ஈட்டி எழுபது உருவான வரலாறு

0

ஒட்டக்கூத்தர் ஈட்டி எழுபது பாடிய வரலாறு


கோவை சி.கு. நாராயணசாமி முதலியார்


ஒட்டக்கூத்தர் துதி


"கல்விக் கரசு சுவிராஜ சிங்கங் கலைச் சலதி வில்விக்கும் வாட்கை யபயர் சஞ்சீவி விமல முத்தி புல்விக்கு மாகமப் பொக்கசம் வேதப்புயல் கமலச் செல்விக்குச் சேயொட்டக் கூத்தனல்லாற் புவிசெப்பரிதே"


முன்னுரை


ஈட்டியெழுப தென்பது "கவிச்சக்கர வர்த்தி" என்று உலகம் புகழக் கீர்த்தி வகித்திலங்கிய ஒட்டக்கூத்தர் தம் மர பினராகிய செங்குந்தர்களின் வேண்டு கோளின்படி தலைப்பிள்ளைகள் ஆயிரத் தெண்மர் சிரங்களை ஆசனமாகப் பெற்று அதன்மீது எழுந்தருளி தங்குலத்திற்குரிய ஆயுதமாகிய ஈட்டியைச் சுட்டிப் பாடிய தோர் பிரபந்தமாம். தெய்வீகம் விளங் கப்பாடிய இத்திவ்யப் பிரபந்தத்தின் உண்மைக்குரிய வரலாறு இக்காலத்துப் பல்வகை வேறுபாடுகளுடன் வழங்கப் படுகிறது. இவற்றின் உண்மைச் செய் தியை அறிய விரும்புகின்றவர்களுக்கு மெத் தப் பிரயாசையாகவே இருக்கின்றது. இக் குறையை நிவர்த்திக்கவே நாம் இப் பொழுது இங்கு முன் வந்ததென்க. செங் குந்த மரபினர் பெருமையாதிய விசே டங்கள் அன்னார்க்குரிய சிறந்த நூல் களாம் 'கந்த புராணம்', செங்குந்த புராணம்' வீரநாரா யணர் விஜயம், 'ஈட்டியெழுபது' முதலிய நூல்களில் நன்கு அவைகளைக் விளக்கப்பட்டிருக்கவன்றன அவ்வந்நூல்களில் கண்டுகொள்க.


இனி, ஈட்டி யெழுபது பாடிய வர லாறும், அதனைப் பாடினார் பெருஞ் சிறப்பும் பாடப்பட்ட இடமும், காலமும், அதனைக் கேட்டிருந்த சோழன் இன் னான் என்பதும் ஆதிய இதன் கீழ் விவரிக்கப்படும். விஷயங்களே


புலவர் சிறப்பு


கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழ தேசத்தைப் பல்வகைச் சிறப்புடன் செங்


279


கோல் செலுத்திய சோழ மன்னர் பலருள், கி.பி. 1118 முதல் 1200 ஆண்டுகள் வரை அரசு செலுத்திய 'விக்கிரமன்' தொடங்கி 'இராசராசன்' இறுதியாகக் கூறப்படும் மூவரசர் காலத்திலே தான், ஒட்டக் கூத்தர் ஒப்புயர்வற்ற சிறப்புடைப்புலவர் என யாவரும் போற்றிப் பணிந்து புகழ்ந் தோத விளங்கினார். இவர் இங்ஙனம் மேம்பட்டுச் சிறந்ததற்குக் காரணம் பல உண்டெனினும் புலமை ஆற்றலும், வித் துவ சமர்த்துமே முதன்மையானதெனக் கூறுதல் பொருந்தும். இங்ஙனம் கூறு தற்குத் தம்மை அபிமானித்துக் காத்த சோழ மன்னர்களை இவர் பன்முறை அருந்தமிழில் இன்சொற்றொடரில் பாமா லைகள் பல புனைந்து சூட்டி மகிழ்வித் ததேயாம். இது ஈட்டி யெழுபதென்னும் நூலில்:


"தென்னனைச் சேரனைச் சிறுமை சொல்லவும் மன்னனை மகிழ்ந்து பாடவும்" வளவனை


என வருவதால், இவர் தமிழ் மூவேந்தருள் சோழனையே உயர்த்திப் பாடினார் என் பதுணரப்படும். இங்ஙனம் சோழ மன்னர் அன்பிற்கும், அபிமானத்திற்கும் பெரிதும் உரியவராய் அவர்களால் அரசர்க்கொத்த பல வரிசைகளையும் குறைவரச் சிறக்கப் பெற்றுக் "கவிப் பெருமான்" என்ற பெரும் பட்டத்தையும் அடைந்து விளங் கினர் என்ப.


