திருத்தணி செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர் வரலாறு

0

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை  திகழும் திருத்தணி முருகன் கோயில் மற்ற படைவீடுகளைப் போல முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் வம்சமான செங்குந்த முதலியார் மரபினர் பல்வேறு மண்டகப்படிகள் உள்ளன.


திருத்தணி திருக்கோயில் தினம்தோறும் அதிகாலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி நடைபெறும் முதல் அபிஷேகம்      ( காலை சந்தி ) கட்டளை/மண்டகப்படி 365 நாட்களுக்கு சோளிங்கபுரம் நாட்டு செங்குந்தர் மரபினருக்கு உள்ளது. 


அன்றைய தினம், முதல் மரியாதையுடன் சுவாமிக்கு படைத்த பொங்கல் . பஞ்சாமிர்தம் மற்றும் சுவாமிக்கு சூடிய மாலையை நமக்கு குருக்கள் அணிவித்து மரியாதை செலுத்துவார்.


திருத்தணி கோவிலில் அறங்காவலர்களாக இருந்த செங்குந்த கைக்கோள முதலியார்கள்.


● மின்னல் பட்டு மு. செங்கழனி முதலியார் (எச்சான் கூட்டம்)

● அம்மையார்குப்பம் ஜி.கே.துரைசாமி முதலியார் (குதிரைவீரன் கூட்டம்) - முன்னாள் அறங்காவலர் தலைவர்.

● புலவர் நடேசன் முதலியார் - முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் 

● ஏ. வி.நேதாஜி முதலியார் - முன்னாள் அறங்காவலர்.

● ஏ. சுப்பிரமணியன் செங்குந்தர் (நாமக்காரன் கூட்டம்) - முன்னாள் அறங்காவலர்.

● ஏ. வி. சக்கரப்பன் செங்குந்தர் - முன்னாள் அறங்காவலர்.

● வி.எம்.ஜி. மோகனன் செங்குந்தர் - தற்போதைய அறங்காவலர்.


செங்குந்தர் குல எச்சன கோத்திரம் பங்காளிகள் மண்டகப்படி சார்பாக ஆவணி மாதம் முழுவதும் நட்சத்திரம் அன்று திருத்தணி முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம் பூஜை மூலவருக்கு நடைபெறுகிறது.

மேலும் அன்று மாலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பின்பு உள்ள செங்குந்தர் குல எச்சன கோத்திரம் மண்டபத்திற்கு உற்சவ மூர்த்தி எழுந்தருளுவார் பின்பு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிகழ்வு பாரம்பரியமாக காலங்காலமாக நடைபெற்று வருகிறது.

ஆறுபடை வீடுகளில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பு உள்ளது போல திருத்தணி முருகன் கோயில் சிறப்பு என்றால் அது படி பூஜை தான். 

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெறும் படிபூஜை தினத்தன்று செங்குந்தர் குல எச்சான கோத்திரம் மரபினர் சார்பாக திருத்தணி முருகன் கோயிலின் பின்புறம் உள்ள செங்குந்தர் குல எச்சன குல கோத்திர மரபினர் மண்டபத்தில் மிகச்சிறப்பான முறையில் அன்னதானம் டிசம்பர் 31 காலை மதியம், இரவு வேளைகளில் , அடுத்த நாள் ஜனவரி 1 ஆம் தேதி ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறுகிறது. . .










செங்குந்தர் குல ஆலங்காட்டான் கூட்டம் மண்டகப்படி சார்பாக மாசி பிரம்மோற்சவம் திருவிழா 8-ம் நாள் அன்று யாளி வாகன உற்சவம் மண்டகப்படி சிறப்பாக நடைபெற்றது வருகிறது.

மாசி மாதம் பிரம்மோற்சவம் வள்ளி விழா நடைபெறும் முந்தைய நாள் இரவு 8 மணிக்கு ஊர்களுக்கு சென்று விட்டு உற்சவ மூர்த்தி பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்துவிட்டு திருத்தணி மலைக்கு வள்ளி அம்பாள் மற்றும் வேடுவர் இனத்தவருடன் மீண்டும் வரும்போது இரவு 1 மணிக்கு செங்குந்தர் குல ஆலங்காட்டான் கூட்டம் மண்டபம் முன்பு உள்ள செங்குந்தர் குல ஆலங்காட்டான் கூட்டம் பாத்தியப்பட்ட மூர்ச்சை கல்மண்டபத்தில் விழா சிறப்பு மிக்கது. பின்பு முருகப்பெருமான் வள்ளி அம்பாள் உடன் அதிகாலை நடைபெறும் திருக்கல்யாணம் இந்த மண்டபத்தில் சில மணி நேரம் ஓய்வு எடுப்பார்.

