய்கிறார். அவர் தோற்றத்தைச் சோழன் பூர்வ பட்டயம் பின்வருமாறு
கூறுகிறது.
"காஞ்சிபுர நகரில் கச்சி வீரமுத்து காமாக்ஷிராய சிரச்சிங்காதன
கருத்தராகிய சமைய முதலிப் பட்டம் முடிவில் நாள் செனனம்.
அவன் மகன் கச்சிவீர வெங்கடாசல முதலிக்குப் பட்டமான நாள்
கலியுக சகாத்தம் மூவாயிரத் தைந்நூற்று முப்பத்தொன்பதுக்குமேல்
செல்லாநின்ற உதிரோத்காரி வருசம் வைகாசி மாதம் 5 தேதி
சுக்கிரவாரமும் பஞ்சமியும் பெற்ற நாளில் காஞ்சிபுர நகரில் கச்சிவீர
வெங்கடாசல முதலிக்குப் பட்டமாகியபின் அவர்க்குட்பட்ட பேர்
கச்சிவீரகாமாக்ஷிராய சிரச்சிங்காதன கருத்தராகிய சமைய
முதலியென்று பேராகியவரும் முன்னடந்தபடியாய் ஐம்பத்தாறு
தேச புவனங்களில் உட்பட்ட அறு சமயமும் விசாரித்து நடந்து
வரும்போது அந்நாளில் அவர்க்குட்பட்ட காரியப்பேர் நடந்து
வருவதற்கு விபரங் காண்க.
சாதி சமையப் பட்டம் முதல் நாட்டாண்மைக்குக் கச்சிமுத்து வீர
காமாக்ஷிராயச் சிரச்சிங்காதன கர்த்தராகிய சமைய முதலிக்குச்
சகோதரமாகிய கச்சி கச்சாலையப்பமுதலி என்றும் சாதி சமய தல
விசாரணைக்குக் கச்சிமுத்துவீர காமாக்ஷிராய சிரச்சிங்காதன கர்த்தராகிய சமைய முதலிக்குச்
சகோதரமாகிய கச்சி கச்சாலையப்பமுதலி என்றும் சாதி சமய தல
விசாரணைக்குக் கச்சிமுத்துவீர காமாக்ஷிராய சிரச்சிங்காத கர்த்தராகிய சமையமுதலிக்கும் கச்சிக் கச்சாலையப்ப முதலிக்கும்
மைத்துனராகிய சுந்தரமூர்த்தி முதலி மகன் சூரியமூர்த்தி முதலி
என்றும் சாதி சமையப் பட்டத்துத் தல விசாரணை நாட்டுக்
கர்ணிகத்துக்குக் கச்சிமுத்து வீரக் காமாக்ஷிராயச் சிரச்சிங்காதனக்
கர்த்தராகிய சமைய முதலிக்கும் இவர்கள் சகோதரமாகிய கச்சிக்
கச்சாலையப்ப முதலிக்கும் இவர்களுக்கு மைத்துனராகிய
சூரியமூர்த்தி முதலிக்கும் இவர்கள் மூவருக்கும் மைத்துனன்
அமராபதி பட்டத்துக்கு அதிபனென்றும் கர்ணிகத்துக்குத்
திருவேங்கட முதலி மகன் வடமலையப்ப முதலி இவன் மகன்
அமராபதி முதலி என்றும் சமய சங்கதி விசாரணைக்குக் கச்சிமுத்து
வீர காமாக்ஷிராயச் சிரச்சிங்காதனக் கர்த்தராகிய சமய முதலிக்கும்
இவர்களுக்குச் சகோதரமாகிய கச்சிக் கச்சாலையப்ப முதலிக்கும்
இவர்களிருவருக்கும் மைத்துனராகிய சூரியமூர்த்தி முதலிக்கும்
இவர்கள் மூவருக்கும் மைத்துனராகிய அமராபதி முதலிக்கும்
இவர்கள் நால்வருக்கும் மைத்துனன் சோலையங்கிரி முதலி மகன்
வாரணவாசி முதலியென்றும் சமைய இழந்தாரி திருத்தணி முதலி
மகன் தனுக்கோடி முதலியென்றும் சாதி சமைய நாட்டு விசாரணை
இழந்தாரி னாகபாச சொக்கலிங்கனென்றும் இப்படி நடந்துவரும்
காரியப் பேருடனே கச்சிவீர காமாக்ஷிராய் சிரச்சிங்காதனக்
கருத்தராகிய் சமைய முதலியும் காஞ்சிபுர நகரிலிருந்துகொண்டு
முன்னடக்கும்படியாய்க் கச்சி ஏகாம்பர காமாட்சியம்மன்
திருக்கோயில் ஊழியமும் தாட்சி வறாதபடி விசாரித்துக்கொண்டு
ஆதி காஞ்சிபுரம் மதுரையாதீனம் சமஸ்தானத்துக்குட்பட்ட
ஐம்பத்தாறு தேச புவனங்களில் கோவிலூழியமும் சமையமும்
விசாரித்து நடந்துவரும்போது"
கரிகால சோழன் தேர்வில் கைக்கோளர்
(கச்சிவீர காமாட்சிராய முதலி, கஸ்தூரி ரங்கப்ப செட்டி, வேளாளர்
சடையப்பன் மூவரும் கரிகாலனைத் தேர்வு செய்து சோழநாடு, தொண்டை
மண்டலத்துக்கு அரசன் ஆக்குதல்)
"அந்நாளில் அந்தச் சோழ மண்டலம் தொண்டை மண்டலமாகிய
ராச்சியத்துக்கு அதிகாரக் கருத்தர் இல்லாமல் ராச்சியம் திக்கற்று மெத்த அவதிப்பட்டிருக்கும்போது அவ்விடத்திலுள்ள காரியத்தார் திருவாரூரில் கூட்டம் கூடியிருந்துகொண்டு வெண்ணை நல்லூர் சடையப்பனுக்கு வர ஓலை விட்டார்கள். சடையப்பனும் காரியத்தார்
விட்ட ஓலைப்படி திருவாரூருக்கு வந்து காரியத்தாரைக் கண்டு கூடி
ஆலோசித்துக் கொண்டு சடையப்பனாகிரவன் காரியத்தாருமாக காஞ்சிபுரத்துக் கச்சிவீர காமாட்சிராய முதலிக்கும் கவரை
வழிக்கியான கஸ்தூரிரங்கப்ப செட்டிக்கும் வரவோலை விட்டார்கள்.
விட்ட வோலைப்படி கச்சிவீரராய முதலியும் கஸ்தூரிரங்கப்ப
செட்டியும் அவர்களுக்குட்பட்ட காரியத்தாரும் தானுமாகத்
திருவாரூருக்கு வந்து சடையப்பனையும் காரியத்தாரையும் கண்டு
கூடி ஆலோசித்துக் கொண்டு கச்சிவீர காமாட்சிராய முதலியும்
சடையப்பனும் கஸ்தூரி ரங்கப்ப செட்டியும் அவர்களுக்குட்பட்ட
காரியத்தாருமாகத் திருவாரூர் நகர் கடந்து காசிக்குப் போனார்கள்.
காசி விசாலாட்சிக்கு ஆராதனை முடித்து ஆராதனை பூசை முகத்தில்
நின்றவள் கச்சிவீர வெங்கடாசல முதலி மனையாள்
அருணகிரியம்மாள் என்று அறியவும், அந்த ஆராதனைப் பூசை
முகாந்திரத்தினாலே விசாலாட்சி பாதாள தளவிசை இருக்கின்ற
வெள்ளை யானையைச் சமையமுதலி யிப்பால் தருவித்துக்
கொண்டு பாதாள தளவிசை மூடி முத்தரித்துப் போட்டு விசாலாக்ஷி
தேவிக்கு ஆராதனை முடித்துத் தரிசித்துக் கொண்டு கச்சிவீர
காமாக்ஷிராய முதலியும் சடையப்பனும் கஸ்தூரிரங்கப்ப செட்டியும்
அவர்களுக்குட்பட்ட காரியத்தாருமாகக் காசிநகர் கடந்து
திருவாரூருக்கு வந்தார்கள்.
தியாகராயருக்கு அபிஷேகம் தூப தீபாராதனை முடிப்பித்துவித்து
எல்லோரும் தியாகராசரைத் தரிசித்து அர்ச்சித்துக் கொண்ட பின்பு
சமய முதலியும் தியாகராயர் கழுத்தில் ஐந்தருவின் திருமாலையும்
வாங்கித் தியாகராசர் பாத திருமஞ்சனம் பொன்செம்பில் நிரப்பி
ஆதிமுன் காசித் தலத்திலிருந்து வந்த பட்டத்து வெள்ளை
யானையை வரவழைத்து வெள்ளை யானையின் துதிக்கையில்
திருமஞ்சனமும் திருமாலையும் கொடுத்து அந்த யானையைப்
பார்த்து "நீ யாரை வைத்தாலும் அவனே எங்களுக்குத் துரை" என்று
சமைய முதலியும் சடையப்பனும் கஸ்தூரி ரங்கப்ப செட்டியும்
அவர்களுக்குட்பட்ட காரியத்தாரும் மற்றும் அரமனை
வாசற்காரியத்தாரும் தொண்டை மண்டலம் சோழமண்டலம்
குடிவரிசையும் மற்றுமுள்ள சனங்களும் சகல சருவ சனங்களும்
அந்த யானைக்கு அறிக்கை செய்து நமஸ்காரம் பண்ணித் துரையை
அழைத்துவர அனுப்பினார்கள்."
யானை கரிகாலனைத் தேர்ந்தெடுத்துத் திருவாரூக்கு அழைத்து
வந்தது. சேரர் கொங்குப்பாடியில் சிங்கம்மாள் என்ற சோழ அரசிக்குப்
பிறந்த பிள்ளையை யானை தேர்ந்தெடுத்து மாலையிட்டு அழைத்து
வந்தது.
பாண்டியர், சேரரை அழைத்தல்
"கச்சிவீர காமாட்சிராய முதலியும், சடையப்பனும் கஸ்தூரிரங்கப்ப
செட்டியும் மற்றுமுள்ளபேருங் கூடி ஆலோசித்துக் கொண்டு
யானை கொண்டுவந்த பிள்ளைக்கு அதிகாரம் முடி சூட்டும்போது
முடிமன்னரில்லாமல் நாம் சூட்டுவது நமக்கு யோக்கியமல்ல
வென்று எல்லோரும் கூடி ஆலோசித்துக் கொண்டு மீனாட்சி
செளந்தர பாண்டியற்கும், சேரமான் பெருமாள் என்னும் சேரனுக்கும்
வரவோலை யெழுதி அனுப்பினார்கள்."
