திருச்செங்கோடு T.S. நடராஜ முதலியார்

0

டி.எஸ்.நடராஜன் அவர்கள் 1934-ம் வருடம் டிசம்பர் மாதம் நாள் கே. டி.இ. சதாசிவ முதலியார் திருமதி. சிவகங்கை அவர்களி ன் மூன்றாவது குமாரராகப் பிறந்தார். பள்ளி இறுதிப் படிப்பு வரை பயின்றார். 15.06.1956 அன்று திருமதி பத்மாவதி அம்மையார் அவர்களைத் தன் நல்வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார். இவர்களுக்குக் கலைமணி, திருக்குமார் என்று இரு குமாரர்களும், திருமதி.சாந்தி செந்தில்குமார் என்னும் மகளும் அருந்தவச் சொத்துக்களாக உள்ளனர். தன் வாழ்க்கைப் பயணத்தினை 1954ம் வருடம் தமிழக அரசின் சுகாதார அலுவலராகத் துவக்கி, சுமார் பத்து ஆண்டுகள் அரசுத் துறையில் பணியாற்றினார். பின்னர் குடும்பத் தொழிலான நெசவுத் தொழிலின்பால் நாட்டம் கொண்டு, பற்பல இடர்பாடுகளுக்கிடையேயும் பல சாதனைகளைத் தொடர்ந்து வெற்றிகொண்டு தன் வாழ்நாளில் தான் கண்ட பல கனவுகளைத் தம் அருந்தவப் புதல்வர்களின் துணையோடு நனவாக்கி வருகிறார். திருச்செங்கோடு மாநகரில் முதன்முறையாக துணிவகைகளைப் பதப்படுத்தும் (பிளீச்சிங், டையிங், பிரிண்டிங், Special Finishing) பிராஸ்ஸிங் தொழிற்சாலையை நிறுவினார். புது முயற்சியாக முதன் முதலாக நன்கு வடிவமைத்து Granite Pol-ishing மற்றும் ஏற்றுமதித் துறையினை Heritage Granites என்கின்ற . Monument, Tiles Slabs; Scluptures என்கின்ற கிரானைட் பொருட்களை ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அயல்நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறார்.


பொதுவாழ்வில் அக்கறை கொண்டு, மிக நவீன MRI, CT Scan மற்றும் அதிநவீன மருத்துவ பரிசோதனை நிலையங்களை ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நவீன ஆம்புலன்ஸ் வசதியுடன் நிறுவியுள்ளார். இதுமட்டுமின்றி, வர்த்தக உலகில் இருக்கும் இளைஞர்களின் மேம்பாட்டிற்காக, இந்தியாவின் தலைசிறந்த Management Centre -ஆன IIM-ற்கு இணையாக நமது தமிழகத்திலும் ஒரு கல்வி நிறுவனம் அமைய வேண்டும் என்ற ஒரு தொலைநோக்குப் பார்வையுடன், கோவை மாநகரில் Jansons School of Business என்ற MBA முதல் பட்டபடிப்பிற்காக மட்டுமே Fully Residential School அடிப்படையில் மிகப் பிரம்மாண்டமான ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவிச் சிறப்பாக நடத்தி வருகிறார். சமுதாய மேம்பாட்டு சேவையில்: 1996-97 ஆண்டு திருச்செங்கோடு ரோட்டரி சங்கத் தலைவராகவும், தற்பொழுது சிறுதொழில் மேம்பாட்டுத் துறைக்கு மாவட்டத் தலைவராகவும் உள்ளார். ஈரோடு மாவட்டத் தொழில் வர்த்தக சபை உறுப்பினராகவும் உள்ளார். கல்விப் பணியில் : செங்குந்தர் அறக்கட்டளை மற்றும் செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு ஆகியவற்றின் துணைத் தலைவராகவும் செங்குந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் செங்குந்தர் பொறியியற் கல்லூரி, திருச்செங்கோடு ஆகியவற்றின் தலைவராகவும் சிறப்பாகத் தொண்டாற்றி வருகின்றார். 2004ம் ஆண்டு ஜூலை முதல், மேதகு தமிழக ஆளுநர் அவர்களால், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்குந்தர் சமுதாயத்தின் பெருமை மிக்க தொழிலதிபராகவும், கல்வியாளராகவும், கொடையாளராகவும் விளங்கும் டி.எஸ்.நடராஜன் அவர்கள் செங்குந்தர் மாளிகைக்கு ரூ.25000/-ம் நன்கொடை கொடுத்ததற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

Post a Comment

0Comments
Post a Comment (0)