சோமன்மனையில் செங்குந்தர்கள்


நாமகள் நல்லருள் பெற்ற வரகவி யாகிய ஒட்டக்கூத்தர் ஒரு சமயத்தில் கும்பகோணத்துக்கும், திருவிடை மருதார்க் கும் இடையிலுள்ள 'திரிபுவனம்' என்னும் திருத்தலத்தின் கண்ணுள்ள தமது பெரு நண்பரும், தமிழறிந்து அதற்கேற்ற கொடைதரும் வள்ளலுமாகிய "சோமன்" என்னும் பிரபுவைக் காண வந்திருந்தனர். இவர் நல்வரவையுணர்ந்த ஆவூர்ச் செங் குந்தர்கள் கூத்தர்பால் பாடல் பெற்றுப் பெருமை பெற வேண்டுமென்னும் பேராவலுடன் புலவர் பெருமானை அவர்க்குரிய மரியாதையுடன் வந்து கண்டு ரண்டனர்ந்தகத்தரும், அவர் கள் வரவிற்கு ஆனந்தங்கொண்டு ஆள வளாவி இருந்தனர். இங்ஙனம் இருக்கும் இடையில், நோக்கி அருந்தமிழுத்தர்ததன் பெருந்தலை வரேறே! வேளாளர்க்கு 'ஏரெழுபதும்' வன்னியர்க்குச் 'சிலையெழுபதும் செட் டிகட்கு 'இசையாயிரமும்' அவரவர் மரபின் இயல்பை விளக்குவதாயிருக் கின்றன. அதுபோல் நம்மரபினர்க்கும் தாங்களும் ஒருநூல் செய்து நமது குல வளத்தைச் சிறப்பிக்க வேண்டுமென்று வேண்ட, புலவர், அவர்களை நோக்கி குந்த குலச் செல்வர்காள்! "இயற்கையி லேயே บล சிறப்புடன் கூடி விளங்கும் நமது குல மேன்மையைப் பற்றிப் பாடு விக்க வேண்டில், நம்மிலும் உயர்ந்த மர பினன் ஒருவனால் பாடுவித்தல் அழகு, நம்மில் தாழ்ந்தோனால் பாடுவித்துக் கொள்ளுதல் அழகல்ல. ஆகவே, நம்மை நாமே சிறக்கப்பாடிக் கொள்வது அதனி லும் குறைவன்றோ? இதனை நீங்கள் நன்கு ஆலோசித்து அறிமின்" என்று கூறி அவர்களிடத்து விடை பெற்றுக் கொண்டு தங் காரியத்தின் மேற் சென்றனர்.


செங்குந்தர்கள் சினங்கொண்டது


கருதிய கருமம் கைகூடாது போன தற்குப் பெரிதும் வருந்திய செங்குந்தர்கள் முடிவில், கடுஞ்சினங் கொண்டவர்களாகி 'இப்புலவன் நமது மரபினனாக விருந்தும், நமது பிரபாவத்தை விளக்கவல்ல ஒரு பிரபந்தம் பாடித் தரும்படி கேட்டுக் கொண்டால், நம்மின் மேலான வருணத் தான் ஒருவனைக் கொண்டு பாடல் பெறும்படி கூறிவிட்டானல்லவா? இவ் வுலகில், 'புன்கவிகளாயுள்ளோர் வெளிப் படின், அவர்களைத்தன் வீரவாளால் பொன்றுவிப்பேன்' என்றோர் வெற்றிக் கொடித் தம்பம் நாட்டித்தான் கற்றுள்ள கல்வியின் மாத்திரம் அபிமானம் வைத் துள்ள இவன், தான் பிறந்துள்ள குலத் திற் சற்றும் அபிமானம் இல்லாதவனாக இருக்கிறான். இத்தகையனை நாம் இவ் வுலகில் இராதபடி கொன்று விடுவதே சரியென்று தங்களுக்குள் நிச்சயித்தவர் களாய் உடனே, வளை, தடி, வாள் முதலிய ஆயுதங்களேந்தி அவர் இருக்கும் இடத்தை நாடி வந்தனர். இது கண்ட கூத்தர் திடுக்குற்றுப் பயத்தால் சோமன் பால் ஓடி அடைக்கலம் புகுந்தனர் என்ப.


இது தெமிழ் நாவவர் சரிதைாமன் பழிகாரர் வாசலிலே ஓடிச் சொன்ன கவி என்னுந் தலைப்பின் கீழ்,


278


"அடையென்பார் தள்ளென்பா ரன் பொன்றில் லாமற் புடையென்பார் தங்கடைக்கே போ கேங்- கொடையென்றால் முந்துஞ்சோமா! புவனை முன்னவனே! நின் கடைக்கீழ் வந்துய்ஞ்சோ மாதலான் மற்று". என வருவதால் அறியப்படும்.