கச்சிவீர காமாக்ஷீராய முதலீயாகிய சமையமுதலி. கரிகாலனுக்கு
முடிசூட்டல்
"மீனாக்ஷி செளந்திர பாண்டியனும் சேரமான் பெருமாளென்றும்
சேரனும் சமையமுதலியை யழைத்துத் தங்கள் பக்கத்தில் இருத்திக்
கொண்டு நீ தென் மதுரை மீனாக்ஷிக் கனக சபையில் வீரசோழனுக்கு
முடிசூட்டி மனுநீதிச் சோழனென்று பேருங் கொடுத்து இந்த இராச்சியத்தை நீதி சோழனைக் கொண்டு நீதிநிலைமையாய் நடத்தி வைத்து இரசுஷித்தாய். இந்நாளில் இந்த ராச்சியத்திலதிகாரம் திக்கெட்டும் முன் துவாபரயுகத்தில் தன்மர் வனவாசம் போக,
துரியோதனனுக்குள்ளாகி 13 வருஷம் ராச்சியம் மெத்த
அவதிப்பட்டு மெலிந்து முன்னிருந்தாற் போல இந்நாளில்
உரையூர்ச் சோழன் மண்மாரியிலிறந்துபோக, அவர் பெண்சாதி
கர்ப்பிணியாகி வனவாசம் போக 13 வருஷமிந்த ராச்சியமும்
அவதிப்பட்டிருக்க இருந்தபடி சர்வத்திர பேரும் கூடி
உம்மையழைத்துவிட, அவர்கள் அழைத்தபடி நீர்வந்து
அவர்களைக்கண்டு எல்லோரும் கூடியாலோசித்துக் கொண்டு
திருவாலூருக்கு வந்து திருவாலூரில் தியாகராயர் கழுத்தில்
திருமாலையும் திருமஞ்சனமும் வாங்கி அந்த வெள்ளை
யானையின் கையிற் கொடுத்து அந்த வெள்ளை யானையின்
முகாந்திரத்தினாலே அந்த ராசாவின் குமாரனையும் தருவித்து
வைத்துக்கொண்டு எங்களுக்கு எழுதியனுப்பித்து எங்களையும்
வரவழைத்தியிருத்திக்கொண்டு நடந்த பூருவீக வரலாறெல்லாம்
சொன்னது சரியே, அன்றைக்குத் தென்மதுரை மீனாக்ஷி கனக
சபையில் வீர சோழனுக்கு முடி சூட்டி நீதி சோழனென்று பேரும்
கொடுத்து எங்கள் வமிசத்தவரை யாவர்க்கும் தெரிய மும்முடியாய்த்
தலை சேர்த்து நீதிச் சோழனைக் கொண்டும், நீதி பாண்டியனைக்
கொண்டும், நீதி சேரனைக் கொண்டும் இப்படி மும்முடி மன்னரைக்
கொண்டு இப்புவனத்தை நீதி நிலைமையாய் நடத்தி வைத்து இரட்சித்தாய்.
இந்நாளிலிந்தத் தொண்டை மண்டலம் சோழ மண்டலமாகிய
இராச்சியம் 13 வருஷம் திக்கற்று மெத்தவதிப் பட்டு
மெலிந்திருக்கிறது. இதற்கு நீராமத்தலம் காசிதளவாசலிருந்து வந்த வெள்ளை யானை முகாந்தரத்தில் தருவித்தீரல்லவா, அவனுக்கே
நீர் அதிகாரம் முடிசூட்ட வேணும்.
சூட்டிவிட்டாலவனை நாம் முன்னிருந்த மனுநீதிச்சோழனாகவும்
எங்கள் வம்சத்தில் நீதிபாண்டியனாகவும் நீதிசேரனாகவும்
கண்டுகொள்ளுகிறோமென்று சொல்லி மீனாக்ஷி செளந்திர
பாண்டியனும், சேரமாம் பெருமாளென்னும் சேரனும் சமைய
முதலிக்குப் பாக்கு வெற்றிலை கொடுத்துக் கரிகாலச் சோழனுக்கு
அதிகாரம் முடிசூட்டக் கட்டுச்செய்தார்கள். செய்தபடி சமைய
முதலியும் முடி மன்னரிடத்தில் உடுகறை பாக்கு வெற்றிலையும்
கரிகாலச் சோழனுக்கு அதிகார முடி சூட்டுவதற்கு அப்பனையும்
வாங்கிக்கொண்டு சடையப்பனிடத்திற்கு வந்து கத்தூரிரங்கப்பச்
செட்டியார் அழைக்கவிட்டு இம்மூவருங்கூடி யாலோசித்துக்
கொண்டு மூவரும் மற்றுமுள்ள பேருமாகக் கூடி
முடிமன்னரிடத்திற்குப் போய் முடிமன்னரிடத்தில் கரிகால
சோழனுக்கு வேளாளர்பாடியில் விவாகத்திற்கு அப்பனை
வாங்கிக்கொண்டு சடையப்பனும் சமைய முதலியும் கத்தூரி
ரங்கப்பச் செட்டியும் மற்றுமுள்ள பேருமாகத் தொண்டைமண்டலம்
சோழ மண்டலத்திலுட்பட்ட வேளாளர்பாடியில் கலியானமாகாத
பெண்களெல்லாம் தருவித்து நல்லாமையாய் சற்குணமுள்ளதாய்
ராசயோக்யதைக்கும் தாயாய் இலட்சுமியைப்போல் இருக்கப்பட்ட
ஒரு பெண் தெரிந்து பார்த்து நிறுத்திக் கொண்டு மற்ற
பெண்களெல்லாம் அவரவர் தாவுதலங்களுக்கு அனுப்பிவித்துப்
போட்டு அந்தப் பெண்ணைப் பெற்ற தாயார் தகப்பனை சம்மதம்
பண்ணி பரியம் நிகுதி செய்து அளவற்ற பவுசுகள் கொடுத்து,
அவர்கள் மனது சந்தோஷப்பட்டுக்கொண்டு அந்தப் பெண்ணையும்
பெண்ணைப் பெற்ற தாய் தகப்பனையும் வரவழைத்துக்கொண்டு
சடையப்பனும் சமைய முதலியும் கத்தூரி ரங்கப்பச் செட்டியும்
மூவருமாக முடி மன்னரிடத்தில் விட்டார்கள்.
முடி மன்னர் பார்த்து அந்தப் பெண்ணைக் கண்டு நம்முடைய
மனுநீதிச் சோழன்அரமணைக்கு ஏற்ற பெண்ணே சரியென்று
அவர்கள் ஒத்துக்கொண்டு கரிகாலச்சோழனுக்குப் பாரியையும்
எங்களுக்குச் சகோதரரும் சடையப்பனுக்குப் பிள்ளையும்
மற்றுமுள்ள பேர்க்கெல்லாம் தாயுமே சரியென்று மீனாக்ஷி செளந்திர பாண்டியரும் சேரமான்பெருமாளென்னும் சேரனும் சந்தோஷப்
பட்டுக்கொண்டு அந்தப் பெண்ணைப் பெற்ற தாய் தகப்பனுக்கும்
சடையப்பனுக்கும் உடுகறை பாக்கு வெற்றிலை கொடுத்து அவர்கள்
மனதைச் சந்தோஷப்படுத்தி சடையப்பனுக்கும் சமைய முதலிக்கும்
கத்தூரிரங்கப்பச் செட்டிக்கும் அந்தப் பெண்ணைக் கரிகாலச்
சோழனுக்கு விவாஹம் முடிப்பிவிக்க கட்டுசெய்தார்கள். செய்தபடி
அவர்கள் அதே முறைக்குச் சம்மதித்துக்கொண்டு அந்தப்
பெண்ணைப் பெற்ற தாய் தகப்பனையும் பெண்ணையும்
கலியாணவிடுதியிலிருத்திக் கலியாண நாள் நேரம் முஹூர்த்தம்
இட்டுக் கரிகாலச் சோழனை மாப்பிள்ளைச் சோடனை முஸ்தீப்புச்
செய்வித்துத் திருவாலூர் வீதி மெறவனை வந்து கலியான
விடுதியில் புகுந்து அந்தப் பெண்ணைக் கரிகாலச் சோழனுக்கு
விவாஹம் நிறைவேற்றுவித்து சமைய முதலியும் சடைப்பனும்
கத்தூரிரங்கப்பச் செட்டியும் சேரன் பாண்டியனுமாக கரிகாலச்
சோழனையும் அவர் மனையாளையும் அழைத்துவந்து திருவாலூர்
தியாகராயர் கோவில் கனகசபை வாசலில் இருந்த வெள்ளையானைமேல் திருமஞ்சனம் ஆட்டிவைத்து ஆடையுடுத்தி
ஆபரணாதி பூட்டி அலங்கரித்து சமைய முதலியும் தியாகராயர்
கழுத்தில் ஐந்தருவின் மாலை வாங்கி கரிகாலச் சோழனுக்கு மோதிரமுங் கையில் கொடுத்துக் கட்டானைப் பரிவந்து எதிர் நிற்க
கனகமனி முடிசூட்டி அவனுக்குப் பட்டாபிஷேகம் முடித்து ராச்சியபாரஞ் செய்ய அதிகாரங்கள் செய்தார். கரிகாலச் சோழனுக்குத்
திருவாலூர் நகரில் பட்டமான நாள் கலியுக சகாத்தம்
மூவாயிரத்தைந்நூற்றிருபத்தேழுக்கு மேல் செல்லாநின்ற கர வருசம்
வைகாசி மாதம் இருபத்தியேழாந் தேதியும் சோம வாரமும் பஞ்சமியும் பெற்ற நாளில் கரிகால சோழனும் காஞ்சிபுரத்துக் கச்சி
வீர காமாட்சிராயர் சிரசிங்காதனக் கருத்தனாகிய சமைய முதலி கையில் அதிகார முத்திரையும் மந்திரவாளும் வாங்கிக் கொண்டு தியாகராயர் பாதத்தில் வைத்து தெரிசித்துக் கொண்டு கரிகாலச் சோழனாகிறவன், சமைய முதலிக்கும் சடையப்பனுக்கும் கத்தூரி ரங்கப்பசெட்டிக்கும் சேரன் பாண்டியனுக்கும் விருந்து விசாரித்து உடுகறை பாக்கு வெற்றிலையும் கொடுத்து சோழமண்டலம் தொண்டைமண்டலத்திற்குட்பட்ட குடி வரிசை சனங்களுக்கும் விருந்து விசாரித்துச் சர்க்கரை வழங்குவித்துப் பச்சைவடம் பாக்கு வெற்றிலை கொடுத்து நிகுதி பண்ணி அவரவர் ஊருக்குப் போகச் சொல்லிக் கட்டுச் செய்வித்து அனுப்புவித்தார்கள்."
பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனைக் கரிகாலன் கொல்லல்
"ஊர்ந்து வந்த தேர்வண்டிக் காலில் கன்றானது சிக்கிச்
செத்தபடியினாலே அந்தக் கன்றை உன் மகன் கொன்றானென்று
அந்தப் பசுவானது உன்னிடத்தில் முறை செய்து தன் கன்றின் பழி
தன் கண்காண உன் கையில் வாங்க வேணுமென்று
உன்னரமனை வாசலில் அந்தப் பசுவானது பாடு கிடப்பதென்று
திருவாரூர் வீதியில் கரிகாலச் சோழன் மகன் சிறு தேர் உருட்டி
வரும்போது கண்டிருந்த காரியக்காரர் சாக்கியாக நின்று நடுச்
சொன்னார். கண்டிருந்த காரியக்காரர் சாக்கி சொல்ல கரிகாலச்
சோழனாகிறவன் கேட்டுத் தன் மகன் பேரில் குற்றமென்று கச்சி வீர
காமாக்ஷிராய சமைய முதலிக்கும் சடையப்பனுக்கும் கத்தூரி
ரங்கப்பச் செட்டிக்கும் தன்னரமனை வாசல் காரியத்தாருக்கும்
மற்றுமுள்ள பேருக்கும் தன் மகன் பேரில் குற்றமென்று
் ஒப்புக்கொடுத்துத் தன் மகனையழைத்து வரச்சொல்லி அவனுக்குத்
திருமஞ்சனமாட்டிவைத்து திருவெண்ணீற்றுக் காப்புமிட்டு அழகிய
நெற்றிக்குச் செந்தூரத் திலகமிட்டு ஆடையுடுத்தி ஆபரணாதிகள்
பூட்டி யலங்கரித்துப் பரிமள களப கஸ்தூரி பூசி பாலசன மிடுவித்து
அந்தச் சிறு தேரையும் அலங்கார முஸ்தீதியாய்ச் சோடிப்பித்து
அந்தத் தேரின் பேரில் கரிகாலச் சோழனாகிறவன் இருந்துகொண்டு
அந்தப் பசுவையும் தேருக்கு ஓட்டிவரச் சொல்லி வீதியில் நிறுத்திக்
கொண்டு திருவாரூர் வீதியில் பலபேரும் பார்த்து நின்று
ஆச்சரியப்பட கச்சிவீர காமாக்ஷிராய முதலிக்கும் கத்தூரி
ரங்கப்பச்செட்டிக்கும் சடையப்பனுக்கும் மற்றுமுள்ள
காரியத்தாருக்கும் கரிகாலச் சோழன் மகனைப் பார்த்து கண்ணீ
ததும்ப கரிகாலச் சோழனாகிறவன் அந்தப் பசுவை வடக்குமுகமாய்
நிறுத்தி தன் மகனைப் பசுவெதிரே தெற்கே தலையாகப் போட்டுத்
தேரை விட்டுத் தன் மகனை ஊர்ந்துகொடுத்து அந்தப் பசுவைக்
கையெடுத்துக் கும்பிட்டு உன் பழி வந்தது காராவே என் தாயே
என்று சொல்லி கரிகாலச் சோழன் அந்தப் பசுவை அனுப்பிவித்தார்"
கரிகாலச் சோழன் பிரமகத்தி நீங்கல்
"தன் மகனைக் கொன்ற குலை பாதகமும் புத்திரபாவமும் புத்திர
சோகமும் பிருமகத்தியாதி தோஷமும் கரிகாலச் சோழனைச் சூழ்ந்தது.
சூழ்ந்து விகாரவிருமத்தி மூடி பயித்திய விகாரங்கொண்டு கண்ட
பேர்களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கதறவும் அடிக்கவும்
வெட்டவும் குத்தவும் அரமனையை விட்டு அர்த்தராத்திரியில் காடு
செடியில் ஓடிப்போகவுமாச்சுது. அப்படி பயித்திய விகாரங்
கொண்டாடினபடி கச்சிவீர காமாக்ஷிராய சமைய முதலியும் கத்தூரி ரங்கப்பச் செட்டியும் சடையப்பனும் மற்றுமுள்ள அரமனைவாசல்
காரியத்தாரும் கரிகாலச் சோழனுக்கு இது என்ன மாயமகிமையென்று
எல்லோருமா ஆலோசித்து இருக்கும்போது கச்சி ஏகாம்பரருக்கு
அறிக்கையாய் கச்சி ஏகாம்பரர் சித்தமிரங்கித் திருமுகம் பார்த்து
காமாக்ஷியையழைத்து கரிகாலச் சோழன் மெத்த அவதிப் படுகிறான்.
இன்னும் சேரகொங்கு நாட்டில் முன்னூற்றுபது சிவாலயம்
பிரதிஷ்டையாகவேணும். அவனுக்கு இடையில் இந்த அவதி
வரலாகாது.
அவனுக்கு வந்த வினையை நாமே பரிகரித்து அவனைத்
தடுத்தடிமை கொள்ளவேணும். அது பிறகு தெரியவருமே. இனி நீ குறத்தி என்னும் சொரூபங் கொண்டுபோய்க் கரிகாலச் சோழனுக்கும்
கைபார்த்துக் கண்ட குறி சொல்லி கரிகாலச் சோழன் விருமத்தியைப்
பரிகரித்து வரவேணுமென்று காமாக்ஷியை யனுப்ப கச்சி ஏகாம்பரர்
அனுப்பியபடி காமாக்ஷியும் ஏகாம்பரரிடத்தில் அனுப்புவித்துக்-
கொண்டு தெய்வக் குறத்தியென்னும் சொரூபங்கொண்டு
குறக்கூடை தலையில் வைத்துப் பொற்பிரப்பன்கோல்
கையிற்பிடித்துத் திருவாரூருக்கு வந்து “கண்ட குறிசொல்வேன்
சொல்வேன்” என்று வீதிதோறும் குறிகூறி கரிகாலச்
சோழனிடத்திற்கு வந்தாள். வந்தவளைச் சடையப்பனும் சமைய முதலியும் கத்தூரி ரங்கப்ப செட்டியும் அரண்மனை வாசல் காரியக்காரரும் குறத்தியம்மையை யழைத்துவந்து
ஆசாரவிரதமாயிருத்திக் கொண்டு குறத்திஅம்மே நீ எங்கள் கரிகாலச் சோழனுக்குக் கை பார்த்துக் கண்ட குறி சொல்லவேண்டுமென்று காரிய வைபோகமாகக் கேட்டார்கள். அவர்கள் கேட்கக் குறத்தியும் அப்படியே குறி சொல்வேனென்று கரிகாலச் சோழனைத் தன் பக்கத்திலழைத்து இருத்திக் கொண்டு விநாயகரை நமஸ்காரம் பண்ணிக்கொண்டு கரிகாலச் சோழனை கைநீட்டச் சொல்லி காமாக்ஷி கைக்குறி பார்த்து இது கரிகாலச் சோழனுக்கு மற்றொரு வியாதியல்ல. மருந்தீடு சத்துரு மாய்கையல்ல. ஒருவர் முறைப்பாடு கிறகப் பகையல்ல. வயப்புக்கடப்பு வனதேவதையள் குறையல்ல. இது புத்திர சோபபாவ விருமத்தியாய் தோஷங் கரிகாலச் சோழனை சூழ்ந்திருக்கிறது. இதற்கு ஒரு மருந்துண்டு. அதனால் தீர்ந்தால் தீர்ந்தது. அது அல்லவென்றால் மற்றொரு மருந்தாலும் தீராது. அது எப்படியென்றால் கரிகாலச் சோழனாகிறவன் சேர கொங்குநாட்டில் கருவூர் முதல்கொண்டு வெள்ளிமலை முட்டங்கடையாக முன்னூற்றறுபது சிவாலயமும் முப்பத்திரண்டனையும் கட்டி
வைத்து முன்னூற்றறுபது சிவாலயத்திற்கு வரிசை மானியங்கள் குறைவற விடுத்து விளக்கஞ் செய்து கட்டிய கோவிலும் மங்காமல்
விட்ட மானியமும் நழுவாமல் என்னாளும் ஒருநாள் போலவே
தானுள்ளவரைக்கும் நடத்தி வாரேனென்று சிவசுப்பிரமணிய
தேவருளப் படியாய் நந்தி கோத்திரம் வீரபாகு தேவர் வம்சம்
கைக்கோளரில் லட்சம் தளவீரர்க்கு முன்னோனாகிய
கச்சிவீரகாமாட்சிராய சிரச்சிங்காசன கர்த்தராகிய சமைய முதலி .
வம்சத்தில் கச்சி வீரவெங்கடாசல முதலி அபயஹஸ்தம் வாங்கிக்
கொண்டு கச்சி ஏகாம்பரர் காமாக்ஷியைக் கூறி பூமி தொட்டுரைத்துக்
கரிகாலச் சோழனுக்கு நெற்றியிலிட்டால் இந்த விருமத்தி தீரும்.
தீர்ந்தால் கரிகாலச் சோழனும் முன் நாம் சொன்ன குறி நழுவாமல்
நடத்தி வரவும் என்று காமாக்ஷி சொல்லவே கரிகாலச் சோழன்
சோழனுக்கு விருமத்தியா தோஷம் அரைவாசி தணிந்தது.
தணிந்தபடிக்கு கச்சிவீர காமாட்சிராயன் வம்சத்தில் வீர செங்கடாசல
முதலியும் காமாக்ஷி குறி சொன்னபடியாய்க் கச்சி ஏகாம்பரர்
காமாக்ஷியை யர்ச்சித்துப் பகவானைக் கைதொழுது பூமி
தொட்டுரைத்து கரிகாலச் சோழனுக்கு நெற்றியிலிட அவனுக்கு
அந்த விறுமத்தி தெளிந்து அமிருத குணமாகி காமாக்ஷியென்னும்
குறத்தியைச் சந்தோஷப்பட்டுக்கொண்டு ஆடையாபரணாதிகள்
கொடுத்து அனுப்பிவைத்தார்."
கரிகால் சோழன் கொங்குநாடு வந்து, சேரமான் பெருமாள்
துணையுடன் 36 ஊர்களில் காடழித்து நாடாக்கி ஊர் உண்டாக்கிக்
கோட்டையும் பேட்டையும் அமைத்தபோது சமய முதலியாரும் உடன்
வந்து 36 ஊர்களிலும் செங்குந்தர்களைக் குடியேற்றினார். அவர்கள் ஊர்
நிர்வாகத்திலும், கோயில் வழிபாட்டிலும் பெரும்பங்கு பெற்றனர்.
கீழ்க்கண்டவாறு அவர்கள் நியமனம் பெற்றதாகச் சோழன் பூர்வபட்டயம்
கூறுகிறது. எல்லா ஊர்த் திருப்பணிகளும் சமய முதலியின் பட்டோலை
ஒழுகின்படியே நடைபெறுகிறது.
36 ஊர்களிலும் கோயிலுக்கு விட்ட மானியத்தில் பத்தில் ஒரு பங்கு
சமய முதலிக்கு அளிக்கப்பட்டது. விட்ட மானியங்கள் பற்றிச் சமய
முதலியே கல்வெட்டு வெட்டுவித்தார்.
1) கரூர்
திருவாடுதண்டிகை சீர்பாத சேவைக்கு கைக்கோளர் நூறு குடிகள்
நியமிக்கப்பட்டனர். நம்பி முதல் திருவலகு வரைக்கும் சரவணமுதலி
என்பவருக்குக் கொத்து செய்யப்பட்டது. கோயில் மாணியம், கணக்குக்குக்
கைக்கோளரில் முத்துமுதலி என்பவரை நியமித்து நிகுதி செய்யப்பட்டது.
2) கொடுமுடி
கொடுமுடி ஆலயத்தில் நம்பி முதல் திருவலகு பணி வரைக்கும்
முதன்மை நாட்டாண்மைக்கு செங்கோட முதலி நியமிக்கப்பட்டார்.
கோயில் மணியம் கணக்குக்கு அத்தப்ப முதலி என்பவர் நியமிக்கப்பட்டார்.
