காஞ்சீபுரம் திரு ஆ. விநாயக முதலியார்
1919 ஆம் ஆண்டு கதிர்காமத்தில் செங்குந்த முதலியார் குலத்தில் தோன்றியவர்
திரு ஆ. விநாயக முதலியார். இவர்தம் தந்தையார் திரு ஆறுமுக முதலியார், ஒதுவார்
இல்லை; அவர் ஒரு நெசவாளி.*1
பயிற்சி:
20 ஆண்டுக்காலம் இவர் இசையைக் கற்றுக் கொண்டார். வீணா தனம்மாள்
அவர்களின் சீடனான சைதை முனுசாமி பண்டிதரிடம் இவர் பத்தாண்டுக் காலம்
கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். தம் 75 வயதில் நெல்லை சுந்தரமூர்த்தி
ஒதுவாரிடம் மாணவராகச் சேர்ந்து பத்தாண்டு காலம் தேவாரம் பயின்றார்.
பணி:
காஞ்சி தேவாரப் பாடசாலையில் பயிற்சியாசிரியராக 1955 ஆம் ஆண்டு முதல்
7950 முடிய பயின்றார். ஞானப் பிரகாசகர் மடத்தில் வகுப்புகள் நடத்தி வருகிறார்.
தேவாரம் கற்பித்தலோடு கர்நாடக இசையையும் பயிற்றுவிக்கிறார். ஹார்மோனியம்
வாசிக்கவும் கற்றுத் தருகிறார்.
சிறப்புகள்:
தமிழ்நாடு அரசின் இயல் இசை மன்றம் 1984-இல் “கலைமாமணி” விருது
வழங்கிச் சிறப்பித்தது.
தருமபுரம் ஆதீனம் 1985 இல் “திருமுறைக்கலாநிதி" விருது வழங்கியது.
1989 இல் திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற திருஞான சம்பந்தர் இசை விழாவில்
“தமிழிசைத் தென்றல்” பட்டம் வழங்கப்பட்டது.
குன்றத்தூர் தமிழகத் தெய்வச் சேக்கிழார் மன்றம் “திருத்தொண்டர் மாமணி”
பட்டம் வழங்கியது.
ர நாடறிந்த தமிழறிஞர்களான திரு. அருணை வடி வேல் முதலியார் அவர்களும், திரு
வஜ்ஜிரவேல் முதலியார் அவர்களும் “திருநெறித் தமிழிசை வேந்தர்" பட்டம் வழங்கிச்
சிறப்பித்தனர்.
*1. திரு. விநாயக முதலியாருடன் நேர்காணல், 23.7.1994, காஞ்சிபுரம்.
12 மாணவர்களுக்கு நாள்தோறும் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை
தேவார வகுப்புகளை நடத்தி வருகிறார், தேவாரப் பாக்கள் பாடப்பெற்ற வரலாற்றையும்
விவரிக்கிறார். a
“மூவர் தேவாரம்” இவர் பாடி, ஒலிநாடாவாக அண்மையில் வெளியிடப்
பெற்றுள்ளது. சென்னை வானொலி நிலையத்தின் முதல் தர இசைக் கலைஞராக
விளங்கும் இவர் சென்னைத் தொலைக் காட்சியில் பல இசை நிகழ்ச்சிகளை வழங்கி
வருகிறார்.