சோமனது அருஞ்செயல்


கல்வியருமையும், சுற்றோர் பெரு மையும், நன்குணர்ந்த சோமன், தன் பால் அடைக்கலம் புகுந்த புலவர் பெரு மானைக் காத்தல் வேண்டித் தன் ஒரு மகனைப் பேழையுள் அடக்கி, அதனைப் பழிகாரர்க்குக் காட்டி 'இதனுள் உள்ள புலவரை நும் விருப்பத்தின் படி செய் மின்' என்றளிக்க, சோமன் மனையைச் சூழ்ந்து நின்ற அப்பழிகாரர் அதனைப் பெற்றுத் தனித்த விடத்துக்குக் கொண்டு போய் திறந்து பார்க்க அதனுள் புலவ ரின்றிச் சோமன் இளமகன் இருக்கக் கண்டு சோமனது வண்மைக்கும், தியாக புத்திக்கும் மிக வியந்து அப்பிள்ளையுடன் திரும்பிச் சோமனது சமூகத்தையடைந்து அவனது அரும்பெருங் குணங்களைப் புகழ்ந்து அம்மட்டோடு நில்லாது, மறைத்து வைத்துள்ள கூத்தரை தம் வசம் தருமாறு வெகுவாக நெருங்கி வேண்டினர். அங்ஙனம் தம்மை நெருங்கி நின்ற அப்பழிகாரரைச் சோமன் நோக்கி, "நீங் கள் புலவர் விரும்பியவாறு செய்தால் பாடுவார்" என்று உரைத்தனர். இஃ தறிந்த கூத்தர் நிகழ்ந்த விஷய முணர்ந் தவராய்ச் சோமனது பெருமித குணத் திற்கும் அருஞ் செயலுக்கும், தம்மீது வைத்திருக்கும் பேரபிமானத்திற்கும் மிக வியந்து மகிழ்ந்து சோமனைப் புகழ்ந்து பாடினர் அது


"துன்னு புகழ்ச்


சோமா! திரிபுவனத் தோன்றலே! நின் புகழை யா மா ருரைக்க வினி" (தமிழ் நாவலர் சரிதை] எனவரும் செய்யுளென்ப.


பிரபந்தம் பாடத் தலைப்பரிசு கேட்டது.


பின்னர், மறைந்து நின்ற கூத்தர். தம்மைக் கொல்ல வந்த பழிகாரர் எதிரே தோன்றி அவர்களை நோக்கிச் நிறைந்த செங்குந்தத் சீலம் அடியேன் புகழ்வதைப் தலைவர்கா கேண்மின். பெரும் தேவர்களையும், புலவராயுள்ளோர் அரசர்களையும் அபி மானத்தாலேனும், பொருள் விருப்பத் தாலேனும் தனியே, புராணங்களேயாகப் பிரபந்தங்களேயாக அவர்களது முன்னிலையில் வருணித்துப் சரிதை பாடுதல் இயல்பு. ஒரு குலத்தினை அக்குலத்தினர் வேண்டுகோளாலேனும், தன்னிச்சை யாலேனும் வறிதே வருணித்தல் யாது பயன்?


தம்மைத்தாமே பாடிக்கொண்டார் கள் என்னும் அபவாதத்தையும் நமது குலத்திற்கு விளைவிக்க மாட்டேன், வேளாளர் ஏர் பூட்டாவிட்டால் வேதி யராதியோர் வேரற்றுப் போவார்" என்றும்; "வன்னியர் சிலையேந்தாவிட் டால் வையக முற்றும் வரம்பற்றுச் சிதை யும்" என்றும், கற்பனை செய்து பாடுவது வழக்கமன்று. உள்ளதையே கள்ளமின்றிக் கூறி யாவரையும் உறுதிக் கொள்ளச் செய்வேன். தங்குலத்தில் அபி மானமும், பிற குலத்தில் பகையும் வகிப் பவன்யானன்று. எனது இயல்பு இவ் வண்ணமாயினும், "உலை வாயை மூட லாம், ஊர் வாயை மூடுதல் அரிது''. மேலும், சோழ வேந்தர்களால் எனக்குக் கிடைத்துள்ள செல்வம் எண்ணிலவா யிருத்தலின், எனக்குப் பொருளாசை யுமில்லை. இதனை இவ்வுலகமே உணர்த் தும், ஒவ்வொரு சமயத்தாரும், தத்தம் சமயத்தையே மேலெனக் கூறி வாதித்தல் போல, ஒவ்வொரு சாதியாரும் தத்தம் சாதியையே மேலாகக் கூறி வாதித்தல் வழக்கு. அவ்வழக்கு முடிவில் இழுக்கா மென்றதற்குச் சான்று அவ்வக் குலத் தினது தொழில் விகற்பமேயாம். இத் தகைய சமயத்தையும், சாதியையும் பற்றி ஓர் பிரபந்தம் கூறுமிடத்து அப்பிரபந் கத்தால் யாதேனும் ஓர் அற்புதம் விளை யின் அதுவே, இவையெல்லாவற்றினும் மேலெனக் கொள்ளும் சிறப்புடைய தன்றோ? அடியேன் நவ வீரர் பரம்பரை யாகிய செங்குந்தர் மரபில் தோன்றி யுள்ளேன்: என் வாக்கில் சத்திய லட்சு மியும், சாரதா தேவியும் சாஸ்வதமாகக் குடி கொண்டிருக்கின்றனர். இது முற்றும் உண்மையே. உறுதியறிய வேண்டுமாகில் கள் அர்ச் அத்தேவியார்களின் சகஸ்ரநாம சனையின் பொருட்டு நங்குலத் தலைப் ஈட்டியைச் சுட்டி "ஈட்டியெழுபது' என் னும், ஓர் பிரபந்தம் பாடி முடித்து இவ் வுலகினரை என்றனர். அதிசயிக்கச் செய்கிறேன் எனது