(பின்னாளில் கோபால முதலி என்பவரும் நியமிக்கப்படுகிறார்).
3) வெஞ்சமாங்கூடல்
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளர் நூறு
குடியை வைத்து அந்தக் கைக்கோளரில் நம்பி முதல் திருவலகு வரைக்கும்
செல்லப்ப முதலியையும் கோயில் மணியம் கணக்குக்கு முருகப்ப
முதலியும் நியமிக்கப்பட்டனர் (பின்னாளில் வேங்கிடபதி முதலியும்
நியமிக்கப்படுகிறார்)
4) பவானி
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியச் சேவைக்கு கைக்கோளர் நூறு
குடி வைக்கப்பட்டது. நூறு குடிக்கும் நம்பி முதல் திருவலகு வரைக்கும்
முதன்மை நாட்டாண்மைக்குச் செங்கோட முதலியையும் அந்தக்
கோவிலுக்கும் கோவிலுக்குவிட்ட மானியங்களுக்கும் மணியம்
கணக்குக்கு பழனியப்ப முதலியையும் நியமித்தனர். இவர்களுக்கெல்லாம்
ஓலைப் பட்டயமும் பாக்கு வெற்றிலையும் கொடுக்கப்பட்டது.
(பின்னாளில் நண்ணாவுடைய முதலியும் நியமிக்கப்படுகிறார்).
6) பழனி
பழனி - பழனாபுரி, தென்பழனி, பாலசமுத்திரம் என்று மூன்று பகுதியாக இருந்தது. சிவகிரி (மலை) ஆலயத்திற்கும், திருவாவினன்குடி
(அடிவாரம்) ஆலயத்திற்கும் கொடைகள் கொடுக்கப்பட்டன.
சமயமுதலி திருவாவினன்குடித்தலம், பழனாபுரித்தலம், சிவகிரித்தலம் மூன்றையும் இனங்கண்டு மூன்று ஆலயங்களையும்
ஒருமுகமாகச் சேர்த்து ஆலய ஊழியங்கட்கு நம்பி முதல் திருவலகு வரைக்கும் ஆட்கள் போட்டு திருவலகு, தண்டிகை, சீர்பாத
ஊழியத்திற்குக் கைக்கோளரில் நூறு குடியைப் பழனாபுரி நகரில் வைத்தார்.
நூறு குடிக் கைக்கோளர்க்கும் முதன்மை நாட்டாண்மைக்கு சரவண முதலியும் மூன்று கோயில் மானியக் கணக்கு மானியத்திற்கு வேலப்ப
முதலியும் நியமனம் செய்யப்பட்டனர்.
6) கொண்டறங்கிமலை
பாண்டியனும் சேர, சோழர் போலத் திருப்பனி செய்ய வேண்டுமென்று எண்ணி ஆய்க்குடி, அமரபாண்டி நகரம் கண்டு கொண்டறங்கி மலையில் வேலாயுதர் கோயில் கட்டினான். இடும்பாபுரிக்
குளமும் கட்டி வைத்தார். ஆலய ஊழியத்திற்கு நம்பி முதல் திருவலகு வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குத் திருவம்பலமுதலியை
நியமித்தனர். ஐம்பது குடி கைக்கோளர் நியமிக்கப்பட்டனர். மணியம்
கணக்குக்கு அமராபதி முதலி நியமிக்கப்பட்டார்.
7) பூம்பறை
பன்றிமலைப் பூம்பறையில் வேலாயுதர் கோயில் கட்டப்பட்டது.
ஆலய ஊழியத்திற்கு திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக்
கைக்கோளர் ஐம்பது குடிகள் நியமிக்கப்பட்டனர். ஐம்பது குடிக்கும் நம்பி
முதல் திருவலகு வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குச் சண்முக
முதலியும் கோயிலுக்கும், கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்கிற்கு
முத்துமுதலியும் நியமிக்கப்பட்டனர். (பின்னர் இங்கு வேலப்ப முதலி
என்பவரும் நியமிக்கப்படுகிறார்).
8) ஆனைமலை
ஆனைமலையில் அமணீசுவரம் உடையார் கோயில் ஊழியத்திற்குச்
சமயமுதலி நம்பி முதல் திருவலகு வரைக்கும் ஆள் போட்டு திருவாடு
தண்டிகை சீர்பாத ஊழியச் சேவைக்குக் கைக்கோளர் நூறு குடியை
வைத்தார். ஆனைமலை நகரில் நூறு கைக்கோளர் குடிக்கும் நம்பி முதல்
திருவலகு வரைக்கும் முதன்மை நாட்டாண்மையாகக் கைக்கோளரில்
பொன்னம்பல முதலியையும், கோயில் மணியம் கணக்குக்கு
சோலையங்கிரி முதலியையும் நியமித்தனர்.
9) தென்சேரி
தென்சேரி மந்திரகிரியில் மலைவேலாயுதர் கோயில் கட்டப்பட்டது.
திருத்தென்நகரம் ஏற்படுத்தப்பட்டது (தென்சேரிநகர்). வேலாயுதர்
கோயில் ஆலய ஊழியத்திற்குக் கைக்கோளர் 50 குடியினர்
நியமிக்கப்பட்டனர். நம்பி முதல் திருவலகு வரைக்கும் முதன்மை
நாட்டாண்மைக் கைக்கோளரில் சொக்கலிங்க முதலியையும்
கோவிலுக்கும் கோவிலுக்கு விடப்பட்ட மானியத்திற்கும் மணியம்,
கணக்குக்கு கைக்கோளரில் மாரியப்ப முதலியை வைத்தனர்.
10) சென்னிமலை
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் ஐம்பது
குடியை நியமித்து அவர்களில் கருப்பண்ண முதலியை முதன்மை
நாட்டாண்மையாகவும், மணியங் கணக்குக்கு குப்பண்ண முதலியார்
என்பவரையும் நியமித்தனர்.
11) வெள்ளையம்பதி
வெள்ளிமாநகரம் இரும்பிறை மூதூர் ஏற்படுத்தி நாகீசுவரர் கோயிலும்,
ஓதிமலை வேலவர் கோயிலும் கட்டினர். திருவாடு தண்டிகை சீர்பாத
ஊழியத்துக்கு கைக்கோளரில் ஐம்பது குடியை வைத்து அந்த ஐம்பது குடி
கைக்கோளற்கும் நம்பி முதல் திருவலகு வரைக்கும் முதன்மை
நாட்டாண்மைக்குச் சண்முக முதலி என்பவரையும், கோயில்கட்கும்
கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்கு குமாரவேல் முதலி
என்பவரையும் நியமித்தனர்.
12) சத்திமங்கை
கோயில் திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளர்
முப்பது குடிவைத்து அந்த முப்பது குடிக்கும் பண்டாரம் முதல் திருவலகு வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குச் சுப்பிரமணிய முதலியையும்
மணியம் கணக்கிற்கு கந்தப்ப முதலியையும் வைத்தனர்.
13) திங்களூர்
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் எழுபது குடியை வைத்து அந்த எழுபது குடிக்கும் பண்டாரம் முதல் திருவலகு வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்கு நாகப்ப முதலியையும், கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்குக்
கைக்கோளரில் செவந்தி முதலியை வைத்தனர்.
14) விசயமங்கலம்
சங்கரலிங்க உடையார் கோயிலுக்குத் திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்துக்குக் கைக்கோளரில் ஐம்பது குடியை வைத்தனர். முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் சிவகிரி முதலியை நியமித்தனர். விஜயபுரி அம்மன் கோயிலுக்குத் திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் இருபது குடியை வைத்தனர். மணியம் கணக்கிற்குத் தென்பழனி முதலியையும் கொடுமுடி வேலப்ப முதலியையும் நியமித்தனர்.
15) கீரனூர்
திருவாடு தண்டிகைச் சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் முப்பது குடிவைத்து முப்பது குடிக்கும் பண்டார முதல் திருவலகு வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் இருளப்ப முதலியையும் மணியம் கணக்கிற்குக் கைக்கோளரில் ராமலிங்க முதலியையும் வைத்தார்கள்.
16) கோனாபுரி
கோனாபுரியில் கோயில் கட்டி ஆலய ஊழியத்திற்கு திருவாடு
தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் ஐம்பது குடியும் வைத்து
இந்த ஐம்பது குடிக்கும் நம்பி முதல் திருவலகு வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்கு கைக்கோளரில் சாந்த முதலியையும் கோயில் மணியம்
கணக்குக்குக் கைக்கோளரில் திருமலை முதலியையும் வைத்தனர்.
17) நடுவச்சேரி
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்கு முப்பது குடி
கைக்கோளரை வைத்து அந்த முப்பது குடிக்கும் பண்டார முதல் திருவலகு
வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் காசிலிங்க
முதலியையும் மணியம் கணக்கிற்கு அத்தப்பலிங்க முதலியையும்
வைத்தனர்.
18) பல்லடம்
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்கு ஐம்பது கைக்கோளக்
குடியும் நம்பி முதல் திருவலகு வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்கு
கைக்கோளரில் பொன்னம்பல முதலியையும், மணியம் கணக்குக்கு
கைக்கோளரில் சின்னய்ய முதலியையும் வைத்தனர்.
19) தணக்கன்பதி
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் ஐம்பது
குடி வைத்து அந்த ஐம்பது குடிக்கும் நம்பி முதல் திருவலகு
கடைவரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்கு கைக்கோளரில்
பொன்னம்பல முதலியையும், கோயில் மணியம் கணக்கிற்கு
கைக்கோளரில் சின்னய்ய முதலியையும் வைத்தனர்.
20) குள்ளந்துறை
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் நாற்பது
குடியும் வைத்து அந்த நாற்பது குடிக்கும் நம்பி முதல் திருவலகுகடை
வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் கதிர்காம
முதலியையும் கோயிலுக்கும், கோயில் மானியத்திற்கும் மணியம்
கணக்குக்கு கைக்கோளரில் அய்யாணி முதலியையும் வைத்தனா.
21) வண்டிக்கோட்டை
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளர் முப்பது
குடியும், அந்த முப்பது குடிக்கும் நம்பி முதல் திருவலகு வரைக்கும்
முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் அமணலிங்க
முதலியையும், அந்தக் கோவிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்கிற்கு கைக்கோளரில் ஆறுமுக முதலியையும் வைத்தனர்.
22) வெள்ளாதி
திருவாடு தண்டிகை ஊழியத்திற்குக் கைக்கோளரில் நாற்பது குடியும்
வைத்து அந்த நாற்பது குடிக்கும் நம்பி முதல் திருவலகு வரைக்கும் . முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் வெற்றிவேல்
முதலியையும், கோவிலுக்கும், கோயில் மானியத்திற்கும் மணியம்
கணக்கிற்குக் கைக்கோளரில் கச்சி வினைதீத்தா முதலியையும்
வைத்தனர்.
23) கவையன்புத்தூர்
திருவாடு தண்டிகை ஊழியத்திற்கு கைக்கோளர் அறுபது குடியும்
வைத்து அந்த அறுபது குடிக்கும் நம்பி முதல் திருவலகுகடை வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் திருத்தணி முதலியையும்,
கோவிலுக்கும், கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்கு
.கைக்கோளரில் விசுவநாத முதலியையும் வைத்தனர்.