செங்குந்தர் குல ஆலங்காட்டான் கூட்டம் சார்பாக ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினம் அன்று காலை 11 முதல் மதியம் 2 வரை அன்னதானம் திருத்தணி முருகன் கோயிலின் பின்புறம் குருக்கள் வீதியில் உள்ள செங்குந்தர் குல ஆலங்கூட்டான் கூட்டம் சத்திரத்தில் நடைபெற்று வருகிறது.

செங்குந்தர் குல ஆலங்காட்டர் கோத்திரத்தார் யாழி வாகன கட்டளை




வேலூர் மாவட்டம்  குடியாத்தம் புதியநாடு செங்குந்தர் பஞ்சாயத்து சபை சார்பாக ஆடிக்கிருத்திகை திருத்தணி முருகன் திருக்கோயில் மூலவருக்கு அபிஷேகம் தேன்காவடி பரணிவேல் புஷ்ப காவடி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.




திருத்தணி பெரிய கல்யாண மண்டபம் 

மேட்டு தெருவில் மூன்று ஏக்கர் பரப்பளவில் 300 கார் பார்க்கிங், 2000 நபர்கள் அமர் கூடிய பெரிய
செங்குந்தர் முதலியார்  திருமண மாளிகை ஏ.சி. 






காஞ்சிபுரம் செங்குந்த முதலியார் சாத்திரங்கள்

காஞ்சி அய்யன்பேட்டை செங்குந்த மரபினர் சத்திரம்

திருத்தணியில் உள்ள காஞ்சி பிள்ளையார்பாளையம் செங்குந்தர் மரபினர் மடம்




செங்குந்தர் குல குளவிகோணான் கூட்டம் பங்காளிகள் சத்திரம்







கோவிலுக்குப் பின்புறம் உள்ள செங்குந்தர் குல குளவிகோணன் கோத்திரத்தார் சத்திரம்








செங்குந்தர் குல எச்சான் கூட்டம் பங்காளிகள் சத்திரம்



செங்குந்த மரபு எச்சான் கோத்திரத்தார் மயில் மண்டபம்







செங்குந்தர் குல ஆலங்காட்டான் கூட்டம் பங்காளிகள் சத்திரம்



செங்குந்தர் மரபு ஆலங்காட்டர் கோத்திரத்தார் சத்திரம்






செங்குந்தர் குல நல்லான்கூட்டம் பங்காளிகள் சத்திரம் 

பல நூறு வருடங்களுக்கு முன்பு செங்குந்தர் குல நல்லான் கூட்டத்தினர் கட்டிய சத்திரம். இந்த சத்திரத்திற்கு பல ஏக்கரிடம் மற்றும் குளம் தற்போது நிலம் மற்றும் குளம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது



திருத்தணியில் 1800 களில் கைக்கோளர் சமூக நெல்லான் கூட்டத்தார் கட்டிய குளம் பற்றி 1881 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆவணத்தில் இணைக்கப்பட்ட  இந்த மரபினர்கள் கூற்றுப்படி அறுபது ஏக்கர் நிலம் வாங்கி குளம் மற்றும் சத்திரம் அமைக்கப்பட்டது, தற்போது பெரும் பகுதி பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது.


செங்குந்தர் குல மாணிக்க கூட்டம் பங்காளிகள் மடம்
இது தற்போது மாற்று சமூகத்தினர் ஆக்கிரமிப்பில் உள்ளது

செங்குந்தர் குல குள்ளசேனை கூட்டம் பங்காளிகள் மடம்
இது தற்போது மாற்று சமூகத்தினர் ஆக்கிரமிப்பில் உள்ளது

செங்குந்தர் குல வெள்ளத்தூரான் கூட்டம் பங்காளிகள் மடம்
இது தற்போது நம் சமூக தனிநபர் சமூக விரோதி ஆக்கிரமிப்பில் உள்ளது


சாத்திரவாடி நாடு அனைத்து செங்குந்தர் கூட்டத்தார் சத்திரம்



இந்த மடத்துக்கு கார்வேட் நகர் சிற்றரசர் கொடுத்த செப்பு பட்டயம்










 செங்குந்தர் காலைசந்தி கட்டளை பாத்திரம்
PDF பதிவிறக்க இணைப்பு:  கிளிக் செய்யவும்.
Desktop View யில் வைத்து புத்தகத்தைப் படிக்கவும்

இந்தப் புத்தகத்தை செங்குந்தர் வரலாறு மீட்பு குழுவிற்கு வழங்கி உதவி செய்தவர்: மின்னல் தருண் செங்குந்தர், பி.கே.சேகரன் செங்குந்தர்.









விடுபட்டுள்ள தகவல் வரலாறுகளை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு 7826980901 whatsapp எண்ணுக்கு அனுப்பவும்

Post a Comment

0Comments
Post a Comment (0)