சம்மதமும் உறுதி வாக்கும்


இவ்வாறு வாயரின் தலைப் பிள்ளைகளின் தலைப் ஒட்டக்கூத்தர் தந்து பரிசு வேண்டியதைச் செவியுற்ற செங்


குந்தர்கள், இதுவரையும் எவராலும், சொல்லப்படாததும், புலவர்களால் கேட் கப்படாததுமான அபூர்வமும், அதிசய விஷயமுமாய் இருப்பதற்கு வெகு வியப் பும், மிகுதிகைப்புங் கொண்டவர்களாய்ச் செய்வது இன்னதெனத் தோன்றாது மௌனமாய் இருந்தனர். இது கண்ட புலவர் பெருமானாகிய கூத்தர், தமது மரபின் முன்னோரது சீரிய வீரம், திறம். வாய்மை, கல்வி, அருள், அன்பு, ஈகை, வள்ளன்மை, ஆகிய அருஞ் செயல்கள் பல வற்றை அவர்கள் அகந்தனில் அழுந்திப் பதியுமாறு வெகு உருக்கமும், உற்சாக முந்தோன்ற வெகு விளக்கமாக விவரித்துக் கூறினர்.


சொல்வோரது தன்மை, பெருமை, சிறப்பு, தூயமனம், சொல்லுறுதி ஆகிய வைகளால், கேட்போரது மனம் மலர்ந்து விஷயத்தை மதித்து ஏற்றுக் கொள்வது உலகியல்பு. ஆனதால், கூத்தரது அருண் மேவிய உள்ளத்திருந் துண்டான கல்வி. நலங் கலந்த அமுதவாக்கும். வீரஞ் செறிந்த விரிந்த சொற் பெருக்கமும், உல குள்ளளவும் நின்று நிலவிச் செங்குந்தரது ஏற்றம் விளக்க வல்லதுமான அரிய வர லாறுகளும், பிரபந்தம் பெறும் பெரு நோக்குடைய ஆவூர்ச் செங்குந்தரது மனதின் கண் தைத்து, நினைத்தற்கும், செய்தற்கும், துணிதற்கும் அருமையான பெருஞ் செயலைச் செய்து முடிப்பதென் னும் உணர்ச்சியும் வேகமும் உண்டாக்கி அவர்களை ஒரு முகமாக இணங்கும்படிச் செய்தன.


"விரைந்து தொழில் கேட்குஞாலம்


நிரந்தினது


சொல்லுதல் வல்லார்ப்பெறின்" என்பதும் தேவர் திருவள்ளுவர் அநுபவ வாக்கன்றோ?


இங்ஙனம் புத்துயிரும். புதியதோர் உணர்ச்சியும், செங்குந்தர்களது ஜீவ நாடிகளில் பளீரென பரவியதால், அவர் ஒருங்கு சேர்ந்து ஆலோசித்துத் தலைப் பிள்ளைகளது அருஞ் சிரங்களைப் பிரபந்தம் பாடுதற்குப் பரிசாகத் தரு வதில் ஒரு முகமாகி நன்க்க மேற்பு கொண்டு, தையும், குறித்துக் கொண்டு அவரிடத்து விடைபெற்றுச் சென்றனர்.


உறையூரடைந்து சோழனுக்கு அறிவித்தது


பின்பு கூத்தர், தமது அருமை நண்பரும், தமிழறிந்து தகுந்த கொடை தரும் தருவும் வள்ளலும், தமிழ் வளர்க்குந் பிரபுவுமாகிய திரிபுவனத்துச் சோமன் பால் அரிதில் விடை பெற்று அப் பொழுது சோழர்க்கு இராஜதானியாக இருந்த உறையூரடைந்துராஜஇராசராச சோழனைக் கண்டு, புவனையில் ஆவூர்ச் செங்குந்தர்கட்கும், தமக்கும் நடந்த சம்பாஷணைகளையும், தமக்காகச் சோ மன் காட்டிய அரிய செயலையும், இனித்தாம் நடாத்தப்புகும் அரிய காரி யத்தையும், அது நடைபெறுங் காலத் தையும் விவரமாக விளம்பினர். புது மையும் அதிசயமுமாயுள்ள இவ்வருஞ் செயலைக் கேட்ட வேந்தன் வியந்த சிந் தையனாய்க் கவிப் பெருமானின் புலமைத் திருவிளையாடலுக்குப் பெரிதுங் களித்து அத் தெய்வீகம் நிகழும் சுபதினத்தை எதிர் பார்த்திருந்தனன்.


சபை கூட்டி ஆலோசித்தது.