24) சாமளாபுரம்
ஆலய ஊழியத்திற்கு நம்பி முதல் திருவலகு கடை வரைக்கும்
முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் அமராபதி முதலியையும்,
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்கு
கைக்கோளரில் தேவகிரி முதலியையும் வைத்தனர்.
25) வெள்ளலூர்
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் நாற்பது
குடியும் வைத்து அந்த நாற்பது குடிக்கும் நம்பி முதல் திருவலகு கடை வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் ஆனந்த
முதலியையும், கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்குக் கைக்கோளரில் புக்கொளி முதலியையும் வைத்தனர்.
26) சூலூர்
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்துக்குக் கைக்கோளரில் இருபது
குடியும் வைத்து அந்த இருபது குடிக்கும் நம்பி முதல் திருவலகு கடை வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் இருபது குடியும்
வைத்து அந்த இருபது குடிக்கும் நம்பி முதல் திருவலகு கடை வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் தென்காசி முதலியையும், கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்குக் கைக்கோளரில் நஞ்சப்ப முதலியையும் வைத்தனர்.
27) இருகூர்
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளர் இருபது
முடியும் வைத்து அந்த இருபது குடிக்கும் நம்பி முதல் திருவலகு கடை
வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் தனுக்கோடி
முதலியையும், கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம்
கணக்குக்குக் கைக்கோளரில் நயினா முதலியையும் வைத்தனர்.
28) இடிகரை
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் முப்பது
முடியும் வைத்து அந்த முப்பது குடிக்கும் நம்பி முதல் திருவலகு வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் பெரியண்ண
முதலியையும், கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம்
கணக்குக்குக் கைக்கோளரில் ஆதிமூர்த்தி முதலியையும் வைத்தனர்.
29) துடியலூர்
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் நாற்பது
முடியும் வைத்து அந்த நாற்பது குடிக்கும் நம்பி முதல் திருவலகு வரைக்கும்
முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் குட்டியண்ண
முதலியையும், கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம்
கணக்குக்குக் கைக்கோளரில் அதிகாரி முதலியையும் வைத்தனர்.
30) கோவன்புத்தூர்
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் ஐம்பது
முடியும் வைத்து அந்த ஐம்பது குடிக்கும் நம்பி முதல் திருவலகு வரைக்கும்
முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் திருவம்பல முதலியையும்,
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்குச்
சோணாசல முதலியையும் வைத்தனர்.
31) பேரூர்
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் தில்லை
சிதம்பரத்து மூவாயிரம் குடி கைக்கோளரில் நம்பி முதல் திருவலகு
வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்கு தில்லைச் சிதம்பர
முதலியையும், கோவிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம்
கணக்குக்குத் தில்லை நல்லதம்பி முதலியையும் வைத்தனா.
32) அவிநாசி, திருமுருகன் பூண்டி
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் நூறு
குடியை அழைத்து வந்து அந்த நூறு குடி கைக்கோளருக்கும் நம்பி முதல்
திருவலகு வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக கைக்கோளரில் புக்கொளி முதலி மகன் காசிலிங்க முதலியையும், கோயிலுக்கும் கோயில்
மானியத்திற்கும் மணியம் கணக்குக்குக் காஞ்சிபுரத்துச் சமய சங்கோதி
சோலையங்கிரி முதலி மகன் வாரணவாசி முதலி இவன் மகன்
முத்துக்குமார முதலியை வைத்தனர்.
33) சேவூர்
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் நூறு
குடியும் வைத்து அந்த நூறு குடிக் கைக்கோளருக்கும் நம்பி முதல் திருவலகு கடை வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக்
கைக்கோளரில் முத்துக்குழந்தை முதலியையும், கோயிலுக்கும் கோயில்
மானியத்திற்கும் மணியம் கணக்குக்குக் கமகம் முதலியையும்
வைத்தனர்.
34) மன்னியூர்
மன்னியூர் என்பது இன்றைய அன்னூர் ஆகும். சமய முதலி
மன்னியூர் ஆலயங்களுக்கு நம்பி முதல் திருவலகுவரை ஆள்
போடுவித்தார். திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்கு சமய முதலி
தன் தம்பி கச்சிக் கச்சாலையப்ப முதலி மக்கள் கச்சிக் கச்சாலைக் கந்தப்ப
முதலியையும் இவனுக்கு இளையவன் கச்சிக் கச்சாலைப் பெருமாள்
முதலியையும் இவர்களுக்கு உட்பட்ட நூறு குடியும், இவர்கள்
மைத்துணராகிய சாமிசமயதள விசாரணை முதன்மைக்கு சூரியமூர்த்தி
முதலி மகன் கொங்க மட்டும்கண்டன் என்கிற முதலியையும் வைத்தார்.
இவர்கட்கு உட்பட்ட நூறு குடியும் வைத்தார்.
சாதி சமயப் பட்டத்துத் தனி விசாரணை நாட்டுக் கருணீக
முதன்மைக்கு கொங்கமட்டும் கண்டன் மைத்துணன் திருவேங்கட
முதலி மகன் கச்சி வடமலையப்ப முதலி இவன் மகன் கச்சி அமராபதி
முதலி, இவன் மகன் கச்சி வினை தீர்த்தா முதலி இவன் மகன் கச்சி
அருந்தா முதலியையும் இவர்கட்குட்பட்ட நூறு குடியும் வைத்தார்.
சமய சங்கோதி விசாரணை முதன்மைக்கு மேற்படியார்
மைத்துணனாகிய வாரணவாசி முதலி மகன் காசிவேல் முதலியையும்
இவர்கட்கு உட்பட்ட நூறு குடிகளையும் வைத்தார்.
இவர்கள் ஐநூறு பேரையும் அழைத்து மன்னி மாகாளி துர்க்கை
கேட்டபடி பன்னிரண்டு நரபலி யார் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார்.
நரபலி கொடுக்க ஒப்புக் கொண்டனர். சமயமுதலி வெள்ளாதிக் கோயில்
மனியம் கணக்கு முதன்மைக்கு நியமித்தார். நம்பி முதல் திருவலகு கடை
வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக் கச்சிக் கச்சாலையப்ப
முதலியை வைத்தார். மன்னியூர்க் கோட்டை பேட்டை நகரச் சீமை கருணீகத்துக்கு கச்சி அருந்தா முதலியை வைத்தார். மன்னி மாகாளி,
துர்க்கை இருவருக்கும் அபிஷேக ஆராதணை நடந்தது.
அப்போது கச்சி அருந்தா முதலி தன் வீட்டுச் சனத்தில் பன்னிரண்டு
பாலகுமாரர்களை அழைத்து வந்து ஆடையுடுத்தி, ஆபரணங்கள் பூட்டி
அலங்காரம் செய்து பாலசனமிடுவித்துப் பரிமள களப கஸ்தூரிகள் பூசி
வீரசந்தனம் இட்டு பாக்கு வெற்றிலை கையில் கொடுத்து வீரகொம்பு
வீரகாளம் வீரமல்லாரி வீரசேகண்டி வலம்புரிச் சங்குடனே
வீரமேளவாத்தியம் முழங்க பஞ்சவர்ணக்குடை பஞ்சமுகத் தீவட்டி
கைவிருது ரணவீர வரிவேங்கைப் புலிக்கொடியுடனே
நடைபாவாடையுடனே நடை பாவாடை மேல் நடந்து சங்கீதராக
மேளவாத்தியம் சூழ்ந்து வர மன்னியூரில் நாலு வீதியும் மெரவனை வந்து
மன்னி மாகாளி துர்க்கை இருவருக்கும் அந்தப் பன்னிரண்டு
பாலகுமாரர்களையும் எதிர் நிறுத்தி சமய முதலி "உங்களுக்கு முன் நான்
சொன்ன பன்னிரண்டு நரபலியும் ஒருவருக்கும் ஆறு-ஆறுபலியாக
வந்தது" என்றார்.
அந்தப் பன்னிரண்டு பாலகுமாரர்களையும் வெட்டிப் பலியூட்டி
வைத்து அவ்வூரிலுள்ள குடிவரிசை சனங்களை ஆண்டு தோறும்
திருநாள் நடத்தவும், விளக்கு வைக்கவும் ஆடு, பன்றி, கோழி முப்பலியும்
கொடுக்குமாறு சமயமுதலி கூறினார். அந்த இரண்டு அம்மனுக்கும்
பெரியம்மன், சின்னம்மன் என்று பெயர் வைத்து அவர்களுக்குத்
தங்களைப் பலிகொடுத்துக் கொண்ட பன்னிரண்டு பாலகுமாரர்களையும்
சாவாரக்கோல முஸ்தேதியாய் பன்னிரண்டு கல் சிலை விக்கிரகங்களும்
அவர்களைப் பார்த்தாப் போல் செய்து வைத்தனர். அந்தச் சிலைகளுக்கும்
சிவாலயப் பூசைக்கு முதல் பூசை என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆதி கருவூர் முதல் பேரூர் வரை கொங்கு ஏழு தலத்துக்கும்
விஷ்ணு ஆலயம், சுப்பிரமனியர் ஆலயம்,
மடாலயம், குரு ஆலயம், துர்க்கை ஆலயங்கள் கொங்கு 24 நாட்டுக்கும்
மலையாளம் கொச்சிவரை சேர நாட்டுக்கும் சாதிசமயப்பட்டம், விசாரணை
செய்துவர சமய முதலி தம்பி கச்சி கச்சாலையப்ப முதலி மகன் மூத்தவன்
கச்சிக் கச்சாலைக் கந்தப்ப முதலிக்குப் பட்டம் கட்ட சிவன் கோயில்
தென்வாசலில் சமயமண்டபம் கட்டி அலங்காரம் செய்து சமய முதலி தன்
கையில் உள்ள அறுசமய முத்திரை மோதிரமும் அறுசமய சரமும்
வீரவாளும் வெண்டாமரை நூல் பட்டு ஆசனமும் வெண்முத்து
மணிக்கிரீடமும் அருந்தவச் செல்வியம்மன் பாதத்தில் வைத்து வணங்கி
பட்டம் சூட்ட உத்தம தீர்த்தத்திற்குப் போய் தீர்த்தம் கொண்டுவந்து
திருமஞ்சனம் ஆட்டித் திருநீறு இட்டு ஆடை ஆபரணங்கள் பூட்டி
முத்திரைச் செங்கோல் கொடுத்து முடிசூட்டிப் பட்டம் கட்டினர்.
அதற்குட்பட்ட 360 சிவாலயம்,
326 செங்குத்தர்.
35) முட்டம்.
திருவாடு தண்டிகை சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் ஐம்பது
குடியும் வைத்து அந்த ஐம்பது குடிக்கும் நம்பி முதல் திருவலகு கடை வரைக்கும் முதன்மை நாட்டாண்மைக்குக் கைக்கோளரில் மலையப்ப
முதலியையும், கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம்
கணக்குக்கு அயிராவதி முதலியையும் வைத்தனர்.
