ஐயம்பேட்டை நகரத்தினுள் புகுமுன், நம் குல திலகமும், பிரசித்தி வாய்ந்த மகா வித்வ சிரோ மணியும், மலபாசத்தால் பிணிக்கப்பட்டுப் பிறவி யெனும் பெருஞ் சாகரத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆன்ம கோடிகள் உய்வதற்கோர் உறுதுணையாக விளங்கும் ஸ்ரீ முருகபிரான் பிரபாவங்களை எடுத் தோதும் ஸ்காந்த புராணச் சுருக்க நூலை ஐந்நூறு பாடல்களால் மிக அருமையாகச் செய்தருளியவரு வரு மாகிய ஸ்ரீலஸ்ரீ சூரப்ப முதலியார் அவர்களையும், அவர்களது மைந்தர் வித்வான் காளப்ப முதலியார் அவர்களையும் முக்கரணங்களாலும் தொழக் கட மைப்பட்டுள்ளேன். ஐயம்பேட்டையும், நம்குல மும் விளங்க அவதரித்த சூரப்ப முதலியார் அவர் களுக்குத் தம் பெயருக்கேற்ற மனோதிடமும், - சொல்வன்மையும், கூரிய அறிவும் அமைந்திருந் தன வென்பதைக் கேட்டு நாம் எல்லோரும் சந் தோஷிக்க வேண்டியவர்களா யிருக்கிறோம்