திருமுகம் பெற்ற ஒவ்வொரு நாட் டாரும், திருமுகத்திற் கண்டுள்ள விஷயத் திற்கு அதிசயித்தவர்களாய் சிலர், இவ் வுலகந் தோன்றிய நாள் முதலாக இத் தகைய விந்தையான செய்தியைத் தாம் கேட்டதேயில்லையென்றும், பிரபந்தம் பாடுதற்குப் பரிசாகப் புலவர்கள், பொன், பொருள், பூமி, வண்டி, வாகனம், விருது முதலிய வரிசைகளைக் கேட்பது வழக்க மென்றும், கவிச் சக்கரவர்த்தி ஓட்டக் கூத்தரைப் போல், தலைப்பிள்ளைகள் ஆயிரத்தெண்மர் சிரங்களைப் பிரபந்தம் பாடுதற்குப் பரிசாகக் கேட்பதைக்' கண்ட தேயில்லை என்றும், இது புதுமையினும் புதுமை! அதிசயத்திலும் அதிசயம்!! என் றனர்: வேறு சிலர். இதில் இன்னொன்று நோக்கிக் கவனிக்க வேண்டும். அது - ஆவூர்ச் செங்குந்தர்கள் சாமானியர் களல்லர். கல்வி, கேள்வி, அறிவு, சீலம், தவம், விரதம், வாய்மை, ஈகை, அன்பு,


கூத்தர் பால் விடை பெற்றுச்சென்ற செங்குந்தர்கள் இனி, ஆக வேண்டியிருக்கும் விஷயத்திற்காக ஓர் மகா சபை கூட்டி அதில், பிரபந்தம் பெற விருக்கும் விருப்பத்தையும், அது பாடுவோரின் பெரும் புலமையையும், பாடுதற்காக அவர் பரிசாக விரும்பும் தலைப் பிள்ளை கள் சிரமும், அவைகளைத் தருவதாகத் தாங்கள் சம்மதித்திருப்பதையும் அத் தலைகள் இன்ன காலத்தில், இன்ன இடத் தில், கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற விவரத்தையும், பிரபந்தம் பாட நிச்சயித்துள்ள நன்னாளையும் பற்பல வாறு ஆலோசித்து முடிவாக ஏகமன தாய்ச் சம்மதித்துத் தீர்மானஞ் செய்து அத்தீர்மானத்தின் சுருக்கத்தை ஒரு திரு முகத்தில் விவரப்பட எழுதித் தங்களை ஒத்த நாட்டினர் பலர்க்கும் தூதுவர் மூலம் அனுப்பி வைத்தனர். பெரு


பரிவு முதலிய விஷயங்களில் நல்ல பயிற்சியும், தேறிய அநுபவமும் பெற்ற வர்கள், இத்தகைய அறிவின் மிக்கார் தாங்கள் ஒருங்கு கூடி இவ் விஷயத்தை நமக்கு அறிவித்ததிலிருந்து. அவர்கள் பிரஸ்தாபச் செய்தியை நன்கு ஆலோசிக் காமலா! ஒரு முடிவுக்கு வந்திருப்பர்? என்றனர்; மற்றுஞ் சிலர், இவ்வுலகினர் என்றும் கேட்டிராத ஒரு அதிசய சம்ப வத்தைத் தமிழ்நாட்டு மக்கள் கேட்டுத் தமிழுக்காகவே ஒரு மரபார், அல்லது ஜாதி யார் அரிதினும் அரிதாகியதும், உளந்தி டுக்கிடச் சனைக்கு தொரு செய்ய வல்லதும், ஆலோ இடந்தருவது மாகிய பெரிய காரியத்தை வெகு எளிதாகச் செய்யத் துணிந்தது ஆச்சரியம்! ஆச் சரியம்!! என்று மூக்கின்மீது விரல் வைத்து வியக்கும்படிச் செய்விக்கக் கருதியே இதற்கு உடன்பட்டிருக்க வேண்டுமெனக் கருது வதே பொருந்தும் என்றனர்.


பின்னுஞ்சிலர், "பாடல் பலர் மெச்ச வாழ்வது" பெற்றுப் பண்டைய வழக்கு. அவ்வழக்கம் நமது தமிழகத்தில் எல்லாப் பிரபுகளிடத்தும், செவ்வவான் களிடத்தும் நிலை பெற்றிருந்ததாகத் தெரிகிறது. இதற்குச் சான்று சங்க இலக் கியங்களில் வேண்டுமானவை காணலாம். இந்நலங்கருதியே அவர்கள் இசைந்திருக்க வேண்டும். அல்லாமல் தமிழின் பெருமை சாமான்யமானதோ? அதன் உயர்வும், தன்மையும், சிறப்பும், மதிப்பும், யா வரே கணிக்கவல்லார்?