கொங்கு தாராபுரம் முதல்கொண்டு கொச்சி சங்கர நாராயணர்
வரைக்கும் இதனுட்பட்ட சிவாலங்களும், விஷ்ணு ஆலயங்களும்,
சுப்பிரமணியத் திருவாலயங்களும்; மடவாலயமும், குருவாலயமும்
அதனடுத்த துர்க்கை ஆலயங்களுக்கும் அந்த ஆலயங்களுக்கெல்லாம்
விட்ட வரிசை மானியங்களுக்கு ஆலயத்திற்கு மணியம் கணக்கிற்கு நம்பி
முதல் திருவலகு கடை வரைக்கும் சமய முதலியே விசாரணை கர்த்தன்
என்று சமய முதவிக்கு ஒப்புவித்துக் கட்டுச் செய்து உடுகரை பாக்கு
வெற்றிலையும் கொடுத்து நிகுதி செய்து அதன் பிறகு சேரமான் பெருமாள்
என்னும் சேரன் சமய முதலிக்கு கையில் அனுப்பித்துக் கொண்டு தன்
இராணுவப் படையுடனே கொங்கு தாராபுரத்திற்குப் போனார். திருவாடு
தண்டிகைச் சேவை சேய்த நாளில் நாளொன்றுக்கு முத்திரைப் படியில்
இரண்டுபடி அரிசியும், அதற்குள்பட்ட சிலவும், மண்டபத்திற்கு ஐந்து பணமும் திருவிழாக் கட்டளைக்கு நாட்டாண்மைக்காரனுக்கு ஒரு
உடுகரையும் கோயில் முந்தின தளிகைப் பிரசாதமும் கொடுக்க
வேண்டியது.
சேரன் போன பின்பு சமய முதலி மன்னியூர் நகர் சமய மண்டபத்தில்
இருந்துகொண்டு தன் சகோதரமாகிய கச்சிக் கச்சாலையப்ப முதலி இவன்
மகன் கச்சிக்கச்சாலைக் கந்தப்ப முதலியும் தன்னாசாரத்திலிருந்து
கொண்டு சாதி சமய தள விசாரனைக்குக் கச்சிக்கச்சாலைக் கந்தப்ப
முதலிக்கு மைத்துனனாகிய சூர்யமூர்த்தி முதலி மகன் கொங்கமட்டுகிற
முதலியும் சாதிசமயப் பட்டத்துத் தளவிசாரணை நாட்டுக்
கரூணீகத்திற்குக் கச்சிக்கச்சாலைக் கந்தப்ப முதலிக்கும் கொங்கமட்டுகிற
முதலிக்கும் மைத்துனராகிய காஞ்சீபுரத்துச் சாதி சமய தள
விசாரணைப்பட்டது நாட்டுக் கருணீகத்திற்குக் கச்சித் திருவேங்கட
முதலி மகன் கச்சி வடமலையப்ப முதலி இவன் மகன் வெள்ளாதிக்
கோவிலுக்கும் கோவில் மான்யத்திற்கும் மணியங்கணக்குக்கும் வைத்த
கச்சி வினைதீர்த்தா முதலி இவன் மகன் கச்சி அருந்தாமுதலியும் சமய
சங்கோதி விசாரணைக்குக் கச்சிக் கச்சாலைக் கந்தப்ப முதலிக்கும்
கொங்குமட்டுகிற முதலிக்கும் கச்சி அருந்தா முதலிக்கும் இவர்கள்
மூவருக்கும் மைத்துனனாகிய கச்சிச் சோலயங்கிரி முதலி மகன்
வாரணவாசி முதலி இவன் மகன் காசிவேல் முதலியும் சமய இழந்தாரி
தனுக்கோடி முதலி மகன் ராமலிங்க முதலியும் சாதி சமய நாட்டுச்
சோடிளந்தாரிக்கு நாகபாச சொக்கலிங்கன் மகன் சுந்திரலிங்கத்தையும்
இவர்களை யெல்லாம் மன்னியூர்ச் சமய மண்டபத்தில் வைத்துக்
கொண்டு,
கொங்கு இருபத்தி நாலு நாட்டு உறவின் முறையும் அழைப்பித்து
மன்னியூர்ச் சமய மண்டபத்தில் வைத்துக்கொண்டு நாட்டுக்
கொருவனைக் கொத்துப்பண்ணி நாடு காண்க, ஆறு நாட்டுக்குப் பெரிய
வீடு சேவூரென்று கண்டு சேவூருக்கு முத்துக்குழந்தை முதலியை
வைத்து வராக்க நாட்டுக்கு குமார வேலப்ப முதலியும், ஒடுவங்கத்திற்குச்
செங்கோட முதலியும் பூந்துறை நாட்டிற்குப் பண்ணமுதலியும் அண்ட
நாட்டுக்குச் சடையப்ப முதலியும் வெங்கல நாட்டிற்கு நல்லதம்பி
முதலியும், காங்கேய நாட்டிற்கு அத்தப்ப முதலியும் பருத்திப் பள்ளி
நாட்டிற்குப் பொன்னுதம்பி முதலியும், பொன்குலுக்கி நாட்டுக்குக் கந்தப்ப
முதலியும் வைய்காலூர் நாட்டுக்குச் சரவண முதலியும், குருப்பு நாட்டுக்கு
மோகாம்புரி முதலியும், கோசல நாட்டிற்குக் கந்த முதலியும், ஏழுகரை
நாட்டுக்குத் தில்லை கோவிந்த முதலியும் அப்படி அதனுள் பட்ட
இருபத்துநாலு நாட்டுக்கும் நாட்டாண்மைக்கும் வைத்து சமய முதலியின்
தம்பி மகன் கச்சிக் கச்சாலைக் கந்தப்ப முதலியைக் கொண்டு நிகுதி செய்து
பாக்கு வெற்றிலை கொடுப்பித்து அவரவர் ஊரிலுள்ள வாய்க்குற்றம்
கைக்குற்றம் அவரவர் தீர்த்துக்கொண்டு வரச்சொல்லியும், அதற்கு மீறின
குற்றம் ஒரு நாடு கூடி ஒரு நாட்டுக்குறுப்பான நாட்டாண்மைக்காரன்
வந்து தீரும்போது மன்னியூருக்கு வந்து நம்முடைய கச்சிக்கச்சாலைக்
கந்தப்ப 'முதலியும் சாதி சமய தள விசாரணைக் கொங்கமட்டுகிற
முதலியும் சாதி தள விசாரணைப் பட்டத்து நாட்டுக்கர்ணிகம் கச்சி
அருந்தா முதலியும் சமய முதலியும் சமய சங்கதி விசாரணைக்குக்
காசிவேல் முதலியும் சமய இழந்தாரி இராமலிங்க முதலியும் சாதி சமய
நாட்டுச் சோடிளந்தாரி நாகபாச சுந்திரலிங்கத்தையும்,
இவர்களை எல்லாம் வந்தழைத்துக்கொண்டு போய் இவர்கள்
முன்படத்தீர்த்துக்கொண்டு வரவும். கனகுற்றங்களானால் நாலு நாடும்
கூடித் தீரும்போது மன்னியூர்ச் சமய மண்டபத்திற்கு வந்து நாலு நாட்டு
உறவின் முறையும் கூடிக்கொண்டு நமது தம்பிமகன் கச்சிக்கச்சாலை
கந்தப்ப முதலியும் கொங்க மட்டுகிற முதலியும் நாட்டுச் சமய கருணீகம்
அருந்தா முதலியும் சமய சங்கதி காசிவேல் முதலியும் இழந்தாரி ராமலிங்க
முதலியும் சோடிளந்தாரி நாகபாச சுந்திரலிங்கத்தையும் அவாகள்
ஆறுபேரும் அவர்கள் முன்பட தீர்த்துக்கொண்டு போகவேண்டுமென்று
அவரவர்க்கும் கட்டுச் செய்து அதன் பின்பு அந்தந்த ஊரிலேயும்
நாட்டிலேயும் அந்தந்த நாட்டாண்மைக்காரர் வாய்க்குற்றம் கைக்குறறம்
தீர்ந்து அபராதம் வாங்கி நல்லது செய்யும்போது முந்தின பாக்கு வெற்றிலை இரட்டை வேழையம் நாட்டுச் சமய முதலி பேர்க்கு எடுத்து வைத்து அதன் பின்பு சமய நாட்டாண்மைக்காரனுக்கு, அதன் பின்பு நாட்டுத் தளபதிக்கும், அதன் பின்பு இழந்தாரிக்கும் இப்படிக் இந்த ஆறு சேசை வரிசைக்காரருக்கு முந்தின பாக்கு வெற்றிலை எடுத்து வைத்து அவரவர்க்கும் கட்டுச் செய்து அதன் பின்பு சோடிளந்தாரிக்கு வெற்றிலை பாக்கு எடுத்து வைத்து அவரவரும் கிரமப்படிக் குற்றந் தீர்ந்து கொண்டு வாருங்களென்று அவரவர்க்கும் கட்டுச் செய்து அதன்பின்பு அந்தந்த ஊர்க்கோவில் வாசலில் வரிசை வந்தால் முந்தின பங்கு சமய முதலி பேர்ப்பட எடுத்து வைத்து அதனுள்பட்ட ஐந்து பேருக்கும் எடுத்து வைத்து அதன் பின்பு அவர்கள் பகிர்ந்து கொள்ளவும்.
சிதம்பரேசுவரர் சிவகாமிஅம்மன் விக்கினேசுரர் சுப்பிரமணியர் வள்ளியம்மன் தெய்வயானை சூலதேவர் சுந்திரப்பெருமாள் இந்த எட்டு விக்கிரகமும் சோடிசத்துடனே உண்டு செய்து அதை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு மேலைச் சிதம்பரத்திற்குக் கொண்டு போய் அவ்விடத்திலே ப்ரதிஷ்டையும் பண்ணிவைக்க வேண்டுமென்று கரிகாலச் சோழன் சமய முதலிக்கு எழுதி அனுப்பி வைத்தார். எழுதி அனுப்பித்த விவரம். இந்த விக்கிரகம் மேலைச் சிதம்பரத்திற்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போகுவதற்குக் கைக்கோளரில் எழுநூறு ஆளனுப்பி வைக்கச் சொல்லி வந்தபடியினாலே சமய முதலியும் மெத்தச் சந்தோஷப்பட்டுக் கொண்டு குடிக்கொரு ஆள் கூட்டிக்கொண்டு வரச்சொல்லி மேலைச் சிதம்பரம் பேரூர் நாட்டாண்மைக்காரன் தில்லைச் சிதம்பர முதலிக்கும் அவினாசி நாட்டாண்மைக்காரன் காசிலிங்க முதலிக்கும் வரவோலை எழுதி அனுப்பித்தார்.
