கயிலைமணி முனுசாமி முதலியார்

0

 


ஈரோட்டைச் சார்ந்த கயிலைமணி முனுசாமி முதலியார் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் ஆன்மீகப் பணியில் கல்வி பணியிலும் சமுதாய பணிகளும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர்.


ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர். அருள்நெறி திருப்பணி மன்றத்தின் சார்பாக ஈரோடு வைரா பாளையத்தில் தொடக்கப்பள்ளியையும், உயர்நிலைப்பள்ளியையும் கட்டித் தலைவராக பல்லாண்டுகள் நடத்தியவர்.


முதலியார் கல்வி அறக்கட்டளையில் (ஈரோடு கலைக் கல்லூரி)தலைவராக இருந்தார். ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தின் பொறுப்பில் இருந்து கொண்டு அனைத்து இன மாணவர்களும் கல்வி பயில வழி வகுத்தவர். ஈரோடு மாவட்ட செங்குந்தர் திருமண மண்டபத்திற்க்கு தலைவராக இருந்தவர்.


ஈரோடு கருங்கல்பாளையத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் பெயரால் ஒரு மருத்துவமனையை கட்டி தினசரி இரண்டு மருத்துவர்கள் அங்கே இருந்து அந்தப் பகுதி மக்களின் நோய்களைப் போக்கியவர். நோயாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு. மருந்து மாத்திரைகளைத் தன் சொந்த செலவில் வழங்கி வந்தவர்.


ஈரோடு காவிரி கரையில் அமைந்துள்ள சோளீஸ்வரர் கோயிலை புணரமைத்து தலைவராக இருந்து கும்பாபிஷேகம் செய்துள்ளார். ஈரோடு கோட்டை திருத்தொண்டீஸ்வரர் கோயில் தலைவராக இருந்து கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


இவரைப் போன்ற ஒருவரை இனி நாம் வாழ்நாளில் பார்க்க முடியாது.


அப்படி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்த ஐயா ஈரோடு கயிலைமணி முனுசாமி முதலியார் அவர்களின் நூற்றியொன்றாவது பிறந்தநாளான இன்று 25.5.2024 ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பாக அவரது சேவையை நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறோம்.

*நினைத்துப் பார்த்து நெஞ்சில் மகிழ்வுடன் வாழும் காலத்தில் வளமான பல நற்செயல்களை புரிந்த பெரியோர்களும் சான்றோர்களும் நம் இனத்தில் ஏராளமாக இருக்கின்றனர்.* *அந்த வகையில் இன்றைக்கு நாம் நினைத்துப் பார்த்து வணங்கத்தக்க செயல்களைச் செய்தவராக* *வாழ்ந்தவர் தான் *ஈரோட்டைச் சார்ந்த* *கயிலைமணி*

*முனுசாமி முதலியார் அவர்கள்.* *தான் வாழ்ந்த காலத்தில் ஆன்மீகப் பணியில் கல்வி பணியிலும் சமுதாய பணிகளும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர் நம் ஈரோடு கயிலைமணி முனுசாமி முதலியார் அவர்கள்.*

          *தன் அப்பா தன் பெயரிலேயே தொடங்கி நடத்திய அர்த்தனாரி முதலியார் இரும்பு கடை என்ற கடையில் அப்பாவுக்கு துணையாக படிக்கின்ற காலத்திலேயே சென்று வந்து கொண்டிருந்தார். பள்ளி படிப்பு முடிந்ததும் தன் அப்பாவால் தொடங்கப்பட்ட கடையிலேயே கவனித்துக் கொண்டார். ஆன்மீகத்தில் சிவ தீட்சை பெற்றவர்.*

           *ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர். இருமொழி சொற்கொண்டல் என்று எல்லோராலும் போற்றப்பட்ட திரு.மீனாட்சி சுந்தரம் முதலியாரோடு மிகுந்த தொடர்புடையவர். ஈரோட்டில் அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர். அருள்நெறி திருப்பணி மன்றத்தின் சார்பாக ஈரோடு வைராபாளையத்தில் தொடக்கப்பள்ளியையும், உயர்நிலைப்பள்ளியையும் கட்டித் தலைவராக பல்லாண்டுகள் நடத்தியவர். முதலியார் கல்வி அறக்கட்டளையில் பொருளாளராக இருந்தார் (ஈரோடு கலைக் கல்லூரி). ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தின் பொறுப்பில் இருந்து கொண்டு அனைத்து இன மாணவர்களும் கல்வி பயில வழி வகுத்தவர்.*

            *ஈரோடு செங்குந்தர் திருமண மண்டபங்களுக்குத் தலைவராக இருந்தவர்.* 

*ஈரோடு கருங்கல்பாளையத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் பெயரால் ஒரு மருத்துவமனையை கட்டி தினசரி இரண்டு மருத்துவர்கள் அங்கே இருந்து அந்தப் பகுதி மக்களின் நோய்களைப் போக்கியவர்.* *நோயாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு, மருந்து மாத்திரைகளைத் தன் சொந்த செலவில் வழங்கி வந்தவர்.*