குமுண வள்ளல் தலை கொடுக்க விசைந்ததும், கடையெழு வள்ளல்களில் அதிகமா னெடுமானஞ்சி சா வா உடம்பு தருவதாகிய அருநெல்லிக் கனியைத் தான் உண்ணாது தமிழ் மூதாட்டிக் களித் ததும், பாரிவள்ளல் இரவலர்க்குத் தன் முந்நூறு ஊர்களையும், பல உடமை களையும் கொடுத்ததன்றித்தானும் அவர்கள் விரும்பிய பரிசுப் பொருளாகச் சென்றதும், கணிகண்ணன் பின் காமரும். பூங்கச்சிப் பெருமாள் பாம்பணை சுற்றித் தொடர்ந்ததும், சூலிமுதுகில் சோறுண விரும்பிய புலவர்க்கு அவ்வாறே சோறிட் டதும், வடுகநாத முதலியார் பிணமூடி வைத்துப் புலவர்க்கு விருந்திட்டு உப சரித்தும், இன்னும் விளம்புதற்கரிய விம் மிதங்களையுடைய தன்றோ? தமிழ். இத்த தகைய அருந்தமிழுக்கு ஆங்காங்குள்ள நாடுகளில், நம்மவர் சிலர், சில சிரங்களை அளிப்பது நம் மரபினுக்கே அழியாப் புகழை அளிக்குமென்ற காரணம் ஒன்று பற்றியே அவர்கள் இசைந்திருக்க இக்காரியத்திற்கு வேண்டும். அங்ஙனம் கொள்வதுதான் சிறப்பாகக் காண்கிறது.

அங்ஙனமாயின், நாம் அவர்கள் கருத் துக்கு முற்றிலும் இணங்க வேண்டுவது முகத்தில் முறை என்று தீர்மானித்து திரு குறித்தவாறு அந்தந்த நாட் டிற்குரிய பங்காசார வீதப்படி அவர வர் மனதை உறுதி செய்து கொண்டு தத்தம் தலைப்பிள்ளைகளது சிரங்களை, வண்டிகளில் ஏற்றி உறையூரின் கண் ணுள்ள சோழர் பிரானது அரண்மனைக் குக் கொண்டு வந்து சேர்த்து ஆவூர்ச் செங் குந்தர்களுடன் கலந்து கொண்டனர்.


ஆவூர் செங்குந்தர்கள் அனுப்பிய திருமுகம் பெற்றவர்களுள் திருமலை ராயன் பட்டினத்தையடுத்த ஒரு நாட் டாரொழிய ஏனைய நாட்டாரெல்லாம் கொண்டு வந்த சிரங்களைத் தக்கதொரு இடத்தில் சேர்த்து 'ஆயிரத் தெண்மர் சீரங்கள்' சரியாக இருக்கின்றனவா எனப் பரிசோதித்துச் சரிகண்டு கூத்தருக்குத் தங்கள் வருகையையும், தலைப் பொதி யினையும், விவரப்பட அறிவித்து அவர் உத்திரவுக்கு எதிர்பார்த்திருந்தனர்.


புலவர் கட்டளை


இஃதறிந்த சுவிச்சக்கரவர்த்தி கூத்தர் 'கைக்கோளர்' எனும், செங்குந்த மக்க ளின் தீரத்துக்கும், சொற்றவறாத வாய் மைக்கும், பிரபந்தம் பெறுவதால் மரபிற்கு உண்டாகும் பெருமைக்கும், அது பெறு தற்காக அவர்கள் துணிந்த அருஞ்செய் கைக்கும், தியாக புத்திக்கும், பெருமித குணத்துக்கும், உற்சாகச் செயலுக்கும் மிக வியந்து அகமகிழ்ந்து அவர்களை நோக்கி! 'நீங்கள் கொணர்ந்துள்ள அரும் பெருஞ் சிரங்களை இத்தமிழ் நாடனைத் தையும் தன்னடிப்படுத்திக் குடிகளை ஒரு குடைக்கீழ் அரசுபுரியும் இவ்வு றந்தை வேந்தனது அழகிய சபாமண்டப வாயினில் ஒழுங்கு பெறச் சிங்காதனம் போல் அடுக்கி, இரத்தப் பாவாடை விரித்து அலங்கரித்து வைமின், நாம் அவ் விடத்து வருகின்றோம்' என்று கட்டளை இட்டனர்.


செங்குந்தர்கள் சிரச்சிங்காதனம் அமைத்து இரத்தப்பாவாடை விரித்தது


கவிச் சக்கரவர்த்தியின் சுட்டளை யைச் சிரசாகக் கொண்ட செங்குந்தர்கள் அவர் தம் உத்திரவின் வண்ணமே அர சபா மண்டப வாயிலையடைந்து அங்குள்ளார் யாரும் அஞ்சி நடுங்கிப் பிர மித்து அதிசயிக்கும் அபடியாக ஆயிரத் தெண்மர்கதையிக்குரு ஞ்சிரங்களை வரிசை படச் சிங்கா தனம் போல் அழகு பெற அலங்கரித்துதூதரத்தப் பாவாடை விரித்


துக் கூத்தர்தம் அரிய வரவுக்கு எதிர்பார்த் திருந்தனர்.