சமய முதலி எழுதி அனுப்பியபடிக்குத் தில்லைச் சிதம்பர முதலியும் தன்னூரில் இருக்கின்ற நூறுகுடி கைக்கோளரில் நூறாளும் காசிலிங்க முதலியும் தன் கையிலிருக்கின்ற நூறு குடிக்கு நூறாளும் இவர்கள் இருவரும் இருநூறு ஆளும் தாங்களும் மன்னியூருக்கு வந்தார்கள். வந்து சமய முதலியைக் கண்ட பின்பு சமய முதலி தன் தம்பி மகன் கச்சிக்கச்சாலைப் பெருமாள் முதலியை அழைத்து இந்த மன்னியூரிலிருக்கிற கைக்கோளர் ஐந்நூறு குடிக்கும் குடிக்கு ஓர் ஆள் முறைக்கு ஐந்நூறு ஆள் தருவிக்கச் சொல்லி கட்டுச் செய்தார். சமய முதலி கட்டுச் செய்தபின்பு கச்சிக் கச்சாலைப் பெருமாள் முதலியும் ஆக எழுநூறு ஆளும் சேர்த்து சமய முதலிக்கு எதிரே கொண்டு விட்டான். அதன் பின்பு சமய முதலியும், ஆக எழுநூறு ஆளும் சேர்த்து இந்த எழுநூறு ஆளுக்கும் இந்த மூன்று நாட்டாண்மைக்காரரையும் கூட்டி சமய முதலி திருவாலூருக்கு அனுப்பி வைத்தார்.
சமய முதலியும், அனுப்பிவைத்தபடிக்கு கச்சிக் கச்சாலை பெருமாள்
முதலியும் தில்லைச் சிதம்பர முதலியும், காசிலிங்க முதலியும் இவர்கள்
மூன்று நாட்டாண்மைக்காரர்களும் எழுநூறு ஆளும் திருவாரூருக்குப்
போய் கரிகாலச் சோழனைக் கண்டார்கள். அதன் பின்பு கரிகாலச் சோழனை
சடையப்பன் கத்தூரி ரங்கப்ப செட்டியும், அழைக்கவிட்டு அவர்களையும்
கூட்டிக்கொண்டு கொங்குதாராபுரத்திலிருக்கின்ற சேரனையும்
அழைத்துக் கொண்டு இந்த எழுநூறு ஆளுடைய கையில் அந்த
விக்கிரகங்களையும் எடுப்புவித்துக் கொண்டு கரிகாலச் சோழன் சேரமான்
பெருமாள் என்றும் சேரன் சடையப்பன் கத்தூரி ரங்கப்ப செட்டி இவர்கள்
எல்லோரும் பேரையூர் நகருக்கு வந்தார்கள். வந்து பேரையூர் நகரிலிருந்து
கொண்டு கரிகாலச் சோழன் மன்னியூருக்குச் சமய முதலியை
உத்தமலிங்காசாரியரை அழைத்துக் கொண்டு வரச்சொல்லி
பேரையூரிலிருந்து வரவோலை எழுதி அனுப்பி வைத்தார். அந்த
வரவோலை சமய முதலி இருக்கிற மன்னியூருக்கு வரவும் சமய முதலியும்
உத்தமலிங்காசாரியரையும் அழைத்துக் கொண்டு கச்சிக்கச்சாலைக்
கந்தப்ப முதலியும் கொங்கமட்டுகிற முதலியும் கரினிக அருந்தா முதலியும்
காசிவேல் முதலியும் மற்றுமுள்ள காரியப்பேரையும் கூட்டிக் கொண்டு
மன்னியூர்நகர் கடந்து திருப்பேரையூர் நகருக்குப் போனார். போய் கரிகாலச்
சோழன் சடையப்பன் கத்தூரி ரங்கப்ப செட்டியும் மற்றுள்ள கர்த்தரையும்
கண்டார்கள்.
அதன்பின்பு கரிகாலச் சோழன் பேரூரில் சமய முதலியை அழைத்து
இந்த எட்டுவிக்கிரகமும் விக்கிரகப் பிரதிஷ்டைபண்ணி வைக்கச் சொல்லி
கரிகாலச் சோழன் பிரதிஷ்டை சமய முதலிக்குக் கட்டுச் செய்ய சமய
முதலியும் அப்படியே உத்தமலிங்காசாரியரைக் கொண்டு சிதம்பரரேசுரர்
சிவகாமியம்மன் விக்கினேசுரர் சுப்பிரமணியர் வள்ளியம்மை தேவயானை
சூலதேவர் சுந்திரப் பெருமாள் இந்த எட்டுவித விக்கிரகத்தையும்
பிரதிஷ்டையும் பண்ணிவைத்து அபிஷேக தூப தீபாறாதனை முடிப்பித்து
எல்லோரும் தரிசித்துக்கொண்டு அதன்பின்பு சமய முதலியும்
புட்பவிமானம் சோடித்து அதன் மேல் சிதம்பரேசுரரையும் சிவகாமி
அம்மனையும் பதினெண் மேளவாத்தியத்துடன் பெரிய கடைவீதி
தீபாறாதனை பரிமாறிச் சிதம்பரேசுவரரையும் சிவகாமி அம்மனையும்
அதினுள்பட்ட ஆறு தேவதையும் நிலை நிறுத்தி அபிஷேக தூப
தீபாராதனையும் முடிப்பித்து எல்லோரும் தரிசித்துக்கொண்டு எல்லோரும்
தீர்த்தப்பிரசாதம் வாங்கிக்கொண்ட பின்பு,
கரிகாலச் சோழன் விருந்து விசாரித்து பாக்கு. வெற்றிலை
கொடுப்பித்து அதன்பின்பு காரிகாலச் சோழன் பேரூரிலுள்ள நூறு குடி கைக்கோளருக்கும் நாட்டாண்மைக்காரனுக்கும் அரமனைச் சுங்க மில்லையென்று நிகுதிசெய்து அவர்களுக்குக் கோயில் வரிசை தட்டைச் சாக்கிரதை திருவாடுதண்டிகைச் சேர்வை செய்த நாளில் நாளொன்றுக்கு முத்திரைப்படியில் இரண்டுபடி அரிசியும், அதற்குள்பட்ட சிலவும், மண்டபத்திற்கு ஐந்து பணமும், திருவிழாக் கட்டளைக்கு
நாட்டாண்மைக்காரருக்கு ஒரு உடுகரையும் கோவில் முந்தின தளிகை பிரசாதமும் கொடுத்து நடத்தி வரவென்று அந்தப் பேரூர் திருவாடுதண்டிகைச் சேர்வைக் கைக்கோள்வருக்கும் இந்தப்படி நடத்திவர அதிகாரக்காரருக்கும் கட்டுச் செய்து இந்தப் பேரூர்க்கேற்ற முறைக்கு முன்னூற்றறுபது சிவாலயத்திற்கும் கட்டுச்செய்து அதன்பின்பு பட்டீசுரர்
பச்சை மரகதவல்லிக்கும் மற்றுள்ள தேவர்களுக்கும் அபிஷேக தூப தீபாராதனை முடிப்பித்துக் கரிகாலச் சோழன் சேரமாம்பெருமாள் என்னும் சேரன் சமய முதலி சடையப்பன் கத்தூரி ரங்கப்ப செட்டி எல்லாரும் தரிசித்துக்கொண்டு பேரையூர் நகர் கடந்து சேரமாம் பெருமாளென்றும் சேரன் கொங்கு தாராபுரத்திற்குப் போனார்.
கரிகாலச்சோழனும் சமயமுதலியும் மற்றுள்ளபேரும் பேரையூர் நகர் கடந்து மன்னியூருக்கு வந்து மன்னிநாதர் அருந்தவச்செல்வி அம்மன் மற்றுள்ள தேவதைகளுக்கும் அபிஷேக தூப தீபாறாதனை முடிப்பித்து எல்லோரும் தரிசித்துக் கொண்டு சமய முதலி தன் தம்பி கச்சிக்கச்சாலையப்ப முதலி இவன் மகன் கச்சிக் கச்சாலைக் கந்தப்ப முதலி இவன் தம்பி கச்சிக்கச்சாலைப் பெருமாள் முதலி மற்றும் வளைவிலுண்டாகிய சகல ஜனங்களுக்கும் சொல்லிக்கொண்டு நாட்டுக் கர்ணிகம் அருந்தா முதலி வளைவு சகல ஜனங்களுக்கும் சொல்லிக்கொண்டு. சமய சங்கதி காசிவேல் முதலி வளைவு சகல ஜனங்களுக்கும் சொல்லிக்கொண்டு மற்றும் அவ்விடத் திலுண்டாகிய உறவின் முறையாருக்கெல்லாம் சொல்லி அனுப்பிவைத்துக் கொண்டு உத்தமலிங்காசாரியர் பாதம் பனிந்து அனுப்பி வைத்துக் கொண்டு சகல ஜனங்களும் சுகமாய் இருக்க வேண்டும் என்று வாக்கு கொடுத்து சமய . முதலியும் கரிகாலச் சோழனும் அவர்களுக்குட்பட்ட இராணுவப் படையுடனே மன்னியூர் நகர் கடந்து அருணாபுரிக்குப் போனார்கள்.
பிற ஊர்களில் குடியேற்றமும் கோயில் பணிகளும்
சங்கர நாராயணர் கோயில்
திருவாடு தண்டிகைச் சீர்பாத ஊழியத்திற்குக் கைக்கோளரில் ஐம்பது குடியும் வைத்து அந்த ஐம்பது குடிக் கைக்கோளருக்கும் நம்பி நாகபாசத்தவருக்கும் முதன்மை நாட்டாண்மைக்கு முகரசுப்பிரமணிய முதலி என்கிறவனை வைத்தனர்.
கொச்சி
சமய முதலிக்குக் கொச்சி தேசத்தில் கப்பல் முதமையும்
உண்டுசெய்து சேரன் கொச்சி புகுந்து போகிற கப்பலுக்கு அஞ்சு
பொன்னும், வருகிறகப்பல் போகிற கப்பலுக்கு அஞ்சு பொன்னும், வருகிற
கப்பலுக்குப் பத்துப் பொன்னும் என்று கண்டு சமய முதலிக்குச் சேரன்
செப்புப் பட்டையம் எழுதிச் செப்பேட்டுப் பட்டயமும் பாக்கு
வெற்றிலையும் சமய முதலி கையில் சேரன் கொடுத்தான்.
கொச்சியில் மணியம் கணக்கு சமய முதலி வைத்தவர் முத்துத்
தாண்டவ முதலி.
மோகாம்புரி
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக் கட்டுச்
செய்யப்பட்டவர் அம்பிகை முதலி.
நஞ்சுண்ட கூடல் (நஞ்சன் கூடு)
கோயிலுக்கும், கோயில் மானியத்திற்கும் சமய முதலியால் நிகுதி
செய்யப்பட்டவர் வசவலிங்க முதலி.
தாராபுரம்
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்கு
வைக்கப்பட்டவர் அத்தப்ப முதலி.
பூந்துறை
கோவிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்கு
நியமிக்கப்பட்டவர் சிவலிங்க முதலி.
சிவகிரி
கோவிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்கு
நியமிக்கப்பட்டவர் மயிலப்ப முதலி.
திருவண்ணாமலை
கோயில் மணியம் கணக்குக்குக் கைக்கோளரில் அருணாசல
முதலியை நியமித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சைக் கோயில் மணியம் கணக்குக் கைக்கோளரில் இராமலிங்க
முதலியை வைத்தனர். சிவலிங்கமுடையார் கோயிலுக்கு மணியம்
கணக்குக்குக் கைக்கோளரில் ஆனை முதலியை வைத்தனர்.
திருச்சிராப்பள்ளி
கோயில் மணியம் கணக்குக்குச் சிரா முதலியை வைத்தனர்.