     *திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எப்பொழுது ஈரோட்டிற்கு வந்தாலும் இவருடைய வீட்டில்தான் தங்குவார். உதவி கேட்டு வந்த எவருக்கும் இல்லை என்று சொல்லாமல் உதவியவர். ஒரு முறை இவர் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் ரெய்டுக்காக வந்தனர். வந்தவர்களை தேனீர் சாப்பிடுங்கள் என்று இவர் உபசரித்தார். நாங்கள் வருமானவரி அதிகாரிகள் நீங்கள் கொடுக்கக்கூடிய எதையும் சாப்பிடமாட்டோம் வீட்டை சோதிக்க வேண்டும் என்றனர். சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். வந்த அலுவலர்கள் சோதனையின் போது முன்னதாகவே வருமானவரி சம்பந்தப்பட்ட அனைத்தையும் நமது கயிலைமணி முனுசாமி ஐயா அவர்கள் முன்னதாகவே கட்டி ரசீது பெற்று வைத்துள்ளார். வந்த அலுவலர்கள் இவரிடம் இணக்கமாக பேசி இப்பொழுது நீங்கள் கொடுக்கக் கூடியதை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்றனராம். எங்கள் பணியாள் சென்றுவிட்டார் இப்பொழுது எதுவும் கிடைக்காது என்று இவர் சொல்லி அவர்களை அனுப்பி விட்டார். இது அவருடைய நண்பர் சொன்ன செய்தி.*

         *ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் செங்குந்த மகாஜன சங்க அனைத்து கூட்டங்களையும் கலந்து கொண்டு பல நல்ல ஆலோசனைகளை வழங்குவார். சமுதாய பொருளாதார தொண்டு மன்றத்தின் ஈரோடு உள்ளூர் குழு தலைவராக பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி உள்ளார். ஈரோடு காவிரி கரையில் அமைந்துள்ள சோளீஸ்வரர் கோயிலை புணரமைத்து தலைவராக இருந்து கும்பாபிஷேகம் செய்துள்ளார். ஈரோடு கோட்டை திருத்தொண்டீஸ்வரர் கோயில் தலைவராக இருந்து கும்பாபிஷேகம் செய்துள்ளார்.*

          *எப்பொழுதும் கதர் வெள்ளை வேட்டி ஜிப்பாவில் தான் இவர் இருப்பார். காலில் செருப்பு அணிய மாட்டார். இவருடைய கடைக்கும் வீட்டுக்கும் அரை கிலோமீட்டர் இருக்கும். வீட்டில் இருந்து கடைக்கும் கடையிலிருந்து வீட்டுக்கும் நடந்துதான் செல்வார். செருப்பு வாங்குகிற காசில் யாருக்காவது உதவலாம் என்பார்.* *தினசரி மதியம் மட்டும் தான் உண்பார். காலையும் இரவும் சாப்பிட மாட்டார். கல்விப் பணி, ஆன்மீகப் பணி, சமுதாயப் பணி என மூன்றிலும் சிறப்பாக சேவையற்றினார். இவரைப் போன்ற ஒருவரை இனி நாம் வாழ்நாளில் பார்க்க முடியாது. அப்படி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்த ஐயா ஈரோடு கயிலைமணி முனுசாமி முதலியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும். அவரது நூறாவது பிறந்தநாளான இன்று (25.05.23) ஈரோடு செங்குந்த மகாஜன சங்கம் சார்பாக அவரது சேவையை நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறோம்.*



**************************



தெய்வத்திரு. V. அர்த்தனாரி முதலியார் அவர்கள் 1901-ஆம் ஆண்டு மே திங்கள் 13 ஆம் நாள் தெய்வத்திருவாளர்கள். வையாபுரி முதலியார் மற்றும் பாப்பாயம்மாள் ஆகியோருக்குத் தலைமகனாக அத்தனூரில் பிறந்தார். தனது 16வது வயதில் இலங்கை சென்று தொழில் கற்று. பிறகு ஈரோட்டில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.


1944-ல் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி துவங்கப் பெற்று கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தது. அப்பொழுது சில சூழ்நிலைகளால் கட்டடப் பணிகள் நின்றுபோகும் நிலை ஏற்பட்டபோது, இவர் அப்பணிகளை பொறுப்பேற்று பள்ளிக்கு இத்தகைய சிறந்த கட்டடம் அமைய அயராது பணியாற்றினார். அப்பொழுது தனது வியாபாரத்தினை ஓய்வின்றி கவனித்து வந்த பொழுதும், இதற்கென நேரம் ஒதுக்கி தினசரி பள்ளிக்கு நடந்து வந்து, பள்ளியின் கட்டடப் பணிகளை மேற்பார்வையிட்டதோடு. இதற்குத் தேவையான நிதி மற்றும் பொருள் உதவியையும் அவ்வப்போது அளித்து வந்தார்.


அப்பொழுது இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டு கட்டடப் பணிகளுக்கான இரும்புப் பொருட்கள் வழங்குவதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்ட போதும். அதனைக் கவனத்தில் கொள்ளாது, தனது தொழில் பாதிப்பினைப் பற்றியும் நினையாமல் பள்ளியில் கட்டடப் பணிகள் தடைபடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து இரும்புப் பொருட்களை அளித்தார். மேலும் பள்ளிக்கு மைதானம் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொய்வுற்ற பொழுது, இவர் முயற்சியினாலும், பங்களிப்பினாலும் பள்ளிக்கு இத்தகைய சிறந்த மைதானம் அமையப்பெற்றது. குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பள்ளியின் தோற்றம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்குத் தன்னலம் கருதாது. அயராது பணியாற்றியவர் தெய்வத்திரு. A.அர்த்தனாரி முதலியார் அவர்கள்.


"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்றில்"


என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்த இவரின் தொண்டால் இவர் மறைந்த போதிலும் புகழ் என்றும் மறைவதில்லை. இவர் கல்விப் பணியோடு ஆன்மிகப் பணியாக ஆலயத் திருப்பணிகளையும் மனநிறைவுடன் செய்து 27.2.1974 இல் தனது 73வது அகவையில் சிவன் சேவடியைச் சேர்ந்தார். அன்னாரின் திருவடிகளுக்கு இப்பவள மலரைக் காணிக்கையாக்குகிறோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)