பிரபந்தம் பாடியதைச் சோழனும் பிறருங் கேட்டு மகிழ்ந்தாரென்பது


முன்னமேயே, தமது சமஸ்தானத் கூத்தால தம்மிடத்து மாகவூரிச் செங்குந்த ருக்கும், தமக்கும் நடந்த சம்பாஷணை களையும், அதுபற்றித் தாம் "ஈட்டி எழுபது" என்னும் பிரபந்தம் பாடுவதாக ஒப்புக் கொண்டதையும், அது பாடுங் காலத்தையும், விவரப்பட அறிவித்துத் தமது சம்மதத்தையும் பெற்றிருந்தன ரானதால், அவர் குறிப்பிட்ட அரிய நாள் அந்நாளாயிருந்ததினால், "குலோத்துங்க சோழன்". அருட் கவியாகிய கூத்தரால் நடை பெற இருக்கும் தெய்வீக சம்ப வத்தைக் காண்பான் வேண்டித் தமது மந்திரி, பிரதானியர், பந்து வருக்கம், வித்துவசனர், கடை காப்பாளர், கரு மாதிகாரர், நிமித்திகப் புலவர் ஆகிய தமக்குரிய பரிவாரத்தினருடனும், மற்றும் தம்மைப் பின் தொடர்ந்த நகர மக்க ளுடனும், சபா மண்டபத்தை அடைந்து தமக்கென அமைக்கப் பட்டிருந்த ஆச னத்தில் அமர்ந்தனர். பின் தொடர்ந்த பலரும் அவரவர் அந்தஸ்துக்குரிய இருக் கைகளில் வீற்றிருந்தனர்.


பிரபந்தம் பாடத் தொடங்கியதும், முடித்ததும்.


ஆவூர்ச் செங்குந்தர்கட்கு, ஆசனம் அமைக்குமாறு ஆணையிட்டுச் சென்ற கூத்தர் ஸ்நானம் செய்து, சபம், தவம், பிரார்த்தனை,ஸ்தோத்திரம் முதலிய தமது நித்திய கர்மாநுஷ்டங்களை விதிப் படி முடித்துக் கொண்டு, உபாசன மூர்த் தியை உள்ளன்புடன் பூசித்து, வணங்கித் தொழுது, தமது கோரிக்கையை யாதோர் இடையூறுமின்றி இனிது நிறைவேற்றித் தரு மாறு பிரார்த்தித்து, நமஸ்கரித்து, விடை பெற்று அப்பூஜா கோலத்துடன் தமக் குரிய விருது வரிசைகளோடு மங்கல வாத்தியம் முழங்கச் சபா மண்டபத்திற்கு எழுந்தருளினர். இங்ஙனம் எழுந்தருளிய புலவர் பெருமான் தமது ஆன்மார்த்தக் கடவுளை அன்புருக அகத்தே வணங்கித் தலைத்தவிசை வலம் வந்து தொழுது, முருக வேளை முழுமனதுடன் வாழ்த்தி, அரசன் அவைக்களத்தில் தமக்கென அமைத்துள்ள ஆயிரத்தெண்மரது சிரச்சிங்கா தனத்தின் மீது எழுந்தருளி, பதுமாசனமிட்டு வீற் இறந்து நஇனிக் கூறப்புகும் நூல் தன்மை அறிளயும் நன்மைது பெருத்தின் மீதுஇருகரங் நாமகளை நமதூ நாமகளை நாவார நலம் பெறத்துதித்து அவரது பொன்னார் திருவடிகளைத் தமது மனதில் பெரன்யாக திலிருத்தினை முதலில், விநாயகர் காப்புக்கூறி, பின்,


"பூவார் புவனையிற் சோமன் றரும்பழி போனபின்பு நாவாணர் போற்றிய நாடகங் கேட்ப நலமுடனே யாவணர் செங்குந்த ராயிரத்


தெண்டலை கொய்திரத்தப் பாவாடை யிட்டதுலகமெல்லாம்


புகழ் பாலித்ததே" எனப்பாயிரம் சொல்லி, அதன்பின்,


மங்கலவாழ்த்து, பிரபந்தம் கேட் டோர் சிறப்பு, சிவாலய பரிபாலனச் சிறப்பு, வம்சாவழிச்சிறப்பு, குந்தப்படைச் சிறப்பு, புலிக்கொடி பெற்றது, தேவர்கள் சிறை மீட்டது, ஈட்டிப்படைச் சிறப்பு, சைவசமய பரிபாலனம், கொடைச்சிறப்பு முசுகுந்த சக்கரவர்த்திக்குப் படைத் துணையானது, காலனுக்கு ஒலையனுப் பியது, தேயங்கள் பலவற்றை வென்றது. பழுவூர் வீரநாராயணர் சிறப்பு, இன்னும் பல வீரர் சிறப்பு, வல்லானை வென்றது, வல்லான் மனைவிக்கு மாங்கலியப் பிச்சை கொடுத்தது. மெய்த்தலை கொடுத்தது. சிரச்சிங்கா தனச் சிறப்பு, முதலிய செங் குந்தர் சிறப்புக்கள் பலவற்றையும் விளக்கி எழுபது பாடல்களால் பாடி, ஈட்டி எழுபது என்னும் பெயர் கொண்ட நூலைச் செய்து முடித்து தம் இட்ட தெய்வ மாகிய தியானித்து, கலைமகளை மனமுருகி