முன்னாளில் சோழவம்சத்தவர் நிகுதிபண்ணின முறைக்குக் கரிகாலச்
சோழன் சமய முதலி மான்யங்கண்டு அந்தந்தக் கோயில் தூணில்
கல்வெட்டும் போட்டு சமய முதலி வசம் அந்தந்தக் கோயில்
மணியங்கணக்குக்கு நம்பிமுதல் திருவலகு கடைவரைக்கும் சகல
விசாரணையும் கரிகாலச் சோழன் சமய முதலி வசம் ஒப்பித்துக்கொடுத்து
அதன்பின்பு சமய முதலிக்குள்பட்ட பந்துஜனம் கைக்கோள்வருக்குச் சமய
முதலி மணியங்கணக்குக் கொடுத்துச் சோளதேசத்தினுள்பட்ட சிவா
லயத்திற்செல்லாம் கரிகாலச் சோழனும் சமயமுதலியும் நிகுதி செய்தபின்பு
சமயமுதலி என்கிற கச்சிவீர காமாச்சிராய சிரச் சிங்காதனக் கர்த்தராகிய
சமய முதலியும் அவர்களுக்குள்பட்ட காரியப்பேர் நடந்துவருவதற்குச்
சாதிசமயப்பட்டனுக்கும் முதல் நாட்டாமைக்குக் கச்சிமுத்து வீர
காமாச்சிராயச் சிரச்சிங்காசனக் கர்த்தராகிய சமய வெங்கடாசல முதலிக்குச்
சகோதரமாகிய கச்சிக் கச்சாலையப்ப முதலி சாதி சமய தளவிசாரணைக்குக் கச்சிவீர காமாச்சிராய சிரச்சிங்காசனக் கர்த்தராகிய சமய கச்சிவீர வெங்கடாசல முதலிக்கும் இவர்கள் தம்பி கச்சிக் கச்சாலையப்ப முதலிக்கும் மைத்துனராகிய சூர்யமூர்த்தி முதலியும் சாதிசமய பட்டத்துத் தளவிசாரணை நாட்டுக் கர்னிகத்திற்குக் கச்சிமுத்து
வீரகாமாச்சிராயச் சிரசிங்காசனக் கர்த்தராகிய சமயக் கச்சிவீர வெங்கடாசல முதலிக்கும் இவர்களுக்குச் சகோதரமாகிய கச்சிக் கச்சாலையப்ப முதலிக்கும் இவர்களுக்கு மைத்துனராகிய சுந்தரமூர்த்தி முதலிக்கும்,
இவர்கள் மூவருக்கும் மைத்துனனாகிய நாட்டுக்கர்ணிகம் அமராபதி முதலியும் சமய சங்கோதி விசாரணைக்கும் சமய முதலிக்கும் இவர்கள் தம்பி கச்சிக் கச்சாலையப்ப முதலிக்கும் இவர்களுடைய மைத்துனராகிய சுந்திரமூர்த்தி முதலிக்கும் இவர்கள் மூவருக்கும் மைத்துனராகிய நாட்டுக்கர்ணிக அமராபதி முதலிக்குமிவர் நால்வருக்கும் மைத்துனராகிய வாரணவாசி முதலியும் சமைய சோடிளந்தாரி தனுக்கோடி முதலியும் சாதி சமய நாட்டுச் சோடிளந்தாரி நாகபாச சொக்க லிங்கத்தையும் இவர்களை எல்லாம் வரச்சொல்லி வரவோலை எழுதி மன்னியூருக்கு ஆள் அனுப்பிவைத்துத் தருவித்துச் சமயமுதலியும் இந்தக் கார்யப்பேரும் கரிகாலச் சோழனுமாகச் சமய மண்டபத்திலிருந்து கொண்டு இந்த அருணாபுரிச் சமய மண்டபத்திற்குச் சோனாபுரியிலுண்டாகிய கைக்கோள்வரையும் நம்பி நாகபாசத்தவரையும் அழைப்பித்து அவர்களுக்கும் சமய முதலி நிகுதி செய்த பின்பு சோழ தேசத்தி லுண்டாகிய கைக்கோளருக்கு ஊர்க்கொரு நாட்டாமையும், நாட்டாருக்கொரு நாட்டாண்மையும் கண்டு, ்க்குற்றம், கைக்குற்றம் அவரவர் தீர்த்துக்கொண்டு வரச் சொல்லியும்
அவரவர் அதற்கு மீறின குற்றம் ஒரு நாடு கூடி ஒரு நாட்டுக்குக் குறிப்பான
நாட்டாமைக்காரன் வந்து தீரும்போது காஞ்சிபுரத்திற்கு ஆளனுப்பிவைத்து
நம்முடைய தம்பி கச்சிக்கச்சாலையப்ப முதலியும் தளபதி சூர்யமூர்த்தி
முதலியும் நாட்டுக்கர்ணிகம் அமராபதி முதலியும் சமய சங்கதி வாரணவாசி
முதலியும் சமய இழந்தாரி தனுக்கோடி முதலியும் சமய நாட்டுச்
சோடிளந்தாரி நாகபாச சொக்கலிங்கத்தையும் இவர்களையும் அழைத்து
வந்து இவர்கள் முன்படத் தீர்த்துக் கொண்டு வரவும். கனகுற்றங்கள்
ஆனால் நாலுநாடுங் கூடித் தீரும்போது காஞ்சீபுரத்திற்குத் தமது சமய
மண்டபத்திற்கு வந்து நாலு நாடு உறவின் முறையும் கூடி நமது
முன்னிலையாகத் தீரவும் என்று அவரவர்க்கும் கட்டுச்செய்து அதன்பின்பு
அந்தந்த ஊரிலும் நாட்டிலும் அந்தந்த நாட்டாண்மைக்காரர் வாய்க்குற்றம்
கைக்குற்றம் தீர்ந்து அபராதம் வாங்கி நல்லது செய்யும்போது முந்தின
பாக்கு வெற்றிலை ரட்டை வேளையும் நாட்டுச் சமய முதலி பேருக்கு
எடுத்துவைத்து அதன் பின்பு சமய நாட்டாண்மைக்காரனுக்கும், அதன்
பின்பு நாட்டுத் தளபதிக்கும் அதன்பின்பு நாட்டுக்கர்ணிகருக்கும்,
அதன்பின்பு சேசவரிசைக்காரருக்கும் முந்தின பாக்கு வெற்றிலை எடுத்து
வைத்து அதன்பின்பு அவரவர்க்கும் வெற்றிலை பாக்கு கொடுத்து
அதன்பின்பு சோடிளந்தாரிக்கும் வெற்றிலை பாக்கு எடுத்துவைத்து
அவரவரும் இப்படி குற்றம் தீர்த்துக் கொண்டு வாருங்களென்று
அவரவர்கட்கும் கட்டுச்செய்து அதன்பின்பு அந்தந்த ஊர்க் கோவில்
வாசலில் வரிசை வந்தால் முந்தின பங்கு சமய முதலிபேர் படஎடுத்து
வைத்து அதனுள்பட்ட ஐந்து பேருக்கும் சேச வரிசையாய் எடுத்து வைத்து
அதன் பின்பு அவர்கள் பகிர்ந்து கொள்ளவும்.
சீர்காழி கோயிலுக்கும், கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்கு
ஆனந்த முதலி நியமிக்கப்பட்டார்.
சிதம்பரம்
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்கிற்கு
சிவகாமி முதலியை வைத்தனர்.
திருப்பதி
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்குக்
காஞ்சீபுரத்துச் சாதி சமய தள விசாரணைப் பட்டத்து நாட்டுக்கர்ணிகர்
காஞ்சீபுரத்தின் கச்சி ஏகாம்பரர் காமாட்சி அம்மன் கோயில் மணியம்
கணக்குக்கு நின்ற கச்சித் திருவேங்கிட முதலி கச்சி வடமலையப்ப முதலி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
திருத்தணி
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்கும்
குருநாத முதலி நியமிக்கப்பட்டார்.
காசி
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்குச் சமய
சங்கதி சோலையங்கிரி முதலி மகன் வாரணவாசி முதலியை நியமித்தனர்.
கதிர்காமம்
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்குச்
சரவண முதலியை நியமித்தனர்.
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில்
கோயிலுக்கும் கோயிலுக்கு விட்ட மானியத்திற்கும் மணியம்
கணக்கிற்கும் சாதி சமய தள விசாரணைப்பட்டத்து நாட்டுக் கர்ணிகர்
கச்சித் திருவேங்கட முதலி நியமிக்கப்பட்டார்.
காஞ்சீபுரம் வரதராசப் பெருமாள் கோயில்
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்குக் கச்சி
ஏகாம்பரநாத முதலியை நியமித்தனர்.
கந்தகோட்டம்
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்குக் கச்சி
வேலப்ப முதலி நியமிக்கப்பட்டார்.
கருமாரியம்மன் கோயில்
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்கு
சிராமலை முதலி நியமிக்கப்பட்டார்.
விரிஞ்சிபுரம்
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்கிற்கு
மோகாம்புரி முதலியை நியமித்தனர்.
ஊஞ்சலூர்
கோயிலுக்கும் கோயில் மானியத்திற்கும் மணியம் கணக்குக்கு
ஆறுமுக முதலியை நியமித்தனர்.
பாபநாசம்
திருவாடு தண்டிகை சேவைக்குக் கைக்கோளரில் ஐம்பது குடியும்
வைத்து அந்த ஐம்பது குடிக்கைக்கோளருக்கும் முதன்மை
நாட்டாண்மைக்கு வேத மூர்த்தியை நியமித்தனர். அந்தக் கோயில் மணியம்
கணக்குக்கு ஞானமூர்த்தி முதலியை நியமித்தனர்.
மதுரை
கோயில் மானியத்திற்கும் மணியங்கணக்குக்கும் சமய சங்கதி
சோலையங்கிரி முதலியை வைத்தனர். மணியங்கணக்குக்கு தானப்ப
முதலியை வைத்தனர். சீர் ஆலவாயன் கோயில் மணியம் கணக்குக்குக்
கந்தப்ப முதலியை வைத்தனர்.
திருப்பரங்குன்றம்
கோயில் மணியம் கணக்குக்குச் சொக்கலிங்க முதலியை வைத்தனர்.
திருஏரகம்
கோயில் மணியம் கணக்குக்குக் திருமுருக முதலியை வைத்தனர்.
பழமுதிர்சோலை
கோயில் மணியம் கணக்குக்குக் கோபால முதலியை வைத்தனர்.
திருச்செந்தூர்
கோயில் மணியம் கணக்குக்குக் அர்த்தமாக முதலியை வைத்தனர்.
கன்னியாகுமரி
கோயில் மணியம் கணக்குக்கு முத்துவேலப்ப முதலியை வைத்தனர்.
படுக்கல் கோயில்
கோயில் மணியம் கணக்குக்கு தாண்டவ முதலியை வைத்தனர்.
கம்பம் கூடலூர்
கோயில் மணியம் கணக்குக்கு கோபால முதலியை வைத்தனர்.
ஊதியூர்
ஊதியூர்ப் பொன்னூதிமலை வேலர் கோயிலுக்கு மணியம்
கணக்கிற்குச் சாமிநாத முதலியை வைத்தனர்.