கலைவாணி நியுலகி லிருப்பதுவும் கல்வியுணர் கவி வல்லோரை நிலையாகப் புரப்பதுவு மவர்நாவில் வாழ்வதுவு நிசமேயன்றோ! சிலைவாண னாவிருந்தா யிரம்புயங்கள் துணிந்தும் உயர் சீவனுற்றான் தலையாவி கொடுத்திடுஞ் செங்குந்


தருயிர் பெற்றிட நீ தயை செய்வாயே!


என்னும் அருமைப் பாடலைக் கூறிப் பிரார்த்தித்தனர். கூத்தரின், பிரார்த்தனை யின் கால விசேடமோ? அல்லது அவரின் பரி பக்குவ வாக்கு நிலைமையின் பான்மையோ? "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்"


என்ற மூதுரையின் தத்துவமோ? தமிழ் தெய்வத்தின் தண்ணருளோ? செங்குந் தர்களின் உண்மை வழிபாடோ? தலைப் பிள்ளைகளது ஆன்மதியாகத்தின் அரும் பெருந்திறனோ? அல்லது செய்தற்கரிய இவர்களது செய்கையை உலகம் வியந்து மகிழ்ந்து பேசவோ? யாதோ? முன்னம் அவ்வுடம்பை விட்டு அறுபட்ட சிரங்கள்


தாமே சென்று மீண்டும் அவ்வுடம்போடு சேர்ந்து பொருந்த முாேல் உபிள்ளைகள் அனைவரும் றெழுந்தனர். பண்டுபோல் உயிர் பெற் கண்டாரனைவரும் அதி சயித்தனர். எத்தகையோர்க்கும் புதத்தை விளைவிக்கும், இத்தினக்காட்டு புதுமை! புதுமை!! எனக் கொண்டாடினர், சகலகலாவல்லியின் திருவருட் பேறு பெற் றவர்க்கு எதுதான் சாத்தியமாகாது?


இவ்வளவே, ஒட்டக்கூத்தர் ஈட்டி யெழுபது. தவை. பாடிய வரலாறாகத் தெரித் இவ்வரலாற்றால் செங்குந்தர்கள் தமிழின் பால் வைத்திருந்த பேரபிமா னமும், பிரபந்தம் பெறுவதில் காட்டிய பெரு விருப்பமும் இணையற்ற சூரத் தன்மையும், மனத்துணிவும், ஆத்மதியா கமும் விளங்குவதுடன், ஓட்டக் கூத்த ருடைய அருட்கவித் திறனும், பெரும் புலமைச் செம்மையும், வாக் சக்தியும், கோதற்ற குணநலமும், மாசற்ற மன நிலையும், உரம் பெற்ற உண்மைப்பக்தி யும், தேசுபெற்ற தெய்வ சிந்தனையும், ஊன்றிய உறுதிப்பாடும், சாரதா தேவி யின் தண்ணருள் சித்தியும், மற்றும் இவரது உத்தமகுணவிசேடங்களும் நன்கு விளங்கும்.


இதுபற்றிப் புலவர் புராணம் கூறுவது வெட்டத்தாம் இருகூறாகி விழுந்தவர் தம்மையெல்லாம் கிட்டப்பார்த்திருந் தோர் மெச்சக் கிளர்ந்த வேலவனைப் போற்றும் இட்டத்தால் பழைய வண்ணம் இலங்கிடச் செய்து விட்டான்?' ஒட்டக் கூத்தன் எனும் நாமம் உலக முற்றுரைத்ததன்றே.


(தண்டபாணி சுவாமி)


மேற்கூறிய வீர வரலாற்றை உன் எடக்கி கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர், செங்குந்தப் பெருமக்களுக்கு இருக்கும் வேறு பல தியாகங்களையும் பெருமை களையும் கூறி ஒரு தனிப் பாடல் வழங் கியுள்ளார். நிலைதந்தார் உலகினுக்கும் யாவருக்கும் மானமதை நிலைக்கத் தந்தார் கலைதந்தார் வணிகருக்கும் சீவனம்செய் திடவென்றே கையில் தந்தார். விலைதந்தார் தமிழினுக்கு. செங்குந்தர் என் கவிக்கே விலையாகத் தந்தலை தந்தார் எனக்கும் ஒட்டக்கூத்தனெனப் பெயரினையும் தாம் தந்தாரே! செங்குந்தர் உலகுக்கும், துக்கும், தமிழுக்கும் தமிழ்ப் புலவர்க்கும் தந்தவைகளைப் பட்டியலிட்டுக் காட்டும் இச் சந்தனச் சிந்துப் பாடல், சிந்தையில் மணக்கும் செந்தமிழ்க் கீதமாகும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)